Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாப்ள Bench: The Boys Are Back
மாப்ள Bench: The Boys Are Back
மாப்ள Bench: The Boys Are Back
Ebook217 pages1 hour

மாப்ள Bench: The Boys Are Back

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புத்தகம் பற்றி..


எனது முதல் புத்தகம் "காதலாடுதல்" க்கு பிறகு வரும் இரண்டாவது படைப்பு "மாப்ள BENCH".  இதில் பள்ளியை களமாக்கி, மாப்ள பெஞ்சை கதை தளமாக்கி, அதில் அமர்ந்திருக்கும் கனவான்களையே கதாநாயகர்களாக்கி என் கதாபாத்திரங்களாக இந்த "மாப்ள பெஞ்ச்" கதையை புனைந்துள்ளேன்.


பள்ளி பருவத்திலே கொண்டாடி தீர்த்த அந்த வசந்த காலத்திற்கு இந்த "மாப்ள BENCH"  கதை அனுபவமும் இழுத்துச் செல்லும். பள்ளி திரும்புதல் என்கிற Back to School பரவச உணர்வை மீண்டும் ஒரு முறை நிகழ்த்தி, உங்களின் பள்ளி பருவ கால அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.


உங்களின் பள்ளி பருவத்தின் மறவா நினைவுகளை மனதில் மீண்டும் ஒரு முறை உங்கள் மனங்களில் ஓடவிட்டு மீள் உருவாக்கி கொள்ள முயல்வீர்களாக!


-சுவெகி  • suveki@gmail.com

Languageதமிழ்
Release dateFeb 9, 2018
மாப்ள Bench: The Boys Are Back

Related to மாப்ள Bench

Related ebooks

Reviews for மாப்ள Bench

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாப்ள Bench - சுவெகி

    ASTRO ஆனந்த்

    கடைசி பெஞ்ச் லெஜன்ட் ஆனாலும் ஆனந்த் அநேகமாக அமைதியான பையன் தான். அதற்கு பிறகு தான் அவனுக்குள் தூங்கி கொண்டிருந்த ஆஸ்ட்ரோ புயல் விழித்துக் கொண்டது. அதை தட்டியெழுப்பியது யார் என்று இன்று வரை தெரியவில்லை. எங்கள் வகுப்பில் ஆஸ்ட்ரோ ஆனந்தின் அருள்வாக்குக்கு அப்படியொரு மாணவர் கூட்டம் உண்டு. கிளாஸ் டெஸ்டுக்கு பயந்து நடுங்கி ஆஸ்ட்ரோ ஆனந்தோட அருள்வாக்கை நம்பி நிற்கும் பக்தர்கள் கூட்டம் என்று கூட சொல்லலாம்.

    ஆனால் இதுவரை ஆஸ்ட்ரோ ஆனந்தோட அருள்வாக்கு அவன் கிளாஸோட பரீட்சை பய பக்தர்களை கைவிட்டதில்லை. அவன் சொல்லிய அத்தனை அருள்வாக்கும் பலித்து அவனை நம்பும் பரீட்சைக்கு படிக்காத பக்தர்களை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

    பொதுவா ஸ்கூல்ல காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு வகுப்புகளை பற்றி மாணவர்களுக்கு பெரிதாக பயம் ஒன்றும் இல்லை. காரணம் அந்த பரீட்சைகளின் கால அட்டவணை முன்னரே ஸ்கூல் டைரியில் வெளியாகிவிடும். அவ்வப்போது ஆசிரியர்கள் அதை நினைவூட்டி பயமுறுத்தி கொண்டே இருப்பதால் அப்படி பள்ளியில் முன்கூட்டியே குறித்த நாளில் நடக்கும் பெரிய பரீட்சைகளை பற்றிய எந்த பயமும் இல்லை.

    ஆனால் அவ்வப்போது கிளாஸ்ல நடக்கும் கிளாஸ் டெஸ்ட் அல்லது முந்தின நாள் எடுத்த பாடத்தை மறுநாள் வகுப்பில் ஆசிரியர்கள் திடீர் டெஸ்டாக வைப்பது தான் பல மாணவர்களுக்கு அடி வயிறை கலக்கும். பொதுவா முதல் பெஞ்ச் பசங்களும், கடைசி பெஞ்ச் பசங்களும் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை.

    முதல் பெஞ்ச் பசங்க வாத்தியார்களின் செல்லப் பிள்ளைகள். அவர் எதை சொன்னாலும் வேதவாக்காக நினைத்து கொண்டு ஆசிரியர்களின் அன்பை பெற, பாராட்டை பெற முட்டி மோதி கொண்டே இருப்பார்கள். அவர்களை ஸ்மார்ட் ஸ்டூடன்ட்ஸ் என்று எடுத்து கொள்ளலாம்.

    ஆனால் லாஸ்ட் பெஞ்ச் பசங்க அதற்கு நேர்மாறானவர்கள். ஆசிரியர்களின் அடாவடி லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர்கள். ஆசிரியர்களை கண்டு பயப்படுவதும் இல்லை. பொதுவாக இரண்டு வகையான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயப்படுவது இல்லை. முதலில் நன்றாக படிப்பவர்கள் இரண்டாவது படிக்கவே விரும்பாத மாணவர்கள்.

    இரண்டாம் வகை மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து, திட்டி, அவமானப்படுத்தி அவர்கள் எனர்ஜி குறைந்தது தான் மிச்சம். கடைசி பெஞ்ச் கணவான்களுக்கு அதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல் தான். சரியான கல்லுளி மங்கனுங்க என்றால் அது லாஸ்ட் பெஞ்ச் லெஜண்ட்ஸ் தான்.

    பொதுவா முதல் மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் கேங்க் கிளாஸ் டெஸ்டை பற்றி கவலைப்படுவதில்லை. காரணம் முதல் பெஞ்ச் அன்றாடம் பாடத்தை படித்து டெஸ்டுக்கு தயாராகவே இருப்பார்கள். லாஸ்ட் பெஞ்சின் டெஸ்ட் லட்சணம் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு தெரியும் என்கிற தெனாவெட்டே அவர்களை அசால்ட் ஆறுமுகங்களாக மாத்தி விடும். அதனால் அவர்களும் கிளாஸ் டெஸ்ட்டுக்கு பயப்பட மாட்டார்கள்.

    ஆனால் இரண்டாவது முதல் கடைசிக்கு முந்திய மத்திய வரிசை மாணவர்கள் தான் ரெண்டாங்கெட்டான் வகை. அவர்களில் சுமாராக, மிகவும் சுமாராக படிக்கும் ஆவரேஜ் டைப் மாணவர்கள் தான் அதிகம். அவர்கள் தான் வகுப்பில் ஆசிரியர்களுக்கும், பரீட்சைக்கும் பயப்படுவார்கள். நன்றாக முயன்றால் நல்ல மதிப்பெண் வாங்கும் இவர்களால் தொடர்ந்து முயன்று, கடினமான உழைப்பது தான் பிரச்சனை. இப்படி பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு படிக்காமல் ஏதோ கடமைக்கு பயபக்தியோடு படிப்பதால் பரிட்சை ஹாலில் படித்த விஷயம் கூட மறந்து பரிதாபமாக பேப்பரை பார்த்து முழித்து கொண்டே இருப்பார்கள்.

    பல்வேறு கவனச்சிதறல்களால் டயர்டாகி மதிப்பெண் எடுப்பதில் கன்சிஸ்டென்ஸி என்கிற நிலையான மதிப்பெண்களை இவர்களால் எடுக்க முடியாது என்பது தான் சிக்கல். அதே போல் ஆசிரியர்களிடம் திட்டு வாங்க கூடாது என்று மிகவும் மெனக்கெடுவார்கள். ஆசிரியர்கள் திட்டிவிட்டால் அன்று முழுவதும் ஏங்கி, ஏங்கி அழுவார்கள். அவ்ளோ சென்சிட்டிவான ஸ்டூடன்ஸ் தான் இந்த மத்திய பெஞ்ச் வரிசை மாணவர்கள். ஆபூர்வமாக சில விதிவிலக்குகளும் உண்டு. மத்திய பெஞ்ச் மாணவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பவன் தான் நம்ப ஹீரோ ஆஸ்ட்ரோ ஆனந்த்.

    பள்ளியில் அன்று கணக்கு வகுப்பில் டெஸ்ட் இருந்தால் கணக்கு டீச்சர் கல்யாணி வந்திருக்கிறாரா இல்லையா என்பது தொடங்கி அடிக்கடி பள்ளி வகுப்பு பிரேக்கில் ஸ்டாஃப் ரூம் பக்கம் சென்று கல்யாணி டீச்சரை ஒரு சிபிஐ உளவாளி போல் நோட்டமிட்டு கல்யாணி டீச்சரோட மூடை அறிந்து கொண்டு அன்று வகுப்பில் கணக்கு டெஸ்ட் நடக்குமா நடக்காதா என்பதை நம்ப ஆஸ்ட்ரோ ஆனந்த் துல்லியமாக கணித்து விடுவதில் கில்லாடி. பெயருக்கு தான் ஆஸ்ட்ரோ என்று ஆனந்துக்கு அடைமொழி வைத்தாலும் அதில் ஆஸ்ட்ரோ என்கிற ஜோஸ்ய புண்ணாக்கெல்லாம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஆனந்துக்கு அஸ்ட்ராலஜிக்கு சரியான ஸ்பெல்லிங் கூட தெரியாது. ஆனால் அது ஆனந்தோட, அவனுக்கே தெரியாத சைக்காலஜிக்கல் ஸ்கில் என்று சொல்லி கொள்ளலாம்.

    கணக்கு டீச்சர் கல்யாணியின் முக பாவனைகள் காலையில் பள்ளிக்கு வந்ததில் இருந்தே ஸ்டாஃப் ரூம்ல டீச்சரை ரகசியமாக உளவு பார்த்து, அவர்களின் சக ஆசிரியரிடம் நடத்தும் உரையாடல் உட்பட அத்தனையும் அவ்வளவு துல்லியமாக ஆய்வு செய்து அன்னைக்கு கிளாஸ்ல மேத்ஸ் டெஸ்ட் இருக்கிறதா இல்லையா என்பதை கரெக்டாக கணித்து விடுவதில் ஆஸ்ட்ரோ ஆனந்த் பலே கில்லாடி தான். அதை போல் இன்னொரு கணக்கு வகுப்பு தொடங்கும்போதே கிளாஸ் ரூம் மத்தியில் டீச்சர்கள் நிற்கும் மேடையில் ஏறி நின்று அத்தனை பேருக்கும் எச்சரிக்கையோடு அறிவிக்கை கொடுத்து விடுவான்.

    அதாவது,

    "டியர் ஸ்டூடன்ஸ் எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு கல்யாணி மிஸ் கிளாஸ்ல டெஸ்ட் வைக்க சான்ஸே இல்ல. சோ என்ஜாய் டியர் கேர்ள்ஸ் அன்ட் பாய்ஸ். ஒரு வேளை அவங்க மறந்து போய் நெக்ஸ்ட் சாப்டரை கிளாஸ் எடுக்க ஆரம்பிப்பாங்க.

    பட் யாராவது மிஸ் டெஸ்ட் வைக்கிறேனு சொன்னீங்களேனு ரிமைன்ட் பண்ணிடாதீங்க. கொஞ்சம் திரும்பி நம்ப பாய்ஸோட ஃபேஸை பார்த்தாலே உங்களுக்கு நாங்க எவ்ளோ பாவமா படிக்காம டெஸ்ட்க்கு பயந்து பதட்டத்தோட இருக்கோம்னு புரியும். ப்ளீஸ் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்"

    என்று நம்ப லாஸ்ட் பெஞ்ச் ஹீரோ ஆஸ்ட்ரோ ஆனந்த் அசால்டா டீச்சர் மேடையில் ஏறி அதிரடியாக அறிவிக்கும்போதே கிளாஸ்ல அத்தனை கேர்ள்ஸ் அன்ட் பாய்ஸ் வாய்விட்டு சிரித்து விடுவார்கள். சில கேர்ள்ஸ் சிரிப்பை கஷ்டபட்டு கர்சீஃப் க்குள் மறைத்து கொண்டு சிரிப்பு வராத மாதிரி ஆக்ட் கொடுப்பார்கள்.

    அதே போல் அன்று மேத்ஸ் டீச்சர் கல்யாணி வகுப்புக்குள் நுழைந்ததும் அத்தனை கண்களும் கல்யாணி டீச்சரை ஒரு முறை பயத்தோடு பார்த்து கொண்டும், இன்னொரு பார்வை திரும்பி லாஸ்ட் பெஞ்சில் ஆஸ்ட்ரோ ஆனந்தையும் திரும்பி பார்ப்பார்கள். அப்படி ஒட்டு மொத்த கிளாஸும் திரும்பி ஆஸ்ட்ரோ ஆனந்தை பதட்டதோடு பார்க்கும்போது, நம்ப ஹீரோ ஆஸ்ட்ரோ ஆனந்த் அசால்டாக வெற்றி சின்னத்தை காண்பித்து 'பி கூல் கைய்ஸ், நோ டெஸ்ட் என்ஜாய் டூடே' என்று மியூட்டில் வாயசைத்து சிரிப்பான்.

    பள்ளி படிப்பு முடியும் வரை எங்க ஆஸ்ட்ரோ ஆனந்தோட அந்த கணிப்பு பொய்த்து போனதே இல்லை. இப்போ ஆனந்த் எங்கே இருக்கிறானோ தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் ஒரு மனநல மருத்துவராக மாறி இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு பிரபல ஜோதிடராக மாறி அவரை விட பலமடங்கு சம்பாதித்து செட்டில் ஆகியிருப்பான் என்பது மட்டுமே என்னுடைய யூகம்.

    PUPPY LOVE பேரன்ட்ஸ்

    இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு தான். அப்போலாம் எங்க கிளாஸ் பசங்க மட்டும் இல்லை அவங்க பேரண்ட்ஸ் கூட பெக்குலியர் கேரக்டர்ஸ் தான்.

    எங்க கிளாஸ்ல கடைசி பெஞ்ச் கனவான் கோபால், எங்க கிளாஸ் கோமதியை டாவடிச்சு லவ் லெட்டர் கொடுத்த போது நடந்த சம்பவங்களை ஒரு ஸ்வாரஸ்யமான கதை போல் தொகுத்து இருக்கிறேன்.

    இதோ கோபால் கோமதி பெற்றோர்களின் பப்பி லவ் கதை.

    வேகமாக பைக்கில் வரும் தாமோதரன் பைக்கில் அமர்ந்தபடியே அப்பார்ட்மென்ட் முன்பு நின்று வாட்ச்மேனிடம், மகாதேவனைப் பற்றி விசாரிக்க, அவரது ஃபிளாட் 2வது பிளோரில் இருப்பதாக வாட்ச்மேன் கூறுகிறார்.

    பைக்கை வேகமாக அப்பார்ட்மென்டினுள் செலுத்த, தடுக்கும் வாட்ச்மேன் சார்..சார்...விசிட்டர்ஸ் பார்க்கிங் உள்ள கிடையாது. வெளியே தான் நிறுத்தணும் என்று கூற,

    அட போயா. இருக்கிற டென்ஷன்ல நீ வேற உள்ள வெளியேனு...உள்ள போயிட்டு வந்த பின்னாடி தான் தெரியும். மகாதேவன் உள்ளேயா...நான் உள்ளேயான்னு...?

    என்று சொல்லியபடி அப்பார்ட்மென்ட் லிஃப்ட் பகுதியை நோக்கி வேகமாக செல்ல, வாட்ச்மேன் அவரை வெறித்தபடி செய்வதறியாது விழிக்கிறார்.

    மகாதேவனின் பிளாட் காலிங் பெல் இடைவிடாமல் ஒலிக்கிறது.

    கோபமாக வந்து கதவை திறக்கும் மகாதேவன்,

    யாருங்க நீங்க..ஏன் இப்படி லூசுத்தனமா காலிங் பெல்ல அடிக்குறீங்க..

    அவரது அனுமதியை எதிர்பாராமல் அவரை தள்ளியபடி பிளாட்டின் உள்ளே வரும் தாமோதரன்,

    யாருய்யா லூசு..நீ லூசு..உன் மகன் லூசு..உன் குடும்பமே லூசு.

    ஹலோ மிஸ்டர்...வார்த்தைய அளந்து பேசுங்க,.தொறந்த வீட்டுக்குள்ள எதோ மாதிரி நுழைஞ்சிட்டு ஏன் என் குடும்பத்தை இழுக்குறீங்க.. யாரு மிஸ்டர் நீ..?.

    "யோவ்..நீ உன் மகனை ஒழுங்கா வளர்த்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு வரணும்..புள்ளைய பெத்திருக்கியா..பொறுக்கிய பெத்திருக்கியா...எங்கே அவன் நாலு

    Enjoying the preview?
    Page 1 of 1