Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasu
Manasu
Manasu
Ebook376 pages1 hour

Manasu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851522
Manasu

Read more from Jyothirllata Girija

Related to Manasu

Related ebooks

Reviews for Manasu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasu - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    மனசு

    Manasu

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுந்தரி – சுந்தரம்

    2. தனித்தனி நியாயங்கள்

    3. தெய்விகக் காதலைத் தேடி…

    4. பறக்க முடியாத பறவைகள்

    5. பாகீரதியின் ‘பல்டி’

    6. புகை

    7. பாரம் இறங்கியது

    8. விளக்கம்

    9. அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம்

    10. இழுபறி

    11. குழாயடியில் ஆண்கள்

    12. முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

    13. குற்றவாளிகள்

    14. குடுமிக்கு அப்பால்

    15. அத்தனை பேரும் அயோக்கியர்கள்!

    16. ‘அக்நயே - ஸ்வாஹா’

    17. அழைப்பிதழ்

    18. இளிக்கின்ற பித்தளைகள்

    19. இந்தப் பெண்கள் ஏன் வேலைக்கு வருகிறார்கள்?

    20. கறிவேப்பிலைகள்

    21. கல்யாணமா கற்பழிப்பா?

    22. கிழவர்கள் ஒழிக!

    23. சடலத்துக்கும் சாதி மதம் உண்டு

    24. தனக்கு வந்தால்தான் தெரிகிறது!

    25. தாலிக்குப் பதில் பச்சை குத்துங்கள்

    26. மனசு

    27. போதும் ஸ்கூட்டர் சவாரி

    28. உறவுகள் மாறும்

    29. நாக்குகள்

    30. வழிகள் பிரிகின்றன

    31. வேலை இல்லாதவன் வேலை

    1

    சுந்தரி – சுந்தரம்

    சுந்தரம் அந்த நூல் அஞ்சலை ஓசைப்படாமல் தன் சராய்ப்பைக்குள் போட்டுக் கொண்டான். சட்டத்துக்குப் புறம்பான செயல்தான். ஒருவரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று கண்டு நிம்மதியடைந்தான். அது ஒரு பெண்ணால் ‘அமுதம்’ பத்திரிகைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அஞ்சல் கட்டணம் உயர்ந்தது தெரியாமல் அவள் பழைய கட்டணப்படி உறையின் மீது அஞ்சல் தலைகளைக் குறைவாக ஒட்டி இருந்ததால். ‘அமுதம்’ பத்திரிகையால் வாங்க மறுக்கப்பட்டு அது அனுப்புநருக்குத் திருப்பப்படுவதற்காக ‘ரிடர்ன்ட் லெட்டர் ஆபீஸ்’ எனப்படும் சேராக் கடித அலுவலகத்துக்கு வந்து சேர்ந்திருந்தது. மேலும், நூல் அஞ்சலுக்குள் கடிதம் வைக்கக்கூடாது என்று வேறு தெரியாது போலிருக்கிறது. ‘அமுதம்’ ஆசிரியருக்குக் கடிதம் வேறு அத்துடன் வைத்து விட்டாள். இதனால் கட்டணம் மேலும் கூடியிருந்தது. அக்கடிதத்தில் அவள் எழுதியிருந்த வரிகள்தான் அதை அவன் பதுக்கிக் கொண்டதற்குக் காரணம். ‘இத்துடன் இரு கதைகள் அனுப்பியுள்ளேன். கதைகள் திரும்பினால் வீட்டில் என் மானத்தை வாங்கி விடுவார்கள். அதனால்தான் திருப்பியனுப்புதற்குரிய தபால் பில்லைகள் வைக்கவில்லை. வெளியிட ஏற்றதல்லவெனில், குப்பைக் கூடையில் போட்டு விடவும். தயவு செய்து திருப்பியனுப்பாதீர்கள்’ என்று எழுதப்பட்டு ‘வி.எம். சுந்தரி’ என்று கையொப்பமும் இடப்பட்டிருந்தது. ‘அமுதம்’ பத்திரிகை அலுவலகமும் அவன் அலுவலகமும் இருந்த அண்ணா சாலையில்தான் இருந்தது. எனவே, அக்கதைகளைத் தானே எடுத்துப் போய் ஆசிரியரிடம் நேரில் கொடுத்துவிட முடிவு செய்தான்.

    அமிர்: மதுரைப் பெண் சுந்தரியின் முகவரியை ‘146, வடக்கு ஆவணி மூல வீதி’ என்று மனப்பாடம் செய்து கொண்டான். இந்த சுந்தரியை அவனுக்குத் தெரியாதுதான். ஆனால் அவளது அழகிய புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் வெளியான ‘அமுதம்’ வார இதழில் அவன் பார்த்திருந்தான். புகைப்படத்தின் கீழ் வி.எம். சுந்தரி என்று போடப்பட்டு அவள் மதுரையில் நடந்த பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களிடையே நடந்த பாட்டுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற விபரம் வெளியாகியிருந்தது. அப்புகைப்படத்தில் இருந்த கையெழுத்தும் இந்தக் கையெழுத்தும் ஒன்றாக இருந்ததால் அதே பெண்தான் இவள் என்பது அவனுக்குத் தெரிந்து போனது. ‘சுந்தரி – சுந்தரம்’ என்று பல தடவைகள் மனத்துள் அவன் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

    அமிர்: … கதைகளைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர். நீர் எழுதியவையா? என்றார் வெற்றிலையை மென்றவாறு.

    அமிர்: இல்லை, இல்லை. கதையுடன் விலாசம் இருக்கிறதே?

    அமிர்: அதைப் பார்த்துவிட்டு ஒரு மாதிரியாகச் சிரித்த அவர். ஆமாம். மதுரையிலிருக்கும் அந்தப் பெண் எழுதிய கதைகள் உம்மிடம் எப்படி வந்தது? என்றார்.

    அமிர்: அந்தப் பெண் கதைகளை எனக்கு அனுப்பி ஹி… ஹி… உங்களிடம் சேர்க்கச் சொன்னாள்.

    அமிர்: அதுசரி, அந்தப் பெண் உமக்குச் சொந்தமா – அல்லது சொந்தம் ஆகப் போகிறவளா? – கண்சிமிட்டல் வேறு.

    அமிர்: ஹி… ஹி… தூரத்து உறவு… என்று அவன் குழறினான்.

    அமிர்: அந்த உறவைத்தான் சரியாகச் சொல்லு மேன்! என்று அவர் அதட்டியபோது, அவனது நா உலர்ந்துதான் போயிற்று. இந்தச் சமயத்தில் ஆசிரியரைப் பார்க்க நான்கைந்து பெரிய மனிதர்கள் வந்தது அவனுக்கு நல்லதாய்ப் போயிற்று. ‘பெற்றேன், பிழைத்தேன்’ என்று விழுந்தடித்து நழுவினான்.

    அமிர்: அந்த அறைக்கு வெளியே வந்து விட்ட அவன் காதுகளில், எங்கே அந்த ஆர்.எல்.ஓ. கிளார்க்? என்று ஆசிரியர் கேட்டது தெளிவாக விழுந்தது.

    அமிர்: ‘ஒருவேளை இந்த இழவெடுத்த மனுஷனுக்கு சுந்தரியைத் தெரியுமா என்ன? … நான் ஆர்.எல்.ஓ. கிளார்க் என்பது எப்படி அவருக்குத் தெரிந்தது?’ என்று வழியெல்லாம் குழம்பினான். தற்செயலாய்ப் பைக்குள் கையை விட்ட அவனுக்குச் சொரேர் என்றது. சுந்தரியின் கடிதத்தையும் ஞாபக மறதியாகக் கதைகளுடன் ஆசிரியரின் கையில் கொடுத்துவிட்டது தெரிந்தது. அவனது அலுவலகத்தின் முத்திரை அதில் பதிக்கப்பட்டிருந்ததே!

    அமிர்: ‘நான் தபால் விதிகளை மீறிவிட்டதைப் பற்றி ஆசிரியர் என் மேலதிகாரிகளுக்கு எழுதி விடுவாரோ? … நான் ஏன் இந்த வம்பில் தலையைக் கொடுத்தேன்?’

    அமிர்: மறுநாள் மதுரையிலிருந்து அவன் அத்தை அவன் அப்பாவுக்கு எழுதியிருந்த கடிதம் வந்தது. சுந்தரத்தின் ஜாதகம் கீழ்ச்சித்திரை வீதியில் உள்ள மங்கபதி என்பவர் பெண் அலமேலுவின் ஜாதகத்துடன் மிக நன்றாகப் பொருந்தியிருப்பதாகவும் சுந்தரத்தைப் பெண் பார்க்க அழைத்து வருமாறும் எழுதியிருந்தாள் அத்தை. ‘சுந்தரி, சுந்தரி’ என்று ஜபம் செய்து கொண்டிருந்த அவன் செவிகளில் அலமேலு என்கிற கர்நாடகப் பெயர் நாராசமாக ஒலித்தது. தன் கல்யாணத்துக்கு ஒன்றும் அவசரமில்லை என்று தன்னால் ஆனவரையில் அவன் தட்டிக்கழிக்கப் பார்த்தான். ஆனால் அம்மாவும் அப்பாவும் கச்சை கட்டிக்கொண்டு அவனை எதிர்க்கவே முடிவில் அவன் சரணடைந்தான் - பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் போயிற்று என்கிற முடிவுடன்தான். அப்படியே முடிந்தால் மதுரையில் வடக்கு ஆவணி மூல வீதியில் இருக்கும் சுந்தரியைப் பார்ப்பதற்கு எப்படியாவது வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டுவிட எண்ணினான்.

    அமிர்: இரண்டு வாரங்கள் கழித்து, சுந்தரம் ‘அழுதம்’ ஆசிரியரிடம் சேர்த்த இரு கதைகளில் ஒன்று அமுதத்தில் வெளியாயிற்று. சுந்தரியின் முதல் கதையை மிகவும் பாராட்டி ஆசிரியர் தமது பக்கத்தில் எழுதியிருந்தார். இடையிடையே ஆசிரியர் தான் இலாகாவின் சட்டத்தை மீறியதைத் தன் அதிகாரிக்குத் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை அவன் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது.

    அமிர்: அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தரம் தன்னறையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான். ‘அழுதம்’ ஆசிரியர் அண்ணாச்சாமி தமக்குரிய நமட்டுப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் சுந்தரத்துக்கு வயிறு கலங்கியது. தன் விலாசத்தை எப்படியோ கண்டுபிடித்து அப்பாவிடம் புகார் செய்யவோ அல்லது தன்னை எச்சரிக்கவோதான் வருகிறார் என்று நினைத்த அவன் ஓசைப்படாமல் பின்பக்க வழியாய்க கம்பி நீட்டினான்.

    அமிர்: வெகு நேரம் சுற்றிவிட்டு வந்து சேர்ந்த அவனை எதிர்கொண்ட அப்பா, எங்கேடா போய்விட்டாய்? உன்னைத் தேடிக்கொண்டு ‘அழுதம்’ ஆசிரியர் வந்திருந்தார். உன் ஃபோட்டோவைக் கேட்டு வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்… என்றார்.

    அமிர்: என்னது? ஃபோட்டோவா? எதற்கு? என்று அவன் பதைபதைப்புடன் கேட்டான்.

    அமிர்: ஏதோ பல்பொடி போடுகிறாராம் அவர். அதாவது வியாபாரம்! உன்னை எங்கேயோ பார்த்தாராம். உன் பல்வரிசை பல்பொடி விளம்பரம் செய்ய ஏற்றதாய் இருக்கிறதாம். முப்பத்திரண்டு பல்லையும் காட்டி ஒரு படத்தில் நீ சிரிக்கிறாயே அதை அவரிடம் கொடுத்தேன்… என்று அப்பா சபேசன் சொன்னதும் அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.

    அமிர்: இரண்டு நாட்கள் கழித்து மதுரை அத்தையிடமிருந்து மறுபடியும் கடிதம் வந்தது. அலமேலுவின் பெற்றோர் இரண்டொரு மாதங்களில் மாற்றப்பட்டு வேற்றுரூக்கு போய்விடுவார்கள் என்றும், பெண் கிளி மாதிரி இருப்பதால் அவளைச் சுந்தரம் இழக்கக்கூடாது என்றும், கூடிய விரைவில் பெண் பார்க்க வரும்படியும் வற்புறுத்தி எழுதியிருந்தாள். கீழ்ச்சித்திரை வீதி அலமேலுதான் சுந்தரி என்பது வேறு விஷயம்.

    அமிர்: மதுரைக்கு அவர்கள் வந்து சேர்ந்த அன்று வெள்ளிக்கிழமை. பெண் பார்த்த அன்றே வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்வதாக அத்தை சொன்னாள்.

    அமிர்: வந்த அன்று காலை பொழுது போகாமல் வெளியே சுற்றப்போன சுந்தரம் மீனாட்சியம்மான் கோயிலுக்கு அருகே கடையொன்றின் முன்னால் நின்று வளையல்கள் வாங்கிக் கொண்டிருந்த சிறு பெண் கும்பல் ஒன்றைப் பார்த்துத் திகைத்து நின்றான். ஏனெனில் அவன் மனங்கவர்ந்த சுந்தரியின் முழுச்சாயலில் ஒரு பெண் அந்தக் கும்பலில் இருந்தாள். அது சுந்தரியேதான் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.

    அமிர்: ஏண்டி, சுந்தரி! இன்றைக்கு யாரோ உன்னைப் பார்க்க வரப்போகிறார்களாமே? என்று ஒரு பெண் கேட்டதற்கு, சரி, சரி! நடுத்தெருவில் அதையெல்லாம் பற்றி எதற்குப் பேசுகிறாய்? என்று கடிந்து கொண்டாள் அந்தப் பெண். தன் தலையில் ஓங்கி ஓர் அடி விழுந்ததாக அவன் உணர்ந்தான். ‘அசட்டு அத்தையின் கண்ணில் இந்த அழகு சுந்தரி ஏன் படவில்லை? எவளோ அலமேலுவைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறாளே? இன்று இவளைப் பார்க்க வருகிறவன் நிச்சயமாய் இவளை ஏற்கச் சம்மதித்து விடுவான்…’ - இப்படி நினைத்த சுந்தரத்தை ஏமாற்றம் கவ்வியது. மற்றப் பெண்கள் யாவரும் போய், சுந்தரி மட்டும் இருந்தால் அறை விழுந்தாலும் பரவாயில்லை என்று பேச்சுக் கொடுத்தாகிலும் பார்க்கலாம் என்றால் அதற்கு வழி இராது போலிருந்தது. அவன் நிராசையுடன் அங்கேயே நின்றான். அப்போது தற்செயலாய்த் திரும்பிய சுந்தரியின் பார்வை அவன் மீது படிந்து, சற்றுத் திகைத்து – அதாவது அவனுக்கு அப்படித் தோன்றிது – மீண்டது. பிறகு அவர்கள் சேர்ந்து நடந்தனர். சற்று இடைவெளி விட்டு அவர்களைப் பின்பற்றிச் சென்ற அவன் அவர்கள் கும்பலாகவே வடக்கு ஆவணி மூல வீதிக்குள் நுழைந்தது கண்டு மேலும் ஏமாற்றமடைந்தான். அவனது ஏமாற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்வதற்கே போல், அடேடே, சுந்தரமா? என்கிற கேள்வியுடன் எப்போதோ அவனுடன் படித்ததாய்ச் சொல்லிக் கெண்டு அவன் மறந்தே போயிருந்த பழைய நண்பன் பாலு அவனைத் தொட்டு நிறுத்திப் பேச்சுக் கொடுத்து விட்டான்.

    அமிர்: அன்று பிற்பகலில், அத்தையின் உத்தரவுப்படி தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கீழச் சித்திரை வீதியை நோக்கி அப்பா அம்மாவுடன் கிளம்பினான். அவன் சோர்வாக இருப்பதைக் கவனித்த அத்தை, ஏண்டாப்பா ஒரு மாதிரி இருக்கிறாய்? அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அப்படியே வாயெல்லாம் பல்லாகிவிடப் போகிறாய் பார். அத்தனை அழகு! என்று கேலி செய்தாள். ஒரு துயரப்புன்னகை காட்டி அத்தையின் கேலியை அவன் ஏற்றான்.

    அமிர்: பெண்ணின் வீட்டுப்படி ஏறியதும் தன்னை மற்றவர்களுடன் எதிர்கொண்டழைத்த ‘அமுதம்’ ஆசிரியர் அண்ணாச்சாமியைப் பார்த்து சுந்தரம் திகைத்துப் போய் நின்றுவிட்டான். தான் பார்க்க வந்துள்ள பெண் வி.எம். சுந்தரிதான் என்பதை வீணைக்கு முன்னால் அவள் வந்து அமர்ந்ததைப் பார்த்தும் கண்ட சுந்தரம் தடுமாறிப் போனான்.

    அமிர்: என்ன மிஸ்டர் சுந்தரம்! தூரத்து உறவைக் கிட்டத்து உறவாக்கிக் கொள்ளுவதற்காக வந்தீர்களா? என்று அண்ணாச்சாமி அவன் காதருகே கேட்டுச் சிரித்தார். அவனுக்கு ஒன்றுமே புரியாததால் ஓர் அசட்டுச் சிரிப்பைச் சிந்தினான்.

    அமிர்: பெண் பிடித்திருந்ததை அங்கேயே தெரிவித்துவிட்டு எல்லாரும் வீட்டுக்கு வந்தனர். ஏன் அத்தை, அலமேலு என்று சொன்னாயே? அவள் பேர் அது இல்லையாமே? சுந்தரி என்று சொன்னார்கள்? என்று கேட்டான் அத்தையிடம்.

    அமிர்: அவளுக்கு அப்பா அம்மா வைத்த யெர் அலமேலுதான். அது பிடிக்கவில்லை என்பதற்காக அவள் தன் பெயரை அப்படி மாற்றிக்கொண்டு விட்டாளாம். சின்ன வயசிலிருந்து பலருக்கு அவள் அலமேலுதான்! என்று அத்தை விளக்கினாள்.

    அமிர்: இரண்டு விஷயங்கள் அவனைக் குழப்பின. அண்ணாச்சாமியை ஏற்கனவே சுந்தரிக்குத் தெரியுமா? (அந்தக் குறும்புக்கார மனிதர் சொல்லித் தொலைத்தால் குறைந்தா விடுவார்?) அப்புறம், வடக்கு ஆவணி மூல வீதி என்கிற முகவரி கீழச்சித்திரை வீதியானது எப்படி? வீடு மாற்றினார்களா?...

    அமிர்: கல்யாணம் ஆனதற்குப் பிறகு சுந்தரம் அண்ணாச்சாமியைப் பற்றி சுந்தரியிடம் கேட்டபோது அவள் சொன்னாள். தெரியுமாவா? அண்ணாச்சாமி என் அப்பாவுக்கு நண்பர். எங்கள் வீட்டு விலாசம் கொடுத்தால் நண்பரின் பெண் எதற்காக அவர் என் கதையைப் பிரசுரிப்பதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடும். அதில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் கீழச்சித்திரை வீதி விலாசத்தை – அது என் மாமா வீட்டு விலாசம் - கொடுத்தேன். ஆனால் அது நான்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டதற்குக் காரணம், இங்கே நடந்த பாட்டுப் போட்டியில் எனக்கு முதற் பரிசு கிடைத்த விவரம் என் புகைப்படத்துடன் அவருக்கு ஏற்கனவே கிடைத்திருக்கிறது. இங்கிருந்து வெளியாகும் தினசரியில் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டிருந்த அண்ணாச்சாமி என் புகைப்படத்தினை அமுதத்தில் போட்டு என்னை ஆச்சரியப்படுத்தும் எண்ணத்துடன் அவர் அமுதம் நிரூபரை – வேறொரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி அதன் நிரூபர் என்று சொல்லச் சொல்லி – வீட்டுக்கு அனுப்பினார். ஆனால் அப்போது வீட்டில் இருந்த நான் ரிப்போர்ட்டரின் விசிட்டிங் கார்டை அவரிடமிருந்து கேட்டபோது அவர் தர மறுத்தது என் சந்தேகத்தைக் கிளப்பியது. இதனால் அப்பா அந்த இளைஞனின் மீது சந்தேகப்பட்டுக் கத்த ஆரம்பிக்கவே, அவன் அண்ணாச்சாமியின் குறிப்பைப் பற்றிச் சொல்லித் தனது விசிட்டிங் கார்ட்டைக் காட்டினான். அவனைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நானும் அண்ணாச்சாமியை ஏமாற்றுவதற்காக மாமா வீட்டு விலாசத்தைக் கொடுத்தேன்… அதுதான் கதை!

    அமிர்: அடேயப்பா! தலை சுற்றுகிறது.

    அமிர்: அது மட்டுமா? நீங்கள் கதைகளைத் தம்மிடம் எடுத்து வந்த கதையைக் கூடச் சொன்னார். அதாவது எனக்குக் கடிதம் எழுதி அதைப் பற்றித் தெரிவித்தார். உங்கள் புகைப்படம் அனுப்பிப் பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார்.

    அமிர்: ஏதோ பல்பொடி விளம்பரத்துக்கு என்று சொல்லியல்லவா என் அப்பாவிடம் அதை வாங்கிப் போனார்?

    அமிர்: அதெல்லாம் சும்மா. பல்பொடியாவது… பருப்புப் பெடியாவது…?

    அமிர்: என் படத்தைப் பார்த்திருந்தால்தான் அடையாளம் தெரிந்துகொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் அப்படி உற்றுப் பார்த்தாயா?

    அமிர்: அதேதான்!

    2

    தனித்தனி நியாயங்கள்

    அமிர்: மாலதியின் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது. மறு வாழ்வு என்பதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்திராத நிலையில் தற்செயலாகப் பெற்ற சுந்தரின் நட்பு இப்படிக் காதலில் முடியும் என்றோ, தான் ஒரு கைம்பெண் என்பது தெரிந்த நிலையிலும் அவன் தன்னை மணந்துகொள்ள முன் வரக்கூடிய அளவுக்குப் பெருந்தன்மையும் பரந்த மனப்போக்கும் உள்ளவனாக இருப்பான் என்றோ அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லைதான். இரண்டு ஆண்டுகளாக ஒரே பிரிவில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து வேலை செய்து வருகிறவர்களாக இருந்தும் சுந்தர் தன்னிடம் அசட்டுப்பிசட்டென்று ஒரு தரம்கூடப் பேசியதே இல்லை என்பது இந்தக் கணக்கில் ஞாபகத்துக்கு வந்து அவளது மனசை மலர்த்தியது. நேரில் தனது எண்ணத்தைச் சொல்லி அவளது எதிரொலியைத் தெரிந்து கொள்ள முயலாமல் - அல்லது அதற்குத் தேவையான துணிச்சல் இல்லாமல் - அவன் சுருக்கமான ஒரு கடிதத்தின் வாயிலாகத் தனது விருப்பத்தைக் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தியிருந்தது அவன்பால் அவனது மனத்தைக் குழைவு கொள்ளச் செய்தது. அவன் தமிழில் தான் கடிதம் எழுதியிருந்தான்.

    அமிர்: ‘அன்புள்ள மாலதி,

    அமிர்: ஆச்சரியப்படாதீர்கள். இந்தக் கடிதத்தை எழுதுவது உங்கள் நண்பன் சுந்தர்தான். கடந்த ஓர் ஆண்டாகவே உங்களிடம் ஒரு தனிப்பட்ட விஷயம் பற்றிப் பேச வேண்டும் என்று பெரிதும் விரும்பி வந்திருக்கிறேன். ஆனால் நேரில் அதைப்பற்றி உங்களோடு பேச எனக்குத் துணிச்சல் இருந்ததே இல்லை. நானும் எவ்வளவோ முயன்றேன். அது முடியாமல், கடைசியில் இந்தக் கடிதத்தை எழுதுவது என்கிற முடிவுக்கு வந்தேன்.

    அமிர்: கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களோடு பேசிப் பழகிவந்திருப்பதில் நான் ஓர் உண்மையை உணர்ந்து கொண்டேன் - அதாவது உணர்ந்து கொண்டதாக நினைக்கிறேன். இந்த எனது ஊகம் தவறானால் என்னை மன்னியுங்கள் அதாவது நீங்கள் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கு எதிரியல்ல என்பது. எனினும் பொதுவான ஒரு கருத்து கொண்டிருப்பது வேறு. அதைத் தனது சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பது முற்றும் வேறு என்பதையும் நான் உணர்ந்ததுள்ளதாலேயே இத்தனை நாட்களாக முயன்றும் இது குறித்துப் பேச எனக்குத் தைரியம் வந்ததே இல்லை. எப்படியோ துணிவுகொண்டு இப்போது இதை எழுத முற்பட்டு விட்டேன். என்னை மணந்துகொள்ள முன்வருவீர்களா? நானும் உங்கள் நிலையில் இருப்பவன் - அதாவது மனைவியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இழந்தவன் - என்பதால் நாம் கணவனும் மனைவியும் ஆவது மிகப் பொருத்தம்தானே? மனைவிகளை இழந்த ஆண்கள் மறுமணம் செய்து கொள்ளுகையில் கைம்பெண்களைத் தேடிப்போவது என்பதைக் கொள்கையாகக் கொண்டால் இந்த நாட்டு விதவைகளின் துயர் பெருமளவுக்குக் குறையும். இல்லையா?

    அமிர்: ஒருவேளை, உங்கள் எதிரொலி எனக்குச் சாதகமாக இல்லாமல் போனால் அதற்காக உங்கள் மனசைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். அதை நீங்கள் வெளிப்படையாகச் சொல்லி விடலாம். நான் புரிந்துகொள்ளுவேன். அன்பின் அடையாளமே புரிந்துகொள்ளுதல்தானே? அதன் பிறகும் நாம் நண்பர்களாக இருப்பதில் உங்களுக்குத் தடை ஏதும் இருக்காதல்லவா? இப்படியெல்லாம் எழுதும் போது, எனக்கு எதிரான பதிலை நீங்கள் சொல்லிவிடாமல் இருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக் கொள்ளுகிறது. இல்லை என்பது உங்கள் பதிலானால் நான் உடைந்து போய்விடுவேன். நீங்கள் யோசிக்க எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இங்ஙனம்,

    சுந்தர்.

    அமிர்: மாலதிக்கு இன்னும் இருபத்தைந்து வயதுகூட ஆகவில்லை. அவளுக்கு மணமானபோது இருபத்துமூன்று வயது கணவன் இறந்தது மணமான ஓர் ஆண்டுக்குள்ளேயே. அவளுக்கு அப்பா – அம்மா இல்லை. தாய்மாமன்தான் அவளைப் படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்தவர். அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பதற்காகவே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவர் போன்று அவளுக்கு மணமான சில மாதங்களுக்குள் அவர் இறந்து போனார். இதனால் கணவனைத் தவிர யாருமே அவளுக்கு உறவினர்கள் இல்லை என்பதால் இப்போது அவள் ஓர் அநாதைதான். இந்த அநாதைத் தனத்தால் அவளுக்குச் சில தொல்லைகள் அண்மைக் காலமாக விளைந்து கொண்டிருக்கின்றன. ஒரு கன்னிப்பெண் மீது படியும் பார்வைகளைக் காட்டிலும் ஒரு கைம்பெண்ணின் மீது படியும் பார்வைகள் அருவருக்கத்தக்கவையாக இருந்ததை அவள் கவனித்துப் புழுங்கினாள். ஒரு கன்னிப்பெண் மீது படியும் பார்வையில் வெறும் காமம் மட்டுமே இருக்க, ஒரு கைம்பெண் மீது படியும் பார்வையிலோ ‘இவள் வருவாள்’ என்கிற நம்பிக்கையும்கூடப் புலப்பட்டதாக அவளுக்குத் தோன்றியபோது அவளுக்கு உடம்பெல்லாம் நடுக்கமடைந்தது. பின் தொடர்ந்து வருபவர்கள், அவளைப் பார்த்துக் கண்ணடிப்பவர்கள், ‘பாவம் பொண்ணு’ என்று அவள் காதுபடச் சொல்லுபவர்கள், ‘வர்றியா?’ என்று கொச்சையாக அவள் எதிர்பாராத நேரத்தில் விரைந்து அவளருகே வந்து காதில் முனகிவிட்டு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறவர்கள் - இப்படியெல்லாம் அவளுக்குத் தொல்லை கொடுப்பவர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் அவள் மறுமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கித்தான் விட்டாள்.

    அமிர்: அவள் கணவனின் மீது அவளுக்கு அன்பு உண்டுதான். தனது பாதுகாப்புக்காக வேறு ஒருவனை மணந்து கொள்ளுவதால் பழையவன் மீது தான் கொண்ட அன்பு பட்டுப் போய்விடுமா என்ன என்று அவள் தன்னையே கொஞ்ச நாட்களாகக் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறாள். தனது கண்கொள்ளா அழகும் இளமையும் தனக்கு யமனாக இருந்த நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள மறுமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று அவள் நினைக்கத் தலைப்பட்டுக் கொஞ்ச நாட்கள் ஆகின்றன. இந்தக் கட்டத்தில்தான் சுந்தரின் கடிதம் வந்திருக்கிறது.

    அமிர்: அவளும் அவள் தோழி மீனாவும் ஓர் அறை எடுத்துக்கொண்டு அதில் வசித்து வருகிறார்கள். மீனாவின் பெற்றோர்கள் வேற்றூரில் இருந்தனர். அவளுக்கு இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் ஆகப்போகிறது. அதன்பிறகு அவள் தனியாக அந்த அறையில் வசிக்கும்படி இருக்கும். இதை நினைத்துப் பார்த்தபோதே அவளுக்கு வியர்வை துளித்தது. மன உளைச்சல் பட்டுக் கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில் வந்துள்ள சுந்தரின் கடிதம் ஒரு வரப்பிரசாதம் மாதிரி அவளுக்குத் தோன்றிற்று.

    அமிர்: அன்று இரண்டாம் சனிக்கிழமை. சுந்தரின் கடிதம் அன்றைய அஞ்சலில் வந்திருந்தது. மீனா குளிக்கப் போயிருந்தாள். அவள் வந்ததும் கடிதத்தை அவளிடம் காட்டி அவள் கருத்தை அறிய வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள். மீனாவின் கருத்து எதுவானாலும், தன் முடிவு மாறப் போவதில்லை என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    அமிர்: குளித்துவிட்டு வந்த மீனாவிடம் மாலதி சுந்தரின் கடிதத்தைக் கொடுத்தாள். அதைப் படித்து முடித்த மீனா, ரொம்ப ரொம்…ப சந்தோஷம், மாலதி. இதுக்கு ஒத்துக்க. நானும் போயிட்டா அப்புறம் நீ ரொம்ப அவதிப்படுவேடி என்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.

    அமிர்: நான் முடிவு பண்ணிட்டேண்டி, மீனா. சரின்னுதான் சொல்லப் போறேன்…

    அமிர்: அவள் சொன்னதைக் கேட்டதும் மீனா மகிழ்ந்து போய்த் தோழியின் கையைப் பிடித்துக் குலுக்கித் தள்ளி விட்டாள்.

    அமிர்: அன்று முழுவதையும், மறுநாளான ஞாயிற்றுக் கிழமையும் தள்ளுவது மாலதிக்குக் கடினமாக இருந்தது.

    அமிர்: திங்களன்று அவள் வெட்கத்துடன் அவனை நெருங்கியபோது அவன் அவளது உள்ளத்து எதிரொலியை

    Enjoying the preview?
    Page 1 of 1