Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedal Sugamanathu
Thedal Sugamanathu
Thedal Sugamanathu
Ebook437 pages4 hours

Thedal Sugamanathu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854455
Thedal Sugamanathu

Read more from Infaa Alocious

Related authors

Related to Thedal Sugamanathu

Related ebooks

Reviews for Thedal Sugamanathu

Rating: 3.4 out of 5 stars
3.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedal Sugamanathu - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    தேடல் சுகமானது........

    Thedal Sugamaanathu…….

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    http://www.pustaka.co.in/home/author/infaa-alocious

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    பகுதி – 1

    காதல் சுகமானது

    அதைவிட அதைத்தேடும்

    தேடல் சுகமானது..........

    குளிருக்கு இதமாக தன் கைகளை சேர்த்து பரபரவென்று தேய்த்துக்கொண்டு  கன்னத்தில் கைகளை பக்கத்துக்கு ஒன்றாக வைத்துக் கொண்டான் நம் கதையின் நாயகன் ஷாம் சுந்தர். நம் அனைவருக்கும் ஷாம். அவன் அம்மாவுக்கு மட்டும் சுந்தர்.

    கன்னத்தில் கையை வைத்தவாறே ஆயிரமாவது முறையாக தன்  தாயை மனதுக்குள்ளேயே திட்டிக் கொண்டான்.

    ஊரில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு , ஆட்களை வேலை ஏவிக்கொண்டு வயது பெண்களை கிண்டல் செய்துகொண்டு விடலைப் பையனாக சுற்றிக்கொண்டு இருந்த தன்னை,

    இப்படி அயல் தேசத்தில் குளிரில் வாடவிட்ட தன் தாயை அவன் கொஞ்சவா செய்வான்.

    அவனைப் பற்றி சொல்லுவதென்றால், சராசரிக்கும் சற்று அதிகமான உயரம். கிராமத்தில் கொஞ்சம் மெத்த படித்தால் ஏற்படும் அதே தோற்றம். முறுக்கு  மீசை , அது இப்பொழுது கீழே நிலம் பார்த்தபடி இருந்தது.

    மேலுதடை மறைத்து இருந்தது அவனது மீசை. நிறம் மாநிறம், கழுத்தில் ஒரு செயின் , அதன் விசேசம் அது அவர்கள் பரம்பரைச் செயின். கொஞ்சம் தடிமனானது. அது இல்லாமல் அவனைப் பார்க்க முடியாது.

    அவனது கிராமத்திலேயே அதிகமாக படித்தது இருவர், ஒன்று இவன், மற்றவன் இவன் பக்கத்து படுக்கையில் போர்வைக்குள் சுருண்டிருக்கும் இவனது தோழன், எதிரி, போட்டுக் கொடுப்பவன், தனக்காக உயிரையும் கொடுக்கும் இனிய , கொடூரமான நண்பன் வில்லாளன்.

    நண்பனின் பெயரை உச்சரித்ததுமே சிரிப்பு பொத்துக்கொண்டு வரும் ஷாமுக்கு.

    இப்பொழுது நம் வில்லாளனின் பெயர் வில்லியம். அமெரிக்க தேசத்துக்குள் அவனை இழுப்பதற்குள் ஷாமுக்கு உயிர்போய் உயிர் வந்தது என்பதைவிட ,

    நாக்கு தள்ளிவிட்டது என்பதுதான் சரியாக இருக்கும். நண்பனின் கரடு முரடான தோற்றமும், முறுக்கு மீசையும், முறுக்கேறிய உடலையும் பார்த்த வெள்ளைக்காரன், அவனை தீவிரவாதியாக எண்ணியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

    அதைவிட வில்லாளனை மாணவன் என்று சொன்னதை, பகவத் கீதையில் மட்டுமல்ல, அவனது பைபிளில் அடித்து சத்தியம் செய்தால்கூட நம்பமாட்டான் அவன்.

    நண்பனின் முடியின் தோற்றம் முதற்கொண்டு, அவனது மீசையை மழித்து, கைநகம் முதல், கால் நகம்வரை வெட்டி, அவனுக்கு டி-சர்ட் மாட்டி காலில் சூவை திணித்து, அவனது பெயரை வில்லியம் என்று கூறி ,

    அவனையும் தன்னுடன் இழுத்துக்கொண்டு வந்திருக்கிறான் ஷாம். எதற்கு, அவன்மேல் உள்ள பாசமா, நேசமா, ஒன்றும் கிடையாது.

    ஷாமின் தாய் லீலாவின் வேலை இது. வில்லாளனை இவ்வளவு சிரமப்பட்டு ஷாமுடன் அனுப்ப காரணம், ஷாம் அவ்வளவு நல்லவன் என்பதே.

    உங்களுக்கு புரியவில்லை தானே. சரி நானே சொல்லி விடுகிறேன். ஷாம் கொஞ்சம், கொஞ்சமல்ல ரொம்பவே தாராள குணம் உள்ளவன்.

    எதில் என்றால் மற்றவருக்கு உதவுவதில் அல்ல, பெண்களிடம் கடலை போடுவதில். எனவேதான் எங்கே தன் மகன் வந்த இடத்தில் ஏதாவது வெள்ளைக் காரியை இழுத்துக்கொண்டு  வந்துவிடுவானோ  என்ற பயத்தில்தான் இவனை அனுப்பியுள்ளார்.

    வில்லாளனும் நண்பனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வான்.

    ஷாம் லட்சம் முறையாக எண்ணிக் கொண்டான், BE முடித்து MBA வும் முடித்து, கிராமத்தில் இருக்கும் சர்க்கரை ஆலையையும், தோல் பதனிடும் ஆலையையும் துவக்கி வெற்றிகரமாக இரண்டு வருடம் நடத்திக்கொண்டு இருக்கும் இந்த வேளையில்,

    இந்த அமெரிக்க படிப்பு முக்கியமா, அதுவும் தேவையில்லாமல் இன்னொரு MBA. எதற்கு இந்த அம்மா இப்படி செய்கிறார்கள் என்று சத்தியமாக அவனுக்கு புரியவில்லை.

    அதுவும் படிப்பென்றால் பனைமரம் தாண்டி எகிறி குதித்து ஓடும் நண்பனை MS அக்ரி  படிக்க இங்கு அனுப்பி இருப்பது, தண்டனை அவனுக்கா தனக்கா என்பதும் புரியவில்லை.

    அதைவிட ஷாமுடன் அமெரிக்கா போய் படி என்று சொன்னதும், அதற்காகவே காத்திருந்தவன்போல் வில்லாளன் நடந்துகொண்டது.

    சகிக்கவே முடியவில்லை அவனால். கிராமத்தில் B.SC அக்ரியையே, ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து பேப்பரில் அதை வாந்திபண்ணி, பாஸ் மார்க் மட்டுமே எடுத்து தேறிய அவன்,

    அமெரிக்க ஆங்கிலம் தனக்கு தண்ணிபட்ட பாடு என்பதைப்போல் தைரியமாக முன்னே நின்றது, பக்கத்தில் வில்லாளன் படுக்கையில் இல்லையென்றால் பொய் என்றே நம்பி இருப்பான்.

    பக்கத்தில் நான் தூக்கம் வராமல் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க, உனக்கு தூக்கம் ஒரு கேடா, என்பதுபோல் ஆத்திரம் தலைக்கேற நண்பனை நண்பன் என்றும் பாராமல் எட்டி உதைத்தான் ஷாம்.

    ஷாமின் உதையில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த வில்லாளன் , நிதானமாக எழுந்து,

    உனக்கு கட்டிலில் தனியாக படுக்க வேண்டுமென்றால் சொல்ல வேண்டியதுதானே, அதற்கு எதுக்குடா என்னை உருட்டி கீழே தள்ளி விட்ட, அப்பாவியாக கேட்டான் அந்த முரட்டுக் குழந்தை வில்லாளன்.

    அவனை வேற்றுகிரக வாசியைப் போல் பார்த்தான் ஷாம். ஏண்டா நான் மிதிச்சு உன்னை கீழே தள்ளினால் , நிதானமா எழும்பி என்னடா கேள்வி உனக்கு, ஆத்திரமாக கேட்டான் ஷாம்.

    இந்த தாயில்லாத பிள்ளையை ஏண்டா மிதிச்சு கீழே தள்ளின, சொல்லி இருந்தால் நானே கீழே படுத்து இருப்பேனே, புரியாமலே கேட்டான் வில்லாளன்.

    ஏண்டா எருமை, எருமை இந்த கட்டிலில் படுத்ததுக்கா உன்னை எட்டி மிதித்தேன்.

    அதுதாண்டா எனக்கும் புரியலை.

    "வில்லா.............. , உனக்கு இந்தபேரை ரொம்ப பொருத்தமா வச்சு இருக்காங்கடா, எனக்குன்னு வில்லனா பொறந்தவனே.

    போடா போய் எனக்கு காபி போட்டு கொண்டு வா", அவனை விரட்டினான் ஷாம்.

    ஷாம் முதல்ல என்னை எதுக்கு மிதிச்சன்னு சொல்லுடா, சின்ன பையனாக அடம் பிடித்தான் வில்லாளன்.

    "வில்லா.......... , நீ இருக்க உருவத்துக்கும் , உன் கெஞ்சலுக்கும் கொஞ்சம்கூட ஒத்து போகலடா.

    ஒன்று உருவத்தை மாற்று, இல்ல இந்த கெஞ்சலை மாத்து".

    ஷாம் என் வீரம் எல்லாம் வெளி ஆள் கிட்டதாண்டா, உன்கிட்ட என் வீரத்தை காட்ட எனக்கு மனமும் இல்லை, தைரியமும் இல்லை. முதல்ல நீ விஷயத்தை சொல்லு , இன்னும் கொஞ்சம் இறங்கியே பேசினான் வில்லாளன்.

    ஷாம் என்ன சொல்லுவான், என் தாயின்மேல் இருந்த கடுப்பை உன்னிடம் காட்டினேன் என்றா.

    எனவே அந்த காரணத்தை சொல்ல முடியாமல், "எனக்கு குளிரா இருந்தது. ஒரு காபி குடித்தால் நல்லா இருக்கும்போல் தோன்றியது.

    அதனால்தான் உன்னை எழுப்பினேன்", மழுப்பினான் ஷாம்.

    அதை நீ வாயாலேயே சொல்லி இருக்கலாமேடா, உனக்கு ஆக்கிப் போடவும் , உன்னை கவனிக்கவும் தானே நான் இங்கே இருப்பதே, சந்தேகமாக கேட்டான் வில்லாளன்.

    டேய் தடியா நான் ஏற்கனவே கடுப்பா இருக்கேன்.

    அதான் தெரியுதே, கொஞ்சம் சத்தமாக முனங்கினான் வில்லாளன்.

    என்னடா சொன்ன............ .

    இல்ல உனக்கு காபி கடுப்பா வேணுமா, இல்ல கடுப்பு கம்மியாவா ன்னு கேட்டேன்டா, கிண்டலாக பதில் சொன்னான்.

    கட்டுன பொண்டாட்டி கையால் காபி குடிக்கிற வயசு எனக்கு. இங்கே உன் கையால் சாப்பிட்டு, காபி குடிச்சு, பொண்டாட்டி செய்யிற ஒரு வேலையைத்தாண்டா நீ இன்னும் எனக்கு செய்யலை.

    நல்லவேளை நான் தப்பிச்சேன். ஆம்பளையா இருக்கிறதால.

    என்னடா..................... எதுக்கு நீ தப்பிச்ச.

    அப்படி இருந்து இருந்தா.............. , இந்நேரம் என்னை பிள்ளை பெத்துக்க வச்சு இருப்ப, சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டான் வில்லாளன்.

    "அடச்சே............. , உன்கிட்ட............ த்து............ , ஓடி போய்டு கொன்னே புடுவேன் உன்னை.

    அவனும் அவன் மொகரையும், இதில் நினைப்பை பாரு", கொஞ்சம் ஆத்திரமாகவே சொல்லியது வில்லாளன் காதிலும் விழுந்தது.

    அதைக் கேட்டு சிரித்துக் கொண்டான் வில்லாளன். இதேநேரம் நம் கதையின் நாயகி ஆலிஸ்(alice)வதனா  தன் போர்வைக்குள் சுருண்டிருந்தாள். பக்கத்து அறையில் அவளது சகோதரி மலர்விழி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

    ஆலிஸ் எந்த அவசரமும் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வைக்குள் இருப்பது சுகமாக இருக்க, அந்த சுகத்தை இன்னும் அனுபவித்தாள் அவள்.

    அக்கா........... அக்கா............ , இன்னுமா நீ எழும்பவில்லை , இன்றைக்கு காலேஜிக்கு வரலையா நீ, அவளை கேட்டபடி தன்  வேலையை தொடர்ந்தாள் அவள்.

    மலர் எத்தனை நாள் சொல்லிவிட்டேன் என்னை அக்கா என்று கூப்பிடாதே, ஆலிஸ் என்று கூப்பிடு என்று, என்றைக்குதான் நீ திருந்த போறியோ.

    "நீ சுலபமா சொல்லிடுவ, நான் உன்னை ஆலிஸ் என்று சொல்லி அது அப்பா காதுக்கு எட்டியது, நான் அவ்வளவுதான்.

    அவரிடம் காலையிலேயே திட்டு வாங்குவதற்கு , நான் உன்னை அக்கா என்றே சொல்லி விடுவேன்.

    அவருக்கு என்னைப் பார்த்தாலே ஆகாது. இதில் நீவேறு என் வேதனையை கிளறாதே. இப்பொழுதுகூட பார் நான் உன்னைவிட மூன்று வயது சின்னவள் எழுந்து காலேஜ் கிளம்பிவிட்டேன்.

    நீ இன்னும் படுக்கையிலேயே இருக்கிறாய். நான் மட்டும் இவ்வளவுநேரம் படுக்கையில் இருந்து இருந்தேன் என்றால்.............., காலையிலேயே சுப்ரபாதம் துவங்கி இருப்பார்.

    என்னை விட்டுவிடு, நான் போகிறேன். நீ இன்று லீவ் போட்டால் கூட எதுவும் இல்லை. எனக்கு அப்படியா", கொஞ்சம் வலியுடனே சொன்னாள் மலர்.

    அதை ஆலிஸ்ம் புரிந்து கொண்டாள். படுக்கையில் இருந்து எழுந்து தங்கையை அணைத்துக் கொண்டாள்.

    "எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் மலர். எதற்கும் கலங்காதே உனக்கு நான் இருக்கிறேன். அப்பா உன்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்கு புரியவே இல்லை.

    அதுவும் நீ சின்ன பெண். அவரது இந்த செயலாலே நீ தைரியம் இல்லாமல் , எதற்கு என்றாலும் பயந்து பயந்து செய்கிறாய்.

    நீ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.

    சரி நீ இங்கேயே இரு நானும் கிளம்பி வருகிறேன். இருவரும் சேர்ந்தே கல்லூரிக்கு செல்லலாம்", மலர் மறுக்கும் முன்னர் பாத்ரூமிற்குள் புகுந்துகொண்டாள் ஆலிஸ்.

    மலரின் சிந்தனை தந்தையை சுற்றி வந்தது. எல்லோருக்குமே அப்பா என்றால் முதல் வழிகாட்டி, குரு இப்படி இருப்பார்கள். சில அப்பாக்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள்.

    மலரின் அப்பா நேசமணியும் அப்படிப் பட்டவர்தான், அது ஆலிஸ்க்கு மட்டுமே. மலரைப் பொறுத்தவரை அவர் கையில் குச்சியை வைத்துக்கொண்டு சர்க்கஸில் விலங்குகளைப் பழக்கும் ரிங் மாஸ்டர் தான்.

    ஆலிசைப் பார்த்தால் மலரும் முகம், மலரைப் பார்த்தால் கூம்பிவிடும். எதிலும் ஒரு கண்டிப்பு. கண்ணை உருட்டி பார்ப்பதிலேயே மிரண்டு விடுவாள் மலர்.

    அவளது யோசனையை கலைத்தது ஆலிஸ்சின் வருகை.

    என்ன மலர் நான் உட்க்கார வைத்த இடத்தில் இப்படி அசையாமல் இருக்கிறாய். எழுந்து ஏதாவது வேலை செய்ய வேண்டியதுதானே.

    எதுக்கு சத்தம் வரும் பிறகு அவர் வந்து என்னை முறைக்கவா.

    மலர், இது உன் வீடு இப்படி இருக்காதே. இது ஜெயில் இல்லை. அப்பா கேட்டால் உன்மேல் தப்பு இல்லையென்றால் தைரியமாக பேசு அதை விட்டு, அதைவிட்டு இப்படி பிளிந்துகொண்டிருந்தால்.

    எதை........... .

    கண்ணீரைத்தான், அதை எதுக்கு வேஸ்ட் பண்ணுகிறாய், இப்பொழுது என்னைப் பார்

    அக்கா, முதலில் நீ கிளம்பு, மீதி அட்வைஸ்சை காரில் போகும்போது வைத்துக்கொள், மலர் ஆலிஸ் பேச்சை கத்தரிக்கவும் மேலே எதுவும் பேசாமல் கிளம்பி கீழே வந்தார்கள்.

    அங்கு சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்திருந்த அவரைப் பார்த்ததும் மலரின் நடை தள்ளாடியது.

    பகுதி – 2.

    தேடலின் படியில் முதல்லடி

    கண்டுகொண்டேன் என்னவளை..................

    வில்லாளா.......... , உன்கிட்ட காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது. என்னடா செய்யிற, பத்தாவது முறையாக குரல் கொடுத்தும் சத்தம் இல்லாமல் போகவே ஷாமே கிச்சனுக்குள் சென்றான்.

    அங்கே வில்லாளன் ஓவன் முன்னாள் நின்று என்ன செய்யவென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது ஷாமுக்கு.

    வில்லா.......... , உன்கிட்டே காபி கேட்டா, ஓவன் முன்னாடி நின்னு ஜெபம் பண்ணிக்கிட்டு இருக்க, என்னடா.

    ஷாம், இதை ஓபென் பண்ணிட்டேன், தண்ணீ, பால் எல்லாம் ஊத்திட்டேன், எங்கே தீயை வைப்பது என்றுதான் புரியவில்லை. அதான் நிற்கிறேன்.

    "அடப்பாவி, நல்லவேளை நின்று யோசிச்ச, நீமட்டும் தீயை வச்சுருந்த........... , தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆட்கள் வீட்டுக்கே வந்திருப்பாங்க.

    உனக்கு தெரியவில்லைஎன்றால் என்னிடமே கேளுடா, தயவுசெய்து உன் வித்தைகளை இங்கே காட்டிவிடாதே.

    இரு நானே இன்று சொல்லித் தருகிறேன். நாளைமுதல் நீ செய் சரியா", என்று சொல்லியபடி ஓவன் செயல்பாடு, ஸ்டவ் எப்படி பற்ற வைப்பது, அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்.

    ஷாம் உனக்கு மட்டும் எப்படி இவையெல்லாம் தெரிந்தது. எனக்கு சொல்.

    "அதென்ன பெரிய வித்தையா, எல்லாம்  தானாக தெரிவதுதான். சரி நீ முதலில் கிளம்பு, காலேஜ் க்கு நேரமாச்சு.

    உன்னை அனுப்பிவிட்டுதான் நானும் கிளாஸ் போகணும். உனக்கு இங்கிலீஷ் வேறு அவ்வளவாக வராது.  அதுதான் ஒரே யோசனையாக இருக்கிறது. நான் இல்லாமல் நீ சம்மாளித்துக் கொள்வாயா. இல்லையென்றால்........... ".

    ஷாம் , நான் பார்த்துக் கொள்கிறேன். இருவரும் ஒரே கேம்பஸ்க்குள் தானே இருக்கப் போகிறோம் பிறகு என்ன. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது உன் வகுப்பறை நான் அங்கே வந்து அமர்ந்து கொள்கிறேன்.

    வில்லா, இதென்ன நம்ம ஊரா, நீ என்ன படிக்க வந்திருக்கிறாய், நான் என்ன படிக்க வந்திருக்கிறேன். புரியாமல் பேசாதே.

    "ஷாம், நான் படிக்க வரவே இல்லை. உன்னை கவனிக்க வந்திருக்கிறேன். உனக்கு சமைக்க, உனக்கு உதவிக்கு துணைக்கு ஒரு ஆள் அவ்வளவுதான்.

    படிப்பு சும்மா, விசா கிடைக்க இதுஒரு வழி அவ்வளவே. மற்றபடி உனக்கு வேலைக்கு ஆள் வைத்தால் எவ்வளவு செலவாகும். அதுமட்டும் இல்லை, உன் நலனையும் கவனித்துக்கொள்ளும் ஆள் வேண்டாமா. அதுக்குத்தான் நான்.

    நீ என்னைப் பற்றி ரொம்ப கவலைப் படாமல், படிக்கும் வேலையைப் பார்", சுலபமாக சொல்லிவிட்டு சென்றான்.

    அவன் பேச்சில் எதுவோ நெருட, வில்லா, அப்போ நீ படிக்கவந்தது என்னை கவனிக்க, அப்போ நான் படிக்க வந்தது என்ன காரணத்துக்காக.

    உனக்கு அந்த காரணம் தெரியுமா. நீயும் அம்மாவும் என்னிடம் எதையோ மறைப்பதுபோல் தோன்றுகிறது", தன் சந்தேகத்தைக் கேட்டான்.

    வில்லாளன் ஒருநிமிடம் திகைத்தாலும், ஷாம் , நீ அமெரிக்காவில் படிக்கவேண்டும் என்பது அத்தையம்மாவின் விருப்பம் அவ்வளவுதான். இதில் மறைக்க என்ன இருக்கிறது, சம்மாளித்தான் வில்லாளன்.

    வில்லாளன் இனிமேல் அவனை வெட்டிக் கொன்றாலும் ஒருவார்த்தைகூட சொல்லமாட்டன் என்று தெரிந்து, குளிக்கச் சென்றான் ஷாம்.

    ஒரு பெருமூச்சுடன், காலை சமையல் செய்யச் சென்றான் வில்லாளன். அவனது அத்தையம்மா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க, தன்னால் இதை செய்யமுடியுமா என்ற சந்தேகத்துடனே சென்றான் அவன்.

    ஒருவழியாக இருவரும் கிளம்பி தங்கள் கல்லூரிக்குச் சென்றனர். காரில் போகும்பொழுது யோசனையுடனே சென்றான் ஷாம். அம்மா என்னிடம் எதை எதிர் பார்க்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்பது இவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான்.

    போகும்வரை போகட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் , தன் சிந்தனையிலேயே வந்தான் ஷாம். அவனது யோசனையை உணர்ந்தவன்போல் அமைதியாகவே சென்றான் வில்லாளனும்.

    இதுதான் இவர்கள், தன் அத்தையம்மாவுக்காக புரியாத மொழி, தெரியாத மனிதர்களிடம்,  தெரிந்த ஒரு நட்ப்பை மட்டுமே நம்பி வந்திருக்கிறான் வில்லாளன்.

    தன் வீட்டு வேலைக்காரனாக இருந்தாலும், அவனை தன் தோழனாக, உற்ற நண்பனாக துணைக்கழைத்து அவனது துன்பத்தை தன் துன்பமாக கருதுகிறான் ஷாம்.

    படிகளிலேயே தயங்கிய தங்கை மலரை கையை பிடித்து இழுத்துவந்தாள் ஆலிஸ்.

    இப்போ எதுக்குடி இப்படி பம்முற, நீ பம்முறதைப் பார்த்தாலே அப்பா உன்மேல் பாய்வார். பேசாமல் சாதாரணமா வா, ஆலிஸ் தைரியம் சொன்னாள்.

    அக்கா, இப்போ நான் தைரியமா வந்தால்தான் என்மேல் பாய்வார். இப்படி நடுங்கிட்டே வந்தால் பேசாமல் இருப்பார் அந்த மிசோலி, அவளும் பதிலுக்கு பேசியபடியே வந்தாள் மலர்.

    அதென்னடி எல்லோரும் ஹிட்லர்ன்னு சொல்லுவாங்க, நீ என்ன மிசோலின்னு சொல்லுற.

    அக்கா இப்போ அவரை ஹிட்லர்-ன்னு சொல்லாததுதான் உன் பிரச்சனையா. மிசோலின்னு சொன்னது இல்லையா, கேட்டுவிட்டு ஒன்றும் தெரியாதவல்போல் தந்தையின் அருகில் போய் அமர்ந்தாள் மலர்.

    வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தந்தையின் மறுபக்கம் போய் அமர்ந்தாள் ஆலிஸ்.

    என்னம்மா ரொம்ப சந்தோசமா இருக்க போல, ஏதாவது நல்ல விஷயமா, இல்ல மலர் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாளா, ஆலிஸ்சின் முகபாவனையை வைத்தே கேட்டார் அவர்.

    திடுக்கிட்டு விழிக்கப் போனவளை காலைவைத்து தட்டி பேசாமல் இருக்க செய்கை செய்தாள் ஆலிஸ். அவளது செய்கையை புரிந்து பேசாமல் காலை உணவை உண்டாள் மலர். மனம் மட்டும் படபடவென்று அடித்துக்கொண்டது அவளுக்கு.

    வழக்கம்போல் தந்தையை மனதுக்குள் திட்டியபடி மெச்சிக்கொண்டே உணவை தொடர்ந்தாள் அவள்.

    அப்பா என்ன இப்படி கேட்டுட்டிங்க, இன்னைக்கு முதல்நாள் நான் வேலைக்குபோறேன். அந்த சந்தோசத்தில் நான் இருக்கேன். நீங்க எதுக்கு இப்போ மலரை தேவையில்லாமல் இதில் இழுக்கறிங்க , தங்கைக்கு பரிந்துவந்தாள் ஆலிஸ்.

    அவ என்ன சொன்னாலும் நீ அவளுக்கு சப்போட் பண்ணுவியே. உன்னால்தான் அவ இப்படி சொல்பேச்சு கேக்காமலே இருக்கா, தேவை இல்லாமல் பொரிந்தார் அவர்.

    அப்பா நீங்கதான் தேவையில்லாமல் அவளை எப்பொழுதும் குறை சொல்லிட்டே இருக்கீங்க. இனிமேலும் இப்படியே செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன், கொஞ்சம் காட்டமாகவே பேசினாள் ஆலிஸ்.

    "சரி விடு வேலைக்கு போகும் முதல்நாளே உன்னை மூட்ஆப் பண்ண தயாராக இல்லை. எனி வே  ஆல் தி பெஸ்ட். பார்த்து போய்விட்டு வா.

    மலர் நீயும் ஒழுங்கா போய்விட்டு வா. இதுவரை இருந்ததுபோல் காலேஜ் போயும் ஒழுங்காக நடந்துகொள்வாய் என்று நம்புகிறேன்" , என்னவென்று புரியாதபாவனையில் பேசினார் அவர்.

    அப்பா......... , இதுவரை உங்கள் பேச்சை மீறி நான் நடந்ததில்லை. இனிமேலும் அப்படித்தான் நடந்துகொள்வேன், கண்கலங்க சொன்ன மகளை, உள்ளம் உருகினாலும் வெளியே தெரியாமல் மறைத்து,  முறைத்து பார்த்தார் அவர்.

    அவரது பார்வையை உணர்ந்தும் எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்தாள் மலர். அவள் பார்வையும் அவரை கூறுபோட , முதல் முறையாக தன் பார்வையை திருப்பினார் அவர்.

    ஆலிஸ் இதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தன் தந்தைக்கு தங்கையின்மேல் பாசம் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை மறைக்கிறார் என்பது புரிந்தது.

    தன்னால் முடிந்தால் அது என்ன காரணம் என்பதை அறிந்து அதை களையவேண்டும் என்று எண்ணினாள். அதற்க்கு இப்பொழுது நேரமில்லை என்பதை அறிந்து உணவை முடித்துக்கொண்டு தங்கள் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தனர்.

    Cornell University College of Agriculture, Life Sciences and management. Ithaca, Newyork. அந்த பிரம்மாண்ட உலகத்துக்குள் அவர்களின் கார் நுழைந்தது. சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவாறே இறங்கினர் இருவரும்.

    மலர் நீ உன் கிளாஸ்க்கு போ. நான் என் இடத்துக்கு போகிறேன். எதுவாக இருந்தாலும் எனக்கு போன் செய் சரியா. உனக்கு தனியாக போக பயம் இல்லையே, மலரை சீண்டினாள் ஆலிஸ்.

    அக்கா, நானும் இங்கே பிறந்து வளர்ந்தவள்தான். என்னை ரொம்ப மட்டம் தட்டுற, நீ போ நான் பார்த்துக்கொள்கிறேன், ஆலிஸ்சை அனுப்பிவிட்டு அவளது வகுப்பை நோக்கிச் சென்றாள் மலர்.

    முதல்நாள் வகுப்புக்கு செல்லும் தயக்கம் இருந்தாலும் அதை உதறிவிட்டு வகுப்புக்குச் சென்றாள் மலர்.

    அதேநேரம் ஷாமும், வில்லாலனும் அதே உலகத்துக்குள் நுழைந்தனர். வில்லாளன் கண்களை விரித்து சுற்றிப் பார்த்தவண்ணமே இருந்தான். நடக்கும்போழுதுகூட திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தான். இதை புன்னகையுடனே பார்த்தவாறு இருந்தான் ஷாம்.

    வில்லா...., எதுக்குடா இப்படி பார்க்கிறாய். சுற்றி இருப்பவர்கள் உன்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள். நீ சுற்றி இருப்பதை வித்தியாசமாக பார்க்கிறாய். என்ன இது எனக்கு மானம் போகுதுடா ஒழுங்கா வா, உன்னை என் தலையில் கட்டிவிட்டு என் அம்மா வேடிக்கை பாக்குறாங்க பாரு வில்லாளனை கடிந்தான் ஷாம்.

    ஷாம், நிஜம்மாவே இதுதான் காலேஜா , இல்லை எனக்கு எதுவும் தெரியாது என்று பொய் சொல்லி இங்கே அழைத்து வந்துவிட்டாயா, ஒழுங்கா உண்மையை சொல்லிடுடா, இப்போ நீ சொல்லவில்லை என்றால் நான் அத்தையம்மாவுக்கு போன் செய்து விடுவேன், கொஞ்சம் மிரட்ச்சியாகவே பேசினான் வில்லாளன்.

    உன் அத்தையம்மாவுக்கு போன் செய்வாயா, எப்படி உன்னால் முடிந்தால் போன் செய்து சொல்லிக்கொள், என்னை மிரட்டினாய் அல்லவா, முடிந்தால் உன் கிளாஸ்க்கு போக முடியுமா பார். நான் கிளம்புகிறேன், வில்லாளனை அம்போ என்று விட்டுவிட்டு சென்றான் ஷாம்.

    ஷாம்.......... , ஷாம்.........., இப்படி விட்டுவிட்டு போகாதேடா, முதல்நாள் மொழி வேறு தெரியாது, என் வகுப்பை மட்டுமாவது காட்டிவிட்டு போ, வில்லாளன் சமாதானக் கொடியை பறக்கவிட முயன்றான்.

    இந்த அறிவு முதலிலேயே இருந்து இருக்க வேண்டும். என்னிடம் ஜம்பமாக பேசிவிட்டு, சரி ஒன்று சொல்கிறேன், அங்கே போர்டு இருக்கிறது பார். அதில்போய் நீயே கண்டுபிடித்துக் கொள், சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஷாம்.

    வில்லாளன் அந்த போர்டின் முன்னால் நின்று, அவன் படித்த அத்தனை வித்தைகளையும் உபயோகப் படுத்தி பார்த்தான். அவனுக்கு அதில் தான் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதுகூட புரியவில்லை.

    யாரிடம் எப்படி கேட்க என்பதும் தெரியாமல் தன்னை கடந்துசெல்லும் நவநாகரீக மங்கைகளையும், மாணவர்களையும் பார்த்துக்கொண்டே நின்றான்.

    இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, அங்கே அருகில் அன்ன நடையுடன் , நேர்கொண்ட பார்வையும், முகத்தில் கொஞ்சம் அப்பாவித்தனம் நிரம்பியும் இருந்த அந்த பெண்ணை , தைரியத்தை திரட்டி அழைத்தான்.

    எக்ஸ் க்யுஸ் மீ............................... .

    அவன் அழைக்கவும் ,எஸ்........., என்று சொல்லி நெருங்கினாள் அவள்.

    அவனைப் பார்த்ததும் கொஞ்சம் வித்தியாசமாக,  அவனது அந்த உயரமும், பரந்துவிரிந்த தோள்களும், கொஞ்சம் சங்கடமான முக பாவமும், கருமையான தோற்றமும், முரட்டுத்தனமாக தோன்றியது அவளுக்கு.

    ஆனால் பார்வையில் கண்ணியமும், தோற்றத்தில் ஆண்மையும், பத்துபேர் வந்தாலும் அடித்து வீழ்த்துவேன் என்ற தோற்றமும் , அவனது தயக்கத்தில் சங்கடம் இருந்தாலும் , அதை லட்ச்சியம் செய்யாமல் நின்ற அவன் நிலையும் , அவளுக்கு முதல் பார்வையிலேயே பிடித்தது அவனை.

    அவள் அவனை அளவிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். அவனது தொளுக்கே அவள் வளர்ந்திருந்தாள். நல்ல பால் வெள்ளை, கொஞ்சமே கொஞ்சம் பூசினமாதிரி உடல்வாகு. பார்வையில் ஒரு குறுகுறுப்பு.

    இதழ்களின் சிவப்பு அவளுக்கு இன்னும் அழகாக இருந்தது. இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணினான் அவன். அவ்வாறு எண்ணும்பொழுதுதான் அவள் எதற்கு இன்னும் வளரவேண்டும் என்று உள்ளம் கேட்ட கேள்வியில் தன்னை மீட்டுக்கொண்டான் அவன்.

    வில்லாளனின் பார்வையில் தெரிந்த ஆராய்ச்சியை அவளும் உணர்ந்துகொண்டாள். எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தாவாறே நின்றாள்.

    அவள் பார்வையை வில்லாளன் உணர்ந்துகொண்டான்."ஹையோ இந்த கத்தரிக்காய் எதுக்கு வில்லனை பார்ப்பது மாதிரியே பாக்குது.

    நீ வில்லன் தானேடா, என்ற மனசாட்சியை முறைத்து அடக்கினான்.

    சங்கடமாக இருந்த மௌனத்தை அவளே கலைத்தாள், எஸ் வாட் கேன் ஐ டூ பார் யு.................. .

    அவள் கேள்வியில் கலைந்து, அவளிடம் எப்படி கேட்பது என்று மனதுக்குள் ஒத்திகை பார்க்கத் துவங்கினான் அவன்.     

    பகுதி  -  3.

    பார்வைகள் சந்திக்கும் நேரம்

    என் நெஞ்சுக்குள் பூகம்பம்

    பேசும் மொழியின் தாக்கம்

    கண்ணில் மின்னலை வார்க்கும்

    என் தேடும் பொருள் நீயானால்...............

    ஷாம் வேகமாக வகுப்பறையை தேடிச் சென்றான். வகுப்புகள் துவங்க பெல் அடித்து சிறிதுநேரம் ஆகி இருந்தது. எனவே அவசரமாக தேடிச் சென்றான்.

    போகும் வழியில் எதிரில் வந்த பெண்ணிடம் தான் படிக்கும் படிப்பின் பெயரைச் சொல்லி , வகுப்பு எங்கே எனக் கேட்க, அவள் விழி விரித்து அவனைப் பார்த்தாள்.

    (அவர்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்தது).

    "எனக்கும் அதே வகுப்புதான், எப்படி இருவருக்கும் ஒரே வகுப்பாக இருக்க முடியும்.

    Enjoying the preview?
    Page 1 of 1