Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kiliye Un Peyar Kolaiya?
Kiliye Un Peyar Kolaiya?
Kiliye Un Peyar Kolaiya?
Ebook152 pages40 minutes

Kiliye Un Peyar Kolaiya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203054
Kiliye Un Peyar Kolaiya?

Read more from Hamsa Dhanagopal

Related to Kiliye Un Peyar Kolaiya?

Related ebooks

Reviews for Kiliye Un Peyar Kolaiya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kiliye Un Peyar Kolaiya? - Hamsa Dhanagopal

    www.pustaka.co.in

    கிளியே உன் பெயர் கொலையா?

    Kiliyea Un Peyar Kollaiyah?

    Author :

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கிளியே, உன் பெயர் கொலையா?

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    கிளியே, உன் பெயர் கொலையா?

    அத்தியாயம் 1

    காதுகளை அழுத்திய கல்லிழைத்த ஜிமிக்கிகளைக் கழற்றினதும், சுதந்திரம் சுகமாய் இருக்கிறது கவிதாவிற்கு. அறையின் ஒரு பக்கச் சுவர் முழுதும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்ததால் அதில் பல கோணங்களில் கவிதா.

    அவள் கழற்றிப் போட்ட நகைகள் கட்டிலில். கொலுசுகளையும் கழற்றிப் போடுகிறாள். பட்டுப் பாவாடை, பட்டுத் தாவணி, ஜரிகை சோளி, நீண்ட பின்னல், ஆடைகளைக் களைந்து கொண்டிருக்கையில் கீழிருந்து பேச்சுக் குரல் கிசுகிசுப்பாய்க் கேட்கிறது.

    இவளின் பிறந்த தின விழா முடிந்து கூட்டம் கலைந்து விட்டதே! வேலைக்காரர்கள் பின்புறம் இருக்க, இங்கே ? அப்பா கூடத் தூங்கப் போய் விட்டிருந்தாரே!

    கவிதா மரத்தாலான மாடிப்படியருகில் வந்து நின்று குனிந்து கீழே பார்க்கிறாள்.

    பெரிய ஹாலில் தந்தை யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இவளுக்குப் புதிய நபர். அந்த நபர் நடுத்தர உயரம். மாநிறம். தோளில் துண்டு. நீல நிறச் சட்டை, வேட்டி. அவன் கையில் வைத்திருந்த வேலைப்பாட்டுடன் இருந்த பெரிய கிளிக் கூண்டு இவளைக் கூர்ந்து பார்க்கச் செய்தது.

    தந்தை அதைப் பெற்றுக் கொண்டார். உள்ளே போய்ப் பெரிய கட்டுகளாய்-நூறு ரூபாய்களாய்த்தான் இருக்க வேண் டும்-கொணர்ந்து அவனிடம் கொடுத்து ஏதோ சிரித்தபடி சொன்னார். சர விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் இருளில் நன்கு பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த மனிதனின் நெற்றியில் நெல்லிக்காய் அளவு சதைக் கோளம் புடைத்துக் கொண்டிருப்பது பளிச்செனத் தெரிந்தது.

    சாதாரணமாய் வேலைக்காரர்களுடன் சகஜமாய்ப் பேசாத அப்பா, அவன் தோளில் கை போட்டு அழைத்து வெளியே போகிறார். இருவரும் அப்படி என்ன பேசுவார்கள்?

    படிகளில் காலடிச் சத்தம்

    யார்?

    கவி. . . கவிதா . . . தூங்கிட்டியாம்மா ?

    காலை விந்தியபடி வடிவேலு அந்தப் பெரிய கிளிக் கூண்டைச் சிரமத்துடன் தூக்கி வருகிறார்.

    எதுக்குப்பா நீங்க சிரமப்பட்டு எடுத்து வர்றீங்க? என்னை அழைச்சிருந்தா நான் வந்திருக்க மாட்டேனா?

    கிளிக் கூண்டும்மா. உன் பிறந்த நாள் பரிசா ஒருத்தர் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போறார். ரொம்ப நல்லா செய்திருக்கு இல்ல?

    அப்பா, உங்களுக்கு நாய் பூனைன்னு வளர்க்கிறதே பிடிக்காது. இது. . .

    கிளிக்கூண்டை ஆர்வத்துடன் வாங்கிப் பார்க்கிறாள். நல்ல கனம். சிரமத்துடன் எடுக்க வேண்டி இருக்கிறது. வெறும் இரும்புக் கம்பிகளாக இல்லாமல் சிவப்புப் பெயிண்ட் அடிக்கப் பட்டு அழகாய் இருக்கிறது.

    இது ரொம்ப அழகா இருக்குப்பா. ஏம்பா இதுல லவ் பர்ட்ஸ் வளர்ப்பமா?

    "ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பஞ்ச வர்ணக்கிளி என் ப்ரண்ட் அனுப்பியிருக்கார். அது பிளேன்ல வந்துட்டிருக்கு.

    அதுக்குத்தான் இது. உன் பிறந்த நாள் பரிசு ."

    வடிவேலு சிரிக்கிறார். இருளையும் பனியையும் விரட்டி யடிக்கிறது அவர் சிரிப்பு.

    இன்னிக்கு உனக்கு முதல்ல யார் பர்த் டே க்ரீட்டிங்ஸ் சொன்னாங்க?

    சிங்கப்பூர்லேந்து மாமா, காலையிலே அஞ்சு மணிக்கே சொல்லிட்டாரே! ஏம்பா?

    இங்கே பார் கவிதா. பாண்டியனுக்கு உன்னைக் -கல்யாணம் செய்துக்கற ஆசை மனசில் இருக்கு .

    அப்பா நான் படிக்கிறேன்பா. வயது பத்தொன்பது கூட ஆகலேப்பா. இப்பப் போய். . . சிணுங்கினாள்.

    இங்கே பார் கவி, எங்க அக்கா மகன் ஸ்டேட்ஸ்ல எம்.பி.ஏ. செய்திருக்கிறான். அவனுக்குத்தான் உன்னைக் குடுக்கப் போறேன்-பாண்டியன் வேணாம்.

    புரியாமல் பார்க்கிறாள் கவிதா. பாண்டியன் இவளைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் இவளுக்கு அவன் மீது அன்போ பாசமோ ஏற்பட்டதில்லை. அப்பா சொன்ன இந்த விடுதலை மனதுக்குப் பிடித்தது.

    குமரன் உன்னை அன்பா ஆசையா வச்சுப்பான். எங்கக்காவுக்கு நான் வாக்குக் குடுத்துட்டேன்.

    பாண்டியனும் கவிதாவும்தான் ஜோடி என அப்பாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இன்றைக்கு என்ன?

    பாண்டியனின் முரட்டுக் குணம் வேலைக்காரர்களுடன் கொடுமையாய் நடந்து கொள்வது தனிமையில் இவளிடம்

    முரட்டுத்தனமாய் நடந்து கொள்வது.

    அப்பா , மாமா வந்து. . .

    "அவனை நீ கல்யாணம் செய்துக்க விரும்புறியா?

    அவள் அவசரமாய் மறுத்தாள். இல்லேப்பா. பயமா இருக்குப்பா. மாமா வந்து...

    வடிவேலு பொண்ணுக்குப் பயம்னா என்னன்னு தெரியக் கூடாதும்மா. நிம்மதியாய்த் தூங்கு!

    காலை விந்தியபடி போகிறார்.

    கட்டிலில் புரண்டபடி மாமனை நினைத்து விழி உறக்கம் தொலைத்தாள் கவிதா.

    இமைகள் ஒன்றுபட மறுத்தன.

    இவள் மண்ணில் முதல் குரல் கொடுத்தபோதே தாய், தன் அண்ணன் மகனுக்குத்தான் தன் மகள் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

    "அந்த முரட்டு மாமன் இவள் இதயக் கதவை என்றும் தட்டியவன் அல்ல, அவன் மண

    Enjoying the preview?
    Page 1 of 1