Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aadum Varai Aattam
Aadum Varai Aattam
Aadum Varai Aattam
Ebook135 pages1 hour

Aadum Varai Aattam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002979
Aadum Varai Aattam

Read more from Anuradha Ramanan

Related to Aadum Varai Aattam

Related ebooks

Reviews for Aadum Varai Aattam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aadum Varai Aattam - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஆடும் வரை ஆட்டம்...

    Aadum Varai Aattam…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முகவுரை

    பிரியமான வாசகர்களுக்கு,

    வணக்கம். நலம்; நலம்தானே? 'ஆடும் வரை ஆட்டம்...' கொஞ்சம் சினிமாத்தனமானக் கதையாக இருந்தாலும், பரவாயில்லை.... உங்களுக்குப் பிடிக்கும்.

    "என்ன... இவள் இப்படிச் சொல்கிறாளே' என்று பார்க்கிறீர்களா...

    என் தாத்தா வீட்டுக்கு ஒரு வைர நகை செய்கிறவர் வருவார். அவர்தான் வைரங்களை தோஷம் பார்த்து, மதிப்பிட்டுச் சொல்வார். அவர் அடிக்கடி சொல்கிறவார்த்தை இது:

    அம்மா.... வாங்கற வைரத்துனாலே அஷ்ட ஐசுவரியம் வந்துக் கொட்டலையின்னாலும், இடுப்புத் துண்டையும் உருவிட்டுப் போகாம இருந்தாச் சரியின்னு வச்சுக்குங்க... புளூஜாகர் எல்லாம் எங்கே இப்ப கிடைக்குது? எல்லாம் காரைக்குடி ஆச்சிமார் வீட்டு இரும்புப் பெட்டியிலத் தூங்குது... வெள்ளையும், மதுவர்ணமும்தான் புழங்கிட்டு இருக்கு.... ஏதோ, புள்ளி பொறையில்லாம இருந்தா, வாங்கிடலாம்...

    இப்போது போய் இந்த வார்த்தைகள் ஏன் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது என்கிறீர்களா... புளூஜாகர் மாதிரியான ஒசத்தியான நாவல் இல்லை இது..... ஆனாலும் கொஞ்சம் காதல், கொஞ்சம் உருக்கம், கொஞ்சமே கொஞ்சம் மர்மம் சேர்ந்த நாவல் இது.... நாவல் இது....

    ஆனாலும் படிக்கிற மனதை வேறு பாதையில் கொண்டு போகாது. தற்போதுள்ள சீரியல்களை விடவும் நேர்மையாகச் சிந்தித்து, கோர்வையாகக் கொடுத்திருப்பதாகத்தான் எண்ணுகிறேன்.

    இது தற்பெருமை அல்ல. எதையும் என்னுடையது என்கிற கண்ணோட்டத்தில் நான் பார்ப்பதில்லை. என் கதையை நானே குப்பை என்று விசிறியிருக்கிறேன்... ஆனாலும் இது வரையில், எந்தக் கதையையும் பார்த்து, 'அடடா... இத்தனைச் சிறப்பாக நானா இதை எழுதியிருக்கிறேன்' என்று அகமகிழ்ந்துப் போனதில்லை. எல்லாவற்றிலும் சில குறைகள் - எனக்கே எனக்கு மட்டும் தெரியும். என்னைப் போலவே யாராவது ஒருவர், இதைச் சுட்டிக் காட்டினால், அவர் என் நட்புக்கு உரியவராகத் தெரிவார்.

    எப்பொழுதுமே என் சுபாவம்; எழுதி முடிக்கும் வரையில்தான் அந்தக்கதையின் மீது அக்கறை... புத்தகமாக வந்து புரட்டிப் பார்த்த பின்பு எங்கே வைப்பேன் என்று தெரியாது..... அடுப்பங்கரை அலமாரியிலும் இருக்கலாம்; ஆபீஸ் அறை மேஜை மீதும் கிடக்கலாம். இப்படி வெளியாகும் நாவல்களை மட்டுமல்லாது, என் கையெழுத்து பிரதியையும் விடாமல் சேகரித்து பதிப்பகத்துக்கு அனுப்புவது எனது நல்ல நண்பரும், உதவியாளருமான திரு. சர்ச்சில் பாண்டியன்தான். பல சமயங்களில் குறிப்பிட்ட நாவல் எங்கேயுமே கிடைக்காமல் வெளியூர் பழைய புத்தகக்கடையில் இருந்தெல்லாம் வாங்கி வந்திருக்கிறார். அவருக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

    இக்கதையை அழகானப் புத்தக வடிவில் கொண்டு வந்த பூம்புகார் பிரசுரத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி... எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த தொண்டாற்றும் பூம்புகார் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    தவிர வெகு சிறப்பாக முகப்போவியம் வரைந்த திரு. மணியம் செல்வன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    மிகச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்ட பூம்புகார் பதிப்பக ஊழியர்களுக்கும் என் நெகிழ்வான நன்றி.

    அன்புடன்

    அனுராதா ரமணன்

    ***

    1

    என்னவோ தெரியவில்லை. விடிகாலையிலேயே தூக்கம் கலைந்து விட்டது....

    அரசி, தனது இளம் மூங்கில் போன்ற கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தாள்...

    'இத்தனை சீக்கிரம் எழுந்து என்ன செய்வது..?

    'மறுபடி படுக்கலாமா...?

    'கூடாது. இப்படி நீ தூங்குமூஞ்சியாக இருந்தால் எப்படி பரந்தாமன் வீட்டு மருமகளாவதாம்...'

    முதல் நாள் குமரன் சொன்னது நினைவுக்கு வந்தது.....

    எங்க அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர் அரசி... காலையில அஞ்சு மணிக்கு மேல், யாரும் படுக்கையில் இருக்கக் கூடாது. விடிஞ்சதுக்கு அப்புறமாவும் தூங்கறவங்க, செத்த பொணத்துக்குச் சமம்னு சொல்லுவாரு..... இவர் கிட்ட பேச்சு வாங்க பயந்துட்டே எங்கம்மா, நாலரை மணிக்கே எழுந்துடுவாங்கன்னா... பார்த்துக்கயேன்...

    அரசி, ஓரிரு முறை பரந்தாமனை நேரில் பார்த்திருக்கிறாள்....

    அந்த நரைத்த அடர்த்தியான மீசைக்குள் கண்டிப்பும், கறாரும் தெரியும்....

    'இவர் வீட்டு மருமகளாகி, குப்பை கொட்ட முடியுமோ..."

    இப்படியொரு சந்தேகம், அவ்வப்பொழுது அவளை அலைக்கழிக்கும்....

    ஆனாலும் என்ன செய்வது... குமரன், பரந்தாமனின் மகனாகப் போய்விட்டானே...

    அதுமட்டுமல்ல, குமரனுடைய குடும்பம்... அதன் ஒற்றுமை.... எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணன், தங்கை, தம்பி என, பாச நூலால் கட்டியுள்ள நேர்த்தி.....

    அந்த அம்மா....

    குமரன், அவனது தாயின் மடியில் தலைவைத்துப் படுத்து, அவளைச் சீண்டும் போதெல்லாம், என்னவோ, காணாததைக் கண்ட மாதிரி, விழி மலர்த்தியிருக்கிறாள் அரசி.

    அது என்ன கிண்டல்... என்ன கலாட்டா...

    மீனாட்சி..... இந்த முசுட்டு பரந்தாமனை எங்கே யிருந்துப் பிடிச்சே...

    ச்சே..... அப்பாவை இப்படியெல்லாம் மரியாதைக் குறைவாப் பேசக்கூடாது. அதுவும் உன் சிநேகிதி முன்னாலே...

    அவன் தாய் மீனாட்சி போலியாய் சிணுங்குவாள்.

    ''பரவாயில்லே. அதான் சிநேகிதின்னு நீயே சொல்லிட்டியே... மதர்... உன்கிட்ட மட்டும் சொல்றேன்; இப்போதைக்கு உன்னோட அன்பானக் கணவர்கிட்ட எதையும் உளறி வைக்காதே..."

    என்னடா... பீடிகை எல்லாம் பலமா இருக்கு... பரிட்சை ரிசல்ட் வந்துடுச்சா..

    பார்த்தியா..... உன் மகனைப்பத்தி எத்தனை மட்டமா நினைச்சிருக்கே நீ... அதுமட்டுமில்லே.... ஏதோ என்னைப்பத்தி கொஞ்சம் நல்லதனமா நினைச்சிட்டிருந்த அரசியையுமில்லே குழப்பிட்டே...

    ஆமா, போ... உன்கூடப் படிக்கிறா... உன்னைப் பத்தி தெரியாதா..

    அது வேற... ஆளு, நாளைக்கே இவ என் மனைவியா வந்தான்னா...

    என்னடா... குண்டைத் தூக்கிப் போடறே?

    அதான்.... அதான்..... நீ இப்படியெல்லாம் கேட்டு ஆர்பாட்டம் பண்ணுவேயின்னு தெரிஞ்சுதான், உன்கிட்ட ரகசியமாச் சொல்ல வந்தேன். எனக்குப் பெண்டாட்டியா வரப் போறவ எதிரிலேயே என்னைக் கேவலமாப் பேசாதே. அப்புறம், அவ என்னை மதிக்கவே மாட்டா... நான் காபி கேட்டாக்கூட முகத்தைத் திருப்பிட்டுப் போவா. அப்பாவை நீ கவனிக்கற மாதிரி இல்லையின்னாலும்... கொஞ்சமாவது புருஷன்கற மரியாதை வேணுமில்லையா...

    அன்றைக்கு குமரன் சொன்னதும்.... மீனாட்சி, வியப்பும், மகிழ்ச்சியுமாய் அவளை, தன்னுடன் சேர்த்து அணைத்ததும்...

    அண்ணீ..... இப்பவே எங்கம்மா உங்களை காக்கா பிடிக்கறாங்க..... ஜாக்கிரதை...

    இப்படி குமரனின் தங்கை லதாவும், தம்பி மாறனும் கிண்டலடித்ததும்...

    அரசிக்கு அந்த குடும்பம் பிடித்திருந்தது.

    நிச்சயமாய் திருமணத்துக்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்....

    காரணம் - குமரன், இப்பொழுதுதான் படிப்பை முடித்திருக்கிறான். அவன் படிப்புக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்றாலும்...

    பரந்தாமன் சுமக்கும் குடும்பச் சுமைக்கு, அவனும் தோள் கொடுக்க வேண்டும்.

    காவல் துறையில், மிகச் சிறப்பான, பொறுப்பான அதிகாரியான பரந்தாமன், இது நாள் வரையில்

    Enjoying the preview?
    Page 1 of 1