Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Unai Neenga Maatten
Naan Unai Neenga Maatten
Naan Unai Neenga Maatten
Ebook141 pages51 minutes

Naan Unai Neenga Maatten

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603024
Naan Unai Neenga Maatten

Read more from Lakshmi Praba

Related to Naan Unai Neenga Maatten

Related ebooks

Reviews for Naan Unai Neenga Maatten

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Unai Neenga Maatten - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    நான் உனை நீங்க மாட்டேன்!

    Naan Unai Neenga Maatten!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author//lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    'குரங்கனி' எஸ்டேட்!

    பச்சைப் பசேல் என்று காண்போரின் விழிகளைக் கட்டிப் போட்டது.

    எங்கு திரும்பினாலும் பசுமை தான்...!

    சில்லென்ற குளுமை தான்...!

    செழிப்பான பூமி...!

    அமைதியாக வாழ்ந்த மலை கிராமத்து வாசிகள்...!

    ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி போன்ற பகுதிகளில்... இயற்கை அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும்.

    ஜன சந்தடி, கூட்ட நெரிசலில் அதுபோன்ற பகுதிகள் ஏகத்திற்கும் மாசுபட்டு... இயற்கைப் பொலிவினை இழக்கத் தொடங்கி விட்டிருந்தன.

    சில சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அலுத்துப்போனதால்... கூட்ட நெரிசல் இல்லாத... இயற்கை அழகும் ரம்யமும் நிறைந்த, மாசுபடாத இடங்களைத் தேடி வர ஆரம்பித்து விட்டனர்.

    அதிலும் 'கும்கி' திரைப்படம் வெளிவந்த பின்பு... குரங்கனி எஸ்டேட்டைத் தேடி... இயற்கை அழகை ரசிப்பவர்கள் ஜீப்புகளிலும் கார்களிலுமாய் வரத்தொடங்கினர்.

    குரங்கனியில் தங்குவதற்கு விடுதிகளோ கெஸ்ட் ஹவுஸ்களோ இல்லைதான்...

    'தேனி’யில் விடுதியை அமர்த்தி விட்டு... இங்கு தினமும் வந்து சுற்றிப் பார்த்து விட்டு சிலர் சென்றனர்.

    பயணிகளின் ஆர்வத்தைப் பார்த்த உள்ளூர் வாசிகள் சிலர்... தங்களது வீட்டின் முன் பகுதியையோ, பின் பகுதியையோ ஒதுக்கித் தந்து வாடகைக்கு விட்டு... பணம் சம்பாதிக்கத் தொடங்கினர்.

    இதைப் பார்த்த ஒண்டு குடித்தன வாசிகள்... பணத்திற்கு ஆசைப்பட்டு… இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு... ஒதுக்குப்புறத்தில் குடிசை போட்டுக்கொண்டு வசிக்கலானார்கள்.

    குரங்கனி எஸ்டேட்டின் மத்தியில்... மேட்டுப் பகுதியில் பெரிய ஓட்டு வீடு இருந்தது.

    அதன் முகப்பில்... 'அன்னம் மெஸ்' என்ற போர்டு மாட்டப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்பகுதியைத் தடுத்து... மெஸ்ஸை நடத்திவந்தார்கள்.

    குரங்கனி எஸ்டேட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு... அன்னம் மெஸ்ஸை விட்டால் வேறு போக்கிடம் இல்லை.

    வீட்டுச்சுவையுடன் சுடச்சுட உணவு கிடைப்பது... அதிலும் அந்த மலை கிராமத்தில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?...

    அதனால்... 'அன்னம் மெஸ்’ஸில் சதா சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் 'ஜே ஜே' என்று அலைமோதியது.

    வீட்டின் பின்பக்கத்து கதவைத் திறந்து வெளிப்பட்டாள் சுரபி

    அங்கு சின்னதாய் ஒரு தோட்டம்...!

    நான்கைந்து கீரைப் பாத்திகள்... கறிவேப்பிலைச் செடி... நெல்லி மரம்... செம்பருத்திச் செடி... தக்காளி, வெண்டைச் செடிகள்...

    நெய் மிளகாய் செடிகள்...

    தோட்டத்தைத் தாண்டி மரவேலி போடப்பட்டிருந்தது.

    இடுப்பளவு மரவேலிதான்...! சுரபி பெரிய உருளையில் அரிசி களைந்த தண்ணீரை எடுத்து வந்து நெல்லிச் செடிக்கும், நெய் மிளகாய் செடிக்கும் ஊற்றினாள்.

    ஒரு அடி மட்டுமே உயரமுள்ள நெய் மிளகாய் செடியில் ஏகப்பட்ட மிளகாய்கள் காய்த்திருந்தன.

    சுண்டுவிரல் பருமனில் ஒரு இஞ்ச் அளவே உள்ள நெய் மிளகாய்கள்...!

    சுரபி குனிந்து அமர்ந்தாள். கரும் பச்சை வண்ணத்தில் எண்ணெயில் முக்கி எடுத்தாற்போல் மினுமினுத்த மிளகாய்களைத் தொட்டுப் பார்த்தாள்.

    நெய் மிளகாயைப் பார்த்தாலே அவளுக்கு அம்மா அன்னத்தின் ஞாபகம் வந்து விடும்.

    அன்னம் சாம்பார் வைத்தால்... சுற்று வட்டாரமே கமகமக்கும்.

    அன்னத்திற்கு நல்ல கைப்பக்குவம்...! சாம்பாருக்கு ஒரே ஒரு நெய் மிளகாயை அரிந்து போடுவாள்.

    அம்மா...! இதுக்கு ஏம்மா நெய் மிளகாய்னு பேர் வந்துச்சு?

    சுரபி முன்பு அம்மாவிடம் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.

    "இந்த மிளகாய் வனாந்தரத்திலும், குளிர்ச்சியான மலைப் பிரதேசத்திலும் மட்டும் தான் காய்க்கம்.

    ஒரு மிளகாயைக் கிள்ளிப் போட்டா போதும்... நெய்யை ஊத்தி சாம்பார் வச்ச மாதிரி கமகமன்னு வாசனையா ருசியைத் தரும். அதுக்குத்தான் இப்படியொரு பேர் வந்துச்சு..."

    பெருமூச்சு விட்டபடி சுரபி எழுந்து நின்றாள். எதிரே பார்த்தாள்.

    இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய் வானவில் தோன்றியிருந்தது.

    வான் எதிரே தெரிந்த பசேல் என்ற மலை... வானவில்லை மாலையாக சூடிக் கொண்டாற் போல் இருந்தது.

    சுரபி, வேலியின் அருகே சென்றாள். கீழே சலசலவென்ற சப்தம்...!

    வேலிக்கு அப்பால் பெரிய பள்ளம் தான்... அழகாய் ஒரு நதி ஜதி போட்டுக் கொண்டு ஓடியது.

    எதிரே மேலே தெரிந்த வானவில்லையும், சலசலத்து ஓடிய நதியையும் பார்த்தபடி... சில கணங்கள் லயித்து நின்றுவிட்டாள்.

    சுரபி! அடியே...! அங்கே என்ன பண்றே? கழுநீரை ஊத்தப் போனவ... வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டியா? இங்கே தலைக்கு மேல் வேலை கிடக்கு இல்ல?

    அந்தப் பிரதேசமே கிடுகிடுக்கும்படி சித்தி வைரம் கத்தினாள்.

    திடுக்கிட்டு திரும்பிய சுரபி, ஓட்டமும் நடையுமாக இதோ வந்துட்டேன் சித்தி!என்றபடி உள்ளே விரைந்தாள்.

    சித்தி வைரத்துக்கு வெண்கலத் தொண்டை! மெல்லிய குரலில் அவளுக்குப் பேசவே தெரியாது

    ஏண்டி... இவளே...! மெஸ்ஸுக்கு கொஞ்ச நேரத்துலே டிபன் சாப்பிட ஆளுங்க- திமுதிமுன்னு வந்துடுவாங்களே? வெண் பொங்கல் ரெடி பண்ண வேணாம்?

    அதட்டினாள்.

    உலையிலே அரிசியைப் போட்டுட்டுத்தான் சித்தி... கழு தண்ணியை செடிக்கு ஊத்தப் போனேன்...

    சன்னமான குரலில் பதிலளித்தாள் சுரபி.

    அப்ப... மத்த வேலைங்க என்னாகறது? உளுந்தை அரைச்சாச்சா? வடை போடணுமே? ரெண்டு வகை சட்னி பண்ணணும். இடியாப்பத்துக்கு வடைகறிக்கு வேற மசால் அரைக்கணுமே?...

    உளுந்து மாவை அரைச்சு ஃபிரிஜ்ஜுலே வச்சுட்டேன். தேங்காய் சட்னியும் வெங்காய சட்னியும் அரைச்சுட்டேன். தாளிச்சு கொட்டி எடுத்து வச்சுருக்கேன். வடைகறிக்கும் மசால் ரெடியா இருக்கு சித்தி...!

    அதானே பார்த்தேன்... சரி... சரி... மசமசன்னு நிக்காம... தூவக்கால்லே சாம்பிராணியைப் போட்டு கல்லாப் பெட்டியிலே கொண்டு காமி... கஸ்டமருங்க சாப்பிட வந்துரு வாங்க...

    சரிங்க சித்தி...!

    'எள் என்றால் எண்ணெயாக நிற்கிறாளே? இவளை மேற்கொண்டு திட்ட முடியவில்லையே?' என்ற அங்கலாய்ப்புடன் நகர்ந்தாள் வைரம்.

    தூபக் காலில் சாம்பிராணியைப் பற்ற வைத்து... இவள் நேரே வாசலுக்குச் சென்றாள்.

    நிலை வாசற்படிக்கு புகையைக் காண்பித்துவிட்டு... கல்லாப்பெட்டியருகே இருந்த காமாட்சி படத்துக்கும் அதன் பின் மேஜை கல்லாப்பெட்டிக்கும் புகை காண்பித்தாள்.

    அப்பா சதாசிவம் நறுக்கிய வாழையிலைக் கட்டோடு உள்ளே வந்தார்.

    சுரபி! காக்கை வச்சாச்சா?

    சமைச்ச கையோட முதல்லே எடுத்து வச்சுட்டேன் அப்பா...!

    எ... என்னம்மா உன் முகம் வாட்டமா இருக்கு?

    இல்லியேப்பா... நான் நார்மலாத்தான் இருக்கேன்...

    "சித்தி எதுவும்

    Enjoying the preview?
    Page 1 of 1