Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iru Kannilum Un Gnabhagam
Iru Kannilum Un Gnabhagam
Iru Kannilum Un Gnabhagam
Ebook127 pages1 hour

Iru Kannilum Un Gnabhagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந் நாவலில்... சித்தர்கள், அமானுஷ்யம், ஆன்மீகம், மென்மையான காதல், ஃபேமிலி சென்டிமெண்ட் ஆகியவற்றை கலந்து விறுவிறுப்பான, வித்தியாசமான கதையைப் புனைந்திருக்கிறேன்.

இந் நாவலில் வரும் சித்தரும், பெண் தெய்வமும் உங்களை மெய் சிலிர்க்க வைத்தால்... அதை என் பேனாவுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுவேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856343
Iru Kannilum Un Gnabhagam

Read more from Lakshmi Praba

Related to Iru Kannilum Un Gnabhagam

Related ebooks

Reviews for Iru Kannilum Un Gnabhagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iru Kannilum Un Gnabhagam - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    இரு கண்ணிலும் உன் ஞாபகம்

    Iru Kannilum Un Gnabhagam

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    இரு கண்ணிலும் உன் ஞாபகம்

    1

    படுக்கை அறையில் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் கூ...கூக்கூ...  என்று இரட்டைக் குயில்கள் ஐந்து முறை வெளியில் தலைகாட்டி, கதவை மூடிக்கொண்டு அடங்கின.

    போர்வையை விலக்கி விட்டு விழிகளை மூடியபடியே எழுந்து அமர்ந்த ரதி... தன் இரு உள்ளங்கைகளையும் பரபரவென்று தேய்த்து அதில் முகம் பார்த்துக் கொண்டாள். கட்டிலில் அமர்ந்தபடியே இரு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு... கைக்கு எட்டும் தூரத்தில் பக்கவாட்டு டேபிளின் மீது வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து உற்றுப்பார்த்தாள்.

    லேமினேட் செய்யப்பட்டிருந்த படத்தில்... வசீகரமாய் சிரித்துக் கொண்டிருந்தான் மதன்.

    "குட்மார்னிங் மதன்! எப்படியிருந்த என்னை இப்படி மாத்திட்டீங்களே டியர்? அப்பான்னா... எனக்கு உயிர்னு உங்களுக்கே தெரியுமே?

    அப்பா சதா வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பறந்துட்டுருக்கிறவரு. அவரு அப்படி என்னை விட்டுப் பிரிஞ்சு போகும் போதெல்லாம். அந்தப் பிரிவை என்னால தாங்கவே முடியாது.

    அப்பாவோட ஞாபகமாகவே இருக்கும். அடிக்கடி ஏன் ஃபோன் பண்ணிப் பேசலை?ன்னு... அப்பா கிட்ட கோபமா கேட்பேன். கண்ணைக் கசக்கி அழுது சின்னதா சண்டை கூட போட்டிருக்கேன்.

    ஆனா... இப்போ? அம்மாடி ரதி! என்னடா செல்லம்? இப்படி அடியோட மாறிட்டியே? நானா ஃபோன் பண்ணிப் பேசினால் தான் நீ பேசறே... கோவிச்சுக்கிட்டு அழுதுகிட்டு என் கிட்ட செல்லமா சண்டை போடறதையே நிறுத்திட்டியே?

    மதனுக்கும் உனக்கும் நிச்சயம் பேசி ஒப்புத் தாம்பூலம் மாத்திக்கிட்டதிலேர்ந்து... உன் கிட்ட நிறைய மாற்றங்கள் வந்துடுச்சும்மா... திடீர்னு ஒரு பெரிய மனுஷ தோரணை, பொறுப்பு, பொறுமை, பக்குவம் எல்லாமே வந்திருக்கு. ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருக்கு... இன்னொரு பக்கம் வருத்தமாவும் இருக்கு ரதி?

    எதுக்கு வருத்தம்னு கேட்கறியாம்மா? மூச்சுக்கு முன்னுறு தரம், அப்பா.. அப்பா.. அப்பான்னு என் மேல உயிரா இருந்த பொண்ணு நீ! இப்போ உன் மனசு பூராவும் மதன் தான் நிறைஞ்சிருக்கான். கூடிய விரைவில அவனுக்கு மனைவியாகி... புகுந்த வீட்டுக்கு மருமகளா போகப்போறே... அந்த வீட்டு மருமகளுக்குரிய அத்தனை தகுதிகளும் உன் கிட்ட இப்பவே வந்தாச்சு.

    உன் பேச்சுல நடவடிக்கைகள்லே... எல்லாத்திலேயும் மதனோட வருங்கால மனைவி தான்...என் கண்ணுக்குத் தெரியறா... என் பொண்ணு, என்னோட செல்ல ரதி எங்கே? என் கிட்ட சண்டை பிடிக்கிற ரதிக்குட்டி காணலையே? என்னை அடியோட மறந்துட்டாளே?ன்னு. உள்ளுர சின்ன வருத்தமாத்தான் இருக்கு...

    அதே சமயத்துல எனக்கு ரொம்ப பெருமிதமாவும் இருக்குடா... ஒரு பெரிய தொழிலதிபரோட ஒரே பொண்ணு. தாயில்லாத பொண்ணுங்கிறதால அதீத செல்லமா வளர்க்கப்பட்டது... விரலை அசைச்சா அந்த வேலையை செய்யறதுக்கு காத்திருக்கிற ஆட்படைங்க... உள்ளம் பாதம் தரையில படாம ஒரு பூவைப் போல தாங்கி வளர்க்கப்பட்டாலே... திமிர், ஆணவம், கர்வம், அகம்பாவம், ஜபர்தஸ்து, மமதைன்னு... எல்லாக் கெட்ட குணங்களும் வந்து ஒட்டிக்கும்.

    பணக்காரப் பொண்ணுன்னாலே... இப்படித்தான் இருப்பாங்கன்னு. சமுதாயத்துலே எல்லாருமே நெனக்கிறாங்க... அந்த நெனப்பை நீ பொய்யாக்கிட்டே ரதி!

    அடக்கம், பணிவு, பவ்யம், பண்பு, அன்பு, சூழ்நிலைக்கு ஏத்தபடி நடந்துக்கிற பக்குவம் எல்லாமே உன் கிட்டே இருக்குடா... அதிலேயும் மதனுக்கு உன்னை நிச்சயம் செய்தப்புறம்... நீ ரொம்பவே மாறிட்டே...

    அவங்க வீட்டுப் பழக்கத்துக்கு ஏத்த மாதிரி நீயும் அதிகாலையில் எழுந்திரிச்சு குளிச்சிட்டு பூஜைக்கேத்த பூக்களை தோட்டத்திலேர்ந்து உன் கையாலேயே பறிக்கட்டு வந்து தொடுத்து சாமி படங்களுக்கு போட்டு விளக்கேத்தி யானம் பன்றே...

    சமையல் காரரை வில நிக்கச் சொல் தூக்கிட்டு, நளபாகமும் பன்றே, இந்தக் காலத்துல இப்படியொரு பொண்ணை எங்கேயும் பார்க்க முடியாதுடா...

    சும்மா சொல் லக்கூடாது ரதி மதன் ரொம்பக் கெட்டிக்காரன் தான். தாலி கட்டறதுக்கு முன்னாடியே உன்னை தனக்கேத்த மனைவியா மாத்திட்டானே? 

    பணக்கார வீட்டிலேர்ந்து பொண்ணு இடைச்சு. பேசி தன்மானத்தை அடகு வைச்சுட்டு கிட்டத்தட்ட தலையாட்டி பொம்மையாவே ஆயிடுவாங்க...

    ஆனா மதன் அப்படியில்ல... சுய கவுரவம் கடுகளவு கூட குறைஞ்சு போயிடக் கூடாதுன்னு. வைராக்கியத்தோட வலம் வர வணங்கா முடி!

    இப்படிப்பட்டவன் கையில உன்னை நான் ஒப்படைக்கப் போறேன்கிறதிலே பெரிய பாரம் இறங்கினாப்பல நிம்மதியா இருக்கு ரதி"ன்னு. அப்பா என்கிட்ட சொல்றாரு மதன்!

    அப்பா சொல்றது உண்மை தான். உங்களுக்கு நான் மனைவிடாகப் போறேன்"னு நெனச்சு... நானும் அளவு கடந்த சந்தோஷத்துல இருக்கேன்.  உங்க கிட்ட எனக்குப்பிடிச்சவிஷயங்கள் நிறைய இருக்கு. முக்கியமா உங்க வைராக்கியமும் முன் வைத்த காலை பின் வைக்காத குணமும், சுய கவுரவமும் கரியமும்... என்னை ரொம்பவே ஈர்த்திடுச்சு.

    பைத்தியம் மாதிரி உங்கஃடோவைப் பார்த்தே காலங்கார்த்தால ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன் இல்லையா? . . .

    அந்த அளவுக்கு நீங்க என்னை வசீகரிக்கட்டிங்க மதன், வர்றேன்…. எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு சீக்கிரமா உங்கவிட்டுக்கு வர்றேன்.

    நீங்க உங்க ஆபீசுக்கு கிளம்பறதுக்கு முன்ன..  உங்களைப் பிடிச்சுடறென். ஸூ யூ டார்லிங்"

    மான் போல் துள்ளிக் குதித்து குளியலறையை நோக்கி ஓடிய ரதி… பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு அழகுப் பெட்டகமாகத் திகழ்ந்தாள்.

    அப்பா தாமதுரை நகரில் மிக முக்கியமான பெரும் புள்ளி.. ஏகப்பட்ட நிறுவன்ங்களுக்குச் சொந்தக்காரர் தான்.

    ஆனால் அடிமட்டத்திலிருந்து வந்த மனிதர். குறிப்பிட்ட காலம் வரை தான். பணத்தை சேர்க்க மிகவும் கஷ்டப்பட வேண்டும். அதன் பின்பு அந்தப் பணமே தன்னைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 

    அது தர்மதுரையின் விஷயத்தில் மிகச் சிறப்பாக இருந்தாலும்... சிகரத்தைத் தொட்டுவிட்ட உயர்ந்த ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்ள... அவரும் இன்றளவும் பறந்து பறந்து நிறுவனங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1