Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Devathaiyin Punnagai
Oru Devathaiyin Punnagai
Oru Devathaiyin Punnagai
Ebook136 pages55 minutes

Oru Devathaiyin Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டுமே பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, புன்னகையாகவும், கேள்விக்குறியாகவும் அற்புதமாக படைத்திருக்கிறார். சமுதாயத்தில் பெண்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803062
Oru Devathaiyin Punnagai

Read more from Maharishi

Related to Oru Devathaiyin Punnagai

Related ebooks

Reviews for Oru Devathaiyin Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Devathaiyin Punnagai - Maharishi

    http://www.pustaka.co.in

    ஒரு தேவதையின் புன்னகை

    Oru Devathaiyin Punnagai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பாக்கியலட்சுமி சிரமப்பட்டு படுக்கையில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள்.

    அவள் அப்படி உட்காருவதற்கு நர்ஸ் ராஜாமணி உதவினாள்.

    கலைந்திருந்த அவள் தலைக் கேசத்தை சரி செய்து பின்புறமாகத் தள்ளி விட்டு ட்ரேயின் மேலிருந்த இரண்டு ஹேர்பின்களை இரண்டு காதோரத்திற்கு மேல் சொருகினாள். பின்புறம் கேசத்தை ஒரே சீராகத தளரப் பின்னிரப்பர் பாண்டைப் போட்டாள்.

    அவள் சாப்பிடுவதற்குச் சௌகரியமாக அவளை உட்கார வைத்து டிபன் ட்ரேயை அவள் மார்பு வரையில் நகர்த்தி அவளும் உட்கார்ந்து கொண்டாள்.

    ரொட்டித்துண்டுகளைப் பாலில் நனைத்துக் கொடுக்க அவள் சாப்பிட்டாள். கிளாஸ் தம்பளாரில் இருந்த பால் முழுவதையும் குடித்தாள்.

    ரவி... எங்கே...

    டாக்டர் அறையில் இருக்கான். இப்ப அவங்க வருவாங்க...

    அவள் சாப்பிட்டு முடித்தாள். மகன் ரவி உள்ளே ஓடி வர அவனுக்குப் பின்னால் இளமையான புன்னகையுடன் டாக்டர் லீலாவதி உள்ளே நுழைந்தாள்.

    ரவி, தாயார் பாக்கிய லட்சுமியின் அருகில் வந்து உட்கார்ந்தான்,

    வேளைக்கு ஒரு டாக்டராக வந்து போய்க் கொண்டிருந்தாலும், டாக்டர் லீலாவதி, மட்டும் அவளிடத்தில் தனி அன்புடன் நடந்து கொண்டார்.

    டாக்டர்களில் மிகக் கவர்ச்சியானவள் லீலாவதி என்பது எல்லோருடைய அபிப்பிராயம். ஸ்டெதாஸ் கோப்பை மாலையாகப் போட்டுக் கொண்டு பெரிய வெள்ளை நிற அப்ரான் அணிந்து இரண்டு பக்க பைகளில் கையை நுழைத்துக் கொண்டு அவர் மெல்ல வார்டுக்குள் வரும் போதே எப்படிப்பட்ட வலியாக இருந்தாலும் சில நிமிஷங்கள் மறந்து அவளைப் பார்க்கத் தோன்றும்.

    அவள் கொடுப்பது மருந்தாக இருந்தாலும், சிலருக்கு அவளுடைய பிரசன்னமே மருந்தாகி விடும்.

    கல்யாணம் ஆனவள் என்றும், ஆகாதவள் என்றும், நோயாளிகள், தங்கள் அநுமானங்களைத் தாங்களே பகிர்ந்து கொள்வார்கள். யாரேனும் நர்சிடம் கோட்டல்,

    அதைப் பத்தி எல்லாம் ஒனக்கென்ன. நீ உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கிட்டு வீடு போய்ச் சேருவாயா! டாக்டரோட கழுத்திலே தாலி கெடக்குதான்னு ஆராய்ச்சி யெல்லாம் உங்களுக்கு எதுக்கு என்பாள்.

    ஆனால், ஒரு நர்ஸ் மட்டும் ஒரு நாள் உண்மையை உடைத்துக் கூறி விட்டாள்.

    கால்யாணம் ஆன பொண்ணுதான். ஆனா புருஷன் கூட இல்லேன்னு கேள்விப்பட்டோம். அவங்கே இங்கே வந்து ஆறு மாசம் தான் ஆவுது. இப்படித்தான். அவங்களைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் வெளியே வருது என்றாள்.

    அந்த மருத்துவமனைக்கு வந்த நாளாக அவள்தான் அவளை கவனித்துக் கொண்டாள். நர்ஸ் ராஜாமணியிடம் பிரத்யேகமாகக் கூறி அவளை கவனிக்கும்படி கூறுவாள். டாக்டர்களில் கொஞ்சம் நல்ல மனம் என்று பொதுவான நற்சாட்சிப் பத்திரத்தை மட்டும் தனக்குள் தானே வாசித்துக் கொண்டவளுக்கு, இப்பொழுது ராஜாமணி மற்றொரு உண்மையைக் கூறியவுடன் அவள் மேல் இருந்த மரியாதை மேலும் பெருகி, டாக்டர் லீலாவதியைப் பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் அதிகமாகி விட்டது.

    நேரம் தவறாமல் வருவதும், படுக்கை அருகில் வந்து நின்று எப்படி இருக்கே... ராத்திரி நன்னா தூங்கினியா... என்று கேட்பதும் பையனைப் பற்றி கவலைப்படாதே, அவன் சமத்தாக ராஜாமணி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று கூறுவதும், இது இந்த இளம் வயது பெண் டாக்டரின் இயல்பான குணம் போலும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

    ஆனால்,

    அதற்குள் வேறு ஏதேதோ அர்த்தங்கள் இருக்கும்.

    … இப்ப எப்படி இருக்கு உடம்பு. வேறு காம்பளிகேஷன் ஒன்றுமில்லையே.

    இல்லை டாக்டர்.

    டாக்டர் லீலாவதி அவள் அருகில் உட்கார்ந்தாள்.

    அங்கே ரெண்டு ஸ்ட்ரிச் போடும்படியா ஆயிடிச்சி... கொஞ்ச நாளைக்கு பிரியாடிக்ல்ஸ் போது வலி உண்டாகும்... இப்ப எப்படி இருக்கு வலி.

    உட்காரும் போது...எழுந்திருக்கும் போது லேசா வலிக்குது.

    இருக்கும். கொஞ்ச நாளில் சரியா போயிடும் மாத்திரை மருந்துகளை யெல்லாம் விடாம சாப்பிடு. நீ எப்ப வேண்டுமானாலும் என்னிடம் உதவிக்கு வரலாம். இதை நான் ஒரு டாக்டர் என்கிற முறையில் மட்டும் சொல்லலை... மூன்று கயவர்களால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் என்பதாலும் கூறுகிறேன்.

    டாக்டர்...

    பாக்கிய லெட்சுமி உணர்ச்சிப் பெருக்குடன் குமுறினாள்.

    நாம பல்வேறு சூழ்நிலைகளில் விளையாட்டுக் காய்களாகி விடுகிறோம். பாக்கியம். அந்நேரத்தில் நாம் ஒரு பெண் என்கிற நினைவேகூட நமக்கு பலவீனம் தான்,

    பாக்கியலெஷ்மி ஏதோ சொல்ல முயன்றாள்...

    அந்நேரத்தில் உன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது தான். மீறிப் போனால் சப்தம் போட்டிருக்கலாம். அந்த மூவரில் ஒருத்தனை தாக்கியிருக்க முடியும். அவனுடன் இறுதி வரைப் போராடி ஒருவேளை அவனையும் கொன்று நீயும் மாண்டிருக்கலாம்... ஆனால் அப்படி.யும் நிகழவில்லை...

    டாக்டர்... அப்பொழுது என்னைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. அவரை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன்.

    அவருக்கு அப்பொழுது தான் உடம்பு தேறிக் கொண்டு வருகிறது. அந்த கார் விபத்தில் கால் எலும்பு முறிந்து நடமாடமுடியாத நிலை. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது.’கால் சரியாக ஊன்றி நடக்கத் தொடங்கும் வரை வீல் சேரில் தான் இருக்க வேண்டும் என்று டாக்டர் கண்டிப்பாகக் கூறி விட்டார். அந்தச் சக்கர நாற்காலியுடன் தான் அவர் வீட்டிற்கே வந்தார். அவராலும் எழுந்து நடமாட முடியாத நிலை. அவர் உடம்பில் கொஞ்சம் வலு இருந்திருந்தால்... அன்று நடந்திருப்பதே வேறு. அவருடைய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு...

    தன் இடத்தை விட்டு எழுந்து வந்த டாக்டர், அருகில் வந்து மேஜை மேல் உட்கார்ந்து அவள் தோள் பட்டையில் கை வைத்தாள்.

    நான் தூரத்தில் அந்தச் சாலையில் வரும்போது அந்த மலைச்சரிவில் நீ தள்ளாடி தள்ளாடி இறங்கிச் சாலைக்கு வருவதைப் பார்த்தேன். என் கார் அந்த இடத்திற்கு வருவதற்குள் நீ தார் சாலைக்கு வந்து விட்டாய். புடவை யெல்லாம் ரத்தம், ஜாக்கெட் கிழிந்து பாடி கிழிந்து... ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்கிற அளவுக்கு எனக்குப் புரிந்து விட்டது. இதோ இவன் உன் அருகில் அழுது கொண்டிருந்தான்... நான் ஒருத்தியாகத் தான் உன்னை தூக்கி காரில் போட்டேன்.

    உன் உடம்பில் இரண்டு தொடைகள், மார்பு, முகம் எல்லா வற்றிலும் உள்ள காயங்கள். உன்னுடைய யூட்ரஸில் ஏற்பட்டிருந்த சேதம்... என்னால் எல்லாவற்றையும் நீ சொல்லாமலே யூகிக்க முடிந்தது. பிறகு இரண்டு நாள்கள் கழித்து நினைவு திரும்பி உன்னிடம் ஸ்டேட்மென்ட் வாங்கும் போது என் ஊகம் சரியாகி விட்டது. பிறகு போலீசுக்கு நான் தான் தகவல் கொடுத்தேன். அவர்களும் உன்னைத்தான் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். உன் கணவரின் டெட்பாடியை போஸ்ட் மார்டத்துக்காகக் கொண்டு வந்தது, நீ அதை அடையாளம் காட்டியது. போலீசார் உன்னிடம் உன் வாக்குமூலம் வாங்கிக் கொண்டது எல்லாவற்றையும் சொன்னார்கள்,

    டாக்டர் லீலாவதி மேஜை விளிம்பை விட்டு எழுந்து அப்பால் சென்றாள்.

    டாக்டரின் பார்வையில் யதார்த்தத்துக்கு அப்பால் வேறு ஏதோ ஒரு வேதனை இருந்ததை பாக்கியா கவனித்தாள்.

    டாக்டர் வெளியேறி விட்டார்.

    அவள் மருத்துவமனையில் உடல் நலம் கெட்டு படுத்திருந்த போது அவளைச் சுற்றி நடந்தவைகள் எல்லாவற்றையும் அவளும் பார்த்துக் கொண்டு தானிருந்தாள்

    அவளை இடையறாது இரண்டு போலீஸ் பாதுகாவலர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.

    யாரிடமும் ஏதும் பேச அனுமதிக்கப்படவில்லை.

    கணவனின் உடலை மலைப் பாறையிலிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்குக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்கள்.

    அவள் தன் கணவனைப் பார்க்கவேண்டுமென்று அழுதாள்.

    அதற்கு அனுமதி கிடைக்க வில்லை.

    அவள் கிராமத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1