Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annachi vs Annachi
Annachi vs Annachi
Annachi vs Annachi
Ebook122 pages41 minutes

Annachi vs Annachi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாட்டு நடப்புகளை துரைசாமி அண்ணாச்சியும், குமார் அண்ணாச்சியும் உரையாடுவது போல் மிகவும் நகைச்சுவையாக படைத்திருக்கிறார்.

பாக்கியம் ராமசாமி அவர்களைப் போல் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் மிகவும் குறைவு. இதைப் படிப்பது ஒரு அனுபவம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303068
Annachi vs Annachi

Read more from Bakkiyam Ramasamy

Related to Annachi vs Annachi

Related ebooks

Related categories

Reviews for Annachi vs Annachi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annachi vs Annachi - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அண்ணாச்சி Vs அண்ணாச்சி

    Annachi Vs Annachi

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இரண்டு வட்டங்கள்

    2. நமக்கு நாமே ராஜா!

    3. வாழை மரத்துக்கு நான் பொறுப்பு

    4. நமக்குள்ளே ஒரு குடுகுடுப்பை!

    5. திடீர் விரதம்!

    6. வாங்க, வாங்க, இத்தனை காத்தாலே?

    7. கொடுக்கப்பட்ட சிப்பந்திகள்!

    8. கடிச்ச பாம்பைத் துரத்தாதே!

    9. எத்தனை கிலோ திருப்தி?

    10. நம்மைப் பத்தி என்ன பேசுவாங்களோ?

    11. லீடர் மானேஜர்

    12. லீடராக ஆசை

    13. முதல் வெற்றி வீட்டிலே

    14. தலைவி என்றால் சும்மாவா?

    15. கல்யாண அன்பளிப்பு

    16. உங்கள் மையம் எது?

    17. இரண்டாவதே முதலாவது

    18. மர்ம உறைகள்

    19. திரும்பிப் பார்

    20. மனத்தை எழுதுங்கள் மணலில்

    1

    இரண்டு வட்டங்கள்

    இன்னிக்கி மழை வருமா, வராதா? என்ன சொல்லுறீங்க என்றார் துரைசாமி அண்ணாச்சி.

    மந்திரி சபை இன்னிக்குக் கவிழுமா கவிழாதாங்கற மாதிரி கேட்கிறீங்களே? என்று சிரித்தார் குமார் அண்ணாச்சி.

    துவரம் பருப்பு, மிளகாய் எல்லாத்தையும் மொட்டை மாடியிலே போட்டு எடுக்கச் சொன்னேன்... மேகம் கட்டுறதைப் பார்த்தால் மழை வரும் போலிருக்கு. கடையிலே கூட ரெண்டு டஜன் குடை வாங்கிப் போடணும். ஸீஸன் வந்துடுச்சே.

    மிளகாய் ஞாபகத்திலிருந்து குடைக்குத் தாவிட்டுது உங்க கவனம். நீங்கதான் பக்கா பிஸினஸ்மேன்.

    குமாரு! நீங்க என்னைப் புகழறீங்களா, இளக்காரமாச் சொல்றீங்களான்னு புரியலையே?

    ஒரு திறமையான வியாபாரின்னு நல்ல விதமாகத்தான் சொல்றேன். மீன் பிடிக்கிறவனுக்கு எப்பவும் தூண்டிலிலேயே கவனம் இருக்கணும்னு சொல்லுவாங்க இல்லையா? என்றார் குமார்.

    வீட்டிலே சம்சாரம் கூடத் திட்டும். எப்பப் பார்த்தாலும் வியாபார ஞாபகம்தானான்னு?

    ஓரளவு நீங்க முன்னேறியிருக்கறதுக்குக் காரணம் அந்தக் கவனம்தானுங்க துரைசாமி.

    நீங்க கவனம் என்கிறீங்க, மற்றவங்க, 'காசுக்குப் பறக்கறான்' என்கிறாங்க.

    அவுங்க பேச்சை வுடுங்க. முன்னுக்கு வரணும்னு விரும்புகிற எந்த மனசனும் ரெண்டு வட்டம் போட்டுக்கணும்.

    எதிலே போட்டுக்கணும்.

    மனசுக்குள்றதான்.

    வட்டம்னு எதைச் சொல்றீங்க.

    "ஊரிலே உலகத்திலே இப்போ ஆயிரத்தெட்டு விசயம் நடந்துக்கிட்டிருக்குது. தினமும் பேப்பர்லே படிக்கிறோம், டெலிவிசன்லே பார்க்கறோம். நம்ம காதுக்குத் தானாக வந்து துடைக்கிற செய்திங்க...

    இப்படி... அரசியல் விஷயம், குண்டு விவகாரங்கள், அயோத்தி கோயில், அமெரிக்க பிரசிடெண்ட் கிளிண்டன் விவகாரம், அணுகுண்டு வெடிச்ச விஷயம், சாதிக் கலவரம், அர்ச்சகருங்க ஸ்டிரைக், காய்கறி விலை, உங்க சகல பாடியோட ஹார்ட் அட்டாக், கிருஷ்ணா நீர், உலகக் கோப்பை கால்பந்தாட்டம், உங்க வியாபாரம், உங்க உடம்பு, பிள்ளையோட படிப்பு."

    துரைசாமி சிரித்தார்!

    பேப்பரே படிச்சிட்டீங்க.

    ஆமாம்! என்றார் குமார். இத்தனை விஷயங்களிருக்குது உங்களைச் சுற்றி. ஆனால் இவ்வளவு விஷயத்திலும் நீங்க ஒரே சீராக் கவனம் செலுத்த முடியுமா?

    நிச்சயமாக முடியாது. எல்லாத்தைப் பத்தியும் தெரிஞ்சு வச்சுக்க வேணும்னா முடியும்.

    தெரிஞ்சு வெச்சுக்கறது அவசியம்தான். ஆனால் நான் அதைச் சொல்லலை. உங்களுக்கு அசலாக அக்கறையுள்ள விஷயங்கள் இதிலே சிலதுதான் இருக்கும். எல்லா விஷயங்களிலிருந்தும் பிரிச்சுக்கொள்ற மாதிரி ஒரு வட்டம் போட்டுக்குங்க. தெருவிலே எத்தனையோ வீடுங்க இருந்தாலும் நம்ம வீட்டுக்குன்னு ஒரு காம்பவுண்டு சுவர் போட்டுக்கற மாதிரின்னு வெச்சுக்குங்களேன்.

    சிமெண்ட்டும், செங்கல்லும் விற்கிற விலையிலே காம்பவுண்டாவது, சுவராவது. ரெண்டு செடியை ஆடுங்க வந்து கடிக்குதுங்கறதுக்காக முப்பதாயிரம் செலவு செய்யணுமாக்கும்? ஒரு செங்கல்லு ரெண்டு ரூபாய்!

    உங்களை யாரு அண்ணாச்சி காம்பவுண்டு சுவரு கட்டச் சொன்னா? சிரித்தார் குமார்.

    சும்மா ஒரு ஊதாரணத்துக்கு சொன்னேன். நாம அக்கறைப் படாத விஷயங்களையெல்லாம் வட்டத்துக்கு வெளியே தள்ளிடணும். நாம எது விஷயமா அக்கறைப்படறோமோ அதைச் சுற்றி மட்டும் அந்த வட்டம் இருக்கும்!

    புரியலையே.

    உங்களுக்கு அக்கறை ராமர் கோயிலிலோ, கால்பந்தாட்டத்திலோ உங்க சகலையோட ஹார்ட் அட்டாக்கிலோ இல்லைன்னு வையுங்க... அதையெல்லாம் வட்டத்துக்கு வெளியே வெச்சுடுங்க. உங்க வட்டத்துக்குள்ளே இருக்கறது வியாபாரம். அதிலேதான் நீங்க அதிக அக்கறை செலுத்தணும்.

    ஆமாம் குமாரு, மனசனுக்கு ஒரு கவனம்தான் இருக்கணும்...

    பல கவனம் வெச்சுகிட்டு வெற்றிகரமாக இருக்கறவங்க உண்டு. ஆனால் நம்மளாட்டம் சராசரிங்களுக்கு பல முனைகளிலே கவனம் இருக்கறது பொருத்தமில்லே. நீங்களே இப்போ ஒரு சினிமா தியேட்ரும் கட்டியிருக்கங்கன்னு வையுங்க. உங்க கவனம் வியாபாரத்திலே குறையும்... திடும்னு உங்களுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸிலே மனசு போகுதுன்னு வையுங்க. இந்த வியாபாரத்திலே கவனம் நிச்சயம் குறையும்.

    ரியல் எஸ்டேட்டிலே வாரலாமுங்களே?

    ஏன் இன்னும் எத்தனையோ துறை இருக்குதே, நீங்க ஒரு சினிமா கூட எடுக்கலாம்...

    ஐயையோ! உரக்கச் சொல்லாதீங்க. என் பையன் காதுல விழுந்தால் 'என்னைத்தானப்பா ஹீரோவாகப் போடணும்'னு வந்துடுவான்... நமக்கு எதுக்குங்க அந்தத் தொழிலெல்லாம்...?

    ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேலே நீங்க ஃபுட்பால் மாட்ச் டி.வி.யிலே பார்க்கறீங்களா?

    அய்யே... அது எதுக்குங்க... எனக்கு அதிலே இன்ட்டரெஸ்ட் இல்லை.

    "அதெல்லாம் உங்க வட்டத்துக்கு வெளியே தள்ளிடறீங்க. உங்க வட்டத்துக்குள்ளே இருக்கறது உங்க மளிகைக் கடை வியாபாரம். இந்த வியாபாரத்தை இன்னும் எப்படி முன்னேற்றலாம், நவநாகரிகமாக இதை எப்படிச் செய்யலாம் என்கிறதிலே நீங்க கவனம் செலுத்தணும். அக்கறையுள்ளதைத் தேர்ந்தெடுத்து உங்கள் வட்டத்துக்குள்ளே போட்டுக்கறீங்க. அப்புறம் அந்த விஷயங்களில் மேலும் அதிக சிரத்தை காட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1