Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Thandhiram
Krishna Thandhiram
Krishna Thandhiram
Ebook574 pages5 hours

Krishna Thandhiram

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545207
Krishna Thandhiram

Read more from Indira Soundarajan

Related to Krishna Thandhiram

Related ebooks

Related categories

Reviews for Krishna Thandhiram

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Thandhiram - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கிருஷ்ண தந்திரம்

    Krishna Thandhiram

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மதிப்புரை

    என்னுரை!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    மதிப்புரை

    R. சிவக்குமார்

    ஆசிரியர், தமிழன் எக்ஸ்பிரஸ்

    ஹேந்திரநாத் என்ற வங்காள தேசத்துத் தவ முனிவர்....! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் வாழ்ந்த இந்த அருளாளர், பரமஹம்சர், அவ்வப்போது கூறிய பல நல்லுபதேசங்களைக் குறித்து வைத்து உலகுக்கு வழங்கிய உன்னத புருஷர். இவர் தொகுத்த ‘ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்’ என்ற நூல், மாய இருளில் சிக்கித் தவிக்கும் பலருக்கு ஞான ஜோதியாக எப்போதும் திகழ்கிறது.

    அந்தப் புத்தகத்தில் சில பக்கங்களை அவ்வப்போது படிப்பதில் எனக்கென்னவோ பல்வேறு ஆறுதல்கள்! சென்ற வாரம் அப்படிப் படித்த ஒரு உபதேசம்.

    அர்ஜீனனிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீனன், ‘கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம் என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பனாகவும் விளங்கிய அர்ஜீனனை ஒரு பெரும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, ‘இங்கே என்ன காண்கிறாய்?’ என்று கேட்டாராம். ‘அடடா! எல்லாமே நாவல் பழ மரங்கள்! எல்லா மரங்களிலும் கொத்துக் கொத்தாக எவ்வளவு நாவல் கனிகள்!" என்று வியந்தானாம் பார்த்தன். உடனே, ‘அருகே சென்று பார் அர்ஜீனா’ என்றாராம் கண்ணன். கிட்டே சென்று பார்த்த பாண்டவனுக்கு ஒரே பிரமிப்பு. உண்மையில் அங்கே அவன் பார்த்தது நாவல் பழங்களையல்ல! கொத்துக் கொத்தாகப் பல்லாயிரம் கிருஷ்ணர்கள்!

    வியப்பை அடக்க முடியாத அர்ஜீனன், கண்ணனிடம், ‘இதென்ன அதிசயம்?’ என்று பிரமித்தானாம். அதற்கு கண்ணன், சிருஷ்டியின் துவக்கத்திலிருந்து இப்படி எத்தனையோ ஆயிரம் கிருஷ்ணர்கள் வந்து போய்விட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னைப் போய்பரிபூரண பிரம்மம் என்கிறாயே?’ என்று சொல்லி நகைத்தாராம்....

    ‘அவதாரம் என்பது அலை போன்றது! ஆனால் பூரண பிரம்மம் என்பது கடல் போன்றது’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்து. ஆனால் இப்படிச் சொன்ன பரமஹம்சர், கண்ணனின் ‘லீலா பூமி’யாகிய பிருந்தாவனத்துக்குப் போனார். அங்கே கிருஷ்ண பிரேமையால் பித்துப் பிடித்து, பக்திப் பரவசத்தின் உச்ச நிலைகளையெல்லாம் தொட்டார். அங்கே ‘ஆயிரமாயிரம் நாவல் பழங்களில் இந்த அவதாரமும் ஒன்று’ என்று அவர் ஆராய்ச்சி செய்யவில்லை! இதுதான் கிருஷ்ண தந்திரம்!

    பரமஹம்ஸரின் பிரதம சீடரான விவேகானந்தர், கிருஷ்ணன் என்பதே மிகை. பிருந்தாவனத்தில் லீலைகள் செய்த ஒரு அற்புத பாலகன், துவாரகையிலிருந்து போரிட்ட ஒரு யது குல சத்ரியன், கீதோபதேசம் செய்த ஒரு ஞானாசார்யன்... இந்த மூன்று வெவ்வேறு நபர்களையும் ஒன்றிணைத்து கிருஷ்ணன் என்ற ஒரே கடவுளாக்கி விட்டார்கள். அதனால்தான் இது மிகை. எக்ஸாஜிரேஷன் என நினைக்கிறேன் என்றார்.

    அதே விவேகானந்தர் பின்னாளில் ஒரு ஊரில் கண்ணனுடைய திருவீதி உலா ஒன்றைக் காண நேர்ந்தது. தன் பக்கத்திலிருந்து சீடரிடம், அதில் (விக்ரகத்தில்) கண்ணனை காண்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அந்தச் சீடர், எனக்கு விக்கிரகமாகத்தான் தெரிகிறது என்று உண்மையைச் சொன்னார். உடனே தனது திருக்கரங்களால் அந்தச் சீடரின் தலையைக் தொட்ட சுவாமி விவேகானந்தர், இப்போது பார் என்றாராம். அவரது ஸ்பரிஸ தீட்சையால் ஞானம் பெற்ற சீடர், நிஜமாகவே கண்ணனை அங்கே கண்டாராம்.

    எந்தக் கண்ணனை ‘மிகை’ என்று விவேகானந்தர் வர்ணித்தாரோ அதே கண்ணனின் தரிசனத்தை தனது அருள் திறனால் சீடனுக்கும் காட்டிக் கொடுத்ததை அவரது வரலாறு பதிவு செய்துள்ளது. இது தான் கிருஷ்ண தந்திரம்!

    ஒரு நண்பர் என்னிடம் கிருஷ்ண ஜெயந்தி என்பதே கண்ணனின் பிறந்த நாள் விழாதானே? சீம்பால் குடிக்க வேண்டிய கண்ணனுக்கு சீடை, முறுக்குகளை நிவேதிப்பது பொருத்தமாக இல்லையே! லாஜிக் இடிக்கிறதே என்றார்.

    நான் அவரிடம், "தான் பிறந்த சிறைச் சாலையிலிருந்து நேரே போய் கம்சனை கொன்றிருக்க கண்ணனால் முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல், ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் இன்னொருத்தி மகனாகப் போய் வளர்ந்தார். தன்னைப் பெற்றவர்களை சிறை மீட்காமல் பிருந்தாவனத்துக்கு ஓடி விட்டார். அங்கே குழந்தைப் பருவத்திலேயே பல அசுரர்களை விளையாட்டாகக் கொன்று, பிறகுதான் கம்சவதம் செய்தார்.

    இது மானுடக் குழந்தைகளால் இயலாத காரியம். பிற்காலத்திலும் மகா பாரத யுத்தம் முழுவதிலும் கண்ணனின் தந்திரங்கள்தான் வேலை செய்து, பாண்டவர்களைக் காப்பறியது. அங்கே வீரத்தைவிட யுக்திகள்தான் ஜெயித்தன. அதிலும் முழுமையில்லை, கௌரவர் தரப்பில் அசுவத்தாமா மிஞ்சினான். கண்ணன் ஆதரித்த பாண்டவர் தரப்பிலும் சிலரே மிச்சப்பட்டனர். கிருஷ்ணனால் கருவிலேயே ரட்சிக்கப்பட்ட ‘பரிட்சித்து’ மகாராஜாகூட, இறுதியில் நாகத்தால் மாண்டான்.

    முடிந்தால் கண்ணனின் கதையை முழுவதுமாகப் படித்துப் பார். அபிமன்யு மரணம், ராசலீலை, பாகவத புராணத்திலேயே காணப்படாத ‘ராதை’ என்னும் தேவி என்று பார்க்கும் இடமெல்லாம் ‘லாஜிக்’ உதைக்கும். இதில் சீடை நிவேதனமும் சேர்த்தி. ஒரு வேளை மழலைப் பருவத்திலேயே அசுரர்களைக் கொன்றவனாக கண்ணன் கருதப்படுவதால் பல் முளைக்கும் முன்னே சீடை, முறுக்கு தின்றிருக்கலாம்.

    இதையெல்லாம் விடு... ஒரே விஷ்ணுவின் ‘டபுள் ரோல்’ அவதாரங்களாக பரசுராமனையும்-ராமனையும், பலராமனையும்-கண்ணனையும் ஒப்புக் கொள்கிறோம். இதில் பரசுராமனுடைய குணத்துக்கும், ராமனுடைய பண்பு நலத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அடுத்த ‘செட்டில் பலராமர், கௌரவர்களை ஆதரித்தார்! கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ‘ஹெல்ப்’ பண்ணினார். பலராமனுக்கு மதுவருந்தும் பழக்கமும், பிரத்யேகமான கோபியர் சகவாசமும் உண்டு. இது அகடவிகட முரண்பாடில்லையா? கடைசியில் யாதவ வம்சமே ‘தண்ணி’ போட்டுவிட்டு, தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டது. ஒரு வேடனின் அம்பால் கண்ணன், தனது உடலைத் துறந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்த இடத்தில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதை பிரபாசத்தலத்தில் இப்போதும் பார்க்கலாம். இதனாலெல்லாம் கண்ணன், இறைவனில்லை என்று ஆகிவிடுமா? கடவுளிடம் ‘லாஜிக்’ பார்க்காதே" என்றேன் அந்த நண்பரிடம்.

    அவர் விடவில்லை. இது வரை நூறாயிரம் பிரம்மாக்களும் ஆறாயிரம் விஷ்ணுக்களும், கணக்கற்ற இந்திரர்களும் வந்துபோய் விட்டார்கள். சிவபெருமான் ஒருவரே அழிவற்றவர் என்று அப்பர் தேவாரம் சொல்கிறது. இதுதான் எனக்கு லாஜிகலாக இருக்கிறது" என்றார்.

    நான், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள். அது உன் விருப்பம். சமீபத்தில்கூட பெரிய நடிகர் ஒருவர், ஆன்மீகவாதிகளே கோயில்களை வருங்காலத்தில் இடிப்பார்கள் என்று ஒளரங்கசீப்பின் வாரிசுபோல் தன் நப்பாசையை டி.வி.யில் வெளியிட்டார். இதுபோல் எத்தனையோ ‘சலசலப்புகளை’ ஆன்மீகம் பார்த்துவிட்டது. ஆனால் அண்ணாமலையிருந்தோ, திருமலையிலிருந்தோ ஒரு கூழாங்கல்லைக் கூட இவர்களால் அசைக்க முடியாது. அப்படி அசைக்க முயற்சித்த பலரின் மனைவிமார்களும், பிள்ளைக்குட்டிகளும் ஆங்காங்கே அங்கப் பிரதட்சிணம், அடி பிரதட்சிணம் என்று மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் கண்ணனை எப்போதாவது ரசிப்பவன். உன் லாஜிக் உன்னோடு என்று கூறி அந்த நண்பரை அனுப்பிவிட்டேன்.

    அவர், ‘தமிழன் எக்ஸ்பிரஸை’ தொடர்ந்து படிப்பவர். திரு. இந்திரா சௌந்திரராஜனின், ‘கிருஷ்ண தந்திரம்’ தொடரையும் விடாமல் வாசித்தார். இந்தத் தொடரை 53 வாரங்களோடு நிறைவு செய்ய ஆசைப்பட்டார் இந்திரா. அதற்குக் காரணம், கண்ணின் எண் எட்டு என்றார். கண்ணனோ ஜோதிடம், நியூமராலஜி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா? அதனால் இந்திராவையும் ஏமாற்றி, 55-வது வாரத்தில் தொடரை நிறைவு செய்து கொண்டார்.

    என் ‘லாஜிக்’ நண்பர், மறுபடி என்னைத் தொடர்பு கொண்டார். உங்க பத்திரிகைல வந்த இந்திரா சௌந்தரராஜனின் தொடரை வாரம் தவறாமல் படித்தேன். முடித்த பிறகு எனக்கு ஏதோ புரிந்ததுபோல் தோன்றியது. தனியாக உட்கார்ந்து இ.சௌ.வின் வாதப் பிரதிவாதங்களை என் அறிவுக்கு எட்டிய வரை அலசினேன். கடைசியில் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா? நான் இந்திராவுக்கும், கண்ணனுக்கும் ரசிகனாகிவிட்டேன். இப்போது என் புனைப்பெயர் ‘கிருஷ்ணன்தாசன்’ (எப்போதாவது புதுக்கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதுவார்). இந்த மாற்றங்களெல்லாம் எப்படி நடந்தது? என்று வியப்போடு கேட்டார்.

    அதுதான், ‘கிருஷ்ண தந்திரம்’ என்று சொல்லி, மொபைலை துண்டித்துவிட்டேன்!

    -R. சிவக்குமார்

    ஆசிரியர் - தமிழன் எக்ஸ்பிரஸ்

    என்னுரை!

    ப்போதெல்லாம் நான் எனது நாவல்கள் புத்தகமாக வரும்போது அதற்கு என்னுரை எழுதுவது பற்றி யோசிப்பதேயில்லை! பதிப்பகங்களில் கேட்பார்கள். நானும் என்னுரை என்று அந்த நாவல் குறித்து பீடிகை போடவோ அல்லது பெருமை பேசவோ எதுவுமில்லை – எனக்குள் எதுவும் தோன்றவில்லை என்று கூறிவிடுவேன். ஆனால் கிருஷ்ண தந்திரம் நாவலை பதிப்பகத்தாரிடம் தரும்போதே என்னுரை, மதிப்புரை இரண்டும் உண்டு – எனவே என்னைக் கேட்க மறந்துவிடாதீர்கள் என்றேன்.

    அவர்களும் கேட்கப்போய் இதோ என்னுரை....

    இதற்கு மதிப்புரை தந்திருக்கும் தமிழன் எக்ஸ்பிரஸின் ஆசிரியரும், சிறந்த வேதாந்தியுமான திரு. சிவகுமார் அவர்கள் கூட எல்லோரும் ஒரு நாவலை எப்படி விமர்சிப்பார்களோ அப்படி ஒரு வரையரைக்குள் நின்று கொண்டு விமர்சிக்கவில்லை. நாவல் அவரை எந்த வகையில் தாக்கத்திற்குட்படுத்தியதோ அதற்கேற்ப அப்படியே அந்த தாக்கத்தைத்தான இதற்கான மதிப்புரையாக தந்திருக்கிறார்.

    முதலில் நான் அவருக்கு நன்றி கூறிவிட வேண்டும்.

    சத்தியமாக சிவகுமார் என்று ஒருவர் இந்த பத்திரிகைத் துறையில் இருந்திருக்காத பட்சத்தில் இந்த கிருஷ்ண தந்திரம் நாவலும் தோன்றியே இருக்காது. இன்றைய பத்திரிகை உலகம் மிகவேகமாக மாறிவருகிறது. பாரத தேசமும் கசல விஷயங்களிலும் வேகமான மாற்றங்களைக் கண்டு வருவதாலே அதை பத்திரிகைகள் அப்படியே எதிரொலிக்கின்றன. குறிப்பாக 1995க்கு பிறகு நான் உலகம் முழுக்கவே ஒரு பெரும் வேகத்தைப் பார்க்கிறேன். ‘சரசரவென்று சரிந்துவிழுந்தது.... சுழல் போல வந்து வாரிச் சென்றது என்று வர்ணிப்பார்களே அந்த வர்ணனை அப்படியே மாறிவரும் கால மாற்றத்துக்கு மிகப் பொருந்தும். வீட்டுக்கு வீடு டி.வி., செல்போன், டூ விலர்...சில்லரை என்றாலே அது ஒரு ரூபாயில் இருந்து தான் தொடங்குகிறது! பால் பூத்களில் கால் கடுக்க நின்றது போய் பெட்டிக்கடைகளில் கூட பாக்கெட் பால் சீரழிகிறது. சிறுவர்கள் கூட இப்போது அரை டிரவுசர் அணிவதில்லை. பாவாடை தாவணி அந்நியன் போல் விரட்டியடிக்கப்பட்டு சுடி-மிடிகளின் ஆட்சி நடக்க ஆரம்பித்துவிட்டது. பிச்சைக்காரனின் கப்பரையில் கூட செல்போன் கிடக்கிறது. அமெரிக்கா அடுத்த தெரு போல ஆகிவிட்டது, ஒரு முதலை ஒரு முழு மாட்டை பிடித்து சுவைத்து சாப்பிட்டு ஏப்பம் விடுவது வரை டி.விக்களில் சாதாரணமாக பார்க்க முடிகிறது.

    அன்று முட்டி மோதிக் கொண்டு மூன்று மணி நேரம் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்கிப் பார்த்த படங்களை ஓடும் பஸ்சுக்குள் எல்லாம் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது.

    சுருக்கமாக சொன்னால் ‘ஒலியும் ஒளியும்’ – விஞ்ஞான புண்ணியத்தால் தங்களுக்குண்டான தாரதம்மியம் அவ்வளவையும் இழந்துவிட்டன. அழகான பெண்களை அநியாய காமுகர்கள் கற்பழித்து கந்தையாக்கிப் போடுவதை போல இந்த சமாச்சாரங்களை இன்றைய சமூகம் மலிவாக்கிவிட்டது.

    துளி சேலை விலகினாலே அன்று அது அதிர்ச்சிக்குரிய விஷயம். இன்று கருவரைக்குள்ளேயே ஒரு அர்ச்சகரே ஆனந்தத் தாண்டவமாடி அதை பதிவும் செய்து கொள்கிறார்! காமக் காட்சிகள் என்பது ஏதோ பஸ் பயணத்தின்போது புறத்தில் நடப்பதை பார்த்தபடியே பயணிப்பது போல சர்வசாதாரணமாகி விடலைகளின் விந்தை எல்லாம் அது உறிஞ்சித் துப்பிக் கொண்டிருக்கிறது.

    வீட்டுப் பிள்ளைகளை வெளியூருக்கோ, கல்யாணத்துக்கோ இல்லை வேறு காரணங்களுக்கோ அழைத்தால் கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். சினிமா பார்க்க கூப்பிட்டாலோ எ.சி. தியேட்டரா, உத்தரவாதமாக வெற்றிப் படமா? அந்த தியேட்டரில் கேண்டீன் இருக்கிறதா? கார் பார்க்கிங் வசதியிருக்கிறதா? என்று கேட்டு எல்லாம் தெரிந்த பிறகே வருவது பற்றி பரிசீலிக்கிறார்கள்.

    என் பிள்ளைப் பிராயத்தில் அபூர்வமாகவே நான் காலி ஃப்ளவர், ஆப்பிள், மாதுளை குறிப்பாக செவ்வாழை போன்றவைகளை பார்த்திருக்கிறேன். இன்று பிளாட்பாரக் கடைகளில் சீரழிகின்றன. இவைகள் விலைவாசியும் மிரட்டலாகத்தான் இருக்கிறது. 1972-ல் நான் குடி இருந்த வீட்டுக்கு வாடகை இருபது ரூபாய்தான். இன்று கிலோ அரிசி 41 ரூபாய்.

    அடேயப்பபார்.... என்ன ஒரு மாற்றம்! இதை சில விஷயங்களில் வளர்ச்சியாக, பல விஷயங்களில் வீழ்ச்சியாகவே என்னால் பார்க்க முடிகிறது!

    இத்தனை மாற்றங்களுக்கு நடுவில் பத்திரிகை உலகில் நாவல் இலக்கியம் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்? நறுக்கென்று 18 வாரங்களில் முடித்துக்கொள்ள சொல்கிறார்கள். பல முன்னணி இதழ்களோ ‘இப்பல்லாம் கதைகளை யாருமங்க படிக்கறாங்க...?’ என்று கதைகள் வெளியிடுவதையே நிறுத்திக் கொண்டு விட்டன.

    எழுதிப் பிழைப்பத என்பது கல்கி சாண்டில்யன் காலத்திலேயே கஜகர்ணமான விஷயம். அன்றே எழுத்தாளன் என்றால் ‘சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?’ என்று திருப்பிக் கேட்டபார்கள்... இன்று ஒரு நாவல் பற்றி யோசிப்பதே முட்டாள்தனம் என்பது போல ஆகிவிட்டது. அதனாலோ என்னவோ 2000த்துக்கு பிறகு பளிச்சென்று ஒரே ஒரு எழுத்தாளர் உருவாகி வந்து நான் பார்க்கவில்லை. அரிப்புக்கு சொரிந்து கொள்கிறார்போல ஒன்றிரண்டு சிறுகதைகளை எழுதுவது ஒருவரை எழுத்தாளராக்கிவிடாது.

    ஜெயகாந்தன் போல திம்மென்று மனதில் குத்தவேண்டும். கல்கி போல கட்டி இழுக்க வேண்டும். லஷ்மி போல மனசை வருட வேண்டும். சுஜாதா போல சுண்டி இழுக்க வேண்டும். ராஜேஷ் குமார் போல வாசகர்களை கட்டிப்போட வேண்டும். ‘பேராண்மை’ பொன்னுசாமி போல எழுத்தில் வாசம் காட்ட வேண்டும். ‘கி.ரா’ போல யதார்த்தத்தில் ஜொலிக்க வேண்டும்.

    ஐயோ தமிழ் நாவல் உலகம் முதியவர்களின் கூடாரமாகி விட்டதோ...? இன்னும் சொற்ப காலம்தான்! அதிகபட்சம் 25 வருடங்கள். அதன்பின் நாவல்கள் அருங்காட்சியாகப் பொருள் போல ஆகிவிடுமோ என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது.

    இப்படி எண்ணத் தோன்றும் ஒரு சமயத்தில்தான் கிருஷ்ண தந்திரத்தை நான் 55 வாரங்கள் தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதினேன். திரு சிவகுமார் அவர்கள் தடையே சொல்லவில்லை. முடிவை நெருங்கிவிட்டதாக சொன்னபோது இன்னும் கூட போகலாமே...! என்றதுதான் என்வரையில் ஆச்சரியம்.

    பிறகே சொன்னார். ‘வாசகர்கள் ஒரு தவிப்போடு வாரா வாரம் படித்தார்கள். அதிக அளவில் கடிதங்கள் வந்தன. நாவலும் புதிய வடிவமைப்போடு இருந்தது. விஞ்ஞானம், ஆன்மீகம், இசை, மர்மம் என்கிற இந்தக் கலவை மிகமிகப் புதிது...’ என்று அவர் சொன்ன போதுதான் எனக்கே இந்த நாவலின் கட்டமைப்பு குறித்த பார்வை ஏற்பட்டது.

    இன்று நாவல்களை பல மாதிரி தரம் பிரிக்கிறார்கள். எழுத்தாளர்களிலும் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தனியாக ஒரு கூட்டம். எளிமையாக எழுதினாலோ ஆன்மிகமாய் சிந்தித்தாலோ அவன் தரமான எழுத்தாளன் கிடையாது என்பது போல ஒரு எண்ணம்.... சாகித்ய அகாதமி போன்ற அமைப்பு நீதியானவர்கள் கூட இந்த மாயையில் விழுந்து கிடப்பதுபோலதான் தோன்றுகிறது. இப்படி ஒரு நிலைப்பாட்டுக்கு நடுவில் தமிழன் எக்ஸ்பிரஸ் போல ஒரு சமூக அரசியல் இதழில் கிருஷ்ண தந்திரம் ஒரு சன்னமான புரட்சியை செய்ததாகவே எனக்குப் படுகிறது.

    ‘சிவம்’ என்று ஒரு படைப்பு! அதை உச்சி மேர்ந்தார்கள் என்னை பரம சைவனாகச் சிலர் உணர்ந்தார்கள். இந்த கிருஷ்ண தந்திரம் என்னை வீர வைணவனாகக் காட்டக் கூடும்.

    நானோ தேடல் மிக்க ஒரு இல்ககியவாதியாக மட்டுமே என்னைப் பார்க்கிறேன். நாத்திகத் தாக்கங்கள் கொண்ட ஆத்திகவாதியாக இருக்கிறேன். ‘ஒன்றில் இரு – அதில் நன்றாயிரு’ என்பது இல்ககிய வாதிகளுக்கு பொருந்தாது. பொருந்தவும் கூடாது என்பதே என் கருத்தாகும். நாளைய பௌத்தப் பார்வையோடு நானொறு நாவல் புனையலாம். கம்யூனிசத்தையும் கடவுள் நம்பிக்கையையும் கலந்து குலுக்கி ஒரு புதிய சிந்தனை கொண்ட படைப்பும் என்னுள்ளிருந்து வரலாம் தெரியாது.

    எது எப்படியோ....? செல்போனே காதுகளாக்கிவிட்ட இந்தக் காலத்திலும் இவ்வளவு தூரத்துக்கு எழுத முடிந்ததும், அதை வாசக உலகம் வரவேற்றுக் கொண்டாடியதும் நம்பிக்கை தரும் ஒரு விஷயம்.

    எனது இந்த வித்யாசமான முயல்வை நான் அன்றைய நடிகரும் இன்றைய சிந்தனைவாதியும், என்றும் ஓவியராகவும், மேலான நல்ல மனிதராகவும் விளங்கிடும் நடிகர் சிவகுமாருக்கு சமர்ப்பிப்பதை கௌரவமாக கருதுகிறேன்.

    வறுமையில் தொடங்கி, கலைமையில் கலந்து, நடிப்புலகில் நடிகனாக திகழ்ந்தபோதும் என்றும் யோக நெறிகளை விட்டு விடாமல் வாழ்ந்து, இன்று கம்பராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசங்களை இளைய தலைமுறைக்கு தன் கரிஷ்மாவை கொண்டு கவனகப்படுத்திவரும் அவரது முயல்வுகளை வியக்கிறேன், ரசிக்கிறேன், மதிக்கிறேன். அப்படியே அந்த சிவகுமாருக்கும் இந்த சிவகுமாருக்கும் என் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    அன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    27.12.2009

    மதுரை-3.

    கிருஷ்ண தந்திரம்

    1

    "எதற்கோ புறப்பட்டு யாரையோ பார்த்ததுபோல எதையோ தேடப் போய் அதுவாக வந்து கையில் அகப்பட்டது அந்த ஏட்டுக் கட்டு! மொத்தமாக ஏழு கட்டுகள். முதல் கட்டின் தலையோட்டில் ‘சப்த முகுந்தம்’ என்கிற எழுத்துக்கள் கண்ணில்பட்டன! அதற்கும் கீழே, ‘இது உயிர்களுக்கு புத்துயிர் தருவதற்காக உயிர்களுக்கெல்லாம் கண்ணாக விளங்கும் கண்ணன் எழுதிய சங்கீத பாஷ்யம்!’ என்னும் பொடிப் பொடி எழுத்துக்கள் கண்ணில் பட்டன. அடுத்த பக்கத்தை, அதாவது ஏட்டைப் பார்த்தபோது சட்டென்று படிக்க முடியவில்லை. லென்ஸைத் தேடி எடுத்து வந்து பார்த்து தான் படிக்க முடிந்தது.

    அதில், ‘கண்ணமங்கலம் உத்தவருக்கு அவர் விரும்பிக் கேட்டதன் பேரில் நான் எனது புல்லாங்குழலை பரிசாகக் கொடுத்தேன். அவரோ இல்லை மற்றோரோ கடுகத்தனை சுய நலமும் இன்றி உதட்டித்தாலே என் குழல் இசைக்கும். அதற்கு இந்த சப்த முகுந்தம் வழி காட்டும். இதுவே என் சத்யப் பிரமாணமாகும் - வைகுண்டபதி" என்கிற வரிகளைப் படித்த போது மனதுக்கு அதிர்வாகத்தான் இருந்தது.

    ண்ணமங்கலத்துக்கு தென் மேற்கில் இருக்கிறது யாதவ கிரிக்குன்று... அதை ஒட்டி கரிய நிறத்தாலான பாம்பு ஒன்று நெளிவது போலக் கிடக்கிறது. கண்ணுக்குத் தெரியும் புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் சாலை. அதன் மேல் ஒரு சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது அந்த நாளைய கார். கறுப்பு நிறம் ஒரு இரும்பு ரதம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சாட்சி போலவும் இருந்தது அந்த கார். யாதவகிரிக்குன்று ஒன்றும் பெரிய உயரம் இல்லை. இன்ச் டேப் போதும் அதை அளந்து விடுவதற்கு. ஒரு நூறடி உயரம் இருந்தால் அதிகம். உச்சியில் ஒரு ஐந்தாயிரம் சதுர அடி நிலப்பரப்பு இருந்திடப் போய் அதை அப்படியே ஆக்ரமித்துக் கட்டியது போலக் காணப்பட்டது அந்த கிருஷ்ணன் கோயில்.

    குன்றுக்குக் கீழே சாலையானது. பாம்பின் நாமப்படம் போல வளைந்து திரும்பும். அந்தத் திருப்பத்தில் ஒரு ஓரமாகப் பார்த்து காரை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் ஷ்யாமளா!

    சாகக் கிடக்கும் தொழு நோயாளிகூட ஷ்யாமளாவைப் பார்த்தால் தனது ஈனங்களைத் துளியும் பொருட்படுத்தாமல் அப்படியே கட்டிப்பிடித்து முத்திமிட ஆசைப்படுவான். அப்படி ஒரு அழகு! இத்தனைக்கும் சாந்து, பௌடர் என்று எதையும் நாடாதவள். இன்றைக்கு எந்த ஒரு இளம் பெண்ணும் தலைவாரி பின்னிக் கொள்வதில்லை. ஹேர் பின்களின் தலை என்பது வயதானவர்களுக்கு மட்டுமே என்றாகி வருகிறது. ஷ்யாமளாவிடமும் அதுதான் நிலை. அவளது தலை முடி. விளம்பரப் படங்களில் வரும் அழகிகளின் தலை முடியை விடவே அழகாகவும், பளபளப்பாகவும் இருந்தது. அதை ஒதுக்கி விட்டுக் கொள்ளும் அவஸ்தை சில பெண்களைப் பொறுத்தவரை அபிநயம் பிடிக்க முற்படுவதுபோல இருக்கும். ஷ்யாமளாவிடம் அது அப்பட்டமாகப் புலப்பட்டது.

    வெள்ளை சுடிதார் துப்பட்டாவில், தலைக்கு மேலான ஆகாயத்தில் இருந்து ஒரு சறுக்குப் பலகை அமைத்து தில் சரேலென்று சறுக்கிய படி பூமிக்கு வந்து எழுந்து நின்ற ஒரு தேவதை போலக்கூட இருந்தாள்.

    அதுவரை காருக்குள் இருந்து வெளிப்படாத யுவன் ஒருவன். ‘ஷ்யாமி.. வாட் ஆர் யூ டூயிங்? கமான் - டைம் ஆயிகிட்டு இருக்கு பார். என்றபடி ஒருவித கட்டளைக் குரலோடு வெளிப்பட்டான். ஒரு அரைகோளக் கண்ணாடி, வாரப்படாத அடர்வான தலைமுடி, தாடையில் மட்டும் தீப்பெட்டி அளவுக்கு ஒரு தாடி, காதில் ரத்தப் புள்ளி போல செந்நிற கடுக்கன், ஜிப்பா, ஜீன்ஸ், கேன்வாஸ் ஷு என்று 1970களில் புற்றீசலாய் புறப்பட்ட ஹிப்பிகளில் மிச்சம் இருப்பவன்போலக் காணப்பட்டான்.

    அவன் ‘ஷ்யாமி’ என்று விளித்த ஷ்யாமளா, யாதவகிரிக் குன்றின் உச்சிக் கோயில் மேலேயே கண்ணாக இருந்தாள். அப்படியே ஒரு முறை தன் மணிக்கட்டில் உள்ள ரிஸ்ட் வாட்சையும் ஒரு பார்வை பார்த்தாள்.

    ஷ்யாமி..

    "வெயிட் ராகவ்.. நான் சொல்லல... எங்க ஊர் மலைமேல் ஒரு கிருஷ்ணன் கோயில் இருக்குன்னு... ஸீ தேர். அவன் உயரத்தில் தன் சாந்து பூசிய விரல்களை நீட்டிக் காட்டினாள்.

    அதான் ஒரு கிலோமீட்டருக்கு முந்தியே பாத்துட்டேனே. இங்க என்ன ஷார்ட லுக்கா?

    "ஸ்ஸ். எங்க ஊருக்குள்ள நுழையற யாரா இருந்தாலும் இங்க நின்னு கன்னத்துல போட்டுக்காம போக மாட்டாங்க. மேல கோயிலுக்குள்ள இருக்கற கிருஷ்ணன் எவ்வளவு அழகு தெரியுமா?

    அலங்காரம் பண்ணா குரங்கு கூட அழகாகத்தான் இருக்கும் ஷ்யாமி. நீ டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கே.. கமான் கிளம்பு

    போலாம்ப்பா.. அதான் பதினைஞ்சு நாள் டைம் கையில இருக்கே... யூ நோ.. சின்ன வயசுல இந்தக் குன்று மேல யார் வேகமா ஏறிப் போறாங்கன்னு எங்களுக்குள்ள ஒரு போட்டியே வரும். அப்பல்லாம் அன்புமணிதான் ஜெயிப்பான்...

    அன்புமணி... யூ மீன் நம்ம சென்ட்ரல் மினிஸ்டர்..

    ஆ.. அன்புமணின்னா அவர். ஒருத்தர்தானா? இவன் எங்க வயல் குத்தகைக்காரன் ராமசாமியோட மகன். இவனோட ஃபேவரிட் ட்ரெஸ் என்ன தெரியுமா?

    போரடிக்கிற ஷ்யாமா நீ.. உங்க ஊர் அன்பு மணி எந்த டிரெஸ் போட்டுருந்தா எனக்கென்ன?

    எதுக்கு இப்ப டென்ஷன் ஆகறே... இப்படி இருந்தா நீ எப்படி பெரிய மியூசிக் டைரக்டர் ஆவே? இதுல அடுத்து கமல் படத்துக்கு நான் மியூசிக் போட்றேனா இல்லையா பார்னு சவால் வேற.

    -அவள் வெகு அழகாகச் சலித்துக் கொண்டாள். அவன் மூக்கு நுனியில் அதன் எதிரொலியாய் இரண்டு சொட்டு எண்ணெய் கூட கசிந்தது.

    உடனே மூஞ்சிய தூக்கி வெச்சுக்காதே... அன்புமணியை பத்தி நான் ஒண்ணும் உன்கிட்ட அநாவசியமா பேசல. அவனும் ஒரு மியூசீஷியன்

    மியூசீஷியன்?

    யா... என்னமா புல்லாங்குழல் வாசிப்பான் தெரியுமா? அப்பவே அவன்கிட்ட கல்யாணி ராகமும், பூபாளமும் கட்டிப்புரளும். இதுல ஒரு பியூட்டி தெரியுமா? நான் ஸ்டாப்பா நம்ம எஸ்.பி.பி. கேளடி கண்மணில, ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ன்னு ஒரு பாட்டு பாடுவார் பார்... அந்த மாதிரி நான் ஸ்டாப்பா ஒரு மூணு நிமிஷத்துக்கு ஒரு ஆலாபனை வாசிப்பான் பார். ஐய்ய்யோ... இப்பவும் அது என் காதுக்குள்ளேயே இருக்கு. புதிய இசை தேடி வந்துருக்கற நமக்கு அவன்கிட்ட நிறையவே வேலை இருக்கு...

    -ஷ்யாமளா பேச்சோடு பேச்சாக மலைப்படிகளில் கால் வைத்து ஏறத் தொடங்கினாள். ஏய்... எங்க மேல கிளம்பிட்டே?

    பேசாம நீ என்கூட வா... மேல போய் முதல்ல கிருஷ்ண தரிசனம் பண்ணுவோம். அப்படியே அங்க குழற் கூடம்னு ஒரு சின்ன மண்டபமும் இருக்கு. அதையும் உனக்குக் காட்றேன். இப்பவும் அங்க கிருஷ்ணன் வந்து ஃப்ட் வாசிக்கறதா ஒரு நம்பிக்கை எங்க ஊர்ல உண்டு தெரியுமா?

    -ஷ்யாமளா மலைப்படிகளில் தாவி ஏறியபடியே, பின்னால் அவன் தொடர்ந்து வருகிறானா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் துளிகூட கவலையே இன்றி பேசிக் கொண்டே போனாள்.

    ஷ்யாமி... ஷ்யாமி.. கொஞ்சம் நில்லு. சேர்ந்து போவோம்...

    சர்தான் வாடா... எங்க அன்புமணி மாதிரி ஓடி வந்து என்னைத் தாண்டி போ பார்க்கலாம்...

    -ஷ்யாமளா நடையை ஓட்டமாக்கியபடியே அவனுக்குத் தூண்டுதல் அளித்தான். அவனும் உடனே வேகமானான்.

    எவன் அவன் அன்புமணி... பொடலங்கா... நான் ஏழு அன்பு மணிக்கு சமம்... என்றபடியே அந்தப் படிகளில் மிக வேகமாக ஏறத் தொடங்கியவன், ஒரு புள்ளியில் ஷ்யாமளாவையும் கடந்து மேலே ஓடி, கோயில் மண்டப முகப்பிடம் போய்தான் நின்றான். ஓடி விட்டானே ஒழிய, மூச்சிறைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அநியாயத்துக்கு இறைத்தது அவன் மார்பு. இடுப்பில் இரு புறமும் விட்டலன் போல கைகளை வைத்துக் கொண்டு ‘புஸ்ஸீ, புஸ்ஸீ’ என்று அவன் இறைப்பதை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

    அன்புமணிக்கு இப்படித் துளி கூட இறைப்பெடுக்காது தெரியுமா? என்று அவன் அருகே வந்து திரும்பவும் சீண்டினாள். அவன் கண்ணாடியை கழற்றித் துடைத்தபடியே அவளை ஒரு மாதரி வெறித்தான்.

    ஷ்யாமளா அவனைக் கடந்து கோயில் பிராகார வெளிக்குள் நுழைந்திருந்தாள். கூட்டமேயில்லை" இறைப்பு இன்னும் நின்றிடாத நிலையில், ராகவ் பார்வையில் கீழே வளைவில் நிற்கும் காரை ஒரு லாரிக்காரன் உரசுவதுபோல திரும்பிக் கொண்டிருந்தான்.

    அந்தத் தாக்கம் மேலே நிற்கும் ராகவின் உதட்டில் ஏய் அரைபாடி... என்று கத்தச் செய்தது. ராகவ் கம் இன்சைட்.. உள்ள வா கோயில் திறந்திருக்கு என்கிற ஷ்யாமளாவின் குரல், மண்டப இடைவெளிகளுள் கொஞ்சம் எதிரொலிக் கலப்போடு அவன் காதுகளில் வந்து சேர்ந்தது.

    திரும்பினான்.

    மந்தமான இருட்டு மண்டபத்துக்குள் நுழையத் தலைப்பட்டான். வெளவால் கழிவகளில் சேர்க்கை ஒரு வித வாசமாக மூக்கைத் துளைத்தது.

    கண்ணாடியை அழுத்தமாக அணிந்தபடியே தொடர்ந்து நடந்தான். உள்ளே சிறிதாக ஒரு சந்நிதி. அதில் தீபச் சுடர்களின் ஒளிக்கு நடுவில் ஒரு மூன்றடி உயரத்தில் கண்ணன் திருமேனி. கொஞ்சம் குருவாயூர் சாயல்! சந்நிதிக்குள் கண்ணனுக்கு முன்னாலே ஒரு ஓரமாக கால் மடக்கி அமர்ந்து கொண்டு சஹஸ்ர நாம பாராயணம் செய்தபடி இருந்தார் கோயில் பட்டர் ஆராவமுதன். ஷ்யாமளா வந்து நிற்கவும் கண்களுக்கு மேல் கையை ஷேட் கொடுத்துப் பார்த்தார். அதில் அவரது எண்பது வயது முதுமை பளிச்சென்று தெரிந்தது,

    யாரு... சேவார்த்திகளா? – அவர் தான் கேட்டார். ஆமாம் மாமா... – என்றான் ஷ்யாமளா!

    மாமாவா... யாரு பிராமணப் பெண்ணா?

    ஆமாம். கண்ணமங்கலம் செல்லப்பாவோட பொண்ணு.

    அடடே.. நம்ம ஃப்ட் செல்லப்பாவோட பொண்ணா... ஓ! நீதான் அமெரிக்காவுல மியூசிக் படிக்கப் போனவளா?

    ஆமாம். ஹாலிவுட்ல கொஞ்ச நாள் ட்ரெயினிங் எடுத்துக்கப் போனேன். அப்படியே கலிஃபோர்னியா யூனிவர்சிடில மியூசிக்கை விசேஷ பாடமா எடுத்து ரிஸர்ச்சும் பண்ணினேன்.

    சந்தோஷம் சந்தோஷம்.. உங்கப்பன்தான் உள்ளூர்லேயே இருந்துண்டும் இந்தக் கோயிலுக்கே வர்றதில்லை: ஆனா நீ வந்திருக்கே... உனக்கு கிருஷ்ண கடாட்சம் பரிபூர்ணமா சித்திக்கட்டும். இரு ஆரத்தி காட்றேன்.

    -ஆராவமுத ஐயங்கார் கிருஷ்ணர் விக்ரகத்துக்கு ஆரத்தி காட்டத் தொடங்கினார். வெளியே வந்து துளசி தந்திடும்போது ராகவையும் பார்த்தார்.

    இது யார்?

    என் ஃபரெண்ட் - பேர் ராகவ்! இவரும் பெரிய மியூசிக் டைரக்டர்

    அப்படியா சந்தோஷம். சந்தோஷம்.. – என்றபடி சடாரியும் வைத்தார். ராகவ் அவர் தட்டில் நூறு ரூபாய் தாள் ஒன்றைப் போட்டான். அவர் உடனே, ‘என்னண்ட சில்ரை இல்லையே.. இன்னிக்கு நீங்கதான் முதல் போணி..." என்றார். ராகவுக்கு கொஞ்சம் கசப்பைகச் சப்பியது மாதிரி இருந்தது,

    முதல் போணியா... என்ன சொல்றீங்க?

    இல்ல நீங்கதான் முதல்ல வந்திருக்கீங்கன்னேன்.

    இல்ல. புரியல.

    அட என்ன அம்பி நீ.. நூறு ரூபாய் போட்டா நான் சில்ரை தர வேண்டாமா? யாரும் வராததால் சில்லரையே இல்லை.. அதான் அப்படிச் சொன்னேன்.

    நான் எங்க சில்ரை கேட்டேன்..?

    ஓ.. அப்ப இந்த நூறு ரூவா தட்டுக்கா?

    -      அவர் முகத்தில் ஒரு குபீர் பரவசம். அதுவே அவர் நிலை-, கோயில் நிலை எல்லாவற்றையும் மேடை போட்டு பிரசங்கம் செய்த மாதிரி புரிய வைத்துவிட்டது.

    சரி மாமா... நாங்க பிரதட்சணமா வரோம்.

    ஷ்யாமளா விலகத் தொடங்கினாள். இருண்ட பிரகாரத்தில் இறங்கி சுற்றி வர ஆரம்பித்தாள். பின் தொடர்நத ராகவ், ‘ஷ்யாமி... உன் ஊர் கோயில் என்ன இந்த லட்சணத்துல இருக்கு? நீ வர்ற வழியெல்லாம் பேசினத வெச்சு நான் பெருசா கற்பனை பண்ணி வைச்சிருந்தேன். ஆனா இங்க என்னடான்னா..." என்று ஆரம்பித்தான்.

    ஆமாம் ராகவ் எனக்கே அதிர்ச்சியாதான் இருக்கு. கீழ இறங்கி வீட்டுக்குப் போன உடனே அப்பாவை ஒரு பிடி பிடிக்கணும். எனக்கு தெரிஞ்சு அவர் சாப்பிடாம கூட இருப்பார். கோயிலுக்கு வராம இருந்ததே இல்லை."

    -      பேச்சோடு பேச்சாகத் திரும்பவும் சந்நிதி வாசலை அடைந்து, வெளியெ உள்ள திறந்த வெளிப் பிரகாரம் பக்கம் செல்லக் காலெடுத்த அவர்களை ஆராவமுத ஐயங்கார், அம்மாடி என்ற குரலோடு தடுத்தார். அப்படியே சற்று தடுமாறி நடந்தபடி அவர்கள் அருகில் வந்தவர். வெளிப்பிரகாரத்தைச் சுத்தப் போறேளா? என்று கேட்டார்.

    ஆமாம்... ஏன் மாமா?

    சரி சரி பாத்துப் போங்கோ.. பின்னால புன்ன மரத்துக்குக் கீழ ஒரு பைராகி வந்து படுத்துண்டுருக்கார். பாம்பு மாதிரியே சுருண்டு படுத்துண்டுருப்பார். அவர் உங்களப் பார்த்துட்டு பேச்சுக் கொடுத்தா பதிலுக்கு எதுவும் பேச வேண்டாம் பேசாம வந்துடுங்கோ...

    அப்படியா...! ஆமாம் யார் அந்த பைராகி?

    பைராகின்னாலே இந்த மாயம் மந்திரம் வசியம்னு சுத்தறவாதானே! யார்னு கேட்டா...? பாத்தா வட நாட்டுக்காரர் மாதிரி இருக்கு. ஹிந்தி, சமஸ்க்ருதம், தமிழ்னு கலந்து கலந்து பேசறார். யாரைப் பார்த்தாலும், ‘உனக்கு வசந்த ராகம் தெரியுமா? விஜயா பதியைத் தெரியுமா?’ன்னு ஆரம்பிச்சுட்றார். அவர் கையில ஒரு புல்லாங்குழல் வேற இருக்கு. வாசிச்சா பரமானந்தா இருக்கு. ஆனா நமக்கு நம்பளையே மறந்து போயிடறது. மொத்தத்துல புரிஞ்சுக்க முடியாத ஒரு புதிரா இருக்கார் அந்த பைராகி...

    -ஆராவமுத ஐயங்கார் சொல்லி நிறுத்திய அந்த நொடி காற்றில் மிதந்து வர ஆரம்பித்தது. அவர் குறிப்பிட்ட அதே பைராகியின் புல்லாங்குழல் இசை!

    கயிறு கட்டி இழுப்பது போல அவர்கள் இருவரையும் கூட இழுக்கத் தொடங்கியது. அவர்களும் தங்களை மறந்து சப்தம் வந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினர். வசந்த ராகம்!

    2

    "யாதவகிரி மலைக் கோயிலில் வாழும் அந்த கிருஷ்ணனுக்கு அளவில்லாத கருணை உண்டு. கோயிலுக்குள் சிலை ரூபமாகக் காட்சித் தரும் கிருஷ்ணன், பல சமயங்களில் பல வடிவங்களில் நேரிலும் வந்ததற்கு நிறையவே சாட்சிகளும் இருக்கின்றன!

    அந்தக் காட்சிகளை நம்புவதும் நம்பாததும் மனப்பாங்கைப் பொறுத்த விஷயம். ஒரு முறை ஒரு புல்லாங்குழல் வித்துவான் கோயிலுக்கு வந்திருந்த சமயத்தில், கிருஷ்ணனை துதிக்கும் முகமாக மோகன ராகத்தில் ‘அலைபாயுதே’வை குழல் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு இசைத்தாராம்.

    ஆனால் அதில் நிறையவே பிசகு. பல இடங்களில் இழுவை சுருங்கியும், நீண்டும் அபஸ்வரம் தட்டியது. கோயில் பட்டாச்சாரிக்குப் பெரிதாக இசை ஞானம் இல்லாத நிலையில், "ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து அந்த வித்துவானை ஊக்கப்படுத்தியபடி இருக்க அவரும் தப்பும் தவறுமாக வாசித்து முடித்தார்.

    பின் வெளி பிரகாரத்தை வலம் வரும்போது புன்னை மரத்துக்குக் கீழ் அந்தக் கண்ணன் ஒரு பிச்சைக்கார பிராமணர் ரூபத்தில் அதே பாடலை ஸ்வரம் சுத்தமாகப் பாடிட, வித்துவான் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். பின்னர் அந்த வித்துவானுக்கு, எப்படி வாசிக்க வேண்டும் என்று அவர் கேட்கவும், சொல்லி கொடுத்தாராம் கண்ணன். அதுசரி... அது கண்ணன் தான் என்று வித்துவானுக்கு எப்படித் தெரிந்ததாம் என்கிற ஒரு கேள்வி எழுகிறதல்லவா?

    அந்தப் பிரமாணர், ‘இருங்கள்... நான் சந்நிதி வரை போய்விட்டு வருகிறேன்’என்று கூறிவிட்டு சந்நிதிக்குள் நுழைய, பட்டர் ‘நான் இங்கே இருக்கிறேன் இதோ வந்துவிட்டேன்’ என்று அவரை பின் தொடர்ந்து சந்நிதிக்குள் சென்று அவரைத் தேடினால் அவர் இல்லை! அங்கிருந்து அவர் வெளியேறிச் செல்ல வேறு வழிகளும் இல்லை!

    மாறாகச் சந்நிதி முழுக்க கும்மென்று பாரிஜாதப் பூக்களின் வாசம் வேறு...

    ந்த வித்துவான் பூரித்துப் போய்விட்டாராம்!"

    குழலின் இசை ஷ்யாமளாவையும், ராகவையும் வலை போட்டு இழுத்ததுபோல இழுத்துச் சொல்ல தொடங்கி விட்டது. பட்டாச்சாரி ஆராவமுத்ன பெருமூச்சு ஒன்றை விட்டார். கூடவே கொஞ்சம் போல புலம்பல்!

    இப்பதான் சொன்னேன்... ஆனா நான் சொன்னது காதுலயே ஏறலை ஆனா அந்தப் பைராகியோட குழல் ராகம் மட்டும் வேகமா ஏறிடுத்து... ஹீம், இவா இனி என்ன பாடுபடப் போறாளோ? என்றபடியே சந்நிதிக்குள்ளேயே உட்கார்ந்து விட்டார். பழுப்பேறிப்போய் உதிர்ந்துவிட்ட ‘ஸ்தோத்ர

    Enjoying the preview?
    Page 1 of 1