Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Only Vivek!
Only Vivek!
Only Vivek!
Ebook106 pages56 minutes

Only Vivek!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402998
Only Vivek!

Read more from Rajesh Kumar

Related to Only Vivek!

Related ebooks

Reviews for Only Vivek!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Only Vivek! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒன்லி விவேக்!

    Only Vivek!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    'ஸ்டெம் செல்' என்பது முதிர்ச்சி அடையாத ரத்த வெள்ளை அணுக்களின் (வொயிட் பிளட் செல்) ஒரு வகை செல். இந்த ஸ்டெம் செல்லின் சிறப்பு என்னவென்றால் நம் உடம்பில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதுதான். உடம்பில் பல உறுப்புகளும், நரம்புகளும், திசுக்களும் இருந்தாலும் இந்த அதிசய சக்தி ஸ்டெம் செல்லுக்கு மட்டுமே உண்டு என்பதுதான் ஹைலைட்.

    விவேக்கும், விஷ்ணுவும் மெரீனா கடற்கரையின் பேவ்மெண்ட்டில் ஜாக்கிங் சூட்டோடு நடை போட்டுக் கொண்டிருந்தார்கள். கிழக்கில் சூரியனின் துளியூண்டு மொட்டைத் தலை எட்டிப் பார்க்க - நேரம் விவேக்கின் மணிக்கட்டில் இருந்த டிஜிட்டல் வாட்சில் 6.17. தொலைவில் கடல் யாரையோ 'ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்...' என்று அதட்டிக் கொண்டிருந்தது.

    பாஸ்!

    என்னடா?

    கொஞ்சம் மெதுவாய் நடக்கக் கூடாதா?

    வாக்கிங் ஃபாஸ்ட்டா இருந்தாத்தான் உடம்பு வேர்க்கும். உன்னோட தொப்பை கரையணுமா வேண்டாமா?

    என்ன பாஸ்... இப்படிக் கேட்டுட்டீங்க? கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் ஏழு கிலோ வெயிட் போட்டிருக்கேன். வெயிட் அதிகமானதால என்னோட பர்சனாலிடியோட பர்சன்டேஜ் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு.

    எதிர் வீட்டில் இருக்கிற வேலைக்காரி நாகலட்சுமி கூட என்னை லுக் விடறது இல்லைன்னா பார்த்துக் கொள்ளுங்களேன்...! நான் பழையபடி அஜீத் ரேஞ்சுக்கு வரணும் பாஸ். அதுக்காகத்தானே பாதாம் அல்வாவுக்கு இணையான என்னோட காலை நேரத் தூக்கத்தைத் தியாகம் பண்ணிட்டு உங்களோடு வாக்கிங் வர்றேன்...!

    உன்னோட தொப்பை வெயில்ல வைச்ச வெண்ணெய் மாதிரிக் கரையணும்ன்னா... நீ இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட்டா நடக்கணும்.

    பாஸ்! எனக்கு ஃபாஸ்ட்டாய் நடக்கணும்னு ஆசைதான் பாஸ்... ஆனா முன்னாடி போயிட்டிருக்கிற ப்ரியம்வதா அன்னநடை போடறாளே!

    ப்ரியம்வதாவா... யார்ரா... அது...?

    இருபதடிக்கு முன்னால பாருங்க பாஸ்... ரெண்டு பெரிசுகளோட ராட்சஸ மெகாத் தொப்பைகளுக்கு நடுவுல எல்லோ கலர் ஜாக்கிங் சூட்ல எல்லோரா சிற்பம் மாதிரிப் போறாளே... அவதான்..

    பார்க்கிறதுக்கு நடிகை மாதிரி இருக்கா...!

    நடிகையேதான் பாஸ்...!

    எந்தப் படத்திலும் நடிச்ச மாதிரி தெரியலையேடா!

    பாஸ்! இவ தெலுங்கு நடிகை! இதுவரைக்கும் தமிழ்ல நடிச்சது இல்லை. தெலுங்குல வேகமாய் முன்னேறிகிட்டு வர்றா...!

    ஏன்டா...! நீ தமிழ்ப் படம் பார்த்தே பாதி கெட்டுப்போயிட்டே... இப்ப தெலுங்கையும் விடறது இல்லையா?

    பாஸ்! நான் பாரதியார் பாலிஸியைப் பிடிவாதமாய் ஃபாலோ பண்ணிட்டு வர்றேன்.

    பாரதியார் பாலிஸியா?

    ஆமா பாஸ்... பாரதியார் என்னை மாதிரியான இளைஞர்களுக்கு என்ன சொல்லிட்டுப் போயிருக்கார் தெரியுமா? 'சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே... தோணிகளோட்டி விளையாடி வருவோம்...

    அடப் பாவி!

    பாரதியாரைத் திட்டாதீங்க பாஸ்!

    டேய்..! அவரை ஏன்டா நான் திட்டறேன்...? திட்டினது உன்னைத்தான். தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அவர் பாடின பாட்டை ஏன்டா இப்படி பாய்ஸன் பண்றே?

    "பாய்சனா...! பாஸ்... இது பாயாசம். சாதாரணப் பாயாசம் இல்லை . பால் பாயாசம். பாரதியார் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே'ன்னு சொல்லிட்டுப் போயிருக்கிறார். அதுக்காக '30 நாட்களில் தெலுங்கு கற்றுக் கொள்ளுங்கள்' புத்தகத்தை வாங்கிப் படிச்சிட்டு இருக்கேன்.

    இருந்தாலும் தெலுங்கைத் தப்பு இல்லாமே பாடணும்ன்னா தெலுங்குப் படங்களைத் தவறாம பார்க்கணும் பாஸ். இந்தப் ப்ரியம்வதா சமீபத்தில் நடிச்சுத்திரைக்கு வந்திருக்கிற படம் 'மஞ்சி பில்லா கெட்ட பிள்ளாடு...' சூப்பர் படம் பாஸ். உடம்பு பூராவும் எண்ணெய்யை பூசிகிட்டு நாகார்ஜுனாவோடு ஒரு டான்ஸ் ஆடுவா பாருங்க... தியேட்டருக்குள்ளே சுனாமிதான்!

    அந்தப் படத்தை நீ எங்கேடா பார்த்தே?

    மெலடியில் காலைக் காட்சியாய் போட்டிருக்கான் பாஸ். வர்ற சண்டே உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் ரிசர்வ் பண்ணிடட்டுமா?

    டேய்... நீ திருந்தவே மாட்டியா?

    போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து ரிடையரானதும் திருந்திடுவேன் பாஸ். அதுக்கப்புறம் ஆன்மிகப் பணிதான்! கொட்டிவாக்கத்துக்குப் பக்கத்துல ரெண்டு கிரவுண்டு நிலம் வாங்கி, ஒரு ஆசிரமம் கட்டிகிட்டு செட்டிலாயிடுவேன். பெண்களுக்கு மட்டும் அருள்வாக்கு சொல்லி அவங்களோட கஷ்டத்தையெல்லாம் தீர்க்கிற புனிதப் பணியில் என்னை ஈடுபடுத்திக்குவேன்.

    விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே முன்னால் போய்க் கொண்டிருந்த அந்த ப்ரியம்வதா எதற்கோ திரும்பிப் பார்க்க - விஷ்ணு கையை உயர்த்திக் கேட்டான். மேடம்! பாக... உன்னாரா...? மீ... படமண்ட்டே நாகு... சால... பெட்டு...!

    ப்ரியம்வதா விஷ்ணுவை

    Enjoying the preview?
    Page 1 of 1