Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irattai Naakkugal
Irattai Naakkugal
Irattai Naakkugal
Ebook110 pages46 minutes

Irattai Naakkugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803088
Irattai Naakkugal

Read more from Sivasankari

Related to Irattai Naakkugal

Related ebooks

Reviews for Irattai Naakkugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irattai Naakkugal - Sivasankari

    http://www.pustaka.co.in

    இரட்டை நாக்குகள்

    Irattai Naakkugal

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஏப்ரல் 26, 1985 - வெள்ளிக்கிழமை - காலை மணி 9

    வாழைப்பழத்தை சின்னச்சின்னத் துண்டுகளாக்கி, வெள்ளிப் பேலாவிலிருந்த பாலில் போட்டு, இரண்டு ஸ்பூன் சர்க்கரையையும் கலந்துவைத்தாள் ஜானகி.

    ஒரு சிட்டிகை மஞ்சள்பொடியை பித்தளைத் தாம்பாளத்திலிருந்த தண்ணீரில் தூவி, ஒற்றை விரலால் துளி சுண்ணாம்பை வழித்து அந்தத் தண்ணீரில் கரைக்க, மஞ்சளும் சுண்ணாம்புமாகக் கலந்த நீர் சிவப்பு ஆரத்தியானது.

    வந்தவுடன் வாசலிலேயே எடுக்க, ஆரத்தி... நுழைந்ததும் உட்காரவைத்துக் கொடுக்க, பாலும் பழமும்... ரயிலில் வந்த அலுப்புத்தீர குளிக்க, குளியலறையில் வெந்நீர்... அடுப்பில் இட்லிப் பானையைக்கூட ஏற்றியாகிவிட்டது. திறக்காமல் வைத்திருந்தால், அவர்கள் வரும்போது சூடாகவே இருக்கும்.

    ஹாலில் வந்து நின்று சுற்றிலும் ஒரு முறை பார்த்தபோது, எல்லா ஏற்பாடுகளும் கச்சிதமாக இருப்பது திருப்தியைத்தர, வாசல்பக்கம் நடந்தாள்.

    போன வெள்ளியன்று கோயமுத்தூரில் திருமணம் முடிந்த கையோடு, பக்கத்திலிருந்த ஊட்டியில் தேனிலவு கொண்டாடிவிட்டு, இன்று காலை சென்னைக்கு வருகிறார்கள் ஸ்ரீதரும் அவன் புது மனைவி வித்யாவும்.

    சாஸ்திர சம்பிரதாய வழக்கங்களையெல்லாம் ஊரிலேயே முடித்துவிட்டாலும், வாழப்போகிற வீட்டுக்குள் லட்சுமிகரமாய் காலடி வைக்கும் பெண்ணை, மங்களகரமாய் வரவேற்காவிட்டால் எப்படி!

    அதுவும், முதல்முறையாய் ஒரு புதுப் பெண்ணின் வரவு...

    தலைச்சன் பிள்ளையாய் ஸ்ரீதர் பிறந்தபோது உண்டான சந்தோஷம், தொடர்ந்து சந்திரனும் நந்துவும் பிறந்தபோது குறைந்துதான் போயிற்று... பிறந்தது பெண்ணாக இல்லையே என்ற ஏக்கத்தில்.

    இயல்பாகவே பெண்குழந்தைகள் என்றால் பிரியம் என்றிருந்த ஜானகிக்கு, பிறந்தது மூன்றுமே பிள்ளைகளாக அமைந்துவிட்ட 'போது, தனக்குப் பெண் இல்லை என்கிற குறை ரொம்பவும்தான் கூடிப்போயிற்று.

    பெண் வேண்டும் என்கிற தாகம் அடக்கமாட்டாமல் போய், நாலாவதை உண்டாகி, அது குறைப்பிரசவமாக மூன்றாம் மாசத்திலேயே கலைந்துவிட, சரி, இனி இந்தப் பெண் ஆசை வேண்டாம், நாளைக்கு என் பிள்ளைகளை மணக்கப்போகும் மூன்று மருமகள்களுமே எனக்குப் பெண்கள்தான் என்று ஒருதினுசாய் தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

    அப்படிக் காத்திருந்து, காத்திருந்து வந்த வித்யாவை வரவேற்கத்தான், இன்று வீடு இந்தப் பாடுபடுகிறது.

    என்னம்மா இது, எத்தன தரம் இழுத்துக் கட்டினாலும் திரும்பத்திரும்ப விழுந்துகிட்டேயிருக்கு இந்தத் தோரணம்...

    வாசல் பந்தலில் விழுதுகளாகத் தொங்கின தோரணங்களோடு போராடிக்கொண்டிருந்த நந்துவின் சலிப்பான குரல் கேட்டு ஜானகி நின்றாள்.

    இன்னுமா அதையே பண்ணிகிட்டிருக்கே, நந்து? பத்து நாளைக்கு முன்ன போட்ட பந்தல் இன்னும் அப்படியே வா இருக்கும்? தோரணம் விழுந்தா விழுந்துட்டுப்போறது... நீ போய் டிரஸ்ஸை மாத்திகிட்டு வந்து பளிச்சினு நில்லு...

    அண்ணி வர்றப்ப தோரணம் இப்படி வாடிவதங்கி லாலி, லாலியா தொங்கிட்டிருந்தா நல்லாவா இருக்கும்?

    ஜானகி சிரித்தாள்.

    அட அசட்டுப்பிள்ளையே! மொத தடவையா இங்க நுழையப்போறவ, எறங்கினதும் எறங்காததுமா இந்தப் பந்தல் அலங்காரத்தையா பாக்கப்போறா? போப்பா, போய் புது பாண்ட்டை எடுத்து மாட்டிக்க... அவங்க வர்ற நேரமாயிடுச்சு, நா போய் எதுத்த வீட்டு நிர்மலாவக் கூட்டிட்டு வந்துடறேன்... ஆரத்தி எடுக்கணுமில்ல?

    பேசிக்கொண்டே அவசரமாய் தெருவில் இறங்கி நடந்து எதிர்வீட்டுப் படியேறி கதவைத் தட்டினாள்.

    ஒரு தட்டலிலேயே திறந்து கொண்ட கதவுக்கு அந்தப்புறமாய், தங்கம்மாள் - நிர்மலாவின் மாமியார் - முகத்தில் சிரிப்போடு நின்றார்.

    வா ஜானகி... புது மருமவ இன்னிக்குத்தான் வரப்போறாபோலருக்கு! ஸ்டேஷனுக்கு யாராச்சும் போயிருக்காங்களா?

    ம்ம்.... சந்திரனும் அவங்கப்பாவும் போயிருக்காங்க....எனக்குக்கூட போகணும்னுட்டுதான்... ஆனா, இங்க வீட்டு வேலைங்களக் கவனிக்கவேண்டியதால, பேசாம இருந்துட்டேன். ரயில் சரியான நேரத்துல வந்திடுச்சுன்னா, இப்ப இங்க வர்ற நேரம்தான்... அதான், ஆரத்தியெடுக்க நிர்மலாவக் கூட்டிட்டுப் போலாம்னு...

    ஆமாமா, நேத்தே சொல்லியிருந்தே இல்லே! ஒரு நிமிஷம் இரு, கூப்பிடறேன்...

    பேசிக்கொண்டே உள்பக்கமாய் திரும்பி அவர் குரல்கொடுக்கும் முன் நிர்மலா எதிர்பட்டாள்.

    வந்துட்டேன், அத்தே... நானே அங்கதான் கிளம்பி கிட்டிருக்கேன்... வாங்க ஜானகிம்மா, போலாமா?

    தெருவைக் கடந்து பந்தலுக்கருகில் வந்து, இரவு படுக்கச் செல்லும் முன்னரே ஜானகி போட்டுக் காய்ந்திருந்த மாக்கோலத்தையும் அதன் காவி பார்டரின் நேர்த்தியையும் ரசித்து நிர்மலா நிமிர்ந்தபோது, டாக்சி வந்து நின்றது.

    முன்பக்கத்திலிருந்து தாமோதரன் இறங்கி, மீட்டருக்கான பணத்தைக் கொடுத்தார்.

    பின்னாலிருந்து முதலில் இறங்கிய சந்திரன், டிக்கியிலிருந்த பெட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான்.

    அடுத்து இறங்கிய ஸ்ரீதரைப் பின்தொடர்ந்தாள் வித்யா.

    பெட்டிகளை கடகடவென்று வீட்டினுள் கொண்டுபோய் நந்து வைக்க, இரண்டே எட்டில் மருமகளின் அருகில் வந்த ஜானகி, "வாம்மா வித்யா... ரயில்ல வந்தது ரொம்ப களைப்பாயிருக்கா? முகமெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1