Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantham Varumaa?
Vasantham Varumaa?
Vasantham Varumaa?
Ebook380 pages2 hours

Vasantham Varumaa?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851898
Vasantham Varumaa?

Read more from Jyothirllata Girija

Related to Vasantham Varumaa?

Related ebooks

Reviews for Vasantham Varumaa?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantham Varumaa? - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    வசந்தம் வருமா?

    Vasantham Varumaa?

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முன்னுரை

    தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தன் இறந்துபோன அக்காவின் குழந்தையைக் கவனக்குறைவான ஒரு கணத்தில் - தன் காதலனுடன் அளவளாவிக் கொண்டிருந்த தருணத்தில் - ஒரு பெண் தவறவிட்டு விடுகிறாள். காணாமல் போய்விட்ட குழந்தை, குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்துப் பிழைக்கும் ஒரு கும்பலிடம் சிக்கிவிடுகிறது. குழந்தையைத் தொலைத்தபின் வசந்தா நிம்மதியற்றவளாகிறாள். குற்ற உணர்வு அவளை வதைக்கிறது. இதனால் அவள் தன் காதலனையும் நிராகரிக்கிறாள். அவன் ஏதொ பொய் சொல்லி அவளை மணந்து பொண்டு விடுகிறான். அதையும் அவள் ஒருநாள் கண்டுபிடித்துவிடுகிறாள். என்ன பொய் சொன்னான், அது எப்படி வெளிப்பட்டது போன்றவற்றைத் தெரிந்துக் கொள்ள ‘வசந்தம் வருமா’ எனும் இக்கதை முழுவதையும் படித்தே ஆகவேண்டும்! கதை எப்படி முடிகிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளவும்தான்!

    இதனை முதலில் நூலாக வெளியிட்டவர்கள் டி.எஸ். புத்தக மாளிகையாகும். இதன் இரண்டாம் பதிப்பைத் தங்களுக்கே உரிய சிறந்த முறையில் கொண்டுவந்துள்ள பூம்புகார் பதிப்பத்தாருக்கும், அழகாக அட்டைப்படம் வரைந்துள்ள ஓவியருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    1

    வசந்தா! உங்களுக்கு போன் வந்திருக்கு என்று தலைமை எழுத்தர் தமது இருக்கையில் இருந்தவாறே கத்தியதும், குனிந்து கொண்டு ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த வசந்தா தலையை உயர்த்தி பார்த்தாள்.தலைமை எழுத்தர் பாபநாசம் தன்னையே கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்ததையும் அவர் முகத்தில் குறும்புச் சிரிப்பொன்று தவழ்ந்து கொண்டிருந்ததையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. அவள் தன்னையும் மீறிச் சிரித்தவாறு மெதுவாக எழுந்தாள். வேண்டுமென்றே பரபரப்புக் காட்டாமல் அவரது மேசைக்குப் பக்கத்தில் போய் நின்று ஒலி வாங்கியை எடுத்து ‘ஹலோ’ என்றாள்.

    அவள் எதிர்பார்த்தபடி பேசியது தேவநாதன்தான்.

    என்ன? என்றாள் அவள் மெதுவாக.

    அதுதான் நான் சொன்னேனே – அது என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

    ஓ! அதுவா? நான் அப்புறம் போன் பண்றேன். இப்ப பிசியாயிருக்கேன் என்று அவள் சொன்னபோது தலைமை எழுத்தர் தனது முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த புன்னகையின் குறும்புத்தனத்தைச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல் என்னம்மா பெரிய பிசி? இப்பவே பேசு. நான் வேணா எழுந்து போகட்டுமா? என்று கேட்டார்.

    அவர் எப்போழுதுமே அப்படித்தான். கொஞ்சம் அதிகமாகவே பெண்களிடம் சலுகை எடுத்துக் கொள்வார். தனக்குவயசாகிவிட்டது என்ற போர்வையின் கீழ் மறைந்து கொண்டு சில நேரங்களில்அவர் அவர்களுக்குப் பிடிக்காத வகையில் தத்துப் பித்துவென்று பேசி விடுவதும் உண்டு. சில பெண்கள் ‘ஒழிந்து போகிறது’ என்று விட்டுவிடுவார்கள். சிலர் ‘ரிடையராகப் போகிற கிழம்தானே? இதற்கு போய் பயப்படுவானேன்?’ என்று எண்ணித் துணிச்சலோடு சாடிவிடுவார்கள். இரண்டுக்குமே அவர் எதிரொலி ஓரே சிரிப்புதான். எல்லாரிடமும் கொஞ்சம் அதிப்படியாகவே சலுகை எடுத்துக் கொள்ளும் வழக்கமுள்ள பாபசாநத்தக்குக்கூட வசந்தா என்றால் கொஞ்சம் தயக்கம்தான். சொல்ல வந்ததைச் சொல்லாமல் வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டு விடுவார். அப்போதுதான் அவர் கண்கள் பேசும். இன்று முதன் முதலாக கொஞ்சம் ‘வழிந்தார்’ என்பதால் வசந்தா அவரை மன்னித்து விட்டாள்.

    இருப்பினும் நீங்க ஏன் சார் எழுந்து போகணும்? நான் என்ன ரகசியமா பேசப் போறேன்? என்று கேட்டாள்.

    ரகசியம்னு இருந்தாத்தானே? எனக்கு முன்னாலே மனசு விட்டு பேசறதுக்கு கூச்சமாய் இருக்குமோல்லியோ? என்று சொல்லிவிட்டு அவர் வாய்விட்டே சிரித்தார்.

    சார்! நீங்க ஏதேதோ கற்பனை பண்ணிக்காதீங்கோ என்று சிறிது சூடாகவே அவள் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து தனது இருக்கையை நோக்கி நகர்ந்தாலும் தனது முகத்துச் சிவப்பை அவளால் மறைக்கவே முடியவில்லை.

    இனிமேல் தினமும் கூப்பிடவேண்டாம் என்று தேவநாதனிடம் சொல்லி வைத்துவிடவேண்டும் என்று அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். தொலைபேசி தலைமை எழுத்தர் மேஜை மீது இருந்ததில் இது ஒரு சங்கடம். ஏதோ ஃபைலில் ஆழ்ந்திருப்பவரைப் போல பாவனை செய்துகொண்டே மற்றவர் பேசுவதையெல்லாம் இவர் ஒட்டு கேட்கிறார். பிறருடைய சமாச்சாரங்களை தெரிந்து கொள்ளுவதைப் போன்ற சுவையான விஷயம் வேறு இருக்கவே இருக்காது போலிருக்கிறது" என்றும்  அவள் தனக்குள் பொருமிக் கொண்டாள்.

    அவள் உட்கார்ந்து ஐந்து நிமிடங்கள் கூட கழிந்திரா. மறுபடியும் தொலைபேசி மணி அடிக்கவும், ஒலி வாங்கியை எடுத்துப் பேசிய தலைமை எழுத்தர், வசந்தா! மறுபடியும்  உங்களுக்குத்தான் போன் வந்திருக்கு என்று சிரித்துக் கொண்டே அழைப்பு விடுத்தார்.

    வசந்தாவுக்கு கொஞ்சம் உண்மையிலேயே எரிச்சல் வந்து விட்டது. பேச நினைத்ததை உடனே –அப்போதே பேசித் தொலைத்திருக்கக் கூடாதோ? என்று அவள் தனக்குள் கொஞ்சம் தேநாதனைச் சினந்தவாறு எழுந்து விரைவாக மேசையை நெருங்கினாள்.

    வசந்தா ஹியர் என்று சற்றுக் கடுப்பாகவே ஒலிவாங்கியை எடுத்துப் பேசினாள்.

    வசந்தா தானே? நான்தான் அப்பா பேசறேன் என்று மறுமுனையில் அவள் தகப்பனாரின் குரல் கேட்கவும் அவள் முதுகு நிமிர்ந்தது. ‘ரொம்பவும் அவசியம் ஏற்பட்டாலொழிய அப்பா போன் பண்ணமாட்டாரே?" என்று எண்ணிய அவள் சற்று வியப்ம் , கலக்கமும் அடைந்தாள்.

    என்னப்பா? என்றாள் பதற்றத்தை மறைத்துக் கொள்ள முடியாமலேயே.

    வேற ஒண்ணுமில்லை. நம்ம கண்ணனுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லே…முடிஞ்சா நீ மத்தியானம் அரைநாள் லீவு போட்டுட்டு வாயேன். நீ வரணும்கிறான். அழறான். என்று அவர் சொன்னார்.

    என்னது? கண்ணனுக்கு உடம்பு சரியில்லையா? என்ன உடம்புக்கு? அவள் பதற்றமாகக் கேட்டாள்.

    நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, வசந்தா. லேசாய் காய்ச்சல் அடிக்குது. ரெண்டு தரம் பேதி ஆயிடுத்து என்றார் அவர்.

    காலம்பற நான் கிளம்பினப்ப நல்லாதானே இருந்தான்? என்று கேட்டாள் அவள்.

    இப்பவும் ஒண்ணும் பயப்படும்படியாய் இல்லே. இருந்தாலும் நீ வரணும்னு அழுதுகிட்டே இருக்கான். அதுதான் வரச் சொல்றேன். உனக்கு லீவு கிடைக்கிறது கஷ்டம்னா நீ வழக்கம் போலவே வாம்மா. நான் பார்த்துக்கிடறேன் அவனை

    .ல்லைப்பா, நான் வந்துடறேன். ஒரு அர்ஜெண்ட் ஃபைல் இருக்கு. அதை மட்டும் போட்டுட்டு வந்துடறேன்.

    சரி, அப்ப நான் போனை வெச்சுடட்டுமா?

    ஏதாவது மருந்து கொடுத்தீங்களாப்பா?

    அதான் அந்த பெக்டோகாப் ரெண்டு தரம் கொடுத்தேன்

    நல்ல வேலை செஞ்சீங்க. அப்ப நான் மத்தியானம் வந்திடறேன் வசந்தா ஒலிவாங்கியை வைத்துவிட்டுச் சிந்தனையுடன் தன்னிருக்கைக்குத் திரும்பினாள்.

    யாருக்கும்மா உடம்பு சரியில்லை? என்று கவலையுடன் விசாரித்தார் தலைமை எழுத்தர். இந்த தடவை அவரது தலையீட்டால் அவள் எரிச்சலடைய வில்லை. மாறாக அவரது கரிசனம் அவளுக்கு ஒரு அமைதியை தந்தது.

    எங்க அக்கா குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம் சார்! எங்கப்பாதான் அப்ப போன் பண்ணினாரு. முடிஞ்சா அரைநாள் லீவு போட்டுட்டு வரச் சொன்னாரு என்று அவள் பதில் சொன்னாள்.

    எத்தனை வயசு ஆகறது கொழந்தைக்கு? என்று அவர் விசாரித்தார்.

    ரெண்டரை வயசு ஆறது சார்

    பாவம், தாயில்லாக் கொழந்தை அது. சரி, அர்ஜெண்ட் ஃபைல் என்னமொ இருக்கு, அதை போட்டுட்டு வர்றேன்னு சொன்னியே? என்ன ஃபைல் அது?

    அதான் சார். நேத்துக்கூட ஒரு ரிமைண்டர் வந்ததே – அந்த டெண்டர் ஃபைல்தான்.ஃஃஃ

    அதை நான் பாத்துக்கறேன்மா நீ இப்பவே வேணும்னாலும் பொ"

    அப்ப முழு நாளைக்குமே லீவு போட்டுடுங்கிறீர்களா சார்?

    சேச்செ..என்னமா இது? மணி பன்னண்டாறதே? எப்படியும் ஒண்ணரை மணிக்கு நீங்க கிளம்ப முடியும் . இப்பவே கௌம்பிடுங்கோன்றேன். அவ்வளவுதான். ஒன்ரை மணி நேரம் முன்கூட்டியேக் கிளம்பறதுக்கு நான் பர்மிஷன் தர்றேன்மா! சமயம் போதுன்னா இந்த சலுகைக்கூட காட்டக்கூடாதா? கௌம்புங்கோ…

    ரொம்ப தேங்கஸ் சார்…

    அட நீ ஒண்ணு! தலைமை எழுத்தர் தன்னை ஒரு தடவை மரியாதையாக ‘நீங்கள்’ என்று பன்மையிலும், மற்றொரு தடவை ‘நீ’ போட்டு ஒருமையிலும் விளிப்பதைக் கண்டு வசந்தா தனக்குள் சிரித்துக் கொண்டாள். பாபநாசம் எல்லா பெண்களிடமும் ‘நீ’ போட்டு பேசியே உரிமையுடன் பழகுவார். ஆனால் தன்னிடம் மட்டம்  சொந்தங் கொண்டாட அவர் முற்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்த்து வசந்தா, எங்கிட்ட மட்டும் அப்படி பேசறதில்லை. பயமோ, என்னமோ. அப்படியும் அப்பப்ப ‘நீ’ன்னு சொல்லிடறாரு.." என்று எண்ணிக் கொண்டாள்.

    அவர் நடத்தையைப் பொறுத்தமட்டில் நல்லவர்தான். ஆனால் பெண்களிடம் சிரித்து பேசுகிற பலவீனம் அவரிடம் உண்டு. அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதும், அவர்கள் அவற்றுக்காக நன்றி பாராட்டுகையில மகிழ்ந்து போவதும் அவர் தன்மைகளாக இருந்தன. வசந்தா மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாள். ஏனென்றால் சில நேரங்களில் அந்தத் தலைமை எழுத்தரின் பேச்சுகள் வரம்பை மீறுவதாக அவளுக்குத் தோன்றிவிடும்.

    ஒரு தடவை இப்படித்தான் அவள் பாட்டுக்குக் குனிந்து கொண்டே வழக்கம்போல் எழுதிக் கொண்டிருந்தாள். பணியாள் கந்தப்பன் அவ்வாண்டுக்குரிய புதிய நாள்காட்டியை எடுத்து வந்து அவளது தலைக்கு உயரே, பழயதை அகற்றிவிட்டு மாட்டினாள். அது குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தும் விளம்பரங்கள். ஒவ்வொரு மாதத் தாளிலும் நிறைந்த நாள்காட்டி. அதைக் கவனித்ததும் வசந்தா சட்டென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டு வேலையில் முனந்தாள். அதைக் கவனித்து விட்டோ என்னவோ, என்னம்மா பார்க்கிறே? இப்ப சத்தியம அந்த விளம்பரங்கள் உனக்கு வேண்டியதில்லை…அது சரி, எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே? என்று அவர் கேட்டார்.

    தன் பிரிவில் இருந்த ஆண்கள் அத்தனை பேருடைய கண்களும் தன்னை அந்நேரத்தில் மொய்த்துக் கொண்டிருந்ததை நிமிர்ந்து பார்க்காமலேயே அவளால் ஊகிக்க முடிந்தது. அவள் முகத்துக்குக் குப்பென்று இரத்தம் ஏறிற்று. அவள் வாயைத் திறந்து ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆனால் தலையை உயர்த்தித் தலைமை எழுத்தரை ஒரு பார்வை பார்த்தாள்.அந்த பார்வையிலிருந்து தெறித்து வந்து விழுந்த நெருப்பை உணர்ந்ததும் பாபநாசத்தின் முகம் சிறுத்துப் பொய் அதில் அசடும் வழிந்தது. அவர் மேற்கொண்டு எதுவும் பேச இயலாமல் வாயடைத்துப் போனார். அது மட்டுமன்று ஏதாவது சொல்லி அவளைச் சமதானபடுத்த வேண்டும் என்றும் நினைத்ததுதம்கூட எதுவும் பேச வாய் வராமல் அவர் பேசாமல் இருக்க நேர்ந்தது. அளிடம் சற்று சலுகை எடுத்துக் கொண்டு அவர் பேசிய முதல் பேச்சு அதுதான். கடைசிப் பேச்சும் - இதுவரையில் -அதுதான்.

    அவள் பாபநாசத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே அந்த ஃபைலை எடுத்து அவரிடம் கொண்டு போய்க் கொடுத்தாள்.

    நீ இப்பவே கௌம்பும்மா! போன வருஷம்கூட ஒரு தரம் அந்தக் கொழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னுதான் ஒரு வாரம் போல லீவு போட்டே இல்ல? என்றார் பாபநாசம்.

    ஆமா, சார்! என்றவாறு வசந்தா ஃபைலை அவரிடம் கொடுத்தாள். அவர் மிகுந்த கவனத்துடன் அவள் கையில் தன் கை பட்டுவிடாமல் அதைப் பெற்றுக் கொண்டார். முன்பொரு தடவை அவள் கையில் இடித்துவிட்டு அவளது முறைப்பைத் தாள மாட்டாமல் போனதை அவர் நினைவு வைத்துக் கொண்டிருந்ததை அவள் கண்டுகொண்டாள். ‘அந்த பயம் மனுஷனுக்கு இருக்கட்டும்’ என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    அவர் அப்படி அவள் கையில் இடித்தபோது வசந்தாவால் வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல முடியாமற் போனது. சுற்றிலும் பலர் இருந்தமையால் அவள் தனது சினத்தையடக்கிக் கொள்ள நேர்ந்தது. ஆனால் அது நடந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் எரிச்சலுற்றிருந்ததை மறைமுகமாக அவருக்கு உணர்த்துவதற்கு அவளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

    பிற்பகல் சாப்பாட்ட வேளையில் அவளும், ரங்கம்மாவும் வழக்கம்போல் பிரிவிலேயே உட்கார்ந்து சாப்பிட்டபடியே பேச்சில் ஈடுபட்டபோது, அவர்கள் பேச்சு பேருந்து கிடைக்காமல் அலுவலகத்துக்கு நேரத்தோடு வருவதற்காகச் சில நாட்களில் டாக்சியில் வரும்படி நேர்ந்து விடுவதைத் தொட்டது. அதுதான் சாக்கு என்று வசந்தா நடத்துநர்களில் சிலர் பயணச் சீட்டுக் கொடுக்கையில் பெண்களின் கையில் இடிப்பது, உரசுவது போன்ற அற்பச் செய்கைகளில் ஈடுபட்டு இன்பங்காணுவது பற்றிக் குறிப்பிட்டாள். ‘ஏண்டி, ரங்கா! பொம்பளைகள் கையிலே இடிக்க ஒரு பொருளைக் குடுக்கறதுலே இந்த ஆம்பளைகளுக்கு என்ன ப்ளெஷர்? ஆனா ஒண்ணு. நீ கவனிச்சிருக்கியோ என்னமோ, இளவட்டங்கள் இந்த வயசானதுகளை விட எவ்வளவோ தேவலைன்னு தோணுது. அவங்க கொஞசம் பயப்படறாங்க. இந்த வயசானதுகள் தான் தங்களுக்கு வயசாயிடுத்துங்கிறதிலே சலுகை எடுத்துகிறதுகள்! என்று அவள் அங்கேயே தமது மேசைக்கு அருகில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பாபநாசத்தை வேண்டுமென்றே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள். அவருக்குத் தனது பேச்சின் உட்கிடை விளங்கி விட்டது என்பதை அவரது அசடு தட்டிய முகத்திலிருந்து இவள் தெரிந்துகொண்டு நிம்மதியடைந்தாள். ‘இனிமே இந்தக் கிழம் ஜாக்கிரதையாய் இருக்கும் - அட்லீஸ்ட் - என்கிட்டயாவது! என்றுதான்.

    அதே நேரத்தில் முழுக்க முழுக்க அவரையே குற்றம் சொல்லுவதற்கு இல்லை என்றும் ஆழந்து யோசித்த போது அவளுக்குத் தோன்றியது. ‘இந்தப் பொண்ணுகள் மேலேயும் தப்பு இருக்கு. சில சமயங்கள்ளே அவர்கிட்ட பெர்மிஷன் மாதிரியான சலுகைகளை வாங்கிக்கிறதுக்காக - இல்லேன்னா வேலை செய்யாம கழப்பாளித்தம் பண்ணிட்டு அவர் கிட்ட வசவு வாங்காமே இருக்கிறதுக்காக – அவர் என்ன பேசினாலும் கெக்கபிக்கன்னு இளிச்சுணடு கம்கு இருந்துடறாங்க. அவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கறாரு. அவ்வளவுதான். எங்கிட்டப் பேசிப் பார்க்கிறதுதானே? அதுதான் ஒரே ஒரு தரம் குடும்பக் கட்டுப்பாட்டுக்குக் காலண்டரைக் காட்டிட்டு என் பார்வையாலேயே பாதி எரிஞ்சுப் போனாரே மனுஷன்!"

    நான் வரட்டுமா சார்? ரொம்ப தேங்க்ஸ்! இதோ என் லீவ் லெட்டர்! முழு நாளுக்கும் எழுதி வெச்சுட்டேன் சார்! என்றபடி அவள் தனது விடுமுறைக்கான விண்ணப்பத்தை அவர் மேசை மீது வைத்தாள்.

    ஏம்மா, வசந்தா? நான்தான் சொன்னேனே? அரைநாள் லீவு போட்டா போறாதா? பத்திலேருந்து பன்னிரெண்டு மணி வரைக்கும் வேலை செஞ்சிருக்கேளே? அப்ப அதை எந்தக் கணக்குல காட்டறது? ஆபீசுக்கு சிரமதானம் பண்றேளா? நன்னாருக்கு! என்று சொல்லிக் கொண்டே அவர் அதில் ‘க்ராண்டெட்’ என்று சிவப்புப் பேனாவால் எழுதிக் கையெழுத்துப் போட்டார்.

    இன்னொரு நாளுக்கு அந்த ரெண்டு மணி நேரத்தை எனக்குப் பெர்மிஷனாய் கொடுத்துருங்க சார்! அப்பக் கணக்குச் சரியாப் போயிடும்… என்று சிரித்த வசந்தா பிரிவில் இருந்த எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

    அவள் கிளம்பிச் சென்றதன் பிறகு, நமசிவாயம்! நம்ம ஹெட் கிளார்க்குடைய பாச்சா வசந்தாகிட்ட மட்டும் பலிக்கிறதே இல்லே, கவனச்சியா? என் றுதியாகராஜன் நமசிவாயத்தின் காதைக் கடித்தான்.

    நமச்சிவாயம் அதை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாகச் சிரித்துவிட்டுப் பேசாமல் இரந்தான்.

    வசந்தாவுக்கு அவங்க அக்கா பையன் மேலே உசுருன்னு நினைக்கிறேன். அடிக்கடி அந்தப் பையன் சேட்டைகளைப் பத்தி ரங்கம்மாக்கிட்டச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போறாங்க. அக்கா கொழந்தை மேலேயே இம்புட்டுப் பிரியம் வெச்சிருக்கிறவங்க நாளைக்கு அவங்களுக்குக் கல்யாணமாயி அவங்களுக்கே ஒன்னு பொறந்தா எம்புட்டுப் பரியமாய் இருப்பாங்க! என்ற வியப்பில் தியாகராஜன் அடுத்து மூழ்கினான்.

    ஆமாமா, நான்கூடக் கவனிச்சேன். ரொம்ப பிரியந்தான் அந்தக் கொழந்தைமேலே. தாயில்லா கொழந்தையாச்சே. வசந்தா ரொம்பச் சின்ன வயசிலேயே அவங்கம்மா செத்துப் போயிட்டாங்களாம். தான் தயரில்லா கொழந்தையாய் வளர்ந்ததாலே தன் அக்கா கொழந்தைமேல அவங்களுக்கு ரொம்பப் பிரியம்ணு தோணுது

    இருக்காதே பின்னே? இன்னொன்னு கூட அவங்க அடிக்கடி சொல்லுவாங்க ரங்கம்மாகிட்ட – அவங்களுக்கு அம்மா இல்லாத குறை தெரியாமே அக்காதான் அவங்களை வளர்த்தாங்களாம். அந்த நன்றி வேறே இருக்குமில்லையா? என்று தியாகராஜன் முத்தாய்ப்பு வைத்தான்.

    தலைமை எழுத்தர் தமது நாற்காலியை நகர்த்தி ஓசைப்படுத்தியவாறு எழவே அவர்கள் பேச்சு அத்துடன் நின்றது. அப்பா தியாகு! இந்த அர்ஜெண்ட் பைலைக் கொஞ்சம் போட்டுடுப்பா என்றவாறு அவர் வசந்தாவின் அந்த அவசர வேலையை அவனிடம் ஒப்படைத்தார்.

    2

    படியிறங்கிய வசந்தாவுக்குப் பேருந்து பிடித்துப் போக பொறுமை இல்லை. உடனேயே தற்செயலாக எதிர்பட்ட டாக்சி ஒன்றில் ஏறி அவள் புறப்பட்டுவிட்டாள். கால் மணி நேரத்தில் அவள் வீட்டுக்கு வந்து விட்டாள்.

    டாக்சியை அனுப்பிவிட்டு அவள் வாசற் கதவைத் தட்டினாள். இதோ வந்துட்டேன்மா என்று குரல் கொடுத்தபடி அவள் அப்பா சதாசிவம் வந்து கதவைத் திறந்தார்.

    கண்ணன் என்னப்பா பண்ணிக்கிட்டிருக்கான்? எப்படி இருக்கு உடம்பு இப்போ? என்று பேட்டபடி – ஆனால் அவர் பதில் சொல்ல வாயைத் திறக்கும் வரையில்கூடக் காத்திருக்காமல் அவள் செருப்புகளை மிக விரைவாக உதறிவிட்டு உள்ளே ஓட்டமும் நடையுமாகப் போனாள்.

    படுக்கையில் அரைக்கண் மூடிய நிலையில் தன்னினைவு அற்றவன் போல கிடந்த கண்ணனைப் பார்த்ததும் அவள் கொஞ்சம் துணுக்குற்றுத்தான் போனாள். ‘ஒரே நாளில் இப்படி ஒரு குழந்தை இளைத்துப் பொய்விடுமா?’ என்று அவள் திகைப்பும் திடுக்கீடும் அடைந்தாள். அவள் கண்களில் சட்டென்று கண்ணீர் பீறிட்டது.

    அவள் படுக்கையருகே மண்டியிட்டு உட்கார்ந்துபொண்டு அவன் தலைமயிரை நீவினாள். கண்ணா, கண்ணா! என்று மிக மெதுவாகக் கூப்பிட்டாள். இதற்குள் அங்கே வந்துவிட்ட சதாசிவம், இப்பக் கொஞ்சம் தேவலைம்மா. ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி காய்ச்சல் ரொம்ப அடிச்சது. அதுதான் பயந்து போய் உனக்கு போன் பண்ணிட்டேன். என்றார்.

    அப்ப நான் போய் நம்ம டாக்டரைக் கூட்டிக்கிட்டு வரட்டும்மாப்பா? என்று அவள் தலையை உயர்த்தி அவரைப் பார்த்துக் கேட்டாள்.

    அன்னைக்குச் சாயந்தரம் எப்படி இருக்குன்னு பார்த்துக்கிட்டு அதுக்கு பெறகு வேணும்னா டாக்டர்கிட்டக் காட்டலாமேம்மா? என்று அவர் கூறினார்.

    இல்லேப்பா. இப்பவே கூப்பிடலாம்னு தோணுது. ஊரெல்லாம் ஒரோ தொத்து வியாதியும் அதுவுமாய் இருக்கு. அப்ப நான் பௌம்பறேம்ப்பா! என்று அவள் எழுந்தாள்.

    கண்ணனுக்கு வந்திருந்தது ஒரு சிறிய பிள்ளை நோய்தான் என்பது பற்றி சதாசிவத்துக்கு ஐயமில்லை. குழந்தை விரைவில் எழுந்து பழையபடி நடக்கத் தொடங்கிவிடுவான் என்பதிலும் அவருக்குச் சந்தேகமில்லை. ஆனால் தாம் என்ன கொன்னாலும் வசந்தா ஏற்கமாட்டாள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்ததால்? உன்னிஷ்டம் வசந்தா, இன்னிக்குச் சாயந்திரம் சரியாய் போயிடும்னு நினைக்கிறேன். என்று கூறி நிறுத்திக் கொண்டார்.

    அன்று பிற்பகல் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளை அவர் வீட்டுக்கு வரச் சொன்னதற்குக் காரணம்கூட அவர் அவனது நிலை புறித்து அஞ்சியிருந்தார் என்பது அன்று. கண்ணனுக்கு ஒரு சிறு நோய் ஏற்பட்டாலும் உடனே அதுபற்றித் தன்னையழைத்துத் தெரிவித்துவிட வேண்டும் என்கிற அவளது கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அவர் அவளைத் தொலைபேசி வாயிலாக அழைத்தது.

    இருந்தாலும் டான் டாக்டரைக் கூட்டிண்டு வந்து காமிக்கிறேம்ப்பா. அவர் வந்து பாத்துட்டு போறது நல்லதுதானே? என்றவாறு அவள் திரும்பவும் செலுப்புகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். சதாசிவம் வாசல்வரை வந்து அவளை வழியனுப்பிவிட்டுக்கதவை சாத்திக் கொண்டு உள்ளே வந்து பேரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ‘இந்தக் குழந்தை மேலே வசந்தாவுக்குத்தான் என்ன பிரியம். பாவம்! தயரில்லாக் குழந்தை, தாயில்லாக் குழந்தைன்னு வாய்க்கு வாய் சொல்லுது இதுக்கு ஏதாவது ஒன்னுனா உசுரையே விட்டுடுது. நாளைக்குக் கல்யாணமாயிப் போச்சுன்னா இவனை விட்டுட்டு அது எப்படித்தான் இருக்கப் போவுதோ? இந்த எண்ணத்தைத் தொடர்ந்து தம் மகளை மணக்க விரும்பிய இரண்டு சொந்தக்கார வாலிபர்களையும் அவள் ‘இப்ப வேண்டாம் அப்பா, கல்யாணம்! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்று மறுதலித்தது அவருக்கு ஞாபகம் வந்தது. ‘ஒருவேளை இந்தப் பிள்ளையை வெச்சுக்கிட்டு நான் கஷ்டப் போறேனேங்கிறதுக்காகத்தான், இதைக் கொஞ்சம் பெரியவனாக்கிட்டு, அதுக்குப் பெறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்காளோ? என்று அவர் தமக்குள் நினைத்துப் பெருமூச்செறிந்தார்.

    இந்த எண்ணத்தை தொடர்ந்து அவருக்குத் தம் மூத்த மகள் சியாமளாவைப் பற்றிய நினைவுகள் வந்தன. ‘பாவிப் பொண்ணு! காதல் கல்யாணம்னு சொல்லிக்கிட்டு எவனையோ கட்டிக்கிட்டா. ஒரு கொழந்தையையும் பெத்து இவ தலையிலே கட்டிட்டுப் போயிட்டாளே…!"

    சியாமளாதான் விரும்பியவளை மணக்காமல் இருப்பதற்காகத் தாம் போட்ட முட்டுக்கட்டைகள் அவர் நினைவுக்கு வந்தன. ‘நான் அவ்வளவு கல்மனசாய் நடந்திருக்க வேணாம். கடைசியிலே நான் அவளை விரோதிச்சுக்கிட்டதும், அவ என்னை விரோதிச்சுக்கிட்டதும்தான் மிச்சம். கட்டின புருஷன் ரெண்டே வருஷம் வாழ்ந்துட்டு, அவளையும் பறி கொடுத்துட்டுத் தானும் போய்ச் சேர்ந்துட்டாளே பாவி!" சதாசிவம் தம்மை மீறிப் பொங்கிய கண்ணீரை ஒற்றித் துடைத்துக் கொண்டார்.

    இந்த மாதிரி அவ அல்பாயுசாப் போயிடுவான்னு பெத்த மகளை இந்த அளவுக்கு விரோதிச்சுக்குவான்?

    கண்ணன் புரண்டு படுத்தான். அவர் அவனைத் தொட்டுப் பார்த்தார். காய்ச்சல் மிகவும் தணிந்து விட்டிருந்தது. ‘எம் பேச்சைக் கேக்காமே டாக்டரைக் கூட்டிட்டு வர்றேன்னு போயிருச்சு இந்த வசந்தா. அவர் வந்து ஊசியும், மருந்தும் எழுதி கொடுத்து இருபது ரூபாய்க்கு வேட்டு வெச்சுட்டுப் போவாரு அம்புட்டுத்தான்…"

    கண்ணா? கண்ணா என்று அவர் அவனை மெல்லத் தொட்டு அசைத்துப் பார்த்தார். அவன் கண் விழித்துப் பார்க்கவில்லை.

    அவர் அவனுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டார். திடீரென்று வசந்தா சாப்பிட்டாளோ, இல்லையோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. ‘கேக்காமே போயிட்டோமே? அது எங்கே சாப்பிட்டிருக்கப் போவுது? போன் பண்ணின இருபது நிமிஷத்துல வந்து சேர்த்துட்டதே!....ஒரு வாய் சாப்பிட்டு டாக்டர் வீட்டுக்கு போன்னு அனுப்பிச்சிருக்கலாம். ஆனா அது எங்கே கேட்டிருக்கப் பொவுது?"

    கண்ணனுக்கு நன்றாக வியர்த்திருந்தது. அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1