Neruppu Nimishangal
By Rajesh Kumar
4/5
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Sorgam Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Neruppu Nimishangal
Related ebooks
Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyirin Niram Ootha Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Saadhal Samrajyam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Washindonil Vivek Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsVidaisol Vivek Rating: 5 out of 5 stars5/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Brahma Rating: 0 out of 5 stars0 ratingsAvasaram Vivek, Avasaram! Rating: 4 out of 5 stars4/5Karuppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Mohana Mupathu Naal Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Oru Thuli Kadal Rating: 2 out of 5 stars2/5Vidhi Vithikkiren Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKannale Kollathey! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Kollathea Please Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ondru Irandu Iranthu Vidu Rating: 3 out of 5 stars3/5Paal Nila Raathiri Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Nooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Neruppu Nimishangal
5 ratings0 reviews
Book preview
Neruppu Nimishangal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
நெருப்பு நிமிஷங்கள்
Neruppu Nimishangal
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைவாக ஆராயப்பட்டவை வால் நட்சத்திரங்கள்தான். காரணம் எப்போதும் நம் பார்வையில் பட்டுக் கொண்டிருக்கும் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் வால் நட்சத்திரங்கள் ஒரு நூற்றாண்டில் இரண்டு அல்லது மூன்று முறைகளே தோன்றுகின்றன. வானத்தின் ஏதாவது ஒரு திசையில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் ‘உள்ளேன் அய்யா’ என்று காட்சி கொடுத்துவிட்டு பிறகு டாட்டா காட்டி விட்டுப் பால்வெளி மண்டலத்துக்குள் காணாமல் போய் விடும். அளவில் சிறியதாக இருப்பதாலும் காற்று மண்டலத் தடைகளாலும் இந்த ஸ்பெஷல் வால் நட்சத்திர விருந்தாளிகளை கண்காணிப்பது, ஆராய்வது என்கிற பணி வானவியல் விஞ்ஞானிகளுக்கு சுவாரஸ்யமான தலைவலி.
***
அமெரிக்க நாஸாவின் கேலக்ஸி பிரிவு.
மிகப் பெரிதாய் பிரும்மாண்டம் காட்டிய மெகா அஸ்ட்ரா டெலஸ்கோப்புக்குக் கீழே நிகில் நின்றிருந்தான் டெலஸ்கோப்பின் ஆப்ஜெக்ட் லென்ஸ் இருந்த இடத்தில் கூரையில் கோழி முட்டை வடிவத்தில் திறந்து வைக்கப்பட்ட பாலிமர் கதவின் திறப்புத் தெரிய- அந்தத் திறப்பின் வழியே அட்டைக்கரி நிறத்தில் இருட்டான வானம் பார்வைக்குக் கிடைத்தது. அந்த இருட்டின் பின்னணியில் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் குண்டூசித் தலை பருமனில் ஒளிப் புள்ளிகளாய்த் தெரிந்தன.
வ்யூ ஃபைண்டரில் கண்ணை வைத்து இருட்டு வானத்தைப் பார்த்துச் சீன் ஆஃப் அஸ்ட்ராவுக்குத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்த நிகில் பின்னால் திரும்பிப் பார்த்துக் குரல் கொடுத்தான்.
ரினி! ஒரு நிமிஷம் இங்கே... வா…
கூப்பிட்ட நிகில் இருபத்தியேழு வயதுத் தமிழ்நாட்டு இளைஞன். மூளையின் அத்தனை நியூரான்களிலும் எக்கச்சக்க ஐ.க்யூ.
நிகில் கூப்பிட்டதைக் கேட்டு கம்ப்யூட்டரின் மானிட்டருகுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ரினி நீலநிற வெல்வெட் தரித்த வட்டமான குஷன் ஸ்டூலைப் பின்னுக்கு நகர்த்தி எழுந்து வந்தாள். ரோஜா தன்னுடைய வண்ணத்தையும், மென்மையையும் ரினிக்கு இலவசமாய் வழங்கியிருந்தது, நான்கு வருடங்களுக்கு முன்னால் நிகிலுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒன்றாய்ப் படித்தவள். அமெரிக்க எம்பஸியில் நடந்த இண்டர்வ்யூவில் ஆரோக்கியமான மதிப்பெண்கள் வாங்கி நிகிலோடு ஒன்றாகவே நாஸாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவுக்கு வந்தவள். அன்றைய நிமிஷம் இருவருமே நாஸா என்கிற கோட்டைக்குள் அதிமுக்கியமான விண்ணியல் நிபுணர்கள்.
என்ன நிகில்...?
கேட்டுக் கொண்டே அவனை தெருங்கினான் ரினி.
டெலஸ்கோப்பின் ‘ஐ பீஸில்’ கண்ணை வெச்சு கொஞ்சம் பாரு...
ரினி டெலஸ்கோப்பிடம் குணிந்தாள்.
ஸ்பைரல் ஸ்விட்ச்சை ஆன் பண்ணு...
பண்ணினாள்.
வெள்ளைக் கோடுகளுக்குப் பின்னால் வானம் ‘திடும்’ மென வெகு பக்கத்தில் வந்து நின்றது.
நிகில் கேட்டான்.
ஸ்பைரல் ஸ்டேஜ் கேலக்ஸி தெரியுதா?
சுழலும் மின்விசிறியைப் போல் பரவிக் கிடந்த ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தபடி தலையசைத்தாள் ரினி.
ம்... தட் ஈஸ் உர்ஸா மேஜர்...! அதுக்கென்ன?
அந்த உர்ஸா மேஜர்க்கு நாலு யூனிட் லைன் தள்ளிப் பாரு
பார்த்துவிட்டு சொன்னாள்.
ஒரு வெளிச்சப் புள்ளி தெரியுது.
அதை ஜூம் பண்ணு.
ரினி டெலஸ்கோப்பின் அட்ஜஸ்மேண்ட் குமிழ்களைத் திருகினாள். அப்போது அந்த வெளிச்சப் புள்ளி பெரிதாகி பிரகாசமாய்ப் பார்வைக்குக் கிடைத்தது. அந்த புள்ளிக்கு வலப்பக்கமாய் ஒரு வெளிச்ச வால்.
அது என்னான்னு தெரியுதா?
தெரியாமே என்ன...? ரோவர் வால் நட்சத்திரம்.
அதைக் கொஞ்சம் அப்ஸர்வ் பண்ணு.
ஏன் நிகில் அதுக்கு என்ன...?
போன வாரம் பார்த்தபோது இருந்த அதனோட மூவ்மெண்ட்ஸுக்கும் இன்னிக்குப் பார்க்கிற மூவ்மெண்ட்ஸுக்கும் லேசா வித்தியாசம் தெரியும்.
ரினி மறுபடியும் டெலஸ்கோப்பின் ஐபீஸில் கண் வைத்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தாள்.
எனக்கு அது மாதிரித் தோணலையே?
அவசரப்படாமே நிதானமாப் பாரு...
என்ன நிகில் நீங்க...? நம்ம சீஃப் சயன்டிஸ்ட் ரோவர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச வால் நட்சத்திரம் அது. அவர் அதைக் கண்டுபிடிச்ச சாதனைக்காக அவரோட பேரையே அந்த வால்நட்சத்திரத்துக்கு நாஸா நிர்வாகம் சூட்டி அதைக் கண்காணிக்கிற பொறுப்பையும் அவருக்குக் கொடுத்திருக்கு. ரோவர் நேத்துக் கூட அதை அப்ஸர்வ் பண்ணி மானிட்டரில் பார்த்துட்டிருந்தார். நீங்களும் நானும் கூட அவர் பக்கத்துல இருந்தோம். அப்படி வால் நட்சத்திரத்தோட மூவ்மெண்ட்ஸில் ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சிருந்தா நம்மகிட்ட அப்பவே சொல்லியிருப்பாரே...?
வால் நட்சத்திரத்தைப் பத்தி அவரோட ஸ்டேட் மெண்ட் என்ன ரினி…?
ஜூன் மாசம் இருபத்தி மூணாம் தேதி அதாவது, இன்னும் பத்து நாளில் அந்த வால்நாட்சத்திரம் பூமிக்கு அருகாமையில் கடந்து போகும்ங்கிற தகவலையும் அவர் அன்னிக்கே கண்டு பிடிச்சு சொல்லிட்டாரே! இன்னிக்கு வரைக்கும் அந்த ஸ்டேட்மெண்ட் தானே...?
நிகில் கவலையாய் நெற்றியைத் தேய்த்தான்.
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு ரினி.
என்ன சந்தேகம்...?
சீஃப் சொன்ன மாதிரி அந்த வால்நட்சத்திரம் பூமிக்குப் பக்கத்துல வந்து கடந்து போயிட்டா பரவாயில்லை. அதுக்கு மாறாக...
அதுக்கு மாறாக...?
பூமி மேலேயே வந்து மோதிட்டா?
ரினி தன் பெரிய கண்களை திகிலில் விரித்தாள்.
நிகில்...! வாட்.... நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்?
நோ...ரினி...ஐயாம் டாக்கிங் வித் சென்ஸ், நீ மறுபடியும் டெலஸ்கோப்பில் பார்...
நீங்க புதுசா என்னமோ கண்டுபிடிச்ச மாதிரி சொல்றீங்க... இப்படி ஒரு பரபரப்பை வெளியிட்டு நம்ம சீஃப்பைவிட பெரிய ஆள் ஆயிடலாம்ன்னு பார்க்கறிங்களா?
ரினி...ஐயாம் டாக்கிங் சீரியஸ்லி... அறுபது டிகிரி கோணத்தில் மூணாவது யூனிட்டில் தெரிய வேண்டிய அந்த வால் நட்சத்திரம் நாலாவது யூனிட்டில் தெரியுது. இன்டர்பேஸ் கம்ப்யூட்டரில் ரோவர் வால் நட்சத்திரம் பத்தின டெக்னிக்கல் டீடெய்ல்ஸை ரெஃபர் பண்ணிப் பாரு...
நிகிலின் பதட்டம் ரினியையும் தொற்றிக் கொண்டது. அவள் கம்ப்யூட்டர்க்கு வந்து மானிட்டர் திரையில் பாத் டைப் செய்தாள். கலர் மானிட்டரில் ரோவர் வால் நட்சத்திரம் பார்வையைக் கூச வைக்கிற பிரகாசத்தோடு மெலிதான ஊதா நிறத்தில் மின்னியது. அதற்கு அருகில் ஒரமாய் விழுந்த விண்டோவில் வாணஇயல் சம்பந்தப்பட்ட விபரங்கள் கோட் வார்த்தைகளோடு அடிக்கோடிட்டது.
"இன்னிக்குத்