Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jothi Vanthu Piranthal
Jothi Vanthu Piranthal
Jothi Vanthu Piranthal
Ebook228 pages1 hour

Jothi Vanthu Piranthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித வாழ்க்கையில் நம்ப முடியாத எத்தனையோ பேர் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றுன் ஒன்று, முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இப்பொழுது பிறவி எடுத்த ஒரு குழந்தை கூறலாம்.

இது உண்மையா? சாத்தியந்தானா? என்பது விவாதத்திற்குரிய பிரச்சினை ஆகும்.

ஆனால் இவ்வாறு முற்பிறவியைப் பற்றிய சம்பவங்கள் நடப்பதாக பத்திரிகையில் வரும் நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றனவே. இவற்றை எப்படி மறுப்பது?

தலை சிறந்த எழுத்தாளர் திரு. மகரிஷி அவர்கள் இத்தகைய முற்பிறவிப் பிரச்சினையை மையமாக வைத்து 'ஜோதி வந்து பிறந்தாள்' என்னும் அழகான கதையை அமைத்திருக்கிறார்.

உணர்ச்சிகள் கொப்புளிக்க உயிரோட்டமுள்ள இந்தக் கதையை எவரும் விரும்பிப் படிப்பர் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பெருமையோடு தமிழ் மக்களுக்கு இந்த நூலை வழங்குகிறோம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803070
Jothi Vanthu Piranthal

Read more from Maharishi

Related to Jothi Vanthu Piranthal

Related ebooks

Reviews for Jothi Vanthu Piranthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jothi Vanthu Piranthal - Maharishi

    http://www.pustaka.co.in

    ஜோதி வந்து பிறந்தாள்

    Jothi Vanthu Piranthal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    தாவர இயல் விரிவுரையாளன் சோமநாதன், தன் கையில் உள்ள பிளான்ட் டாக்ஸான மியை மூடிக் கீழே வைத்தான்,

    அவன் மனம், பெந்தம் லேபியேடி, எரிகேசி, பாவிமோனி யேசி-இவை எதையுமே உள் வாங்கிக்கொள்ளாமல் நீர்ப்பாசியில் வழுக்குவது போல எங்கோ வழக்கிக்கொண்டு ஓடியது.

    அது சோமநாதனின் தாவர இயல் ஆய்வுக்கூடம். விஸ்தாரமான காம்பெளண்ட், அநேகமாகச் சுவருக்குப் பதில் விவசாய முட்களே வேலியாக வளர்ந்திருந்தன.

    நான்கு ஏக்கர் விஸ்தீரணம். நடுநாயகமான ஒரு கட்டடம். கட்டடத்தைச் சுற்றி ஏராளமான புதுவகைச் செடிகள். ஒவ்வொன்றின் முன்னும், ஒரு தகரத்தில் அதன் பெயர்: 'கர்வேம்பிரியே, மல்டி ஓவியலேட்டே, டா*ப்னேல்ஸ, நீரில் மூழ்கி இருக்கும் அக்வாட்டிகே...'

    இம்மாதிரியே பூக்களைக் கொண்ட சிறியதும் பெரியதுமான செடிகள்.

    பெயரற்ற செடிகளே கிடையாது.

    மாணவ மாணவிகள் அதனடியில் நின்று அதைப்பார்த்து நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

    ஆர். கே. விக்ரமனைக் கையால் சைகை காட்டினான், அவன் அவனுடைய உதவியாளன்.

    பிளாஸ்டிக் ப்ளாக் போர்டில் மெக்னோலியா, ஹெப்டாபிடா வரைபடத்தை வரைந்தான். வளர், இயல், சூலகம், நீள் வெட்டுத் தோற்றம், விரிக்கப்பட்ட மலரின் இதழ்கள், கனி - என்று நான்கு வகைகளை எழுதிவிட்டு வகுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தான்.

    ***

    சோமநாதனின் ஹெரல்ட் அல்சூர் சாலையில் அறுபது மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

    அந்த இனிய நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. அவனாக அங்கே நிற்கவில்லை. நேற்றையமுன் தினம் – நேற்றைய முன் தினம் மட்டும்தானா! - எப்பொழுதும் இந்த ஹெரல்டுக்கு என்னமோ கேடு...

    அன்று அதற்கு வந்த கேடு நல்ல கேடு...

    அழகிய நீர்த் தேக்கம். ஆனால், குளமோ, ஏரியோ அல்ல.

    காருக்குத் தாகம், வாயைப் பிளந்து கொண்டு விசிலடித்தது.

    பானட்டைத் தூக்கி வைத்துவிட்டு, டின்னைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.

    காருக்குத் தண்ணீர் ஊற்றிதாக சாந்தி ஆயிற்று.

    அப்பொழுது!

    ஜயதேவரின் கீதகோவிந்தம்...பதினோராவது அஷ்ட பதியை இல்வளவு இனிமையாக யார் பாடுகிறார்கள்? சுலட்சனா பண்டிட்? ஆஷா பான்ஸ்லே?... லதா?...

    நான்கு புறமும் சிறுசிறு மலைக்குன்றுகள். அதற்கப்பால் வானுயர்ந்த மலை. கிழக்கு மேற்காகவும், வடகிழக்காகவும் வியாபித்துக் கிடந்தது. சிறிய மலைக்குன்றுக்கு முன்னால் -

    ஒரு கிராமத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் கடைசி கிராமம். அதையடுத்து ஏர்போர்ட் செல்லும், வளைவுசாலை ஆரம்பமாகிவிடும்.

    அதன் அடிவாரத்தில் அந்த மலைப் பாதையைத் தொட்டாற்போல் இருந்தது அந்தக் கிராமம்.

    வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டன. எல்லாம் மங்களூர் ஓடுகள் வேய்ந்த வீடுகளே, மலைச் சரிவுகளிலும், அதைச் சுற்றியுள்ள மலைப் புதர்களின் ஊடேயும் திடீரென்று முளைத்தாற்போல் குட்டையான, வெண்மை நிற மண்டபங்கள் தென்பட்டன. அவை, ஒரு வேளை சமாதிகளாகவும், கிராம தேவதைகளின் புதுப்பிக்கப்பட்ட சின்ன குகைக் கோயில்களாகவும் இருந்தன.

    அந்த வீடும் ஓடு வேய்ந்த வீடுதான். அகலத்தில் குறைவாகவும், நீளத்தில் அதிகமாகவும் இருந்தது .

    பெரிய நீளமான திண்ணை நிறைய மரத் தூண்கள், உயரக் குறைவான ஓட்டு சார்பு. திண்ணையில் செம்மண் சுண்ணாம்புப் பட்டை பளிச்செனத் தெரிந்தது. முன்புறம், இரண்டு பக்கமும் இரண்டு ஜன்னல்கள். கவர்கூட வெளுப்பாக இல்லாமல் லேசான கபில நிறத்துடன் தென்பட்டது. பர்ணசாலையைப் போன்ற அந்தச் சிறிய வீட்டின் முன் போய்த் தன்னிச்சையாக நின்றான்.

    சின்ன வீடு, ஓட்டு வீடுதான். இரண்டு புறமும் ஒரே அளவுள்ள நீண்ட திண்ணைகள். நடுநாயகமான நுழைவாயில். வீட்டின் முன் செம்மண் பட்டை தீட்டிய துளசிமாடம், அதில் அடர்த்தியாக வளர்ந்திருந்த துளசிச்செடி. வீட்டின் நுழை வாயிற்படியின் இரண்டு பக்கமும் புரைகள். திண்ணச் சுவரில் கூடச் செம்பட்டையும் சுண்ணாம்பும்.

    பாடும் பெண்ணின் முகம் தெரியவில்லை. அதை இவ்வளவு அமைதியாகக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது யார்?

    உடலையெல்லாம் சிவப்புக் கம்பளியால் போர்த்துக் கொண்டு குத்துக்காலிட்டு, சுவரில் சாய்ந்து கண்களை மூடி, அமர்ந்திருக்கும் அவருக்கு வயது அறுபது இருக்கலாம். அவர் உயரம், பருமன் எதையுமே சொல்ல முடியாதபடி முகம் மட்டும் தெரியும்படி அவர் அமர்ந்திருக்கிறார்.

    அவள், கையில் புத்தகமொன்றை வைத்துக் கொண்டு அதைப் பார்த்துப் பாடுகிறாள்.

    பாட்டு முடிந்து விட்டது.

    இது,

    நேற்றைய முன் தினம்!

    இப்பொழுது,

    அப்பாடல் கேட்டாலும் கேட்கலாம் அல்லது வேறு பாடல் அல்லது ...

    கார் நின்று விட்டது.

    அந்த எளியோனின் வீடு.

    அதே பெண், அன்று போலவே முகம் தெரியாமல் வாசலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

    அவள் முன் சிக்குப் பலகையில் ஒரு புத்தகம் இருக்கிறது.

    பெரியவர் நேற்றைய முன்தினம் போலவே முகம் மட்டும் வெளியே தெரியும்படி ஒரு சிவப்பு மூட்டைபோல் சுவரில் சாய்ந்து கொண்டு...

    அவள் ஸ்ரீருத்ரம் படிக்கிறாள்.

    குரல் ரொம்ப அழகாக இருக்கிறது. அதே நேரத்தில் பெண்மைக்கே உரிய த்வனி சுத்தம்.

    ‘இதன் பொருள் என்னப்பா?...’

    ஸ்ரீருத்ரத்தில் அவள் கேட்கின்ற இடத்திற்கான அர்த்தங்கள் அவனுக்கும் தெரியும்.

    அவர் விவரிக்கின்றார்.

    "அக்னி என் வாக்கில் உள்ளது. வாக்கு இருதயத்திலும், இருதயம் ஜீவனாகிய என்னிடத்திலும்,

    வாயு பிராணனிடத்திலும் சூரியன் கண்ணிலும், சந்திரன் மனதிலும்..."

    விளக்கமும் - வியாக்யானமும்...அவன் அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறான்.

    அவள் சிக்குப் பலகையை விட்டு விட்டு எழுந்து நிற்கிறாள்.

    எவ்வளவு அழகாக இருக்கிறாள்! நீண்ட கேசம், நுனியில் முடியப்பட்டு, பின்புறமாகத் தொங்குகிறது.

    சிவப்பில் ஒரு தனி ரகம் அவள்.

    சின்னச் சின்ன மல்லிகை மொட்டுகள் வாரியிறைக்கப்பட்ட வெளிர் சிவப்புப் புடைவை அவள் உடம்புடன் எவ்வளவு இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. கழுத்தும் முதுகும், கன்னங்களும்தான் எவ்வளவு மனோகரமாக இருக்கின்றன. காதில் சற்றே பெரிய வளையம், அவள் முகத்தைத் திருப்பும் போதும், குனியும் போதும் அது அழகாக ஆடியது...நேர் வகிடு, நீண்ட கூந்தல். மலர் இல்லாவிட்டாலும் அந்த வெறுமையும் ஓர் அலாதி அழகைத்தான் பறை சாற்றியது. கையில் நான்கைந்து கண்ணாடி உளபல்கள் கைக்கு இரண்டிரண்டாக.

    அந்த அழகும் அந்தத் தன்மையும், ஒரு வயோதிகரின் தனிமையும்...

    இந்தத் தேவதைக்கு இன்னும் ஒரு தேவன் வந்திருக்க மாட்டானோ? ஊரின் எல்லையில், இந்தத் தனிமைப் பிராந்தியத்தில் இத்தனை அழகுடன், இவளால் எப்படித் தைரியமாக இருக்க முடிகிறது?

    அதற்கெல்லாம் அசாதாரணத் துணிவு வேண்டும்.

    அவளைப் பார்த்துக்கொண்டே தனது சிவப்பு நிற ஹெரல்டைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.

    அவளை மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆவல் - அதை ஆவல் என்று கூறுவதைவிட அடங்காத வேகம்- சோமநாதனின் உள்ளத்தில் தோன்றிக் கொண்டே இருந்தது.

    பிரபஞ்ச நந்தவனத்தில் அவள் ஒரு வசந்தகால மலர். நந்தவனங்களில் பூக்கும் சில அபூர்வ மலர்களைப் போன்றவள். அவளுடைய பரிச்சயமும், அவளுடன் பேசுகின்ற சந்தர்ப்பமும் கிடைத்தால், அதைவிட ஓர் உயர்ந்த, வாய்ப்பு வேறென்னவாக இருக்க முடியும்?

    மாலை நேரம், தனது தாவர இயல் தோட்டத்தில் தனியே உட்கார்ந்து -புத்தகம் ஒன்றை - படித்துக்கொண்டிருந்தான் அவன். இரண்டு மூன்று நாள் அவன் சென்றபோது, இந்த நேரத்தில்தானே அவள் பாடிக் கொண்டிருந்தாள். அல்லது பெரியவருக்கு ஏதோ படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை இந்த மாலை நேரம்தான் அவளுக்கு ஓய்வு நேரமாக இருக்கக் கூடுமோ!

    இன்றும் அங்கே போனால் என்ன? புதுப் புதுத் தாவரங்களையும், புதுப்புது மலர்களையும், ஆராய்ச்சிக்காகத் தேடி, காடு, மலை, தோட்டம், துரவு என்று எல்லா இடங்களுக்கும் போவதில்லையா! இந்த அழகிய தேவமலரைத் தேடிப்போவதில் என்ன தவறு, எனது நேரம் இதனால் வீணாகிவிடாது.

    சிவப்பு நிற பழைய ஹெரல்ட் காரை எடுத்துக் கொண்டு, சாலையில் போய்க் கொண்டிருந்தான்.

    வழுவழுப்பான சிமென்ட்சாலை மனோகரமாக இருந்தது. இந்தச் சாலையில் காரை ஓட்டிச் செல்வதே மனத்திற்கு இதம் தரும் ஒரு அனுபவம்தான் அவனுக்கு, பெரிய பெரிய புளிய மரங்கள், மா மரங்கள். நடுநடுவே, ஆல், அரசு, அடிவாரம் வரை நிழற்படலம் உண்டு. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தாலே, நெற்றிக்கு நேரே மலையின் வியாபகம். மனத்தளவில் அதன் குளிர் -

    கார் லாங்*போர்ட் ரோடைத் தாண்டி, இந்திய மருத்துவத் தாவர இயல் தோட்டங்களைக் கடந்து, அதன் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்களையும் கடந்து போய்க் கொண்டிருந்தது.

    தாவரத் தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக நின்று பலர் ஏதேனும் ஒரு வேலையைச் சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருக்கின்றனர். வார்டன்கள் அவர்களைக் கண் காணித்துக் கொண்டு நிற்கின்றனர்.

    ஏராளமான குறுக்குச் சாலைகள். புதிதாக உண்டான புறநகர் விஸ்தரிப்பு காலனிகளையும் கார் கடந்தது.

    ஒரு பெரிய பங்களாவைக் கடந்து போய்க் கொண் டிருந்தது.

    மலைக்காற்று ரம்மியமாக வீசிக்கொண்டிருந்தது. மலையிலிருந்து வரும் சர்வீஸ் பஸ்களும், காடுகளில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளும், எதிரே இடை பழுது தாண்டிப் போய்க் கொண்டிருந்தன.

    விமான நிலையத்தைத் தாண்டும் வரையில் அதிக ஜனநெரிசல் இருக்காது. தாண்டிய பிறகு மீண்டும் ஒரு பரபரப்பு காணப்படும். அங்கிருந்து சங்கிலித் தொடர்போலக் கிராமம் ஆரம்பமாகி விடுகிறது.

    இதே சாலையில் அவன் எத்தனையோ முறை வந்திருக்கிறன். அப்பொழுதெல்லாம் அவன் மனதில் அவனுடைய தாவர ஆராய்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய நினைவுகளே அதிகம் இருக்கும். மறுநாள் வகுப்பில் நடத்த வேண்டிய பாடம் நினைவுக்கு வரும். சமீபத்தில் நடக்கப்போகிற ஏதேனும் மாநாடுகளின் அமைப்பு பற்றியும், புதிதாகச் சந்திக்க இருக்கின்ற நண்பர்களைப் பற்றியும் நினைவுக்கு வரும். புதிதாக வருகின்ற பெண் ஆராய்ச்சியாளர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது காரணம்

    இன்றி நினைவுக்கு வரும்.

    ஆனால், இன்று. இப்பொழுது.

    முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு புதுமலரைக் காணப்போகிறோம். அவள் அழகானவள். காதில் வளையமும் கைகளில் அரக்குச் சிவப்பில் கண்ணாடி வளையல்களும், மலர் முடியாத கேசமும், மல்லிகை மொக்குகளை வாரி இறைத்த வெளிர் சிவப்புப் புடைவையும் அணிந்து கொண்டு அன்றுபோல் இன்றும் ஒரு இனிய பாடலைப் பாடிக் கொண்டிருக்கலாம்.

    கார் இப்பொழுது ஒரு குறுக்குத் தடத்தில் ஓடியது.

    நாற்புறமும் உயரக் குறைவான பாறைகளுக்கு நடுவே ஒரு கல் குழியில் பளிங்கு போன்ற நீர்த் தேக்கம் தெரிந்தது.

    அது கார் போகும் சாலையல்லதான். என்றாலும் அவன் மிக நிதானமாக அதில் காரைத் திருப்பி ஓட்டினான். சமதளமற்ற சாலையில் கார் குலுங்கி குலுங்கி ஊர்ந்தபோது, அந்த நீர்ச் சுனையின் அருகில் அவள்!

    அவளே தான்!

    இடுப்பில் குடத்துடன் மெதுவாகப் பாறைச் சரிவில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

    இப்பொழுது அவள் வெளிர் நிறத்தில் சூரிய காந்திகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். காதில் அதே வளையம், நீண்ட அழகிய சிவந்த கைகளில் அரக்குச் சிவப்புக் கண்ணாடி வளையல்...பாறைகள் தடுக்காமல் இருக்க, புடைவையை ஒரு கையால் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிதானமாக நடந்தாள். கணுக்காலுக்கு மேலும் கால்கள் அழகாகத் தெரிந்தன.

    சிவட்பு நிற ஹெரல்ட் மேட்டில் நின்றுவிட்டது.

    நிசப்தமான சூழ்நிலை. அவள் முணுமுணுக்கிற பாட் டொலி கேட்டது.

    காரை விட்டுக் கீழே இறங்கிக் காரில் சாய்ந்துகொண்டு நின்றான் சோமநாதன். தூரத்தில் ஒரு குன்றுக்கு அருகில் அவள் வீடு தெரிகிறது. நீர் மொண்டு கொண்டிருக்கும் அவளையே பார்த்தவன், அவள் மிகுந்த சிரமத்துடன் வருவதைப் பார்த்தான். அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1