Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endhan Manam Unnai Sutruthey...
Endhan Manam Unnai Sutruthey...
Endhan Manam Unnai Sutruthey...
Ebook144 pages1 hour

Endhan Manam Unnai Sutruthey...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851836
Endhan Manam Unnai Sutruthey...

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Endhan Manam Unnai Sutruthey...

Related ebooks

Reviews for Endhan Manam Unnai Sutruthey...

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endhan Manam Unnai Sutruthey... - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    எந்தன் மனம் உன்னைச் சுற்றுதே….!

    Endhan Manam Unnai Sutruthey….!

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    கண்டேன்… என் சீதையை…!

    கூவிக்கொண்டே வந்து அமர்ந்த சியாமை குடும்பத்தினர் வியப்புடன் பார்த்தனர்.

    என்னவாம் இவனுக்கு…

    இராமாயணத்தில் இலங்கையிலிருந்து திரும்பி வந்த அனுமன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை இப்போ இவன் எதுக்குச் சொல்லணும்.. எந்தச் சீதையைக் கண்டு விட்டுக் குதிக்கிறான்..

    அனைவருக்கும் திகைப்பு!

    என்ன ஆச்சுடா உனக்கு... தாய்தான் கேட்டாள்.

    "நான் மனசில் கற்பனை செய்து வைத்த மாதிரியே ஒரு பெண்ணை இன்னிக்குச் சந்திச்சேன்ம்மா…

    நீங்க எப்பவும் நச்சரிப்பீங்களே… எப்படா கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கேன்னு.. இதோ.. இப்ப ரெடி.. என் சீதை கிடைச்சுட்டா…"

    அப்பா ஒரு வழியா சம்மதிச்சேயே.. என் தலைவலி தீர்ந்து விட்டது.. என்றாள் பெற்றவள்.. வரலட்சுமி.

    இரு.. இரு.. அவளைப் பத்தி விசாரிச்சுட்டு அப்புறமா சொல்லு என்றார் லட்சுமணன்.

    அவன் கழுதையைக் காட்டி கட்டி வைன்னாலும் சரி.. சரின்னு சொல்லி செஞ்சுடப்போறேன்.. இந்த மட்டும் ஒத்துக் கொண்டானே.. அது போகும்…

    பெற்றவள் இப்படி அலுத்துக் கொள்ள காரணமும் இருந்தது. தரகர் கொண்டு வந்த புகைப்படங்களை யெல்லாம் சொத்தை.. சொள்ளை என்று நிராகரித்தவனாயிற்றே.. எந்தப் பெண்ணும் மனசில் ஒட்டவில்லை யென்றான்.. சரிடா.. உனக்கு எந்த மாதிரிப் பொண்ணு வேணும்.. அதையாவது சொல்லித் தொலை….

    அவன் சொன்னபோது தலை மேல் கை வைத்துக் கொண்டு விட்டாள் வரலட்சுமி. ஏனென்றால் அவன் விளக்கிய விதம் அப்படி. உலக்கை மாதிரி குண்டாகவோ.. இல்லை ஈர்க்குச்சி மாதிரி ஒல்லியாகவோ இருக்கக் கூடாது. அழகா அளவா பூங்கொடி மாதிரி இருக்க வேண்டும்.

    அதிக வெளுப்பாகவோ.. அட்டக் கறுப்பாகவோ கூடாது. மைதாமாவும், கோதுமை மாவும் பிசைந்து வைத்த மாதிரி இடைப்பட்ட நிறமாக இருக்கவேண்டும்.

    அப்புறம்.. கொக்கு மாதிரி உசரமாகவோ.. குருவி மாதிரி சிறுத்தோ இல்லாமல் அழகிய மாதிரி அம்சமா இருக்கவேண்டும். அதாவது உயரம் ஐந்தடி நான்கு அங்குலம் இருக்க வேண்டும்.

    தாயின் முகம் போன போக்கைப் பார்த்து விட்டுச் சிரித்தான் சியாம்.

    இரும்மா.. இன்னும் இருக்கிறது என்று தொடர்ந்தான். ஆளை அடித்து வீழ்த்தும் பேரழகியாகவும் வேண்டாம். ஆளை அலறச்செய்யும் அவலட்சணமாயும் வேண்டாம். களையாய்.. வசீகரமாய் இருக்க வேணும்."

    இன்னும்.. என்று ஆரம்பித்தவனைப் பார்த்து போதும்டாப்பா… நிறுத்து.. நீ கனவு காண்கிற மாதிரி ஒரு பொண்ணு இருக்காளான்னு தெரியலை… ஒரு வேளை இனிமே பிறக்கலாம்.. அந்த பிரம்மாகிட்ட தினமும் வேண்டிக் கொள்கிறேன்… நீ சொன்ன மாதிரி ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும்ணும்.. அது வளர்ந்து பெரியவளாகிற வரை நீ காத்திரு.. என்ன… அது உனக்கு அறுபதாவது கல்யாணமாகவும் இருக்கலாம்… என்று சலிப்புடன் சொன்னாள் வரலட்சுமி.

    இப்போது பிள்ளை தான் மனதில் நினைத்திருந்த மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்து விட்டான் என்றால் அது சாமானிய விஷயமா…

    ஏண்டா.. ஏதோ பார்ட்டின்னுப் போனே… இப்போ ஏதேதோ பேத்தறே.. என்ன விஷயம் நேரே ‘பப்’பிலிருந்து வருகிறாயா.. எங்கே… வாயை ஊது! தந்தை கிண்டலடித்தார்.

    நீங்க சும்மா இருங்க. அவன் என்ன சொல்கிறான்னு கேட்போம்… சொல்லுடா சியாம்.. யாரை எங்கேப் பார்த்தே…! தாய் வினவியதும் உற்சாகத்துடன் சொன்னான் பிள்ளை.

    அம்மா.. நான் உங்ககிட்டே சொல்லியிருந்தேன் இல்லையா.. அந்த மாதிரி ஒருத்தி இனிமே தான் பிறக்கணும்.. என்கிறீர்கள்தானே… இல்லவே இல்லை.. அவள் எனக்காகப் பிறந்து வளர்ந்தாச்சு… அவதான் என்னோட மனைவின்னு என் மனசில் பட்டு விட்டதும்மா…

    ரொம்ப சந்தோஷம்.. அது சரி… யார் அவள்? விழித்தான்.. ஆமாம். யார் அவள்…

    என்னடா பேந்த பேந்த விழிக்கிறே.. அவள் எங்கே இருக்கிறாள்!

    அசடு வழிந்தான் சியாம்…

    தெரியலையேம்மா…!

    போகட்டும்.. பெயராவது சொல்லு…

    உதட்டைப் பிதுக்கினான் பிள்ளை…

    என்ன.. அதுவும் தெரியாதா.. ரொம்ப சமர்த்துதான். நம்ம பிள்ளையோட லட்சணத்தைப் பார்த்தீங்களா. எதுவும் தெரியாமலே காதலிக்கிறானாம்.. புத்திசாலி! என்றாள் வரலட்சுமி.

    "ஆமா.. வழிச்சு நெட்டி முறிச்சுக்கோ.. எங்கே அவளைப்பார்த்தே.. அதையாவது சொல்லித் தொலை.. சலிப்புடன் கேட்டார் லட்சுமணன்.

    சியாமின் கண்களில் கனவு விரிந்தது.

    அந்த இனிய நிகழ்ச்சியை மானசீகமாய் ‘ரீவைண்ட்’ செய்து ரசிக்கத் தொடங்கினான்.

    அது….

    அந்தப் பெரிய ஓட்டலில் நண்பர்களுடன் ‘பட்டர்’ நானும்… ஆலுபட்டனர்.. பாலக் பன்னீரையும் ஒரு பிடி பிடித்து விட்டு.. கல்லாவில் ‘பில்லு’க்குப் பணம் கட்டச் சென்றபோதுதான் அது நடந்தது.

    ‘பார்சல்’ கையுடன் திரும்பிய ஒரு பூச்செண்டு இவன் மீது மோதி.. அந்த வேகத்தில் சியாம் பின் வாங்க.. அதனால் தடுமாறி விழப்போன அந்தப் பூங்கொடியை அவன் அனிச்சையாய்த் தாங்கிக்கொள்ள…

    நிமிடத்தில் நடந்து முடிந்த கதை.. இல்லை.. அவனுக்கு அது காவியம்!

    ‘யாரது விழாமல் என்னைப் பிடித்தது’ மருட்சியுடன் பார்த்த அந்த மான் விழிகள்…

    ‘அடடா.. ஒரு ஆண் மகன் மீதா…’ என்று வெட்கத்தில் சிவந்த பளிங்குக் கன்னங்கள்…

    ‘சே! விழ இருந்தோமே.. என்ன அசிங்கம்’ என்று கூச்சத்துடன் துடித்துச் சிவந்த இதழ்கள்…

    எல்லாமே சியாமை கிறங்க வைத்தன… மொத்த அழகும் ‘காக்டெயிலாகி’ அவனைத் தடுமாற வைத்தது.

    சுதாரித்து நிமிர்ந்தவளை நன்றாகக் கவனித்தான்.

    அவர் எதிர்பார்த்திருந்த அத்தனை அம்சங்களும் அவளிடம் பொருந்தியிருந்தது தான் வியப்பு…

    வெள்ளை நிற சுரிதாரில் படபடக்கும் வெண் புறாவாய்த் தெரிந்த அவளைக் கண்களால் படம் பிடித்து மனப் பெட்டகத்தில் நிறுத்தி விட்டான்…

    இவளே என் இதயராணி… என் மனைவி.. மனம் துள்ளியது.

    கிறக்கத்திலிருந்து மீண்டபோது அவளைக் காணோம். திகைத்துச் சுற்றிலும் பார்த்தான்.. ஊகூம்…

    அவள் என்ன தேவதையா.. திடீர் என்று தோன்றி உடனே மறைய.. கண்களை அலைய விட்டான்…

    என் இனியவளே.. எங்கே போனாய்.. ப்ளீஸ்.. மீண்டும் என் முன் தோன்றேன்.. உன்னைப் பார்க்கத் துடிக்கிறேன்… மனம் புலம்பியது…

    டேய்.. பில்லுக்குக் கட்டிட்டியா..இல்லையா… என்னவோ பேயறைந்த மாதிரி நிலைக்குத்தி நிற்கிறே.. என்ன ஆச்சு உனக்கு… நண்பன் ஒருவன் கேட்க…

    சியாம் மென்று விழுங்கினான்…

    "சேச்சே.. பேய் அறைந்தால் இந்த முழி இருக்காதுடா. ஏதோ மோகினியோட தாக்கமா இருக்கணும். இங்கேதான் நிறைய மோகினிகள் உலவுகிறார்களே.. எந்த மோகினி தொட்டதோ.. வாடா…! நண்பர்களின் கேலிப் பேச்சைப் பொருட்படுத்தாது ஹோட்டல் வெளியே நடந்தபோதும் அவளைத் தேடின அவனது கண்கள்…

    ப்ச்சு.. ஏமாற்றம்தான்….

    அண்ணா…

    திடுக்கிட்டு விழித்தான் சியாம்….

    என்ன கனவா.. அந்த ‘யாரோ’வோடு டூயடடாக்கும்.. சுத்திலும் அரை குறை டிரஸ்ஸோடு இளம் பெண்கள் ‘லாலா’ பாடியிருக்கணுமே.. நீ எப்படி… விக்ரம் மாதிரியா.. இல்லை விஜய் மாதிரி டிரஸ்ஸா… தங்கை சுதாராணியின் கிண்டல்…

    நீ சும்மா இருடீ…. டேய் நீ போய் படு.. நாளைக்கு நடு உச்சி மண்டையில் எலுமிச்சம் பழம் தேய்த்துக்குளி. இஞ்சி ரசம் வச்சு தருகிறேன். குடி.. உன் பித்தம் நன்றாகத் தெளிஞ்சுடும்… தாய் கேலியுடன் சொன்னாள்.

    அய்யோ.. அம்மா.. அவளைநான்…

    "எதுவும்

    Enjoying the preview?
    Page 1 of 1