Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Harium Sivanum Onnu
Harium Sivanum Onnu
Harium Sivanum Onnu
Ebook147 pages57 minutes

Harium Sivanum Onnu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851362
Harium Sivanum Onnu

Read more from Jyothirllata Girija

Related to Harium Sivanum Onnu

Related ebooks

Reviews for Harium Sivanum Onnu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Harium Sivanum Onnu - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    அரியும் சிவனும் ஒண்ணு

    Ariyum Sivanum Onnu

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காட்சி 1

    [ராகவன் தன் சிறு வீட்டில் தெருவைப் பார்த்திருக்கும் ஜன்னலருகே அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருக்கிறான். இரவு ஏழு மணி இருக்கும். அப்போது இரு குடிகாரர்கள் தள்ளாடிக்கொண்டே நடந்து வந்து அவன் வீட்டு வாசலில் நிற்கிறார்கள். சரியாக நிற்க முடியாமல் ஆடுகிறார்கள். ராகவன் அவர்களை அருவருப்புடன் பார்க்கிறான். அவர்கள் குடிகாரர்களுக்குரிய குழறலோடு இழுத்துஇழுத்து ஏதோ பேசிக்கொள்ளுகிறார்கள். படிப்பு ஓடாத ராகவன் எரிச்சலுடன் பட்டென்று புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவர்களை வேடிக்கை பார்க்கிறான். ]

    முதல்வன்: டேய் இன்னா மஜா, இன்னா மஜா. குடிச்சிப் பார்க்காதவங்க, அத்தோட அருமை தெரியாதவங்கள்ளாம் சேந்துக்கிட்டுக் குடிக்காதே குடிக்காதேன்றாங்களேடா? இன்னா பைத்தியக்காரங்க.

    இரண்டாமவன்: பைத்தியக்காரனுங்கதான். இல்லாட்டி அந்த மாதிரி அறிவு கெட்ட தனமாகப் பேசுவானுங்களா?

    முதல்வன்: இது எப்பிடி இருக்குதுன்னா, கடவுளே உணராதவங்க பக்தியாலே இன்ன பெரயோசனம்னு கேக்குற மாதிரி இல்லே?

    இரண்டாமவன்: டேய் டேய். ஆமாண்டா. சரியாச் சொன்னே. குடிகாரங்க வாயிலே பெரிய பெரிய தத்துவங்கள்ளாம் வருமுன்னு யாரோ சொன்னாங்கடா. அது நெசந்தான். இப்பப் பாரு. ஒண்ணு மில்லே, நீ(நீயை அழுத்தி) தத்துவம் பேசுறே.

    முதல்வன்: சரியாச் சொன்னேடா. குடிகாரங்க அதிகமானா நாட்டுலே தத்துவ வியாதிங்க அதிகமாகுமுன்னு தெரியாமே….

    இரண்டாமவன்: தத்துவ வியாதியில்லேடா, மடையா. தத்துவ வாதிங்கன்னு சொல்லு.

    முதல்வன்: (இளித்து) கரெக்டு. தத்துவ வாதிங்க அதிக மாவாங்ககுறது தெரியாமே பெரிய மனுசங்கள் ளாம் சேர்ந்துஏந்தான் குடி                    வாணாம்குறாங்களோ தெரியல்லியே….

    இரண்டாமவன்: (திடீரென்று பெருங்குரலில்) டேய். அதோ பார்றா. நாலு பொண்ணுங்க வந்திக்கிட்டுருக்கிறாங்க.

    முதல்வன்: (உற்சாகத்துடன் இளித்து) டேய், நீ ரொம்ப ஓவராக் குடிச்சிருக்கிறே.       வர்றது நாலு பொண்ணுங்க இல்லேடா. ரெண்டு பொண்ணுங்க தான் வர்றாங்க.

    [ராகவன் உஷாராகிறான். நாற்காலியிலிருந்து எழுந்து நிற்கிறான். ஜன்னல் வழியே பார்க்கிறான். சற்றுத் தொலைவில் மீனு வந்து கொண்டிருக்கிறாள். ராகவன் பரபரப்படைகிறான். வாயிற்புறம் வந்து நிற்கிறான்.]

    இரண்டாமவன்: (இளித்து) ஏ பொண்ணுங்களா! இப்படி வாங்க சொல்றேன்…

    [மீனுவைச் சொல்லி முடியாத திகில் சூழ்ந்து கொள்ளுகிறது. அவள் கைகளைப் பிசைந்துக் கொள்ளுகிறாள். முகத்தில் அச்சமும் கலவரமும் தோன்றுகின்றன. ஒரு குடிகாரன் மீனுவை நோக்கி நகருகையில் ராகவன் அவனது கன்னத்தில் ஓங்கி யறைகிறான் மற்றவன் தள்ளாடிக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறான். ராகவனிடம் இரண்டு அறைகள் வாங்கிய பின் அந்தக் குடிகாரனும் அங்கிருந்துப் போய் விடுகிறான். மீனு ராகவனை நன்றியுடன் நோக்குகிறாள். ]

    மீனு:      ஓ. நீங்களா? நல்ல சமயத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினேள்.       (தோள்களையும் தலையையும் அச்சத்துடன் சிலிர்த்து) நீங்க மட்டும்       சமயத்துக்கு வந்து அவாளே வெரட்டல்லேன்னா என் கதி என்ன       ஆயிருந்திருக்கும்? ரொம்ப தேங்ஸ்.

    ராகவன்: நாட் அட்டால். நீங்க அந்தக் கோடியிலே வர்றச்செயே பார்த்தேன்.       இந்தப் பசங்களையும் கவனிச்சேன். உஷாராயிட்டேன். அவ்வளவுதான்.

    மீனுவின் கைப்பை சற்றே ஆடுவதிலிருந்து அவளது திகில் இன்னும் குறையவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ராகவன் அவளே ஆதரவாகப் பார்க்கிறேன்.

    ராகவன்: இன்னும் உங்க பயம் போகல்லே போல்ருக்கு. கொஞ்சம் இப்பிடியே       நிண்ணுண்டிருங்கோ. கொஞ்சம் மோரைக்காய்ச்சி எடுத்துண்டு வறேன். திடீர்னு ஏற்பட்ற பயத்துக்கு அது நல்ல மருந்து. ஒரு வாய் குடிச்சாலே போறும்….

    ராகவன் உள்ளே நுழையும் போது மீனு கலவரத்துடன் குடிகாரர்கள் போன திசையில் பார்க்கிறாள்.

    மீனு:      இப்படியே நின்னுண்டிருக்கிறதுக்குப் பதிலா நான் உங்க             வீட்டுக்குள்ளே வந்து கொஞ்சம் உக்காந்துக்கறேனே?

    ராகவன்: (சற்றே திகைத்து) நீங்க உள்ளே வர்றதைப்பத்தி எனக் கொண்ணும் ஆட்சேபணை இல்லே. ஆனா… தற்சமயம் வீட்டுலே நான் மட்டும்தான் இருக்கேன். அதனாலே தான் இங்கேயே நிக்கச் சொன்னேன். இதோ ஒரே நிமிஷத்துலே வந்துடறேன்.

    மீனு குடிகாரர்கள் சென்ற பக்கமே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். சிறிது நேரத்துக்கெல்லாம் ராகவன் மோருடன் வருகிறான். அவன் கையிலிருந்து அதை வாங்கத் தயங்கினாற்போல் அவள் நிற்பதைப் புரிந்து கொள்ளுகிற ராகவன் தம்பளரை ஒரு நாற்காலியின் மீது வைக்கிறான். மீனு அதை எடுத்துப் பருகுகிறாள்.

    மீனு: (தம்ளரை வைத்துவிட்டு) உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்ல. எனக்கு இன்னொரு பெரிய ஒதவி கூடப் பண்ணினேள்னாத் தேவலே. கொஞ்சம் எங்காத்து வரைக்கும் என்னைக் கூட்டிண்டு போய் விட்டுட்டேள்னு… ராகவன்: ஓ தாராளமா, பெரிய ஒதவிங்கவும் என்னமோ ஏதோன்னு பயந்தேன். வாங்க போவோம்…. ராகவன் தன் வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டுகிறான்.

    ராகவன்:(கதவைப் பூட்டிக்கொண்டே) இன்னிக்கு என்ன தேதி மிஸ் மீனு? மீனு: (ஒன்னும் புரியாமல்) இருபத்து நாலு.

    மீனு: ஏன் செப்டம்பர் மாசம். வருஷத்தையும் சொல்லிப்பிடறேன். 1971… ராகவன்:ஆகஸ்டு முப்பதுக்கப்பறம் உங்க மாதிரி இளம் பெண்கள்ளாம் ஆறு மணி கழிச்சு வெளியிலே வரலாமா? மீனு: இன்னிக்குத்தான் இந்த மாதிரி ஆயிடுத்து. கொலுவுக்குவரச் சொல்லிக் ரெண்டு வருஷமா ஒரு பொண்ணு கூப்பிடறா. இன்னிக்குத்தான் போன முடிஞ்சுது. போகல்லேன்னா மன வருத்தம்… பஸ் வேறே கிடைக்கல்லே.

    ராகவன்:இனிமே பெண்கள்ளாம் ராத்திரி வேளையிலே வீட்டு வாசற்படியெத் தாண்டி வெளியிலே வரக்கூடாது. அதுவும் இளம் பெண்கள் வரவே கூடாது… என்னடாது பூட்ட வரல்லே? மீனு: குடிகாரப் பசங்களுக்கு இளம் பொண்ணு கிழவின்னெல்லாம் வேறேவித்தியாசம் உண்டா என்ன? நேத்துக் கூடப் பேப்பர்லே பார்த்தேன். எம்பது வயசுக்              கிழவியெப் பிடிச்சு ஒரு குடிகாரன் இழுத்துவிட்டான்னு. ஆமா? எனக்கு ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்கறது. குடிச்சுட்டா எதிர்லே வர்றது              யாருன்னு அவாளுக்குத் தெரியாதுங்களே, கண்ணு சரியாத் தெரியாதுன்னா கூடச் சொல்றாளே, எதிர்லே வர்ற பொண்ணுகள் மட்டும் தான் அவா கண்ணுக்குத் தெரியுமாமா? ராகவன்: யாரு கண்டா அந்தக் கன்றாவியே வாங்க போவோம்.

    (போகிறார்கள்)

    காட்சி 2

    மீனுவின்வீடு.ராகவனும் மீனுவும் வருகிறார்கள்.

    மீனு: உக்காருங்கோ.(நாற்காலியைக் காட்டுகிறான்.)என்னை நீங்க வெளியே நீக்க வெச்ச மாதிரி உங்களை நிக்க வைக்க வேண்டிய              அவசியமில்லை. ஏன்னா எங்காத்திலே எல்லாருமே              இருக்கா…(ராகவன் புன்சிரிப்புடன் உட்காருகிறேன்.) அப்பா, அப்பா…(மீனு பார்த்து உள்ளே குரல் கொடுக்கிறாள். மீனுவின் தந்தை சுப்புராமன் ஏப்பம் விட்டவாறு கையில் ஒரு புத்தகத்துடன் வருகிறார் ராகவன் மரியாதையாக எழுந்து நிற்கிறான்.)

    சுப்பராமன்: (மூக்குக் கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்திக் கழுத்தைச் சாய்த்துப் பார்த்தபடி) யாரு அந்தப் பிள்ளையாண்டான்? மீனு: இவர் தாம்ப்பா மிஸ்டர் ராகவன். எங்க காலேஜ்லே வருஷா வருஷம் பாரதியார்       போட்டியிலே first prize அடிச்சுண்டு போறவர்.

    சுப்பராமன்: ஓ. அந்தப் பையனா? ராகவன்: வருஷா வருஷம் அடிச்சிண்டு போறதாச் சொன்னது தப்பாச்சே. (மீனுவைப் பார்த்து) இந்த வருஷம் தான் அதை நீங்க தட்டிண்டு போயிட்டேளே? சுப்பராமன்: உங்களை எப்படியாவது எப்படியாவது ஜெயிக்கனும் அவளுக்கு. இந்த ஒரு              வருஷம் ஜெயிச்சிட்டா… ஏம்ப்பா, நீ என்ன பண்ணிண்டு இருக்கே இப்போ? ராகவன்: கடைசி வருஷம் எம்.ஏக்குப் படிச்சிண்டிருக்கேன் சார்.

    சுப்பராமன்: இகனாமிக்சா இல்லே… ராகவன்: லிட்டரேச்சர்…சமஸ்கிருதம் இஷ்டப்பாடம்… சுப்பராமன்: (மகிழ்ச்சி பொங்க) வெரிகுட்              வெரிகுட்….ஏதாவது சாப்பிடிறாயா? சொர்ணம், சொர்ணம்… ராகவன்: அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார். வீட்டுக்குப் போய்                    சாப்பிடணும். அப்பறம் அப்ஸெட்டாயிடும்… மீனு: சமஸ்கிருதம்              படிக்கிறவாளேக் கண்டா அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    சுப்பராமன்: இப்ப என்ன சொல்றே நீ? அதனாலேதான் ஏதாவது சாப்பிடறியான்னு மிஸ்டர் ராகவனை உபசாரம் பண்ணினேன், இல்லேன்னாப்                    பண்ணியிருக்க மாட்டேங்கறியா? மீனு: போங்கப்பா நீங்களும். உங்க ஜோக்கும். சொர்ணம் வருகிறான்.

    சொர்ணம்: என்னாண்ணா? மீனு: கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1