Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thandanai Thappathu!
Thandanai Thappathu!
Thandanai Thappathu!
Ebook107 pages55 minutes

Thandanai Thappathu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402997
Thandanai Thappathu!

Read more from Rajesh Kumar

Related to Thandanai Thappathu!

Related ebooks

Reviews for Thandanai Thappathu!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thandanai Thappathu! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தண்டனை தப்பாது!

    Thandanai Thappathu!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    பஸ் ஷேக்கல்முடியைத் தொட்ட போது சாயந்தரம் ஆறு மணி. சூரிய வெளிச்சத்தை சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்ட அந்த எஸ்டேட் பிரதேசம் பூராவும் 'இருட்டி' சாம்பல் நிறத்தில் படிந்திருக்க - பனிப்புகை காற்று இழுத்து போன பக்கம் அலைந்தது.

    பஸ் நின்றது.

    கண்டக்டர் கத்தினார்.

    யார் ஸார் ஷேக்கல்முடி கேட்டது… சட்டு புட்டுன்னு இறங்குங்க... பஸ்ஸின் முன்புற சீட்டில் உட்கார்ந்திருந்த பவித்ரன் தன் கால்களுக்கு கீழே இருந்த ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு - பயணிகளுக்கு நடுவே நடந்து - புட்போர்டுக்கு வந்தான்.

    கண்டக்டர் எரிச்சல் பட்டான். சீக்கிரமா வாங்க ஸார்... மாப்பிள்ளை அழைப்பு கார் நகர்ந்து வர்ற மாதிரி சாவகாசமா வர்றீங்க... உங்க ஒருத்தருக்காக பஸ் இந்நேரம் நின்னா அவ்வளவுதான்...

    ஸாரி கண்டக்டர்... நான் இந்தப் பக்கம் வர்றது இதுதான் முதல் தடவை... எந்த இடத்துல இறங்கறதுன்னு தெரியாமே அப்படியே உட்கார்ந்துட்டேன்...

    சரி... சரி... இறங்குங்க... லேட்டா இறங்கறதுக்கு சமாதானம் சொல்லிட்டிருந்தா இன்னமும் லேட்டாகும்...

    பவித்ரன் கீழே இறங்கினான்.

    ரைட்ஸ்... கண்டக்டர் கத்த பஸ் பின்புறம் அடர்த்தியாய் புகைவிட்டு நகர்ந்தது. பஸ் நகர்ந்ததும் பவித்ரன் ப்ரீப்கேஸை கீழே வைத்துவிட்டு - குளிரை விரட்டுகிற மாதிரி உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று வைத்து - சூடு பறக்க தேய்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.

    ஷேக்கல்முடி பட்டிக்காட்டுத்தனமாய் தெரிந்தது. இருட்டு கவிந்திருந்த அந்த பிராந்தியம் பூராவும் ஒருவித அமானுஷ்ய அமைதியை சுமந்து கொண்டு நின்றது. சொற்பமாய் ஆள் நடமாட்டம். எங்கோ ஒரு மேட்டில் - ஒரு மனிதனின் தலை தெரியும். உற்று பார்ப்பதற்குள் அந்த தலையும் மறைந்து விடும்.

    பவித்ரன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்தான். கொஞ்சம் தூரத்தில் ஒரு பெட்டிக்கடையும் - அதன் முகப்பில் பளிச்சிட்ட அரிக்கேன் விளக்கு தெரிய - பவித்ரனின் மனசுக்குள் சிகரெட் பிடிக்கும் ஆசை எழுந்தது. பெட்டிக்கடையை நோக்கி மெதுவாய் நடை போட்டான்.

    அந்த இருட்டுகிற நேரத்தில் ஷேக்கல்முடிக்கு வந்து இறங்கிய - பவித்ரனுக்கு இருபத்தெட்டு வயது இருக்கலாம்.

    சத்யராஜ் உயரம். மாநிறத்துக்கும் கறுப்புக்கும் மத்தியப்பட்ட நிறம். உமர் ஷெரிப் மீசை. அதை ஒழுங்காய் ட்ரிம் செய்ததில் முகத்திற்கு நன்றாய் பொதிந்து போயிருந்தது. முரட்டுதனமான ஸ்டோன்வாஷ் சர்ட்டிலும் - பேண்டிலும் கச்சிதமாய் அவனுடைய ஐம்பத்தி ஐந்து கிலோ உடம்பு திணித்திருந்தது.

    பெட்டிக்கடையைத் தொட்டான் பவித்ரன். ஒரு வாழைப் பழத்தார். மிட்டாய் ரகங்களை வயிற்றுக்குள் திணித்துக் கொண்ட நான்கைந்து கண்ணாடி ஜாடிகள். சிகரெட் பற்ற வைப்புக்காக - பலஹீனமாய் எரியும் ஒரு காடா விளக்கு. இவைகளுக்கு மத்தியில் ஸ்வெட்டரோடும் மப்ளரோடும் இருந்த அந்தக் கிழவன் இருமினான்.

    ஃபில்டர் வில்ஸ் இருக்கா...? பவித்ரன் கேட்டான். கிழவன் இருமிக் கொண்டே இல்லையென்று தலையாட்டினான்.

    வேறென்ன சிகரெட் இருக்கு...?

    சார்மினார்...

    சரி குடு... சில்லறையைக் கொடுத்து சிகரெட் வாங்கி - உதட்டுக்குக் கொடுத்து - கத்தரித்து போட்டிருந்த சிகரெட் அட்டையின் துணுக்கை எடுத்து - காடா விளக்கு நெருப்பில் காட்டி - சிகரெட்டின் தலைக்கு சூடு வைத்தான். அது அடர்த்தியாய் புகைந்தது.

    வாய் நிறைய புகையை இழுத்து - வெளியே விட்ட பவித்ரன் அந்தக் கிழவனை ஏறிட்டான்.

    பெரியவரே...

    ம்...

    குருதியாறு எஸ்டேட்டுக்கு எந்த வழியா போகணும்?

    கிழவன் முகம் மாறினான். குருதியாறு எஸ்டேட்டுக்கா...?

    ஆமா...

    அங்கே யாரைப் பார்க்கணும்...?

    ருத்ரய்யா... அந்தக் கிழவன் தான் உட்கார்ந்திருந்த ஸ்டூலை விட்டு மெதுவாய் எழுந்து நின்றான்… குரலில் கொஞ்சம் நடுக்கம் தொற்றிக் கொள்ள கேட்டான்.

    தம்பி உனக்கு எந்த ஊரு...?

    மெட்ராஸ்...

    அந்த ருத்ரய்யாவை எதுக்காகப் பார்க்கப் போறே…?

    அவங்க எஸ்டேட்டுக்கு ஒரு சூபர்வைஸர் வேணும்னு பேப்பர்ல விளம்பரப்படுத்தியிருந்தாங்க... அதான் நேர்ல பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன்...

    தம்பி... கிழவனின் குரல் நடுங்கியது.

    என்ன பெரியவரே...?

    உனக்கு கல்யாணமாயிடுச்சா...?

    இல்லே...

    மெட்ராஸ்ல... உனக்கு கிடைக்காத வேலையா...? இன்னும் கொஞ்ச நேரத்துல பொள்ளாச்சி போற பஸ் இங்கே வந்து நிற்கும்... பேசாம ஏறிப் போயிடு...

    பவித்ரன் ஆச்சர்யப்பட்டான்.

    என்ன பெரியவரே... என்ன சொல்றீங்க...?

    "காரணம் எதுவும் என்னைக் கேட்காதே தம்பி... நீ யாரோ...? யார் பெத்த புள்ளையோ எனக்குத் தெரியாது... உன்னோட நன்மைக்காக சொல்றேன்... பேசாமே ஊர் பார்க்கப் போயிடு. இன்னொரு அரைமணி நேரத்துல சேரன் பஸ் வந்துடும்... நம்ம பெட்டிக்கடை வாசல்லேயே

    Enjoying the preview?
    Page 1 of 1