Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugamatra Nizhalgal
Mugamatra Nizhalgal
Mugamatra Nizhalgal
Ebook138 pages41 minutes

Mugamatra Nizhalgal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402951
Mugamatra Nizhalgal

Read more from Rajesh Kumar

Related to Mugamatra Nizhalgal

Related ebooks

Reviews for Mugamatra Nizhalgal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugamatra Nizhalgal - Rajesh Kumar

    www.pustaka.co.in

    முகமற்ற நிழல்கள்

    Mugamatra Nizhalgal

    Author :

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகமற்ற நிழல்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முகமற்ற நிழல்கள்

    1

    கடல் காற்று உற்சாகமாய் இருந்தது.

    மெரீனாவில் - இருட்டிக் கொண்டு வருகிற நேரம்…

    ''தியாகு…!''

    சாந்தா கொஞ்சலாய் கூப்பிட்டுக் கொண்டே அந்த அழகான இளைஞனின் அடர்த்தியான தலைமுடியைக் கலைத்தாள்.

    அவன் ''ம்…''என்றான். தலை கவிழ்ந்திருந்தது.

    ''மூஞ்சியைப் பாரு சட்டியாட்டம்…! பி… ஹேப்பி… - கலகலன்னு இருங்க… ''

    தியாகு மணலில் கோடு போட்டுக் கொண்டே பேசினான்.

    ''கலகலன்னு இருக்கிறதா…? எப்படி இருக்க முடியும்…? இந்த வேலையாவது பர்மனென்ட் ஆயிடும்ன்னு நினைச்சேன். ஆனா சம்பளம் குடுத்த கையோடு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க… டெர்மினேஷன் ஆர்டரை வாங்கின அந்த ஒரு நிமிஷம் என்னோட ஹார்ட்டே நின்னுடுச்சு தெரியுமா…?''

    ''சரி… சரி… அதையே நினைச்சு அலட்டிக்காமே மனசை வேற பக்கம் திருப்புங்க. வேற வேலை கிடைக்காமலா போயிடும்…?''

    அவன் இன்னமும் மணலைக் கீறிக்கொண்டிருந்தான்.

    சாந்தா அவனுடைய கையைப் பிடித்து நிறத்தினாள். ''விட்டா… சினிமாவில் வர்ற மாதிரி சோகமா ஒரு சோகப் பாட்டு பாடிடுவீங்க போலிருக்கு…''

    தியாகு 'உச்' கொட்டிவிட்டு நிமிர்ந்தான்.

    ''உனக்கென்ன…? ஒரு நல்ல ரெப்யூட்டட் கம்பெனியில் ஸ்டெனோவா மாசம் ஐயாயிரம் ரூபாயை வாங்கிட்டு ஹாய்யா இருக்கே! அப்பா, அம்மா, குடும்பம்ன்னு எதுவும் கிடையாது. இருக்கிற ஒரே அண்ணனும் துபாய்ல…! ம்…! உன்னை இறுக்கமாக் கட்டிப் பிடிச்சுட்டிருக்கற அதிர்ஷ்ட தேவதை என் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை.''

    ''புலம்பாதீங்க… உங்க படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காமலா போயிடும்…?''

    ''எனக்கு நம்பிக்கையில்லை.''

    ''இப்படி 'வெக்ஸ்' ஆறதுதான் தப்பு. சுண்டல் சாப்பிடறீங்களா…?

    ''அது ஒண்ணுதான் குறைச்சல்…''

    ''உங்களுக்கு சுண்டல் வேணுமா, வேண்டாமா?''

    ''வேண்டாம்…''

    ''சத்தியமா…?'' சாந்தா தன் அழகான கண்களைக் கொட்டி - சுட்டு விரலைக் காட்டி கேட்டாள்.

    ''வேண்டவே வேண்டாம்…''

    ''நீங்க சாப்பிடாட்டி போங்க… நான் சாப்பிடறேன்… பெரியவரே! இங்கே வாங்க…'' கையில் முன்னோடு போய்க் கொண்டிருந்த சுண்டல்காரரைக் கூப்பிட்டாள்.

    அவர் வந்தார்.

    ''ரெண்டு பொட்டலம் குடுங்க…''

    பணத்தைக் கொடுத்து இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு - ஒரு பொட்டலத்தை தியாகுவின் முன்னால் வைத்துவிட்டு - இன்னொரு பொட்டலத்தைப் பிரித்தாள். தன் சதைப் பிடிப்பான உதடுகளை சப்புக் கொட்டினாள்.

    ''ஆஹ்ஹா…! காரம், மணம், குணம் நிறைந்த சுண்டல், வாசனை ஆளையே தூக்குது…''

    தியாகு மோவாயைத் தாங்கிக் கொண்டு எங்கோ, பார்த்தான். சாந்தா என்ணெய் மினுமினுப்போடு இருந்த சுண்டலில் நான்கைந்தை எடுத்து வாயில் போட்டாள்.

    ''ஹம்மாடி…! என்ன ருசி. பெரியவர் இன்னிக்குன்னு பார்த்து மாங்காயையும் தேங்காயையும் துருவித் தாராளமாவே போட்டிருக்கார்.''

    தியாகு அசையவில்லை. ''

    சாந்தா பொட்டலத்தை அவனுடைய முகத்திற்கு முன்பாய் நீட்டினாள். ''வாசனை பாருங்களேன்.''

    ''ம்… ம்…''

    தியாகுவின் நாசிக்குள் சுண்டலின் மசாலா வாசனை கிரகப் பிரவேசம் செய்ததும் - நாக்கு ''சுள்ளென்று. ஊறியது.

    'பொட்டலத்தை எடுத்துக் கொள்ளலாமா…?

    ''என்ன யோசனை…? இப்ப சுண்டலை எடுத்துக்கப் போறீங்களா? இல்லை… நான் எடுத்துக்கட்டுமா?''

    ''உனக்காக எடுத்துக்கிறேன்…''

    தியாகு எடுத்துக் கொண்டதும் - சாந்தா தன் ரோஸ் நிற ஈறுகள் தெரிய சிரித்தாள். ''நீங்க எவ்வளவு பெரிய ''சுண்டல்தாசன்னு எனக்குத் தெரியாதா… என்ன…?''

    ''சாந்தா…''

    ''ம்…''

    ''எனக்கு மறுபடியும் வேலை கிடைக்கும்ன்னு நினைக்கிறியா?''

    ''ஏன் கிடைக்காது…?''

    ''உன்னோட கம்பெனியிலேயே முயற்சி பண்ணிப் பாரேன்.''

    சாந்தா சிரித்தாள். ''சரியாப் போச்சு. மானேஜர் சிடுமூஞ்சின்னா, ஜெனரல் மானேஜர் சுடுதண்ணி. மானேஜிங் டைரக்டர் ஒரு கொள்ளிக் கட்டை யாருக்காவது வேலை கேட்டு சிபாரிசுக்குப் போனா… கையில சஸ்பென்ஷன் மெமோ குடுத்துடுவாங்க… அங்கே மொட்டுக்குத்தான் மரியாதை. சிபாரிசுக்குக் கிடையாது…''

    சுண்டல் அரைபடும் வாயோடு அலுத்துக் கொண்டான்

    Enjoying the preview?
    Page 1 of 1