Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tokkiyovil Vivek
Tokkiyovil Vivek
Tokkiyovil Vivek
Ebook113 pages57 minutes

Tokkiyovil Vivek

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403022
Tokkiyovil Vivek

Read more from Rajesh Kumar

Related to Tokkiyovil Vivek

Related ebooks

Reviews for Tokkiyovil Vivek

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tokkiyovil Vivek - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    டோக்கியோவில் விவேக்

    Tokkiyovil Vivek

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    ஹாங்காங் இன்டநேஷ்னல் ஏர்போர்ட்டில் - 'ஜப்பான் ஏர்லைன்ஸ்' விமானம் CX 500க்காக - அமர் காத்திருந்த போதுதான் அந்த ஜப்பானியப் பெண் அறிமுகமானாள். ஒயின் நிறம். லேசாய் நீலக்கண்கள். தோல் சீவாத ஆப்பிளின் இரண்டு துண்டங்களை ஒட்ட வைத்த மாதிரி இதழ்கள். பாப் தலை. மூக்கின் நுனியும் கன்னங்களின் சதை மேடுகளும் ஏர்போர்ட் ஃப்ளோரஸண்ட் விளக்கு வெளிச்சத்தால் மின்னின. நல்ல ஆங்கிலம் பேசினாள்.

    நீங்கள் இந்தியா..?

    ஆமாம்...

    உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால்... நான் உங்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமா?

    தாராளமாய்...

    அமர்க்குப் பக்கத்தில் காலியாக இருந்த - பாலிமர் வினைல் நாற்காலியில் உட்கார்ந்தாள் அவள். உட்கார்ந்தபோது - முழங்கால்களுக்கு மேல் உயர்ந்த - அந்த குட்டைப் பாவாடை அவளுடைய வெண்ணெய் தொடைகளைக் காட்டியது. ரம்யமாய் ஏதோ செண்ட் வாசனை சிரித்தபோது தங்கத்தில் ஒரு பல் மட்டும் நான் உயர்ந்த ஜாதிக்காரி என்று சொன்னது.

    என்பேர் நிவியா நுச்சி. ஒஸாகா யூனிவர்சிடியில் தோட்டக்கலை படிப்பு. எனக்கு இந்தியாவைப் பிடிக்கும். இந்தியர்களோடு பேசுவது பிடிக்கும்...

    எதனால் அப்படி? அமர் கேட்டான்

    காரணம் சொல்லத் தெரியவில்லை.

    இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்களா...?

    சிங்கப்பூர் வரை போயிருக்கிறேன், அவ்வளவுதான்...

    இந்தியாவுக்கு வராமலேயே 'ஐ லைக் இண்டியா' என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

    இந்தியாவைப் பற்றி நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். உங்கள் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடிய பெரியவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு துண்டு துணியை மட்டும் ஆடையாக கட்டிக் கொண்டு - பீரங்கிகள் வைத்திருந்த பிரெஞ்ச் அரசாங்கத்தை எதிர்த்த காந்தியை - உங்கள் நாட்டு மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்...

    உங்கள் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    நீங்கள் எந்த விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    சி.எக்ஸ் 500...

    டோக்கியோ போகிறீர்களா?

    ஆமாம்...

    என்ன விஷயமாய்...?

    பிசினஸ்...

    பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்போல் இளமையாய் இருக்கிறீர்கள். இந்த வயதிலேயே பிசினஸா? ஆமாம் என்ன பிசினஸ்...?

    அமர் சிரித்தான். இன்னதென்று இல்லை. ரப்பர், தேயிலை, என்ஜீனியரிங் டூல்ஸ், டெக்டைல்ஸ் அக்ஸஸரீஸ், ட்ராக்டர் ஸ்பேர்ஸ்..."

    யுவர் குட் நேம்...?

    அமர்...

    ஐ... லைக்... இண்டியன் நேம்ஸ் ஆல்ஸோ...

    நீங்கள் எந்த விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    சி.எக்ஸ் 700.

    அது எங்கே போகிறது?

    பாங்காங்... சொன்னவள் தலையை சாய்த்து அமரைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

    பாங்காங் போயிருக்கிறீர்களா...?

    வரும்போது அந்த வழியாகத்தானே வந்தேன்...

    அங்கே தங்கினீர்களா?

    ம்... இரண்டு நாள்...

    பாங்காங் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

    நிரம்ப...

    எங்கெங்கே போனீர்கள்?

    ஃப்ளோட்டிங் மார்க்கெட், ரோஸ் கார்டன், கோல்டன் புத்தா டெம்பிள், இட்டாலியன் மார்பிள் டெம்பிள். தாய் வில்லேஜ்...

    மூங்கில் டான்ஸ் பார்த்திருக்கிறீர்களா?

    ம்...

    ஃபிங்கர் நெய்ல் டான்ஸ்...?

    ம்...

    ஹாங்காங் எப்போது வந்தீர்கள்...?

    நேற்றைக்கு முன் தினம்...

    எந்த ஹோட்டலில் தங்கினீர்கள்?

    ஹார்பர் வ்யூ...

    அருமையான ஹோட்டல்... புருவங்களை உயர்த்திய நிவியா அடுத்த கேள்விகளைக் கேட்டாள். ஹாங்காங்கில் எங்கெல்லாம் போனீர்கள்?

    தி ஃபேமஸ் விக்டோரியா பீச், ஓஸன் பார்க், ஓஸன் தியேட்டர், உலகத்தின் மிகப்பெரிய எஸ்கலேட்டர்...! எல்லாமே அற்புதம்...

    டோக்கியோவில் எங்கே தங்கப் போகிறீர்கள்?

    ஹோட்டல் டோக்கியோ கிராண்ட்...

    அருமையான தேர்வு... இதற்கு முன்னால் டோக்கியோ போயிருக்கிறீர்களா?

    இல்லை. இப்போதுதான் முதல் தடவை.

    டோக்கியோவில் பார்க்க வேண்டிய இடங்களை லிஸ்ட் பண்ணி விட்டீர்களா?

    ஓரளவுக்கு.

    எங்கே லிஸ்ட்டைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    அமர் அவளைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே சொன்னான். இம்பீரியல் பேலஸ் பிளாஸா, டோக்கியோ டவர், டிஸ்னி லாண்ட், ஹஹோன், காமாகுரா, அப்புறம் ஒத்வாரா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ட்ரெயின் பயணம்."

    அவ்வளவுதானா...?

    அவ்வளவுதான்...

    உங்க லிஸ்டில் ஒரு முக்கியமான அயிட்டம் இல்லையே?

    என்ன...?

    நிக்கோ கண்ட்ரி டூர்...

    இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே...

    நிக்கோ கண்ட்ரி அற்புதமான இடம். டோக்கியோவிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம். உலகப் புகழ் பெற்ற தோஸ் ஹோகு விக்கிரகம், யோமெய்மான் கேட், கேகான் நீர் வீழ்ச்சி, சூஸென்ஜி ஏரி... எல்லாமே பார்க்க வேண்டியது...

    நீங்கள் சொன்ன நிக்கோ கண்ட்ரி நீரையும் என் லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்... மிஸ் நிவியா...

    நோ... நான் மிஸ் இல்லை மிஸஸ். என்னுடைய கணவனின் பெயர் நுச்சி. அவரும் நானும் ஒரே யூனிவர்ஸிடியில்தான் படிக்கிறோம்... பை... த... பை உங்களுடைய ஃபிளைட் எத்தனை மணிக்கு...?

    எட்டு மணிக்கு...

    "இன்னமும் இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1