Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Paravai Koondukkulle
Aasai Paravai Koondukkulle
Aasai Paravai Koondukkulle
Ebook90 pages40 minutes

Aasai Paravai Koondukkulle

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002991
Aasai Paravai Koondukkulle

Read more from Anuradha Ramanan

Related to Aasai Paravai Koondukkulle

Related ebooks

Reviews for Aasai Paravai Koondukkulle

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Paravai Koondukkulle - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஆசைப் பறவை கூண்டுக்குள்ளே...

    Aasai Paravai Koondukkulle…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    சீரும், சிறப்புமா இருக்கணும்மா-ராமச்சந்திரனின் குரல், மகளை ஆசீர்வதிக்கும்போதே தழுதழுக்கிறது.

    பேரும், புகழுமா இருக்கணும்னு சொல்லுங்கோ அப்பா.- இது அவரை குனிந்து வணங்கி எழுந்த மாலாவின் குரல்.

    சீதா, இருவரையும் பார்த்தபடி கண்கலங்க நிற்கிறாள், தன் கணவரால், பெற்ற மகள்களை, சீரும் சிறப்புமாய் வாழ வைக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை விடவும் - இந்த மட்டும் வாயார வாழ்த்துவதற்காகவாவது அந்த ஜீவன். இன்னமும் உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்கிற திருப்திதான் அவள் முகத்தில்.

    என்ன செய்வது? வேண்டிய மட்டும் வாழ்ந்தாயிற்று! பணத்தில் புரண்டாயிற்று. பணம் இருந்தபோது- ஆறும் பெண்களாய்ப் பிறந்த துக்கம்கூட, அந்தத் தம்பதியர்க்கு இல்லை.

    ஏண்டி வரிசையா பெண்ணாப் பெத்துத்தர்றதா என் அம்மாவுக்கு ஏதாவது சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கியோ. - இதைக் கேட்கும்போதே, அவரது இதழ்கடையில் புன்னகை நெளியும். சில சமயங்களில் குறும்பாகக் கூடக் கேட்பார்: அடுத்ததாவது பிள்ளையாப் பொறக்கும்னு ஆறு தடவை பரிட்சை பண்ணிப் பார்த்தாச்சு. போதும்னு நான் நினைக்கறேன். நீ என்ன நினைக்கறே?"

    இப்படிக் கிண்டலும், கேலியுமாகத்தான் சொல்வாரே தவிர, எல்லாமே பெண்ணாகப் போனதற்காக அவர் ஒரு தடவைகூட அலுத்துக்கொண்டதே இல்லை.

    துக்கமும், ஏக்கமும் எப்பொழுதிலிருந்து ஆரம்பம்?

    நினைத்துப் பார்த்தால் இந்த நிமிஷம் கூட ராமச் சந்திரனுக்கு தேகம் வியர்த்து கொட்டும்.

    சென்னையிலேயே பிரபல கிரிமினல் வக்கீலாக கொடி கட்டிப் பறந்த காலம் அது.

    மூத்த இரண்டு பெண்களுக்கும், இனிமேல் இப்படியொரு கல்யாணம் நடக்காது என ஊரே வியக்கும்படி திருமணங்களை முடித்திருந்தார்.

    இத்தனைக்கும், மூத்த பெண்கள் இருவருக்கும் வயசொன்றும் பிரமாதமாக ஆகிவிடவில்லை.

    பதினாறும், பதினெட்டும் ஒரு வயசோடு சேர்த்தியா?

    இந்தக் காலத்தில் பதினெட்டு வயசுப் பெண் ஜீன்ஸும், ஷர்ட்டுமாய் தலைமுடியைப் பறக்கவிட்டுக் கொண்டு, கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி சுதந்திரமாய் திரிவது போக

    அந்த நாளில், இதற்கே வயசாகிவிட்டது ; வயசாகி விட்டது எனப் பறந்து வழிந்து கொண்டு கல்யாணத்தை முடித்தவர் அவர்.

    மூன்றாமவள் சாந்தா, நாலாமவள் சரசு, ஐந்தாவது பெண்ணான மாலதிக்கு வயசு அப்பொழுது எட்டு, கடைக் குட்டி பூரணிக்கு நாலு வயசு.

    கல்யாண அமர்களம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருக்குமா?

    அவ்வளவு தான் இருக்கும். இன்னமும் வீட்டில் சந்தன மணமும், பூ மணமும் நிரம்பியிருப்பது போன்றதொரு பிரமை.

    வக்கீல் குமாஸ்தாவின் ஒரே மகனும், ராமச்சந்திரனின் அன்புக்குப் பாத்திரமானவனுமான பதினெட்டு வயசு விஜயன்-சத்திரத்தில் மிகுந்து போன மளிகை சாமான்களை வீட்டுக்குக் கொண்டுவந்து இறக்கிக்கொண்டிருக்க-

    பட்டப்பகலில், உச்சி வெய்யிலில், மதிய உணவுக்காக சாந்தாவும், சரசுவும் பொரியும் வெய்யிலில் வீடு திரும்பிக் கொண்டிருக்க -

    குழந்தைகள் வீட்டு வாசலை நெருங்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

    ராமச்சந்திரனின் வாதத் திறமையால் ஆயுள் தண்டனை எப்போதோ, பதினைந்து வருஷங்களுக்கு முன் பெற்ற கைதி- திட்டம் போட்டாற்போல எங்கிருந்தோ ஓடி வந்தான்.

    இவன் விடுதலை பெற்ற விவரத்தைக்கூட, ராமச் சந்திரன் மறந்துபோய்விட்ட நேரம் அது

    சாந்தாவைப் பிடித்தவன், அவளது நீண்ட பின்னலையே சுருக்குக் கயிறாக்கி- அவள் திமிறத் திமிற இறுக்கிப் பிடிக்க,

    "அடுத்தவள் சரசுவின் ஓலம் வீட்டுக்குள் எட்டி, அத்தனை பேரும் வாசலுக்கு ஓடி வந்தபோது- குழந்தை அறுத்துப் போட்ட மல்லிகைக்கொடி மாதிரி, வீட்டு வாசலில் காலையில் தானே பார்த்துப் பார்த்துப் போட்ட கோலத்தில் உயிரற்றுக் கிடந்தாள்.

    சரசுவின் அலறல் ஓயவே இல்லை.

    இத்தனைக்கும் காரணமான வன் மாயமாய் மறைந்து விட்டான்.

    ஒரு வாரத்துக்கு முன் ஒரே நிறப் பட்டுப் பாவாடையும் சட்டையுமாய் வளைய வந்த குழந்தைகளில், இந்த ஒரு குழந்தை மட்டும், சீக்கிரம் திரும்பி வந்துவிடுவதாய் கடவுளிடம் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்ததுபோல, போய்விட்டது.

    சீதா, தரையில் விழுந்து புரண்டு அழ- ராமச்சந்திரன் மகளுக்குக் கொள்ளி வைத்துவிட்டு வந்தவர் தான்- அப்புறம் எழுந்திருக்கவே இல்லை.

    தரையில் புரளும் மனைவியைத் தூக்கியவர் - வலது பக்கம் முழுவதுமே பக்கவாதம் பலமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1