Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattudai Thalaivi
Paattudai Thalaivi
Paattudai Thalaivi
Ebook302 pages2 hours

Paattudai Thalaivi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352857050
Paattudai Thalaivi

Read more from Lakshmi Rajarathnam

Related to Paattudai Thalaivi

Related ebooks

Reviews for Paattudai Thalaivi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattudai Thalaivi - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பாட்டுடைத் தலைவி

    Paattudai Thalaivi

    Author:

    லட்சுமி ராஜரத்தினம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    நாட்டில் எங்கெங்கோ, எவ்வப்போதோ நடப்பவை தாம் ஏட்டில் இடம் பெறுகின்றன. நடப்பதெல்லாம் ஏட்டில் ஏறுவதானால் வீட்டில் இடமிருக்காது. ஆனால் இத்தகையபீதிக்கு இடமில்லை. எத்தனையெத்தனை மனிதர்கள் சம்பவங்கள் இருப்பினும், அவற்றைக் கண்ணுறும் ஒரு சிலருக்குத்தான், ஏதோ ஒன்று பொறியில் தட்டிய மாதிரி உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுக் கரு வளர்ந்து கற்பனை கலந்து உருப்பெற்று கதையாகப் பிறக்கிறது. சிருஷ்டியிலே, ஒரு கரு எப்போது எப்படித்தோன்றுகிறது, எப்படி வளர்ச்சி பெற்று உருவடைந்து ஜனிக்கிறது என்பதைக் கண்ணால் காண முடியாதோ அப்படித்தான் கதையாக உருப்பெறுமுன் அதனுடைய கருப்பொருளும் அதன் வளர்ச்சியும் கண்ணால் காண முடியாதவை. அதனால் தான் கதையெழுதுவதை கிரியேடிவ் வொர்க் என்று சிருஷ்டித் தொழிலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆம், கற்பனையில் விளைந்த கருத்தோவியம் தான் கதை! இருப்பினும், கதை யெல்லாவற்றையுமே நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. ஒரு சில தான் அத்தகைய தன்மையைப் பெறுகின்றன . அவற்றைப் படைக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் பேறு பெற்றவர்கள், போற்றத்தக்கவர்கள். இந்த கிரியேடிவ் இனத்தைச் சேரும் பேறு பெற்ற, போற்றத்தக்க திருமதி லட்சுமி ராஜரத்தினத்தின் பாட்டுடைத்தலைவி யையும், அவருடைய இதர பல எழுத்தோவியங்களையும் படித்த என்னை, அவருடைய எழுத்து சற்று பொறாமை கொள்ளச் செய்துவிட்டது. இந்த நெடுங்கதையைப் படிக்கும் நீங்களும் என்னைப் போலவே பொறாமை கொள்ளத்தான் போகிறீர்கள்.

    அமுத மலர் - என்ன அழகான பெயர் - பத்திரிகையின் துணை ஆசிரியர் ரவி என்னும் ரவிச்சந்திரன்தான் இக்கதையின் நாயகன். இசையில் நல்ல டேஸ்ட் உண்டு.

    பாட்டுடைத்தலைவி யாம் செவ்வழகி நிர்மலா கதையின் நாயகி! ஆனால் ரவியின் மனைவியாகவில்லை!! ஒளி வீசிய அவள் முகம், சிவந்த இதழ்களின் மேல் அடர்ந்து கருத்த மீசை குழந்தைத்தனம் கொஞ்சும் முகம் என்ற தோற்றம் கொண்ட அவனைத் தன் மனத்திலே நிரப்பிக் கொண்டவள். அந்த உடலழகியின் குரல் எழிலால் ஈர்க்கப்பட்ட ரசிக எழுத்தாளனாகிய ரவி, பிறகு மதுரையில் தனக்கென்று ஒரு அழகி ராதாவை பெண் பார்த்துவிட்டு, கொடைக்கானலுக்குச் சென்ற பொழுது தற்செயலாக அங்கு நிர்மலாவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில், கவர்ச்சியை நாடி ஓடும் இந்த யுகத்தில், உங்கள் ஹீரோயின் ஒரு தனிரகம். மனத்தாலேயே வாழ்ந்துவிடும் அவளது வாழ்க்கை என்றும் நிலைத்து நிற்கும் சாகா இலக்கியம் என்று அவனுடைய நாவலொன்றைப் பாராட்டுகிற நிர்மலாவையும், ரவியுடன் தன்னை இணைத்துக்கொண்டு மனத்தாலே வாழ்ந்துவிடச் செய்கிறார் ஆசிரியை லட்சுமி ராஜரத்தினம். ஆம், நிர்மலா நம் அனைவர் மனத்திலும் நிலைத்து விடுகிறாள்.

    ராதாவை முதல் முதல் பெண் பார்க்க வந்தபொழுது, ஹால் பூராவும் நூறு குத்து விளக்குகளை ஏற்றி வைத்தாற் போன்ற பளீரிடலை உணர்ந்தான் ரவி. அவளும் நல்ல அழகிதான். ஆனால் ரவிக்கு நேர்மாறான குணம்படைத்தவள். சினிமாப் பாட்டுக்கள்தாம் அவளுக்குப் பிடிக்கும். அதை ரவியின் அக்கா பிரேமா சுட்டிக்காட்டியபொழுது, என்னுடைய ருசிகளே அவளுக்கும் இருந்தால், அவள் வாழ்க்கை ரஸிக்காதே, பிரேமா சில முரண்பாடுகள் இருக்க வேண்டும். அதைச் சகித்துக்கொண்டும், விட்டுக் கொடுத்துக்கொண்டும் போக வேண்டும் என்றான் ரவி. அவளைப் பார்த்துவிட்டு கொடைக்கானலுக்குச் செல்கையில், இயற்கை வரைந்து வைத்திருக்கும் கோலங்களை துரத்திக்கொண்டு ஓடி கீழே விழும் குழந்தைகளைப்போல், மேக மூட்டங்கள் முட்டும் மலைச் சரிவுகளை, பசியப்படர்ந்திருக்கும் முகில் கூட்டங்களைப் பார்த்தவாறு மீண்டும் மீண்டும் மீண்டும் அவன் நினைவில் ராதாவே தோன்றினாள். பார்த்துப் பேசியது சிலமணிகளே என்றாலும் அவள் அவனுடைய நினைவில் எப்படிப் பதிந்து விட்டாள்! இந்த உணர்வுகள்தான் காதலா? என்று அழகாக ரவியின் மன நிலையை வர்ணிக்கிறார் ஆசிரியை லட்சுமி.

    ராதாவின் அக்கா, தனக்குப் பிடித்தவனுடன் ஓடிப் போய் அவனை மணந்து கொண்டு விலகி வாழ்கிறாள் என்பதை பிறகு கேள்விப்பட்ட ரவியின் அக்கா பிரேமா, ராதாவுடன் ரவியின் விவாகம் நடக்க முடியாது என்று தெரிவித்தபோது, மனத்துயரங்களை வைத்துக் கதாபாத்திரங்களுக்கு உணர்ச்சியைத் தரும் ரவியால் அவளுடைய மன ஏக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாதா? என்று ராதா ஏங்கினாள்.

    ரவியும் அக்காவிடம், பெண்ணின் அக்கா ஓடிப்போனால் இந்தப் பெண் கல்யாணம் ஆகாமல் நிற்க வேண்டுமா? வரதட்சிணை வாங்காமல் கல்யாணம் செய்து கொள்ள, ஏழைப் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வது மட்டுமே நம் இளைஞர்களுடைய கடமையாக இருக்கக் கூடாது. இம்மாதிரி சில காரணங்களால் ஒதுக்கப்படும் பெண்களையும் ஏற்றுக் கொள்ளும் துணிவு வேண்டும் என்று கூறும் ரவியை, சீர்திருத்தவாதி, லட்சிய வாதியும் கூட என்று காட்டுகிறார் நாவலாசிரியை.

    விவாகம் நடக்கிறது. அதற்குமுன் அதைப்பற்றி தெரிந்து, அதிர்ச்சியுற்ற நிர்மலா விலகி ரவியின் கண்களில் படாமல் பட்டாலும் நெருங்காமலும் வாழ ஆரம்பித்தாள்.

    விவாகம் ஆனவுடன் தவிர்க்க முடியாத ஒரு சிறிய சந்தர்ப்பக் கோளாறினால், ரவிக்கேற்ற உடலழகு கொண்டிருப்பினும் மனத்தால் முரண்பட்டவளான ராதா அதிகம் முரண்டுபிடித்து அவனை, ஏன் நம்மையுந்தான், ஆட்டி வைக்கிறாள். இந்த கட்டத்தில், ரவியின் பால்யத் தோழன், அவன் குடும்பத்திலேயே வளர்ந்தவன் சத்யனும் நிர்மலாவின் மாற்றாந் தாயும் சினிமா நடிகையுமான மரகதமும். ராதாவின் வாழ்க்கையில் இணைந்து, வில்லன், வில்லியாக நடக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து, முடிவில் ராதா குணம் திருந்தும்வரையில் ரவி படும் அவஸ்தைகள் நம்மையும் அவஸ்தைப் பட செய்கின்றன.

    நிர்மலாவை முதலில் ரவி சந்திக்கக் காரணமாகவிருந்த அவளுடைய உதவி ஆசிரியன் சுந்தர், ஆரம்ப முதற்கொண்டே நிர்மலாவைக் காதலிப்பவன். பின் காலத்தில் அதை அவன் ரவியிடம் உறுத்திக் கூறியபோது, ரவியும் நிர்மலமான மனத்துடன் அவனைத் தளரவைக்காமல், இறுதியில் நிர்மலாவிடம் அதைப்பற்றிக் கூறுகையில், நிர்மலா, அவர் விமர்சகராகவே இருக்கட்டும். நான் பாடகியாகவே இருக்கிறேன். இரண்டும் ஒன்றாகக் கலக்க வேண்டாம். என்று சொல்லும்போது நிர்மலாவிடம் நாமும் நெஞ்சைப் பறிகொடுத்து விடுகிறோம்.

    மேலும், கல்யாணம் செய்து கொண்டவர்களுக்குத்தான் குடும்பம், குழந்தைகள் என்ற நிம்மதி. எனக்கு என் சங்கீதம் தான் குடும்பம். மூன்று மணி நேரத்திற்கு அந்த சுகானுபவத்தில் மூழ்கித்திளைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. என்னை எதிலும் இணைக்காதீர்கள் என்று கண்கள் பளபளக்கச் சொல்லும்போது, நம்முடைய கண்கள் குளமாகிவிடுகின்றன. நிர்மலாவை விட்டு நம்மால் பிரிய முடியவில்லையே?

    இப்படிச் சொன்னால், எப்படி? என்று ராதா மீண்டும் அவளிடம் கேட்டபொழுது, அது அப்படித்தான். நிஷாதத்தை விட்டுப்பாடுவதானால் மோஹனராகம் முழுமைபெறாமல் போய்விடுகிறதா? மனதுக்குள் எனக்கு ஒரு தனி சுருதியில் ஒரு ராகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதை நான் மணந்து கொண்டு விட்டேன். அதை இரவு பகலாக உபாசிப்பேன் என்று கூறிய பதில் நம் அனைவர் மனத்திலும் சோக ராகமாக ஒலித்துக்கொண்டே இருக்கச்செய்துவிட்டார் திருமதி லட்சுமி ராஜரத்தினம்! ஆனால் லட்சியக் கன்னி நிர்மலாவின் தியாக வாழ்வு நம் இதயத்தில் ஜீவராகமாகவும் ஒலிக்கிறது.

    இந்தப் பாட்டுடைத்தலைவியைப் படைத்து நம்முடைய மனத்தில் நிலைக்க வைத்து விட்ட ஆசிரியையை சொல்லுடைத்தலைவி என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    கே. ஆர். வாசுதேவன்

    ஆசிரியர், தினமணிகதிர்

    சென்னை-2

    9-1-1978

    ***

    உங்களுடன் இரண்டு நிமிடங்கள்

    இந்தக் கதையின் நாயகன் ரவியையும் நாயகி நிர்மலாவையும் சந்திக்கும் முன்பு என்னுடைய குறுக்கீடாக உங்களுடன் இந்த படைப்புப் பூ மலர்ந்ததைப்பற்றிப் பகிர்ந்து கொள்ளவே இந்த என்னுரை. நிச்சயமாக போரடிக்க மாட்டேன்.

    உங்கள் படைப்புக்களை நீங்களே வெளியிட்டால் என்ன? -என்னுடைய படைப்புக்களைத் தொடர்ந்து ஊன்றி ஆவலாகப் படிக்கும் நண்பர்கள் கேட்ட கேள்வி இது. இத்தகைய பொறுப்பை எப்படி ஏற்றுச் செய்வது என்று என் மனத்தில் எழுந்த அச்சத்தை என் கணவர் அமுக்கி விட்டார். ஏனென்றால் என்னுடைய எழுத்திலும் அவருடைய முயற்சியிலும் அவருக்கு அவ்வளவு தளராத நம்பிக்கை.

    எளியவர்களும் வாழவழி செய்யும் வங்கிகள் கொடுத்த ஊக்கம் பெரிதும் இம்முயற்சிக்குத் துணையாக நின்றது என்பது மிகையில்லை. பலமுறைகள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    மிகவும் அனுபவத் திறமையுடன் புத்தக வடிவமாக்கிக் கொடுத்த ராமன்ஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு.ராமன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டுடைத் தலைவியையும், எழுத்துலக மன்னனையும் தம் கைவண்ணத்தால் பொலிவுறச் சித்தரித்திருக்கும் தலைசிறந்த ஓவியகர்த்தாவான திரு.வர்ணம் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.

    உங்கள் இதய மேடையில் இசையமுதம் பொழிந்து என்றும் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடப் போகும் 'பாட்டுடைத் தலைவி’யைப் படிக்கப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    எவ்வளவோ அலுவல்களுக்கிடையே என் வேண்டுகோளைச் செவி மடுத்து, புத்தகம் பூராவையும் படித்து முடித்து முன்னுரை கொடுத்த தினமணிகதிர் ஆசிரியர் திரு.கே.ஆர்.வாசுதேவன் அவர்களின் நல்லாசியுடன் இந்தப் புத்தகம் வெளிவருவதைப்பற்றி நான் மனம் கொள்ளாப் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவருக்கு என் பணிவான வணக்கங்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற் சொன்ன இவ்வளவு பேர்களுக்கும் நன்றிசொல்லக் காரணமாகி-புத்தகம் வெளிவரக் காரணமான என் கணவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    என்னுடைய கதைகளை விடாமல் படிக்கச் சொல்லிக் கேட்கும் என் முதல் ரசிகையான- என் மகள் பேபி ராஜஸ்யாமளாவுக்கும் என் ஆசி கலந்த நன்றி.

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்தினம்

    ***

    1

    விடிந்தும் விடியாத காலை நேரம். இரவில் மலர்ந்த மலர்களின் மணத்தை நுகர்ந்த காற்று, வைகறைப் பொழுதின் தண்ணென்று அந்த மணத்தை வாரி பூவுலகெங்கும் இறைப்பது போன்று சிலுசிலுக்க வைத்தது. குழந்தைகளின் கொண்டாட்டமாகத் தலையசைக்கும் மலர்க் கூட்டங்கள், காலை நேரத்திற்கே ஒரு தனி மணம் உண்டென்பதுபோல குளிர்ந்த சூழ்நிலையில் ஒளியைப் பரப்பும் ஆதவனின் அழகு பவனி. இருள் தன் கரும்படுதாவைச் சுருட்டியபடி வந்தபொழுது விரிந்த ஒளியில் ஒவ்வொரு பொருளாகக் கண்களுக்குப் பட்டன.

    திறந்தவெளி மாடியில் எக்ஸஸைஸ் செய்யும் ரவியின் மேலும் இந்த ஒளி படிந்தது. ஆறடி உயரத்திற்கு ஏற்ற வாளிப்பும், திரண்ட தோள்களும், சிவந்த தோற்றமும், கம்பீரப் பார்வையும் எந்தப் பெண்ணையும் நின்று பார்க்க வைக்குமே! பைஜாமாவும், முண்டா பனியனும் சிவந்த உடலில் கசகசத்த வியர்வையும்... சுவரில் போட்ட டவலை எடுத்துத் துடைத்துக் கொண்டான்.

    பிறகு நான்கு சுற்றுச் சுவர் ஓரமாக நிதானமாக அந்த வியர்வை கசகசப்பு அடங்க உலாவினான். பக்கச் சுவரைத் தொட்ட வேப்பமரம் பூக்களை உதிர்த்து, அது சித்திரை மாதம் என்று அறிவித்தது. அதை தொட்டாற்போல மாம்பிஞ்சுகள் கொத்துக் கொத்தாக மாமரத்தில். அவனுடைய வீடு முடியும் இடத்தில் ஒரு சந்து இருக்கிறது. சந்தின் முதல் வீட்டின் பின்புறமும், இவனுடைய வீட்டின் பின்புறமும் ஒன்றாக இணைந்திருந்தாலும், வேலியும், புதரும் மண்டிப் பிரிவை அளந்து காட்டின.

    மாடியிலிருந்து பார்த்தால் அந்த வீட்டின் பின்பக்கம் நன்றாகத் தெரியும். அவன் உலாவியபடியே பின்பக்கச் சுவர்ப்பக்கம் வந்த பொழுது பார்வை அங்கே பதிந்தது. அங்கேயே நின்று விட்டான். கிணற்றடியில் ஒரு பெண். முதுகின் செழுமையும், நீண்ட பின்னலும் அவள் இளமைக்குக் கட்டியம் கூறின. அவள் அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்று கொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. அவளருகில் ஒரு சிறுமி நின்று கொண்டு துணிகளை அலசிப் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

    கிணற்றடியில் ஒரு பெண் நிற்பதோ, அவள் துணிகளை அலசிப் பிழிவதோ அதிசயமே இல்லை. கரு நாகமாக இடையைத் தொட்ட பின்னலும், செழுமையான கழுத்தின் வெண்மையை அதிகமாகக் காட்டுவது போன்ற கருத்த ப்ளவ்ஸும், கொடி இடையைச் சுற்றி வரிந்து கட்டிய புடவைத் தலைப்பும்... ஓவியம் ஒன்று எழுந்து உயிர் பெற்று வேலை செய்ய வந்தாற்போல இருக்கிறதே என்ற வியப்புத்தான் ரவிக்குத் தோன்றியது.

    அவனுக்கு அவள் முகம் தெரியாவிட்டாலும், பின்னழகை வைத்துக்கொண்டே அவள் ஓர் அழகி என்று அவனால் மதிப்பிட முடியாதா என்ன? அந்தச் சிறுமி கொடுத்த துணிகளை உதறிக் கொடிகளில் உலர்த்திக் கிளிப்பைப் போட்டாள் அவள். கொல்லை வாசலிலிருந்து ஏதோ இரைக்க கத்திக் கொண்டே வந்த நடுத்தரப் பெண்மணி ஒருத்தி அந்த இளம் பெண் முன் நின்றாள். அந்த இளம் பெண் அவளைத் திரும்பிப் பாராமலேயே ஏதோ மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

    அவர்கள் பேசியது ரவிக்குப் புரியவில்லை. அவன் கருத்தில் பதிந்துவிட்ட இந்த அழகான ஓவியக் காட்சியில் யாரோ கருப்புத் திரையிட்டது போல் தோன்றியது. அடுத்த கணம் அந்தப் பெண்மணி இளம் பெண்ணின் தந்தக் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள். நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான் ரவி. எண்ணத் தூரிகை கொண்டு கற்பனை வடிவைச் செதுக்கும் கதாசிரியச் சிற்பியின் பெருமூச்சு அது. அதில் கலந்திருக்கும் லட்சிய வேட்கைகளும் எதிர்ப்புக்களும் அவல ஓலங்களும் ஆசைத் தீயின் எரிப்பும் யாராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாத ஒன்று.

    தம்பீ

    சமையற்கார சின்னான் கீழேயிருந்து அழைத்தது ரவியின் காதுகளில் விழவில்லை.

    தம்பி, பால் ஆறிப் போகுதே? என்ற குரலுடன் சின்னான் மேலேயே வந்து விட்டான். தோளில் புரண்ட டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சமாளித்த ரவி. அழைத்தாயா சின்னா, வந்து விட்டேன் என்றபடி மாடிப் படிகளிலேயே அவனை எதிர்கொண்டான்.

    என்ன போ தம்பி, என்னமோ தொடர்கதையை முடிக்க வேணும்னு அவசரப்பட்டே, வழக்கத்தை விட லேட்டா வரீயே? என்ற சின்னான் உரிமையாக அதட்டினான்.

    வெண் பற்கள் ஒளியிடச் சிரித்தான் ரவி. மனத்தில் வண்டலாகப் படிந்து வடிய மறுத்த சந்தின் முதல் வீட்டுக்காட்சி. சின்னா, சந்தின் முதல் வீட்டிற்கு யார் குடி வந்திருக்காங்க? என்று கேட்டான்.

    மனத்தின் உறுத்தல் தாங்க முடியாத உறுத்தல்.

    யாரோ வராங்க, யாரோ போறாங்க. இத்தனை வாடகை கொடுத்துண்டு சாதா குடும்பஸ்தங்களாலே வர முடியுமா தம்பி? இப்போ யாரோ சினிமாவிலே நடிக்கிற நடிகையாம். வந்திருக்காங்க.

    அந்த இளம் பெண்தான் நடிகையா? அவள்தான் நடிக்கிறாளா? அவனுடைய சுவாரஸ்யம் பட்டென்றுவிட்டுப் போயிற்று.

    'அமுத மலர்' எனும் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் தான் இந்த ரவீந்திரன். எல்லோராலும் சுருக்கி ரவி என்று அழைப்பது வழக்கம் ஆகிவிட்டது. ஆசிரியர் பரமானந்தம் பெயரளவுக்குத்தான். பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் ரவியுடையதே. பத்திரிக்கையில் சினிமா பகுதியில் அவனுக்குப் பரிச்சயம் அதிகம் இல்லை. வரும் விவரங்களை, பேட்டிகளை, படங்களைத் தவறு நேராமல் ஓ. கே. போட்டுவிடுவது வழக்கம். அதனால் சரியான நடிகையை அவனால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

    தவிர நேரில் பார்க்கும் அழகில்லாத நடிகையும் திரையில் மேக்கப் துணையில் அழகாகத்தான் தோன்றுவாள். அழகான நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போவதும் உண்டு. இதில் இவள் எந்த ரகம்?

    அவங்க நடிகைகள் என்பது உனக்கு எப்படித் தெரியும் சின்னா? ஓர் இளம் பெண் இருக்கிறாளே, அவளா நடிகை? பெயர் என்ன?

    சின்னான் சிரித்தபடியே, உனக்கு வேற வேலை ஏதும் இன்னைக்கு இல்லையா தம்பி? உன் பேட்டியை எங்கிட்டேயே வச்சிட்டியா? என்று குறும்பாகக் கேட்டான்.

    ரவி சின்னான் முகத்தையே கூர்ந்து பார்த்தான். அவன் இளம் பெண்ணைப் பற்றிக் கேட்பதால் ஏதாவது வேடிக்கை செய்கிறானோ என்றும் நினைத்தான். பாலை ஆற்றி ரவியின் முன்பு வைத்த சின்னான், எனக்குப் பூரா விவரங்களும் தெரியாது தம்பி. அது யார் நடிக்கிறாங்களோ? அவங்க வீட்டு வேலைக்கார குட்டி நேத்து இங்கே வந்து இலை வாங்கிட்டுப் போச்சு. அப்போ விசாரித்தேன். சினிமாவிலே நடிக்கிறவங்க வந்திருக்காங்கன்னு அதுதான் சொல்லிச்சு.

    தன்னறைக்கு வந்தான் ரவி. கோடையில் குளுமையை அனுபவிக்க ஒரு பதினைந்து நாட்களை அவன் கொடைக்கானலில் கழிக்க நினைத்தான். கொடைக்கானலை அவன் தேர்ந்தெடுக்கக் காரணமும் இருந்தது. மதுரையில் அவன் அக்கா பிரேமா இருந்தாள். அவளைப் பார்த்த மாதிரியும் இருக்கும். அப்படியே கொடை ஹில்லுக்குப் போய்விடலாம். பயணத்திற்கென்று தனியாக ரயிலிலோ, பஸ்ஸிலோ நாட்களைச் செலவிடத் தேவையில்லை. காரிலேயே போய்விடுவான்.

    கொடைக்கானல் போகும் முன்பு அவன் எழுதி வந்த தொடர்கதையின் அத்தியாயங்களை எழுதித்தர வேண்டும். தொடர்கதை முடியும் தறுவாயில் இருந்ததால் வேகமாக எழுதும் ஆவல் நெஞ்சில் பரபரத்தது. ஆனால் அந்த ஆவல் எழுத்தால் விழவில்லை. அணைக்கட்டின் நீர்த் தேக்கமாக நின்றது. அதனால் காலை டிபனை முடித்துக் கொண்டு சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் அலுவலகத்திற்கு.

    ***

    2

    அலுவலகத்துக்குப் போனதும் அவன் திருத்திவந்திருந்த ப்ரூப்களை மேலோட்டம் பார்க்கவும், அடுத்த வாரத்திற்குரிய பகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும், படித்திருந்த கதைகளை கம்போஸ் பண்ணக் கொடுக்கவும் சரியாக வேலை இழுத்தது. என்னதான் மற்ற உதவி ஆசிரியர்கள் சரி பார்த்தாலும் எந்தப் பொறுப்பையும் சரியாகத் தன் பார்வையில் படாமல் தப்பவிட்டதில்லை. வரிக்கு வரி அவனுடைய கண்ணோட்டம் இருக்கும். இப்படிப்பட்ட வேலையின் நடுவே அவன் சந்தின் முதல் வீட்டையும், அந்த இளம் பெண்தான் நடிகையா இல்லையா என்பதையும் மறந்தே விட்டான்.

    அடுத்த வாரத்திற்குரிய ஆர்ட் ப்ரூப்பை சரி பார்த்து ஓ.கே சொல்ல வேண்டும். 'சிறுகதைப் போட்டி’ ஒன்றை வைக்க நினைத்த ஆசிரியர் பரமானந்தம் அன்று நடுப்பகல் ஒரு மீட்டிங் கூட்ட அழைப்பு விடுத்திருந்தார். இதன் நடுவே ஒரு பிரமுகர் தாம் திறந்து வைத்த திறப்பு விழா வைபோகங்களில் பிராமினென்டாகத் தன் படத்தை ஸென்டரில் போட வேண்டும் என்று கேட்க நேரில் வந்திருந்தார்.

    அதைக் கேட்டதும் ரவிக்குச் சிரிப்பு வந்தது. அவர் எதிரில் சிரிக்கக் கூடாது என்று போன பின்பு உதவியாசிரியர் சுந்தரிடம் கூறிச் சிரித்தான். முதல்நாள் காரைப் போட்டுக் கொண்டு கதாநாயகி போல் வந்த ஒரு கதாசிரியை இப்பொழுது அவன் நினைவுக்கு வந்து தாக்கினாள். என்ன எழுதுகிறாளோ என்னவோ, பெயர்தான் முக்கியம். முதல்நாள் தானே வந்திருக்கிறாள். அதற்குள் என்ன அவசரம்? காலையில் முதல்போன் அவளிடமிருந்துதான். இப்படிப்பட்ட நேரடி பேட்டிகளுக்கோ, தேன் தடவிய பேச்சுக்களுக்கோ அவனிடம் இடம் இல்லை. அவனுக்குத் தேவை

    Enjoying the preview?
    Page 1 of 1