Imayaga Naan Iruppean
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Manathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Imayaga Naan Iruppean
Related ebooks
Azhagai Pookkuthey... Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Antha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsThisaimaari Paayum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Minmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Neela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsVaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Vaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Naan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Idhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Imayaga Naan Iruppean
0 ratings0 reviews
Book preview
Imayaga Naan Iruppean - GA Prabha
http://www.pustaka.co.in
இமையாக நான் இருப்பேன்
Imaiyaga Naan Irupen
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
முருகா சரணம்
குனிந்து மண்ணைத்தொட்டு வணங்கினாள் வித்யா.
முருகா நினைத்து வந்த காரியம் தடையின்றி நடக்க அருள் செய் முருகா
என்று கண்மூடி நிமிர்ந்தாள்.
எதிரே பிரம்மாண்டமாக நின்றது ஸ்ரீமுருகவேல் கல்வி நிறுவனங்கள் கட்டிடம்.பாலிடெக்னிக் கலைக்கல்லூரி மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைக்கல்வி நிறுவனங்கள்.
இறைவா இந்த வேலை கிடைக்கணும்
மனமுருக வேண்டினாள்.
நின்று உயர்ந்த கட்டிடங்களை சற்று நேரம் நோக்கினாள்.
அதன் பின்னிருந்த முகங்கள் மனதில் நின்று சிரித்தது.புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.
பரந்த மைதானம்.ஒரு புறம் மாணவிகள்.மற்றொருபுறம்மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.சுற்றி ‘ப’ வடிவில் கட்டிடங்கள்.நாலு அடுக்கு.அதன் பின்புறமும் கட்டிட அடுக்குகள்.
அப்பா! எத்தனை கிரவுண்ட்?
பிரமித்தது மனது.
இன்று மிகப் பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் ஆரம்பத்தில் சின்ன ஓலைக்குடிசையில் ஆரம்பிக்கப்பட்டது.இன்று பள்ளி கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி என்று விரிந்திருக்கிறது.
புதிதாக பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க முயற்சி.இந்த முருகவேல் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நிர்வாகி வேண்டும் என்று இன்டர்வியூ நடக்கிறது.
வித்யா எம்.பி.ஏ. முடித்து வெளி வந்து ஒரு மாதமாகிறது.கல்விப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையில் தான் இங்கு வந்தாள்.
கிடைக்குமா?
மனமே நம்பிக்கையோடு இரு
தனக்குள் கூறிக்கொண்டு அலுவலகத்திற்கு வந்தாள்.அங்கு ஏற்கனவே நாலைந்து பேர் இருந்தார்கள்.
யாரும்மா?
பியூன்
இன்டர்வியூவிற்கு வந்தேன்
அப்படி உட்காருங்க
பியூன் காட்டிய சேரில் அமர்ந்தாள்.பெண்கள் புன்னகைக்க முயன்றார்கள்.ஆண்கள் கண்களில் பொறாமை தெரிந்தது.
யுவர் நேம்?
எதிரில் இருந்தவன்
வித்யா
குவாலிஃபிகேஷன்
எம்.பி.ஏ.
எம்.பி.ஏ. படிச்சுட்டு இங்க ஏன் வரீங்க?
ஏன் வந்தா என்ன? நிர்வாகத்துக்கு இந்த படிப்பு பயன்படுமே! உங்க பேர்?
நாகராஜ்.எம்.காம். பி.ஜி.டி.சி.ஏ
ஓ!
வித்யா மேற்கொண்டு பேசாமல் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.நேராகச் சென்று ‘ப’ வடிவில் திரும்பியது.நடுவில் ஒவ்வொரு பக்கமும் மாடிப்படி.லிப்ட் வசதியும் இருந்தது.பக்கத்தில் கான்டீன் இருக்கும் போல்.வாசனை வந்தது.
பியூன்காஃபி கொண்டு வந்து தந்தான்.
எத்தனை மணிக்கு எம்.டி. வருவார்?
ஐ.எம்.எஸ். ஆபீஸில் வேலைன்னு போயிருக்கார்.இப்ப வந்துருவார்
ஓ!
வித்யா எழுந்து வெளியில் வந்தாள்.வளாகத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று மெதுவாக நடந்தாள்.கட்டிடத்தின் பின்பக்கம் பிளஸ்டூ வகுப்புகள்.ஒரு குறுக்குச் சுவர்.அதன் பின்னாடி கலைக்கல்லூரி.அதற்காக வாசல் தனியாக இருந்தது.மிகப்பெரிய ஷெட்.வண்டி வாகனங்கள் நிறுத்த.மெதுவாக நடந்தாள்.வளாகத்தின் பிரம்மாண்டம் பிரமிக்க வைத்தது.
திடீரென்று முன்பக்கம் சலசலப்பு.
வேகமாக திரும்பி வந்தாள்.
பிளஸ்டூ காமர்ஸ் குரூப்பில் சத்தம்.ஒரு மாணவி அழுது கொண்டிருந்தாள்.அருகில் ஒரு மாணவன் கைகட்டி திமிராக நின்றிருந்தான்.முதல்வர் மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்தார்கள்.
ஏ… ஏன் என்னாச்சி?
இந்த ராஸ்கல் இவ தாவணியை பிடிச்சு இழுத்துட்டான் ஸார்
ராஸ்கல்
ஒரு ஆசிரியர் கை ஓங்கியபடி பாய்ந்தார்.
அடிப்பீங்களா?
மாணவன் அவரின் கையை வளைத்துப் பிடித்தான்.எங்களை அடிக்கக் கூடாதுன்னு சட்டம்.தெரியும்ல?
ஆசிரியரின் கை தாழ்ந்தது.
என்ன சார் இது?
வித்யா படபடத்தாள்.
கண் எதிர்ல அயோக்யத்தனம் நடந்திருக்கு.எதுவும் பண்ண முடியாம நிக்கறீங்க.இத்தனை மாணவர்கள் பார்த்திருக்காங்க. சாட்சி சொல்ல மாட்டாங்களா?
இவன் பெரிய ரவுடிம்மா.இவங்க அப்பா எம்.எல்.ஏ.வோட ஆளு
முதல்வர்.
அதுக்காக தப்பு இல்லைன்னு ஆயிருமா?
வித்யா சீறினாள்.
என்ன? என்ன சப்தம்
குரல் கேட்டு ஒதுங்கினார்கள்.ஒரு நெடியவன் கம்பீரமாக உள்ளே வந்தான்.அவனிடம் விஷயம் சொல்லப்பட்டது.
அவங்க பேரண்ட்டுக்கு விஷயம் சொல்லி அனுப்பி விடுங்க
அவ்வளவுதனா?
வித்யா திகைத்தாள்.
ஏன்? என்ன பண்ணனும்?
என்ன ஸார் இது முட்டாள்தனம். ஒருத்தன் இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு.தெனாவெட்டா நிக்கறான்.சரி போன்னு விடச் சொல்றீங்க.அந்தப் பொண்ணோட அழுகைக்கு என்ன பதில்.அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை தந்தே தீரணும்.நீங்க தானே அடிக்கக் கூடாது.இங்க வாம்மா
வித்யா மாணவனை நெருங்கி எதிர்ப்பாராமல் ஒரு வெட்டு வெட்டி இரு கைகளையும் இழுத்துப் பிடித்து நகர முடியாமல் செய்தாள்.
அடி உன் ஆத்திரம் தீரும் மட்டும் அடி
என்றாள்.மாணவி தயங்கினாள்.
அடிடி
வகுப்பிலிருந்த மாணவிகள் திரண்டனர்.
இவன் டார்ச்சர் தாங்க முடியலை மேடம்.ரொம்பக் கேவலமா நடக்கறான். என்னை லவ் பண்ணு. லவ் பண்ணுன்னு டார்ச்சர்.முடியாதுன்னா ஆசிட் ஊத்துவேன்னு மிரட்டறான் மேடம்
ஒரு மாணவி.
ஸ்கூல் டே பங்ஷன்ல டிராமா முடிஞ்சு நாங்க டிரஸ் மாத்தறதை போட்டோ எடுத்து மிரட்டறான் மேடம்
அழுதாள் ஒருத்தி.
ஏண்டா ராஸ்கல் உண்மையா?
நெடியவன்.
என்ன பண்ணுவீங்க?எம்.எல்.ஏகிட்ட சொல்லிடுவேன்
மாணவன்.
பளீரென்று உதட்டில் அடித்தான் நெடியவன்.
ஸார்
ஆசிரியை ஒருத்தி தயங்கி இழுத்தாள்.
சொல்லுங்கம்மா
என்மேல ஆரோ விட்டு நாட்டுக் கட்டைன்னு பாடினான் ஸார்
இதை எல்லாம் ஏம்மா என்கிட்ட சொல்லலை
வித்யா அருகில் நெருங்கி ஓங்கி அறை விட்டாள்.தபதபவென்று நாலைந்து அடி விழுந்தது.
போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க
வித்யா.
ஸ்கூல் பேர் கெட்டுப் போயிரும்
"இந்த மாதிரி மாணவனை வச்சிருந்தாத்தான் பேர் கெட்டுப் போகும்.அவங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி டி.சி. வாங்கிட்டு போகச் சொல்லுங்க.எந்த எம்.எல்.ஏவும் இப்படிப்பட்ட பையனுக்கு சப்போர்ட் செய்ய மாட்டாங்க.டீச்சர்ஸ் நீங்க இப்படி பயந்து, பயந்து நடக்கறதுதான் இவன் திமிருக்கு காரணம்.ஸ்கூலுக்கு வர்றது நல்ல ஒழுக்கங்களை கத்துக்கத்தான்.அஸ்.எ. டீச்சர்மாணவன் தப்பு செஞ்சா கண்டிக்கணும்.திருத்தணும்.ஒரு சமுதாயமே நம்ம கைல இருக்கு.பணிப்பாதுகாப்பு இல்லையேன்னு