Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmaigal Urangattum
Unmaigal Urangattum
Unmaigal Urangattum
Ebook204 pages54 minutes

Unmaigal Urangattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802949
Unmaigal Urangattum

Read more from Vimala Ramani

Related to Unmaigal Urangattum

Related ebooks

Reviews for Unmaigal Urangattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmaigal Urangattum - Vimala Ramani

    www.pustaka.co.in

    உண்மைகள் உறங்கட்டும்

    Unmaigal Urangattum

    Author :

    விமலா ரமணி

    Vimala Ramani

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உண்மைகள் உறங்கட்டும்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    உண்மைகள் உறங்கட்டும்

    1

    குழந்தையின் மகிழ்வுடன் குதித்துக் கொண்டு வந்த அருணாவை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தார் ஆனந்த்.

    ''என்ன அருணா? என்னாச்சு…?''

    ''நான்… நான்… டெல்லி செமினார் ஒண்ணுலே பங்கெடுக்கப் போறேங்க. இப்பத்தான் விமன்ஸ் வெல்பார் மினிஸ்ட்ரிகிட்டேயிருந்து லெட்டர் வந்திருக்கு. இதோ பாருங்க, இதை ரேடியோவிலே கூட ஒலிபரப்பப் போறாங்களாம்.''

    ஆனந்த் ஆச்சரியப்பட்டார்.

    ''இதுலே என்ன ஆச்சரியம்! நான் என்ன அழகா இல்லையா? இளமையா இல்லையா? சோஷியல் சர்வீஸ் பாண்ண லியா? ஹேண்ட் ஒர்க் பண்ணி - எக்ஸிபிஷன் வைக்கலையா? எல்லாத்துக்கும் மேலா பெரிய தொழிலதிபர் மிஸ்டர் ஆனந்தோட மனைவி இல்லையா?''

    ''மெல்ல… மெல்ல…'' என்றார் ஆனந்த்.

    ''என்னங்க, நான் டெல்லி போயிட்டு வரட்டுங்களா?''

    ''உன்னைக் கூப்பிட்டிருக்காங்க. என்னை ஏன் கேக்கறே?''

    ''நல்லா இருக்கே நியாயம்? உங்க பர்மிஷன் இல்லாம ஏதாவது காரியம் பண்ணி இருக்கேனா?''

    ''இருக்கியே.''

    ''என்னங்க?''

    ''எனக்கே தெரியாமே என்னை லவ் பண்ணலை?''

    ''போங்க நீங்க…''

    ''போக முடியாமத்தான் இருக்கேன். ஐ மீன் உன்னைவிட்டுப் போக முடியாமத்தான் உன்னை நானும் லவ் பண்ணிட்டேன்.''

    ''கிண்டலா?''

    ''இல்லே தாயீ கிண்டல் இல்லே! சரி. சரி. ஆல் த பெஸ்ட்! என்னிக்குப் ப்ரோக்கிராம்ன்னு சொல்லு.''

    ''அன்னிக்கு ரேடியோ பக்கத்துலேயே உட்காரவா?''

    ''நோ நோ. அன்னிக்கு வெளியிலே எங்கேயாவது டிரான்சிஸ்டர், ரேடியோ இல்லாத இடத்துக்குப் போய் நிம்மதியா உட்கார்!''

    அருணா பொய்யாகச் சிணுங்கினாள்.

    ''டார்லிங், நான் வானொலியிலா உன் குரலைக் கேட்கணும்? இந்த இனிமையான குரல், நான் எப்போ ஸ்விட்ச் போட்டாலும் என் காதுக்கு அருகிலே கேக்குமே!''

    ''ஏங்க? என் குரல் அத்தனை இனிமையாவா இருக்கு?''

    ''இல்லையா பின்னே? குரலா அது? கூக்குரல்!''

    மறுபடியும் அருணா சிணுங்க, ஆனந்த் சிரித்தார்.

    ''ஆல்ரைட். செமினார்லே என்ன சப்ஜெக்ட்?''

    ''சோஷியல் ஒர்க் பண்றதைப் பத்தி எப்படி வீட்டையும் கவனிச்சுட்டு, குடும்பத்துக்கும் தலைவியா, சமூகத்துக்கும் எப்படிச் சேவை செய்யறதுன்னு ஒரு கருத்தரங்கு.''

    ஆனந்த் சிரித்தார்.

    ''ஆ! இதென்ன பெரிய விந்தை! நான் காலைல ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு ஆபீஸ் போயிடறேன். பாதி நாளைக்கு வெளியூர் டூர்! அப்புறம் என்ன? குழந்தையா, குட்டியா? நீ பாட்டுக்கு ஜாலியா சோஷல் சர்வீஸ், பெண்கள் முன்னேற்றம்னு போகவேண்டியது தானே?''

    -ஏதோ உணர்வில் 'படபட’வென்று பேசியவர் 'சட்'டென்று அருணாவின் முகத்தைப் பார்த்து-

    ''ஐ யம் ஸாரி அருணா. சும்மா ஜஸ்ட் லைக் தட்தான் பேசினேன்!'' என்றபடி மெளன மாய்ப் போய்விட்ட அருணாவின் முகத்தை நிமிர்த்தினார்.

    அருணாவின் கண்கள் அப்போதுதான் நீர் முத்துக்களைக் கோக்க ஆரம்பித்திருந்தன. ஜஸ்ட் லைக் தட் என்று சொன்னாலும், வேணுமென்று சொன்னாலும் உண்மை. உண்மைதான். இவர்களுக்குக் கல்யாணமாகிப் பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

    இன்னும் 'சாட்சி' உருவாகவில்லை!

    சாட்சிகள் புகைப்படங்களாக, ஆல்பங்களாக மட்டுமே இருக்கின்றன!

    ஆன்மாவில் அந்த உறவு பிறக்கவில்லை.

    'கரு'வாக அந்த 'உரு' தோன்றவில்லை. திருமணமான புதிதில் இவர்கள் எப்படி இருந்தார்கள்? எத்தனை மகிழ்வின் தெறிப்புக்களை இந்த வீடு முழுவதும் தெளித்திருக்கிறார்கள். எத்தனை ஆனந்தங்களை இந்த ஆனந்த் உருவாக்கித் தந்திருக்கிறார்! அத்தனையும், அத்தனையும்…?

    2

    அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் இளைஞன் ஆனந்த்.

    பரபரவென்று ஏக டாட்ட தடபுடலுடன் ஒரு பெண் வந்தாள்.

    ''லவ் இன் டோக்கியோ இருக்கா?’‘

    ஆனந்த் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

    அழகான இளம் பெண். அருகில் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியுடன் நின்று கொண்டிருந்தாள்.

    மகளா? இருக்காது! இவளைப் பார்த்தால்? ஆ! கழுத்தில் தாலி இல்லை. ஸோ, தங்கையாகத்தான் இருக்க வேண்டும். அந்தச் சிறுமி இவன் போட்டிருந்த சென்ட் மணத்தால் கவரப்பட்டு இவன் அருகில் வந்து நின்று ‘மோப்பம்' பிடிக்க- ''லவ் இன் டோக்கியோ இருக்கா இல்லையா''- என்று இவள் படபடப்புடன் கடைக்காரரை மிரட்ட, ஆனந்துக்குச் சிரிப்பு வர, கடைக்காரன் இவன் நண்பன் என்பதால் கண் சிமிட்டியபடி-

    ''ஏம்பா, உன் கடையிலே லவ் எல்லாம் கூட விக்கிறியா?''- என்று இவன் கிண்டல் பண்ணியபோது அந்தப் பெண் ணுக்கு வந்ததே கோபம்!

    ''லவ் இன் டோக்கியோன்னா ஒரு கிளப்! என் தங்கைக்கு.'' என்றவளைப் பார்த்து இவன் –

    ''ஐ… ஸீ,'' -என்றான்.

    அதன் பின் தன் அருகில் நின்ற அச்சிறுமியைப் பார்த்து-

    ''உங்க தங்கையா? க்யூட். பாப்பா, உன் பேர் என்ன?''-என்றான்.

    ''அதெல்லா நீங்க ஒண்ணும் தெரிஞ்சிக்க வேண்டாம்,''- என்றவள், ''அமுதா, இங்கே வா,'' -என்று கூறிவிட்டு, தன் தவறை உணர்ந்தவளாய் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

    ஆனந்த் சிரித்தான்.

    ''வெரி குட். தங்கை பேர் அமுதா. அக்கா பேர்?''

    ''வாடி போகலாம் இந்தக் கடை சரியில்லை,''- என்றவள் தன் தங்கையைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனபோது,

    ''அதுனால என்ன? லவ் இன் டோக்கியோன்னு சுப்பிட்டாப் போச்சு!

    ஆனா, டோக்கியோவிலே போய்த்தான் லவ் பண்ணணும்கிறது இலை,'' என்றான் இவன்.

    ''என்னப்பா நீ, நல்ல வியாபாரத்தைக் கெடுத்தே. அந்தப் பொண்ணு வந்தா நூறு ரூபாய்க்கு வியாபாரம் பண்ணும்,''-என்றான் இவனின் கடைக்கார நண்பன்.

    ''கவலைப்படாதே இனிமே ஈவினிங் அவர்ஸிலே உன் கடைக்கு நான்தான் இன் சார்ஜ்!''

    ''கிழிஞ்சது போ. என் கடைக்குக் கூட்டமே வராது!’‘ நன்பர்கள் சிரித்தார்கள்.

    ஆனால் அதற்கடுத்த வாரத்தில் அதே கடையில் மீண்டும் அவளை சந்தித்தான் ஆனந்த். இந்த தடவை அவள் மட்டுமே தனியாக வந்திருந்தாள். கடையில் டேப்ரிக்கார்டர் கர்னாடக சங்கீதம் பாடிக்கொண்டிருந்தது.

    அவளை தூரத்திலேயே பார்த்துவிட்டவன் அவள் கடைக்குள் வந்ததும் பாராதவன் மாதிரி சங்கீதத்தை ரசிப்பதாக நடித்தான்.

    ''அடடா, என்னமா பாடி இருக்கார் ஜேசுதாஸ்!'' – என்று நடுவில் புகழ்ந்தான்.

    அவள் எதோ கிளிப்புகளைப் பார்வையிட்டவள் இவனை குரும்பாய் பார்த்துச் சிரித்தாள்.

    ''கர்னாடக சங்கீதம்னா ரொம்பப் பிடிக்குமோ?''

    ''பின்னே நான் முறையா ஜதிஸ்வரம் கத்துக்கிட்டேனே!''

    ''ஜதிஸ்வரம் பரத நாட்டியத்துலே வரும்! கர்னாடக சங்கீதத்துலே கூடவா?''

    அவன் கொஞ்சம் திடுக்கிட்டு, பின் சமாளித்து- ''கர்னாடக சங்கீதமில்லாமல் பரத நாட்டியமா?''

    அவள் சிரித்தாள்.

    ''அலங்காரமாவது தெரியுமா?''

    ''ஏன் தெரியாம? இப்போ நீங்க பண்ணிட்டு இருக்கிறதுதான் அலங்காரம்! ரொம்ப அழகாவே பண்ணிட்டு இருக்கீங்க.''

    ''கஷ்ட ம்.''

    ''சே, இதுலே என்னங்க கஷ்டம்! பெண்களுக்கு அலங்காரம்னா இஷ்டம்!''

    இவள் சிரித்து

    Enjoying the preview?
    Page 1 of 1