Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarey Mounama?
Malarey Mounama?
Malarey Mounama?
Ebook165 pages1 hour

Malarey Mounama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மலரே..! மவுனமா?' இதுவும் மென்மையான காதல் கதைதான். கதாநாயகி 'வீணை' மஞ்சரி உங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொள்வாள். ஒரு அதிர்ச்சியில் பேசும் சக்தியை இழந்த மஞ்சரி... மதனை சந்திக்கிறாள்.
இருவரும் காதல் வயப்படுகின்றனர். இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு திடீர்க் கல்யாணம் நடக்கிறது.
மதனின் மனதில் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியதால்... காதலித்து கைப்பிடித்த மஞ்சரியுடன் மகிழ்ச்சியோடு மணவாழ்வைத் துவங்க முடியாமல் தத்தளிக்கிறான்.
உண்மை வெளிப்பட்ட போது மஞ்சரி எப்படி அதைத் தாங்கிக் கொண்டாள்?
மஞ்சரிக்கு இறுதியில்... பேசும் சக்தி எப்படி கிட்டியது? மதன் - மஞ்சரியின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் எப்படி கிட்டின?
வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் வாசகர்களே! குற்றாலத்தின் ரம்யமான வனப் பகுதிகளில் சில்லென்ற சாரலில் நனைந்தபடி மஞ்சரி-மதனுடன் சேர்ந்து உலவி விட்டு வரலாம்.
- லட்சுமி பிரபா
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852413
Malarey Mounama?

Read more from Lakshmi Praba

Related to Malarey Mounama?

Related ebooks

Reviews for Malarey Mounama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarey Mounama? - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    மலரே மவுனமா?

    Malarey Mounama?

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மலரே மவுனமா?

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    'என்னுரை'

    வாசக நெஞ்சங்களுக்கு,

    வணக்கம்! 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' நாவலுக்கு நீங்கள் அளித்திருந்த அமோக வரவேற்பிற்கும், பேராதரவிற்கும். என் இதயம் கனிந்த நன்றி..!

    'மலரே. மவுனமா?' இதுவும்.மென்மையான காதல் கதைதான். கதாநாயகி 'வீணை' மஞ்சரி உங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொள்வாள் ஒரு அதிர்ச்சியில் பேசும் சக்தியை இழந்த மஞ்சரி... மதனை சந்திக்கிறாள்.

    இருவரும் காதல் வயப் படுகின்றனர். இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு திடீர்க் கல்யாணம் நடக்கிறது.

    மதனின் மனதில் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியதால்... காதலித்து கைப்பிடித்த மஞ்சரியுடன் மகிழ்ச்சியேர்டு மணவாழ்வைத்துவங்க முடியாமல் தத்தளிக்கிறான்.

    உண்மை வெளிப்பட்டபோது. மஞ்சனி.எப்படிஅதைத்தாங்கிக்கொண்டாள்?

    மஞ்சரிக்கு இறுதியில். பேசும் சக்தி எப்படி கிட்டியது? மதன் மஞ்சரியின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் எப்படி கிட்டின?

    வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் வாசகர்களே! குற்றாலத்தின்,  ரம்யமான வனப் பகுதிகளில் சில்லென்ற சாரலில் நனைந்தப்டி மஞ்ச்ரி மதனுடன் சேர்ந்து உலாவி விட்டு வரலாம்.

    அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வருகிறது அல்லவா? தீபாவளி என்றாலே. ஸ்பெஷல் விருந்துதானே? தீபாவளிஸ்பெஷலாய். ஒரு சிறப்பான அருமையான நாவலோடு உங்களை சந்திக்கிறேன்.

    'நீயின்றி நானில்லையே..!' இதுதான் தீபாவளி ஸ்பெஷல் நாவலுக்கான தலைப்பு! வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எனது இமெயில் முகவரிக்கும். அனுப்பிவைக்கலாம். ஆசிரியர்திருமதி. சித்ராஅவர்களுக்குமனம் கனிந்தநன்றி!

    அன்புடன்

    உங்கள்

    லட்சுமி பிரபா எம்.ஏ., பி.எட்.,

    lakshmiprabanovelsreview@gmail.com.

    1

    பொதிகை மலையின் உச்சியிலிருந்து தவழ்ந்து வந்த மந்தமாருதம் இதமாய் மேனி தொட்டுத் தழுவியது.

    சிலுசிலுவென்று சாரல் பூப்பூவாய் பன்னி தெளித்துக் கொண்டிருந்தது.

    குற்றாலத்தின் மெயின் அருவியில்.. பாலாய் தண்ணிர் ஹோவென்று ஆர்ப்பளித்துக் கொட்டியது.

    சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று அலை மோதும்.

    இன்று திங்கட்கிழமை கூட்டமே இல்லை. அதுவும் காலை ஆறு மணி.

    'நல்லவேளை..! ஜனங்க யாரும் இல்லாததால ஏகாந்தமா நிம்மதியா ஆசை தீரக் குளிக்கலாம்.'

    மஞ்சரி மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

    புன்னகை ததும்பும் முகத்துடன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.

    "உனக்கு யோகம் தான் மஞ்சரி! சீசன் சமயத்துல கூட்டமே இல்லாம இருக்கிறது அதிசயம்தான். ஜனங்க வர்றதுக்குள்ளே... நிம்மதியா குளிச்சுட்டு வா! நீ தான் தனிமை விரும்பியாச்சே?

    உன் மனசு போலவே இன்னிக்கு அமைஞ்சு போச்சு. போ தாயி! இந்தா இந்த நல்லெண்ணெயை உச்சந்தலையில தேய்ச்சுக்கோ.

    ஆர அமர நிதானமாவே குளிச்சுட்டு வந்தா போதும். ஒண்ணும் அவசரமில்ல. இனிமேலாவது நல்ல காலம் பொறக்கட்டும்னு குற்றாலநாதரை மனசுல கும்பிட்டுக்கிட்டு அருவியில தலையை வை தாயி!"

    பெரியவர் காசி நீட்டிய சிறு எண்ணெய் புட்டியை கை நீட்டி வாங்கிக் கொண்ட மஞ்சரி. புன்னகை மாறாமல் தலையை ஆட்டினாள்.

    நீங்க குளிக்கலையா தாத்தா? என்ற ரீதியில் சைகை காட்டினாள்.

    அவர் பதிலுக்கு மறுப்பாய் தலையை அசைத்தார்.

    அவள் கைகளை அசைத்து சைகை காட்டி... விழிகளால் நயன பாஷை பேசும் போதெல்லாம். காசியின் முகம் கூம்பிப் போய் விடும்.

    சொல்லொண்ணா சோகம் அவரது முகத்தில் தாண்டவம் ஆடும்.

    'மூக்கும் முழியுமா பார்க்கிறதுக்கு. அந்த மகா லட்சுமி மாதிரி எம்புட்டு அழகா இருக்கா?

    தங்கத்தாலே செஞ்சு வைச்ச சிலை மாதிரி தகதகன்னு ஜொலிக் கிறாளே? பாவம். தங்கமான பொண்ணு!

    இப்பேர்ப்பட்ட குணவதியை... ஊர் உலகத்துல வலை வீசித் தேடினாலும் காண முடியாதே?

    மகராசி மஞ்சரி படிப்பிலேயும் கெட்டிக்காரி. பெரியவங்க கிட்டே மரி யாதையா பணிவா நடந்துக்கிடறதிலே இவளுக்கு நிகர் இவளே தான்.

    அந்த கலைமகளே நேர்ல வந்து வீணை வாசிக்கிற மாதிரி அற்புதமா வீணை வாசிக்கிறா.

    மேடைக் கச்சேரி, விழாக்கள்லே. வீணை வாசிச்சு சின்ன வயசிலேயே ஒரு பேரை எடுத்துட்டா.

    'வீணை மஞ்சரி:ன்னா எல்லாருக்கும் தெரியற அளவுக்கு புகழையும் பிரபலத்தையும் பெற்றிருக்கா.

    வீணை கச்சேரி செஞ்சு நல்லா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சுட்டா.

    அழகா கிளி மாதிரி சின்ன வயசுல பேசிட்டிருந்தவ மஞ்சரி.. ஆனா. இப்போ அவ பேச முடியாத ஊமையா போயிட்டாளே?

    அந்த விபத்துக்கு அப்புறமா.. பேசற சக்தியை மஞ்சரி இழந்துட்டாளே?

    கடவுள் இப்படியொரு குறையை வச்சுட்டாரே? அதை நெனச்சுப் பார்த்தாலே. மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கே?

    பெரியவர் காசி மனதிற்குள் புலம்பியபடி ஓரமாய் கிடந்த பாறைத் திட்டில் உட்கார்ந்தார்.

    ஆசை தீர அருவியில் குளித்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.

    ஆர்ப்பளித்துக் கொட்டிய அருவி..!

    தொட்... தொட்டென்று முதுகிலும் தலையிலும் மேனியிலும் கற்கள் விழுந்தாற்போன்று. கனத்த நீர்த் திவலைகள் விழுந்து.. உடம்பிற்கு மசாஜ் செய்ததை வெகுவாய் ரசித்தாள்.

    கூந்தலில் எண்ணெய் தேய்த்த தடமே தெரியவில்லை. மூலிகைகள் கலந்த அருவித் தண்ணில் பிசுக்கு மாயமாய் அடித்துக் கொண்டு போய் விட்டது.

    ஷாம்பூ போட்டு அலசினாற் போல். கூந்தல் பளபளத்தது.

    ஈரம் சொட்டும் ஆடையுடன் மெல்ல நடந்து வந்த மஞ்சரி. அடர்ந்த கூந்தலை இரு தரம் உதறினாள்.

    காற்று அள்ளிக் கொண்டு போனது.

    என்னம்மா..? போதுமா? அந்த உடை மாத்தற ரூமுக்குள்ளே போயி. ஈரத்துணியை மாத்திக்கிட்டு வர்றியா?

    'வேணாம். தாத்தா! அடிக்கற காத்துல டிரஸ் சீக்கிரமா உலர்ந் துடும் என்று சைகையாலேயே சொல்லி மறுத்து விட்டாள். இருவரும் மெல்ல நடந்தனர்.

    அப்போ? நேரா எங்கே போறது?

    குற்றால நாதரின் கோவில் கோபுரத்து தங்கக் கலசம், காலை வெயில் பட்டு தகதகவென்று ஜொலித்ததை.. சுட்டு விரல் நீட்டிக் காண்பித்தாள்.

    ஒ. கோவிலுக்கா? அர்ச்சனைத் தட்டு வாங்கிடலாமா?

    மஞ்சரி புன்னகைத்தபடியே தலையாட்டினாள்.

    பாதையின் இருமருங்கும் ஏராளமான கடைகள். விதவிதமான மூலிகை வேர்கள். பெயர் தெரியாத மலைக் கனிகள். ஏலக்காய், மிளகு, கிராம்பு, லவங்கம் வகையறாக்கள். முடக்கத்தான், காசினி, தூதுவளை, துத்தநாகம் கீரை வகைகள்.

    மஞ்சரி வேடிக்கை பார்த்தபடியே நடந்தாள்.

    காசி அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தார்.

    சளி பிடிச்சுக்கிட்டா. கஷ்டம் தாயி! இதோ... அந்தக் கடையில பனங்கற்கண்டு பால் வாங்கித் தரவா? சளிக்கு நல்லது தெரியுமா? எனறார்.

    மறுப்பாய் கையை அசைத்துவிட்டு. 'கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு வந்து.. பனங்கற்கண்டு பாலை வாங்கிப் பருகலாம் என்பது போல் சைகை செய்தாள்.

    அப்ப சரிதான்.

    குற்றாலநாதரின் கோவில் கோபுரம். கலைநயத்துடன் பிரமாண்ட மாய் கம்பீரமாய் இருந்த அழகை. ரசித்தபடி கோவிலுக்குள் புகுந்தாள்.

    பெரியவரிடமிருந்து அர்ச்சனைத் தட்டை கையில் வாங்கிக் கொண்டாள். 

    ஈரக் கூந்தலை நுனியில் முடிச்சிட்டபடி.. அர்ச்சனைத் தட்டுடன் அவளைப் பார்த்தபோது. தெய்வீக அழகுடன் தேவதையாய் மிளிர்ந்தாள். .

    கர்ப்பக் கிரகத்திலிருந்த குற்றால நாதரை கண் குளிர சேவித்தாள்.

    உள்ளம் உருக... கண்ணி மல்க. குற்றால நாதரையே ஊன்றிப் பார்ததாள்.

    "ஐயனே! எனக்கு உங்களை விட்டா நாதியில்ல... நான் ஒரு அனாதை. இல்ல. அனாதையா ஆக்கப் பட்டவள்னு உங்களுக்குத் தெரியுமே? 

    காசி தாத்தாவை விட்டா. என் மீது அன்பு காட்டறவங்க யாருமே இல்லை.

    வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்ல. எனக்கு நீங்கதான் நல்ல வழியைக் காட்டணும்!" –

    மனதார வேண்டிக் கொண்டாள் மஞ்சரி.

    "அர்ச்சனை யாரு பேருக்கு பண்ணனும்?' பட்டாச்சாரியார் அவளைப் பார்த்துக் கேட்டார்.

    சுவாமி பேருக்கே அர்ச்சனை பண்ணிடுங்க சாமி! சட்டென்று பதிலளித்தார் காசி.

    அர்ச்சனை செய்து முடித்து ஆரத்தி காட்டும் போது... குற்றால நாதருக்கு சாற்றப்பட்ட மாலை நழுவி சரிந்து விழுந்தது.

    "சுவாமி விக்கிரகத்திலேர்ந்து பூ விழுந்தாலே. அதை தெய்வ சங்கல்பம்னு சொல்லுவா. இன்னிக்கு குற்றால நாதருக்கு சாத்தின மாலையே விழுந்துடுத்து... நீங்க கொண்டு வந்த

    Enjoying the preview?
    Page 1 of 1