Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruvannamalai
Thiruvannamalai
Thiruvannamalai
Ebook314 pages2 hours

Thiruvannamalai

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

இந்த நாவல் அஷ்டமா சித்தி வரிசையில் இறுதியாக எழுதியது. 'அணிமா, மகிமா, இலஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வம், ஈசாத்வம்' என்று எட்டு சக்திகளை நமது ஆன்மிக சாதகர்களும் யோகிகளும் அஷ்டமா சித்திகளாக குறிப்பிடுகிறார்கள்.

எட்டு சித்திகளில் எட்டாவதான ஈசத்துவத்தை அடைந்தவர்கள் எந்த நிலையிலும் மீதமுள்ள ஏழு சித்திகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர்கள் வாழ்வில் அவசியங்களும் இல்லாமல் போய் விடுவதே உண்மை.

கதையின் நாயகன் ஈசத்வத்தை பிறப்பிலேயே அடைந்துவிட்ட ஒருவன். அதற்கேற்பவே அவன் செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. மறைமுகமாக திருவண்ணாமலை பற்றி அறிந்து கொள்ள முயல்பவர்களுக்கும் இந்நூல் சிறிதளவு துணை செய்யலாம்.

அஷ்டமாசித்து பற்றி அறியாதவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இந்த நாவல்கள் அமைந்ததாக பலர் குறிப்பிட்டனர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703086
Thiruvannamalai

Read more from Indira Soundarajan

Related to Thiruvannamalai

Related ebooks

Related categories

Reviews for Thiruvannamalai

Rating: 3.25 out of 5 stars
3.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruvannamalai - Indira Soundarajan

    www.pustaka.co.in

    திருவண்ணாமலை

    Tiruvannamalai

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பபொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    என்னுரை

    இந்த நூலில் உள்ள நாவல் நான் அஷ்டமா சித்தி வரிசையில் இறுதியாக எழுதியது.

    'அணிமா, மகிமா, இலஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வம், ஈசாத்வம்' என்று எட்டு சக்திகளை நமது ஆன்மிக சாதகர்களும் யோகிகளும் அஷ்டமா சித்திகளாக குறிப்பிடுகிறார்கள்.

    இந்த எட்டையும் ஒருசேர அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை செய்து பார்த்தால் நடப்பு உலகில் ஒருவருமே கண்ணில் படவில்லை. காஞ்சி பரமாச்சாரியாரை ஒரு அஷ்டமா சித்தி வசப்பட்ட அருளாளராக நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆனாலும் அவற்றை அவர் பயன்படுத்தியதைப் பார்த்தவர்கள் இல்லை.

    நானறிந்தவரை எட்டு சித்திகளில் எட்டாவதான ஈசத்துவத்தை அடைந்தவர்கள் எந்த நிலையிலும் மீதமுள்ள ஏழு சித்திகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர்கள் வாழ்வில் அவசியங்களும் இல்லாமல் போய் விடுவதே உண்மை.

    பிள்ளையாக இருக்கும் போது பாண்டி விளையாடியவர்கள் முதுமையில் அதை எண்ணி வேண்டுமானால் பார்ப்பார்கள். ஆனால் ஒருக்காலும் மீண்டும் பிள்ளைகளுடன் வந்து அதை எப்படி ஆடிப் பார்க்க மாட்டார்களோ அப்படித்தான் இதுவும். பொதுவில் அஷ்டமாசித்து வரிசை நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

    அஷ்டமாசித்து பற்றி அறியாதவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இந்த நாவல்கள் அமைந்ததாக பலர் குறிப்பிட்டனர்.

    நமது இந்து மதத்தின் வலிமையை குறிப்பாக ஆன்மிக வலிமையை உணர இந்த நாவல்கள் துணை செய்ததாக கூறியவர்களும் உண்டு.

    இந்த நாவலின் களம் திருவண்ணாமலை!

    அதையே தலைப்பாகச் சூட்டியுள்ளேன்.

    கதையின் நாயகன் ஈசத்வத்தை பிறப்பிலேயே அடைந்துவிட்ட ஒருவன். அதற்கேற்பவே அவன் செயல்பாடுகளும் அமைந்துவிட்டன.

    மறைமுகமாக திருவண்ணாமலை பற்றி அறிந்து கொள்ள முயல்பவர்களுக்கும் இந்நூல் சிறிதளவு துணை செய்யலாம்.

    இந்திய மண்ணில் அது ஒரு மர்ம பூமி. ஏராளமான சித்தர்கள் புதைந்து போய் அருள் உடம்போடு வலம் வந்தபடி இருக்கும் ஒரு விசித்ர பூமி அது. புராணப்படி அது அக்னிஸ்தலம்.

    அங்குள்ள அண்ணாமலையின் பெருங் கருணையே நான் இதை எல்லாம் எழுதவும் காரணம்.

    இந்த நாவல் வரிசையைத் தொடர்ந்து நான் தொட்டிருப்பது சப்தகன்னியர்களை... ஸ்ரீ சக்தியின் உபதேவியர்களான இவர்கள் பற்றியும் கதைப் போக்கில் நாவல்கள் வர இருக்கின்றன. அதையும் வாங்கிப் படியுங்கள்.

    பணிவன்புடன்

    இந்திரா செளந்தர்ராஜன்

    திருவண்ணாமலை

    அத்தியாயம் 1

    ‘இந்த உலகம் இரண்டு விதமான நிலைகளில் தான் இயங்குகிறது. அதில் ஒன்று - உயிருள்ளவை. இன்னொன்று - ஜடம்! ஜடம் என்பது அசைவற்றது; துடிப்பற்றது. போட்ட இடத்தில் கிடக்கும். ஆனால் உயிருள்ளவை அப்படி கிடக்காது. உயிருள்ள தாவரமோ, விலங்கினமோ, மனிதனோ நொடிக்கு நொடி ஒருபுறம் அழிந்து, மறுபுறம் வளர்ந்து கொண்டேயிருப்பவை. வளர்ச்சி என்பதை மாறுதல் என்றும் சொல்லலாம்.

    வளர்ச்சியோ, இல்லை மாறுதலோ, இந்த இரண்டுக்கும் அடிப்படையாக ஒரு விஷயம் தேவை. அதுதான் சக்தி.

    சக்தி உள்ளவையே இயங்கும். மற்றவை ஜடமாகக் கிடக்கும். இயங்கக் காரணமான இந்த சக்தி ஒரு உயிருக்கும் சரி, பயிருக்கும் சரி எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

    கடவுள்தான் நம்மைப் படைத்தவர். இந்த உலகத்தையும் படைத்தவர். அவர்தான் சக்தியளிப்பவர் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். ஆனால் நுட்பமான உண்மையே வேறு.

    கடவுள் நம்மைப் படைக்கும் முன்பு, படைத்த விஷயம் ஒன்று உண்டு. அவைதாம் பஞ்ச பூதங்கள்! பூதம் என்றால் அகோரமான வடிவம் என்று தானே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்… அது தவறு! பூதம் என்றால் அளவில்லாதது என்று பொருள். அதுவே பின்னாளில் பெரியது, வலியது, என்றெல்லாம் பொருள் கொள்ளக் கூடியதாக மாறிவிட்டது.

    இப்படி அளவில்லாத ஒன்றாக பஞ்சபூதங்களை இறைவன் படைக்க அவைகளில் இருந்துதான் உயிர்களும், பயிர்களும் உருவாகத் தொடங்கின.

    விஞ்ஞானமும் இதை மறுக்கவில்லை.

    ஆகக்கூடி சக்தியின் மூலம் என்பது முதலில் பஞ்ச பூதங்கள்தாம். அதைப் படைத்தவன்தான் இறைவன்! அப்படிப்பட்ட இறைவனே மகாசக்தி படைத்தவன். அவனது மகாசக்தியால் மண்ணுக்கு வந்தவை தாம் பஞ்சபூத சக்திகள்.

    இந்த சக்திகளிடம் இருந்து வெளிப்படும் சக்திகளை வகைப்படுத்தி, அதை எட்டுவித சக்தியாக அளித்தவனும் இறைவன்தான். எவர் ஒருவர் இந்த எட்டு சக்தியையும் குறைவரப் பெறுகிறாரோ அவர் மகாசக்தி படைத்தவராகி விடுவார். அதாவது அவரே இறைவனாகி விடுவார் என்றும் கூறலாம்!

    ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

    அழுதுகொண்டே எதிரில் வந்து நின்றான் ஸ்ரீகாந்த், அரவிந்தனின் பத்து வயது மகன்.

    என்னடா.. எதுக்கு அழுவறே?

    அழுவாம… இன்னிக்கு நான் பள்ளிக்கூடம் போனா எங்க டீச்சர் அடிப்பாங்க.

    ஏண்டா… ஹோம் ஒர்க் பண்ணலியாக்கும்?

    ஸ்கூட்டரைக் கிளப்பியபடியே கேட்ட அரவிந்தனின் குரலில் லேசான கிண்டல்.

    இல்லப்பா.. இது வேற பிரச்சினை..

    என்ன பிரச்சினைடா.. சொல்லிவிட்டு அழுவு..

    அவன் கேட்க, பின்னாலேயே பத்து பாத்திரமும் கையுமாக வந்தாள் சுசீலா. அரவிந்தனின் மனைவி.

    அவன் என்னத்த சொல்றது.. நான்தான் நேத்து ராத்திரியே சொன்னேனே.. என்றாள் வந்த வேகத்தில்.

    நீ என்ன சொன்னே..?

    அதுகூட ஞாபகமில்லியாக்கும்?

    இருந்தா இப்படி கேப்பேனா.. என்னமோ நான் பிரம்மரகசியத்தையே மறந்துட்ட மாதிரில்ல கேக்கறே நீ.

    கரெக்ட்.. இதுவும் பிரம்மரகசியம்தான்!

    சுசீலா சட்டென்று அப்படி சொன்ன பிறகும் அரவிந்தனுக்கு விளங்கவில்லை.

    நெற்றியைச் சுருக்கிப் புருவத்தை வளைத்துக் கொண்டான்.

    ஐய்யோ.. ஐய்யோ.. ஸ்ரீகாந்த் அவங்க ஸ்கூல் ஆண்டு விழாவுல மாறுவேஷப் போட்டியில கலந்துக்கப் பேர் கொடுத்துருக்கான். இப்ப ஞாபகம் வருதா?

    சுசீலா எடுத்துக் கொடுத்தாள்.

    ஆங்.. என்று வாயைப் பிளந்த அரவிந்தனும், சற்றே பளிச்சென்று மாறிய முகத்துடன் மகன் ஸ்ரீகாந்த் பக்கம் திரும்பினான்.

    அங்க என்ன பார்வை? அவனை படைப்புக் கடவுள் பிரம்மாவாக வேஷம் போடச் சொல்லியிருக்கார் அவங்க மாஸ்டர்.

    சரி... அதுக்கென்ன இப்போ;

    அதுக்கான மெடீரியல்ஸெல்லாம் வாங்க வேண்டாமா?

    இதுல எல்லாம் என்னை எதுக்கு இழுக்கறே சுசீ.. எது தேவையோ அதை நீ வாங்கிக் கொடுத்துடு..

    அது சரி.. நான் வீட்டு வேலையைப் பார்ப்பேனா இல்லை, கடைகடையா ஏறி இறங்குவேனா?

    ஏண்டி.. சும்மா இருக்கற நீயே இப்படி அலுத்துக்கறியே.. காலைல போனா ராத்திரி ஏழு மணிக்கும், எட்டு மணிக்கும் வர்ற என்னால் மட்டும் எப்படி முடியும்?

    என்ன சொன்னீங்க... நான் வீட்ல சும்மா இருக்கேனா?

    பின்ன என்ன பண்றே? பதினோறு மணிக்கு டி.வி. முன்னால உக்காந்தா, சாயந்திரம் அஞ்சு மணிவரை உக்காந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கறது இல்ல நீ. அந்த நேரத்தில் வெளிய போய் ஆயிரம் வேலை செய்யலாம். தெரியும் தானே?

    ஸ்கூட்டரை உதைத்தபடியே அரவிந்தன் சொல்ல, புகை என்னவோ சுசீலாவின் காது வழியாக வந்தது. கர்ண கடூரமாக அவனை முறைத்தாள். அவன் லட்சியமே செய்யவில்லை.

    கியரை மாற்றி ஆக்சிலேட்டரைத் திருகியபடி அங்கிருந்து கிளம்பி விட்டான்.

    சுசீலாவுக்கு எரிச்சலாக வந்தது.

    ஸ்ரீகாந்த் முகத்திலோ பரிதாபக்களை.

    நீ கவலப்படாதடா கண்ணா.. வர்ற சனிக்கிழமை நாம மார்க்கெட்டுக்குப்போய் எல்லாத்தையும் வாங்கிடலாம் என்றாள்.

    இன்னிக்கே போலாம்மா.. இழுத்தான் ஸ்ரீகாந்த்.

    இன்னிக்கு வேண்டாம். அம்மாக்கு நிறைய வேலை இருக்கு.

    ஒரு வேலையும் இல்ல. எல்லா மெகா சீரியலையும் பாக்கணும்னு சொல்லு. அப்பா சொன்னது சரிதான். சனிக்கிழமைதான் உனக்கு எந்த சீரியலும் இல்லை. அதனால அன்னிக்கு போகலாம்கறியா?

    ஆமாம்.. இப்ப என்னடா? படுகாட்டமாக, கோரமாக முகத்தை மாற்றிக்கொண்டு ஒரு கத்து கத்தினாள் சுசீலா.

    அவன் கண்களில் பதிலுக்குக் கண்ணீர்த் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.

    ஏண்டா இப்படி உசுரை வாங்கறே..?

    நான் ஒண்ணும் உசுரை வாங்கல.. சனிக்கிழமைதான் ஆண்டுவிழா தெரிஞ்சுக்கோ..

    அடக்கடவுளே.. அப்ப அதுக்குள்ற உனக்கு நான் எல்லாம் வாங்கித் தந்தாகணுமா?

    ஆமாம்மா..

    சரிடா.. என்னென்ன வாங்கணும்? சொல்லித் தொலை.

    ஒரு பட்டு வேஷ்டி...

    ஐய்யோடா? பிரம்மா என்ன கதர்லயா வேஷ்டி கட்டுவாரு.. அதுவும் பஞ்சகச்ச வேஷ்டி.. சரி, அப்புறம்..?

    வெள்ளிப் பூணூல்..

    வெள்ளியிலையா..?

    அப்படிதான் எங்க மாஸ்டர் சொன்னார்.

    உங்க மாஸ்டர் தலைல இடிவிழ..

    இதை அப்படியே போய் அவர்கிட்ட சொல்லவா?

    டேய்ய்ய்...

    அப்புறம் என்ன... ஒழுங்கா கேளு.

    என்னத்தடா கேக்கல... ஒரு மைசூர் சில்க் புடவையை வாங்கித்தரச் சொல்லி உங்கப்பாகிட்ட ஒரு வருஷமா தொங்கிக்கிட்டு இருக்கேன். காதுலையே வாங்கிக்காம இருக்கார். நீ அடிக்கப் போற ஒரு நாள் கூத்துக்கு நான் பட்டு வேஷ்டி வாங்கணுமா?

    ஸ்ரீகாந்த், சுரேஷ் பேரைச் சொல்லவும் சுசீலாவுக்கு ஜிவ்வென்று சூடு ஏறியது. சுரேஷ் குடும்பம் ஒரு அலட்டல் குடும்பம். தங்களுடன் யாராலும் போட்டி போட முடியாது என்பது அவர்கள் நினைப்பு. எல்லோரும் ஸ்கூல் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றால், சுரேஷ் மட்டும் தினமும் காரில்தான் வந்து இறங்குவான். பள்ளியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அவனது அம்மா ஒரு நூறு பவுன் நகைகளோடு ஜிங்கு ஜிங்கு என்று ஆட்டிக்கொண்டு வந்து விடுவாள். சுசீலாவுக்கு அவளைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வரும். பார்க்காத மாதிரி திரும்பிக் கொள்வாள். அப்பொழுதும் அவள் விடமாட்டாள். சுசீலாவைத் தேடிக்கொண்டு வந்து, இப்ப டைம் என்ன? என்று கேட்பாள். மொத்தத்துல எனக்கு இது போதாத நேரம் என்று சுசீலா மனதில் நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்து முறைப்பாள். அரை மனசாக மணியும் சொல்வாள்.

    அத்தோடு அவள் விட்டாலாவது பரவாயில்லை.

    ஏன் உங்க ஸ்ரீகாந்த் எப்பவும் ஈர்க்குச்சி மாதிரியே இருக்கான். அவனுக்கு புஷ்டியா ஆகாரம் கொடுக்க மாட்டீங்களா? என்று குறை காணத் தொடங்கி விடுவாள்.

    அப்படியே சுரேஷிற்காக லண்டனில் இருந்து ஆப்பிள் பழங்களும் தருவித்ததாகக் கூறிச் சூடேற்றுவாள்.

    இதனால் எல்லாம் அவள் பெயரைக் கேட்டாலே சுசீலாவுக்குக் காந்தத் தொடங்கிவிடும். அது தெரிந்து தானோ என்னவோ, ஸ்ரீகாந்தும் சுரேஷ் பெயரை எடுத்து விட்டான். அவன் கணிப்பு சரிதான் என்கிற மாதிரி சுசீலா முகம் அசுர வேகத்துக்கு மாறியது.

    அதெல்லாம் வேண்டாம்.. அந்த பிரம்மா வேஷத்த நீதான் போடறே.. எவ்வளவு செலவானாலும் சரி.என்றாள்.

    ஸ்ரீகாந்த் முகத்தில் வெற்றிப் புன்னகை.

    சரிடா.. இன்னும் என்னனென்ன வாங்கணும். வரிசையாச் சொல்லு.

    பிரம்மாவுக்கு நாலு தலைல்ல... அதனால என் தலைமாதிரியே மோல்ட் எடுத்து மூணு தலை பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்ல செய்யணுமாம்..

    ஐய்யோடா.. அப்புறம்?

    ஒரு கமண்டலம். அப்புறம் ஒரு சுவடிக்கட்டு

    அது எதுக்குடா?

    யாருக்குத் தெரியும்... போய் பிரம்மாகிட்டையே கேள். அவர் கைல வெச்சுருப்பாராம்ல?

    தலையிலடித்துக் கொண்டாள் சுசீலா.

    நீ எல்லாம் படிச்சு முடிச்சு தலை எடுக்கறதுக்குள்ற நான்லாம் இன்னும் என்ன பாடுபடப் போறேனோ தெரியலை. என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றாள்.

    ஸ்ரீகாந்தோ அப்பொழுதே, தான் பிரம்மாவாய் நான்கு தலையுடன் மாறிவிட்டதாக உணர்ந்தான்.!

    நல்ல அலைச்சல்!

    கடை கடையாக ஏறி இறங்கி, ஒவ்வொன்றாக வாங்குவதற்குள், போதும் போதுமென்றாகி விட்டது. எல்லாவற்றையும் வாங்க முடிந்தது. ஆனால், அந்த ஓலைச் சுவடிக்கட்டு தான் பாடாய்ப் படுத்தியது

    அதெல்லாம் கடைல கிடைக்காதும்மா.. யாராவது நாடி ஜோசியக்காரங்ககிட்ட கேட்டா கிடைக்கலாம். இல்லாட்டி நீங்களே பனை ஓலையைக் காய வெச்சு, அதை வெட்டித் துண்டு துண்டா நறுக்கி ஏட்டுகட்டு மாதிரி பண்ணிக்க வேண்டியதுதான். என்றார் ஒரு கடைக்காரர்.

    இந்த மதுரைல நான் பனை மரத்துக்கு எங்கங்க போவேன்.

    அம்மா.. எங்க ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு பனை மரம் இருக்குதும்மா.. உற்சாகமாகக் கூறினான் ஸ்ரீகாந்த்.

    அது சரி.. அது மேல யார் ஏர்றது.. உடனே நடக்கற காரியமாடா?

    பாத்தீங்களா.. ரொம்ப சின்ன விஷயம். ஆனா சமயத்துக்கு எதுவும் கிடைக்காது. அதான் வாழ்க்கை

    கடைக்காரன் இதுதான் சாக்கு என்று தத்துவம் பேசினான். அவளுக்கு எரிச்சலாய் வந்தது.

    வாடா.. கிடைச்சா பார்ப்போம். இல்லாட்டி. ஒரு சி.டி டிஸ்க்கை கைல வெச்சுக்கோ.. கேட்டா இவர் ஹைடெக் பிரம்மான்னு சொல்லிக்கோ. என்று ஒரு புது ஐடியா

    Enjoying the preview?
    Page 1 of 1