Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Manam
Maaya Manam
Maaya Manam
Ebook87 pages47 minutes

Maaya Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரவியின் மனைவி மகேஸ்வரி திருமணமான முதற்கொண்டு அவள் மாமியார் சொர்ணத்தின் தூண்டுதலில் அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் மருத்துவரின் ஆலோசனைப்படி ரவியின் ஆண்மையைப் பரிசோதிக்க சொல்வதும் ஆண்டுகள் செல்கின்றன. குழந்தைப் பேறு கிட்டவில்லை.

ரவியையும், மகேஸ்வரியையும் மருத்துவப் பரிசோதனை செய்ததில் ரவிக்குப் குழந்தை பிறக்காது என்று அறிந்தும் மகேஸ்வரியை மலடி என்று திட்டுவதும், தன் சிநேகிதி வீணாவின் சகோதரன் கிருஷ்ணனிடம் இது பற்றிக் கூறி அவன் உதவியை நாடுவதும் பிறகு மகேஸ்வரி குழந்தையைப் பெற்று விட்டு இறந்து போவதும் அதன் பிறகு ரவி இரண்டாம்தாரம் திருமணம் செய்து கொள்வதும், கிருஷ்ணன் தனக்குக் குழந்தை இல்லை என்றதற்காக தங்கை வீணாவின் மகள் நித்யாவைப் படிக்க வைத்து வளர்ப்பதும் வயது வந்ததும் அவளே தன் கணவனைத் தேர்ந்தெடுப்பதும், இறுதியில் நித்யாவின் கணவனாக வருபவனை கிருஷ்ணன் தத்தெடுத்துக் கொள்வதும் இன்றைய விஞ்ஞான உலகத்தில் எப்படியெல்லாம் மக்கள் மனோபாவம் அமைகின்றதென்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார் நாவலாசிரியர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003066
Maaya Manam

Read more from Anuradha Ramanan

Related to Maaya Manam

Related ebooks

Reviews for Maaya Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Manam - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    மாய மனம்

    Maaya Manam

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    கல்யாணம் செய்துக் கொண்டு, குடித்தனம் செய்வது என்ன பூலோகத்தில் யாரும் செய்யாத சாதனையா.

    கிருஷ்ணனுக்குப் புரியவில்லை. குடும்பமே, கிருஷ்ணனுக்குக் கல்யாணம் நிச்சயமானதில் குதூகலித்துக் கொண்டிருக்கிறது.

    அப்படியொன்றும் அவனுக்கு வயசாகிவிடவில்லை. இருபத்தியொன்பது ஒரு வயசுடன் சேர்த்தியா...வரன் தேடி அலைந்ததோ, ஒவ்வொரு பெண் வீட்டிலும் போய் மூக்கைப் பிடிக்க பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு, பெண்ணுக்கு மூக்கு கொஞ்சம் நீளமாக இருக்கலாம் என்றோ, இரண்டு இஞ்ச் உயரம் குறைவாக இருக்கலாம் என்றோ, போகாத ஊருக்கு வழி சொன்னதோ-அவன் வரையில் கிடையாது.

    பெண் பார்க்கக் கிளம்பியபோதே சொல்லிவிட்டான்.

    இதப்பாரும்மா, கறுப்போ சிகப்போ-நெட்டையோ குட்டையோ... பார்த்துட்டு பிடிக்கலையின்னு சொல்ல என்னால முடியாது. நான் நேரே வந்து பார்த்துட்டா அப்புறம் அவதான் என் பெண்டாட்டி... என் பேரைச் சொல்லிட்டு, தினமும் ஒரு வீட்டுல டிபன் காபிய முடிச்சிடலாம்னு நினைக்காதே...

    கிருஷ்ணனுக்குத் தெரியும்.

    ஒரு ஆண் பிள்ளை வந்து, பெண் பார்க்கிறோம் என்கிற சாக்கில், பகிரங்கமாய், அப்பா அம்மா அனுமதியுடன் வயசுப் பெண்ணை சைட் அடித்து விட்டுப் போன பின் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடு படும் என்று...

    அவன் அக்கா சரஸ்வதிக்கு ஏழாவது வரன் தான் முடிந்தது, ஒவ்வொரு பிள்ளையும் பெண் பார்த்து விட்டுப் போன பின், வீட்டில் அந்தப் பிள்ளையைப் பற்றி பேச்சு வார்த்தை நடக்கும்.

    மாப்பிள்ளைக்கு ரயில்வேயில நல்ல உத்தியோகம். குடும்பத்தோட ஃபர்ஸ்ட் கிளாஸ்லே போக பாஸ் உண்டு. ரிடையரானதுக்கு அப்புறம் கூட இந்தச் சலுகையெல்லாம் உண்டாமே.

    சரஸ்வதி அதே கூடத்தில் ஒரு மூலையில் நின்று, சுவரில் மாட்டியுள்ள கண்ணாடி பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பாள்.

    மனசென்னவோ, முதல் நாள் தன்னைப் பெண் பார்க்க வந்த வாலிபனுடன் ரயிலில், முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்துக் கொண்டிருக்கும்.

    சரஸ், ஏதாவது புத்தகம் படிக்கணும்னா அந்தப் பக்கம் விளக்கு இருக்கு பாரு. மேல் மூடியத் திறந்து விட்டுக்கோ.

    புருஷன் காரன் காதருகில் சொல்வது போல, ஒரு வினாடி தடுமாறிப் போவாள் அவள்.

    இந்தக் கனவு-அந்தப் பிள்ளை வீட்டிலிருந்து கடிதம் வரும் வரையில் தொடரும். அப்புறம் ஒரு பாங்க் மானேஜர். டில்லியில் உத்தியோகம்.

    பெண் பார்த்து விட்டுப் போகிற போக்கில்-என்னமோ கல்யாணத்தையே முடித்து விட்ட மாதிரி-பையனுடன் கூட வந்த தங்கைக்காரி சொல்லி விட்டுப் போனாள்.

    இந்தி தெரியுமா உனக்கு? தெரியாதுன்னா கத்துக்க. தமிழையும், இங்கிலிஷ்ஷையும் வச்சுட்டு அங்கே ஒண்ணும் செய்ய முடியாது!

    அவ்வளவுதான். கிருஷ்ணனின் தங்கை லலிதா ஓடிப்போய், முப்பது நாட்களில் இந்தி பேச, ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தாள்.

    சரஸ்வதி இரண்டு மூன்று வாரங்களுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய இந்தி சினிமா, செய்தி எதையும் விடவில்லை, எந்தக் காரியம் இருந்தாலும் அதை அப்படியே போட்டு விட்டு டெலிவிஷன் பெட்டி முன்பே ஆணியடித்த மாதிரி நின்று விடுவாள்.

    கடைசியில் அந்தப் பிள்ளையின் வீட்டிலிருந்து கடிதம் வந்தது...

    பெண் ஆனாலும் நறுங்கலாக இருப்பதாகப் பையன் அபிப்பிராயப் படுகிறான். எங்கள் வீட்டில் எல்லாருமே நல்ல வளர்த்தி என்பது உங்களுக்குத் தெரியும்...

    இதற்கு கிருஷ்ணனின் அப்பா, வெட்கத்தை விட்டு இப்படியொரு கடிதம் எழுதினார்:

    திருமண வயசாகியும் நாம், அம்மா அப்பாவுக்கு பாரமாக இருக்கிறோமே என்கிற கவலையில் தான் எங்கள் சரஸ்வதி இளைத்திருக்கிறாள். நீங்கள் கல்யாணத்துக்கு சம்மதித்தால் ஒரே மாதத்தில் அவளை அவள் உடம்பைத் தேற்றி...

    வெட்கக் கேடு...

    அப்பா இந்தக் கடிதம் எழுதிய அன்று சரஸ்வதி, குளியலறையிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து அழுது விட்டு வந்தது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

    அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1