Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuppaikku 'Good Bye'!
Kuppaikku 'Good Bye'!
Kuppaikku 'Good Bye'!
Ebook129 pages1 hour

Kuppaikku 'Good Bye'!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'குப்பைக்கு குட்பை!' - 'அவள்' விகடனில், ஏதோ நாலைந்து அத்தியாயங்கள் எழுதலாம் என்று ஆரம்பித்து - பதினைந்து அத்தியாயங்கள் வரை வளர்ந்து விட்ட தொடர்...

குப்பையை ஒழித்து, வீட்டைப் 'பளிச்'சென வைப்பது என்பது அத்தனைச் சுலபமானக் காரியமில்லை. ஒன்றை ஒழித்தால் - இன்னொன்று ‘என்னையும் கொஞ்சம் பாரேன்' என்று முறைத்துப் பார்க்கும். அதுவும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சேர்ந்து விட்ட அடைசல்களை ஒரே நாளில் துப்புரவு செய்வது என்பது ஒன்றும் மந்திர வித்தையில்லை. இருப்பதிலேயே அலுப்பையும், சலிப்பையும் ஊட்டுகிற ஒரு காரியம் உண்டென்றால், அது இதுதான்...

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003028
Kuppaikku 'Good Bye'!

Read more from Anuradha Ramanan

Related to Kuppaikku 'Good Bye'!

Related ebooks

Reviews for Kuppaikku 'Good Bye'!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuppaikku 'Good Bye'! - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    குப்பைக்கு ‘குட் பை!'

    Kuppaikku ‘Good Bye!’

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    அன்பிற்கினிய வாசகர்களுக்கு,

    வணக்கம். நலம், நலம்தானே...

    'குப்பைக்கு குட்பை!' - 'அவள்' விகடனில், ஏதோ நாலைந்து அத்தியாயங்கள் எழுதலாம் என்று ஆரம்பித்து - பதினைந்து அத்தியாயங்கள் வரை வளர்ந்து விட்ட தொடர்...

    குப்பையை ஒழித்து, வீட்டைப் 'பளிச்'சென வைப்பது என்பது அத்தனைச் சுலபமானக் காரியமில்லை. ஒன்றை ஒழித்தால் - இன்னொன்று ‘என்னையும் கொஞ்சம் பாரேன்' என்று முறைத்துப் பார்க்கும்.

    அதுவும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சேர்ந்து விட்ட அடைசல்களை ஒரே நாளில் துப்புரவு செய்வது என்பது ஒன்றும் மந்திர வித்தையில்லை.

    இருப்பதிலேயே அலுப்பையும், சலிப்பையும் ஊட்டுகிற ஒரு காரியம் உண்டென்றால், அது இதுதான்...

    போதாக் குறைக்கு வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேருமே ‘இந்த சனிக்கிழமை புரட்டி விடலாம்; ஞாயிற்றுக்கிழமை பார்... நம்ம வீடு சும்மா 'பளிச்சுனு பளபளன்னு ஜொலிக்கப் போறது' என்று கோரஸ் பாடுவார்களே தவிர... கடைசி நிமிடத்தில் ஆள் ஆளுக்குக் கழன்று விடுவார்கள்.

    எனக்கு ஆஃபீஸ்லே ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கும்மா. அடுத்த சனிக்கிழமை வச்சுக்கலாமா?

    ஆமாம் மம்மீ... இந்த சனிக்கிழமை எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் டே... போகலையின்னா பிரின்ஸி கத்துவாங்க...

    என்னது... இந்த சனிக்கிழமை வீட்டை ஒழிக்கறேன்னு சொன்னியாமே உன் அகத்துக்காரர் கிட்ட... அன்னிக்குத்தான் நம்ம சுப்பிரமணி பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். சாயந்திரம் ரிஸப்ஷன். ஞாயிற்றுக்கிழமை கல்யாணம். என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுண்டிருக்க மாட்டியோ...

    தலைக்குத் தலை சாக்கு போக்குகள்... நல்லது ஒன்று நடக்க வேண்டுமானால் ஆயிரம் முட்டுக்கட்டைகள் வரத்தான் வரும். அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் நம்மைச் சுற்றி சிலந்தி கூடு கட்டியிருக்கும். நமது வீடு, தூசும், நூலாம்படையுமாக ஏதோ புராதனக் காலத்திய சங்கதி போல் பயமுறுத்தும்.

    ஆதலால் -

    எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று, திடமான மனசுடன் கையில் ஒட்டடைக் குச்சியை எடுங்கள். கட்டளையிட்டால் செய்வதற்கு வீடு நிறைய ஆள் படை இருந்தாலும், நாமும் கொஞ்சம் பொறுப்பேற்கலாம். பாதகமில்லை.

    'உடையவள் கை பட்டால், பித்தளை கூட பொன் போல மின்னும்' - என்பார் என் பாட்டி.

    உண்மைதான். நம் வீடு, நம் அம்மா வாங்கித் தந்த பீரோ... கணவர், முதல் சம்பளத்தில் வாங்கிப் போட்ட கட்டில்... - இப்படி, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் நமது சரித்திரம் இருக்கிறது. ஏன், நாமே இருக்கிறோம்...

    என்ன... ஒவ்வொரு கிழமைக்கு ஒரு வேலை என வைத்துக் கொண்டால் போதும். சனியோ, ஞாயிறோ நமக்கு ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு மனசுக்குத் திருப்தியையும், ஒரு வித நிறைவையும் தரும் பாருங்கள். அதற்கு ஈடு இணை கிடையாது...

    குப்பையைப் பற்றிதானே என அலட்சியமாய் நினைக்காதீர்கள். குப்பையில் குந்துமணி கிடைப்பது போல - உங்களுக்கு பல நல்ல யோசனைகள் தோன்றலாம். எதையுமே ஆர்வத்தோடு செய்தால் - அதற்கானப் பலன்கள் கண்டிப்பாய் கிடைக்கும்.

    என்ன... ஒட்டடைக் குச்சியைக் கையில் எடுத்து வீட்டீர்களா... வாருங்கள் ஜாலியாய் சிரித்தபடி, 'குப்பைக்கு குட்பை' சொல்லலாம்.

    இந்தக் கட்டுரையை தொடராக வெளியிட்ட அவள் விகடன் ஆசிரியர் திரு. ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும், உதவி ஆசிரியர் திரு. சிவஞானம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஓவியர் திரு. நடனம், எனது ஆர்வத்தையும், கற்பனையையும் உள் வாங்கிக் கொண்டு, நகைச்சுவை மிளிரும் ஓவியங்களை தீட்டி அசத்தி விட்டார். அவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி பல!

    இக்கட்டுரையை நான் எழுதத் தொடங்கியதிலிருந்து, நூலாக வெளிவரும் வரையில் என் எழுத்துக்கு முதல் வாசகராகவும், உறுதுணையாகவும் நின்ற உதவியாளர் திரு. சர்ச்சில் பாண்டியன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!

    தற்போது, இத் தொகுப்பை, நல்லதொரு நூலாக வெளியிட்டால், அத்தனை வாசகர்களுக்கும் ஒரு கையேடு மாதிரி இருக்கும் என்று முடிவு செய்து, மிக மிக அழகானப் புத்தகமாக வெளியிட்டுள்ள பூம்புகார் நிறுவனத்துக்கும், நூலின் மேலட்டையை வரைந்துள்ள ஓவியர், திரு.ஷியாம் அவர்களுக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி கூறலாம்.

    'குப்பைக்கு குட்பை’யைப் படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், 'ஊலலல்லா' என உற்சாகமாய் பாடிக்கொண்டே வீட்டை, ஆபீஸை சுத்தம் செய்யுங்கள்.

    மறுபடி உங்களை வேறு ஒரு நல்ல விஷயத்தோடு சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

    அன்புடன்,

    அனுராதாரமணன்

    ***

    1

    என்ன அனு... குப்பை ஒரு பெரீய்ய விஷயமா...

    ஏம்பா... எழுத வேற எதுவும் கிடைக்கலையா உண்மையச் சொல்லு... மத்தவங்க படிச்சிட்டு, 'குப்பை'ன்னு சொல்றதுக்குப் பதிலா - நீயே சாமர்த்தியா இப்படி... அப்படித்தானே...

    கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னைத் துளைக்கப் போகும் தாய்மார்களே, அக்கா தங்கச்சிகளே... இவர்களுக்குப் பின்னால் நின்று மறைந்திருந்தே பார்க்கும் அவரவர் கணவர்களே... அத்தனைப் பேருக்கும் சிரம் தாழ்த்தி, கரம் குவித்துச் சொல்வது யாதெனில் (ச்சீ... இதற்குத்தான் தினமும் பகல் காட்சியாய் மணாளனே மங்கையின் பாக்கியம், மாலையிட்ட மங்கை, பாதாள பைரவி, வேதாள உலகம் என்று பார்க்கக் கூடாது என்பது... நம் 'நல்ல தமிழே’ மறந்து போகிறது பாருங்கள்...) நான் நிஜமாகவே குப்பையைப் பற்றித்தான் இங்கே அலசப் போகிறேன்...

    'இதெல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்...’

    - இப்படி முகம் சுழிக்காமல் கொஞ்சம் காது கொடுங்க அம்மணீ... (வைரத்தோடு இருந்தால் பரவாயில்லை. என்னை நம்பலாம்...)

    குப்பை பெறாத விஷயம்...

    நானும் இந்த ஆபீஸ்லே இருபத்தஞ்சு வருஷமாக் குப்பை கொட்டறேன்...

    "ஆமா போ... அவ புருஷன் வீட்டுல குப்பை கொட்டின லட்சணமெல்லாம் நமக்குத் தெரியாதாக்கும்...’

    "குழந்தை இல்லையேன்னு வேண்டிட்டு, இவன் பொறந்ததும், குப்பையிலப் போட்டுப் புரட்டி, குப்புசாமியின்னு பேர் வச்சோம்...’'

    இப்படி இந்த குப்பை நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும் (அச்சூ... ஆ... அக்ஸ்) இது ஒரு வேண்டாத விஷயம்தானே...

    'பெருக்கித் தள்ள வேண்டியதுதானே...’

    - இப்படிக் கேட்பது என் பிரியத்துக்குகந்த பவானி அத்தை...

    பெருக்கலாம்... எரிக்கலாம்... சிலவற்றை மனசைக் கல்லாக்கிக் கொண்டு தூக்கிக் கடாசலாம். இன்னும் சிலவற்றை, பெரிய மனசுடன் யாருக்காவது தூக்கிக் கொடுக்கலாம்...

    எல்லாம் சரிதான். ஆனால் - 'இது குப்பை - தூக்கிப் போடு' என்று குடும்பத்தில் ஒருவர் - ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், மற்றவர்களும் அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே...

    சும்மா, ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன்...

    எனக்கு, என் அப்பா சேர்த்து வைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1