Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhuvana Oru Kelvikuri
Bhuvana Oru Kelvikuri
Bhuvana Oru Kelvikuri
Ebook115 pages43 minutes

Bhuvana Oru Kelvikuri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Friends Nagaraj and Sampath are road-side garment salesmen living in Tirunelveli in the same house. While Sampath is a straightforward person who believes in honesty. Nagaraj is a womaniser who loves many women at the same time, in contrast to Sampath who believes in true love. Sampath's lover Raji, while fleeing from a rogue bull, dies due to an accident. A depressed Sampath attempts suicide, but Nagaraj stops him, and Sampath decides to stop selling garments, instead confining himself to remaining Nagaraj's assistant.

After Nagaraj and Sampath board a train bound for Madras as part of a business trip, they encounter Muthu, a temple trust clerk who has kept a lot of cash in a suitcase. But Muthu dies en route to Madras due to a heart attack, and Nagaraj takes the suitcase of cash, despite Sampath's protests. Muthu's sister Bhuvana visits them in their Nagercoil house to enquire about the lost cash (which is all black money). Nagaraj denies knowing anything, but Bhuvana remains suspicious. He pretends to love her; Bhuvana falls for his lust and has sex with him.

Nagaraj uses some of the black money to open his own garment store. To make the rest of the black money legitimate, Nagaraj decides to marry Manohari, the daughter of a wealthy businessman. Bhuvana, having been impregnated by Nagaraj, refuses to abort the baby and wants Nagaraj to marry her, but he refuses to do so. To save Bhuvana's honour and to help his friend, Sampath marries Bhuvana but they only share a platonic relationship, while Nagaraj marries Manohari and his business flourishes.

The plot thickens between Sampath, Nagaraj, Manohari and Bhuvana. Read the book which is a classic...

This story was made as a movie in the same title which is directed by S.P.Muthuraman. The star cast is Sivakumar, Rajinikanth, Sumithra and many more....

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803043
Bhuvana Oru Kelvikuri

Read more from Maharishi

Related to Bhuvana Oru Kelvikuri

Related ebooks

Reviews for Bhuvana Oru Kelvikuri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhuvana Oru Kelvikuri - Maharishi

    http://www.pustaka.co.in

    புவனா - ஒரு கேள்விக்குறி

    Bhuvana - Oru Kelvikuri

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    ***

    1

    நாற்பது... ஐம்பது... நாகர்கோயிலிலிருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலையில் காரின் ஓட்டம் அந்தக் காலை நேரத்தில், ரம்மியமாக இருந்தது

    மனம் லயிக்கவில்லை மனோவுக்கு. காரோட்டும் தன் கணவனைத் திரும்பிப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.

    நீண்டும் வளைந்தும் சென்றது ரஸ்தா. அதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டே நாகராஜ் பேசிக் கொண்டிருந்தான்.

    அவன் அமிதமான மோகி.

    விவாகமான பின்பு, அவனிடமுள்ள இந்தக் குணங்களைக் கண்டதாலோ என்னவோ, மனோகரி அவனிடம் பல வேறு சந்தர்ப்பங்களில் பிணக்குடனேயே இருந்திருக்கிறாள்.

    காரில் மனைவியுடன் போகும்போது, போகிறாளே, பச்சைப் புடவைக்காரி? எத்தனை அழகான கூந்தல் பார்த்தாயா! அவளை அப்படியே நிற்க வைத்து, அந்தக் கூந்தலை மட்டும் கொஞ்ச நேரம் கோதிவிடவேண்டும் போல ஆசையாக இருக்கிறது. என்பான். அவள் அவனை முதுகில் நகம் பதியும்படி கிள்ளுவாள்.

    நாகர்கோயில் கோர்ட் ரோடில் ராணி சேதுலட்சுமிபாய் பள்ளிக் கூடத்தைக் கடக்கும்போது அந்தப் பெண் அவனுடைய காரைத் தாண்டிப் போகும். இது தினசரி மாலை சரியாக ஆறுமணிக்கு நிகழும். அவளைக் கண்டவுடனேயே காரின் வேகத்தை மட்டுப்படுத்துவான்.

    மனோகரி உசுப்புவாள்.

    ஏன் காரை ஸ்லோ செய்கிறீர்கள்?

    அவளுடைய பின் அழகைப் பாரேன். முன்னாலும் அழகுதான் இவள். அனேகமாக, இவள் நர்ஸாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவளை நர்ஸ் உடையில் பார்த்தேன். அடடா! இவளுடைய மதர்த்த அழகுக்கு நர்ஸ் உடை ஒரு வசீகரமான தண்டனை...

    காரை நிறுத்துங்கள். நான் அவளிடம் உங்கள் மனக்குறையைச் சொல்லி விட்டு வருகிறேன்.

    அவன் பொருட்படுத்தமாட்டான், அவள்-

    உங்களுடைய மன்மத லீலைகள் பற்றி நான் கதை கதையாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் கல்யாணத்துக்கு வந்துவிட்டு-இங்கேயே நாகர் கோயிலில் வேலை தேடுகிறேன் என்று பத்து நாள் தங்கினாளே உங்கள் பிரண்ட் அவள் பேரு... என்பாள்.

    நான் சொல்கிறேன். பிரியம்வதா...

    நோ...நோ... அது அவளுக்கு நீங்கள் வைத்த பெயர்... பிரியம்வதா... முகரக்கட்டை... அவள் பேர் சுபா... நிறையச் சொல்லியிருக்கிறாள்... நீங்கள் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறீர்கள்? எத்தனைபேர் மனத்தில் ஆசையைத் தூண்டுவிட்டு...

    மனோ... என் பிரிய மனோ... அவர்களில் யாரையேனும் நான் மணந்திருந்தால், நீ பெருமை கொள்ளும் நான் உனக்குக் கிடைத்திருப்பேனோ?... என்பான். அவனுடைய மிகச் சிறந்த மனோவசிய ஆயுதப் பிரயோகத்தில் தன்னை அப்படியே மறந்து அவன் மேல் சாய்ந்து விடுவாள் மனோகரி. அவன் அவ்வளவு அழகானவன். திடகாத்திரமானவன். வசீகரமான கண்களைக் கொண்டவன். சிவந்த உடம்பினன். கையும் கழுத்தும் ரொம்பவும் அழகாக இருக்கும். பின்புறம் சற்றே நீண்டு, படிய வாரிய கேசம். அவனுக்கு எந்த உடையும் நன்றாக இருக்கும்.

    கிட்டத்தட்ட இந்தப் பத்தாண்டு கால இல்லற வாழ்க்கையில் அவர்கள் மனம் இந்தப் பிணக்கிலிருந்து விடுபடவே இல்லை பிணக்குகள் சிலசமயம் மெல்லிய ஜிகினா இழைகளாகவும், சிலசமயம் ட்வைன் நூல் போலவும், சில சமயம் அறுக்க முடியாத, ரொம்பப் பிரயாசைக்குப்பின் அறுபடுகிற கயிறு போலவும்-இருந்து கொண்டே இருந்தது. மொத்தத்தில் அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் இந்தப் பிணக்கு ஓர் இழையாக அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்தது.

    கார் சுங்காங்கடை மலையைத் தாண்டும்போது சாலையின் ஓரத்தில் பிரியும் மொரம்பு ரஸ்தாவில் திரும்பி உள்ளே நுழைந்தது. இத்தனை நேரம் வந்த ரஸ்தாவின் மிருதுத் தன்மையிலிருந்து காரின் சக்கரங்கள் விடுபட்டதால், அதிக மேடு பள்ளங்கள் கொண்ட சிறிய பாதையில் சக்கரங்கள் ஓடும் போது அதிர்ந்தன.

    தூரத்தில் 'மாயா ரெடிமேட் ஆடைகள்' செய்யும் பெரிய தொழிலகம்.

    உள்ளே அதிக வேலையில்லை. மானேஜரிடம் ஒரு... விஷயத்தைச் சொல்லிவிட்டு வரவேண்டும். அவ்வளவு தான். ஒரு ஐந்து நிமிஷ வேலை.

    கேட்கீப்பர் கதவைத் திறந்தான்.

    கார் மீண்டும் பழைய பாட்டைக்கு வந்து ஓடிய போது பிரம்மாண்டமான மாயா ரெடிமேட் தொழிலகம் எட்டப் போய்விட்டது.

    ஸ்டீயரிங்கில் உள்ள நாகராஜின் சிவந்த இடது கையின் மேல் தன் வலது கரத்தைப் பதியவைத்து விட்டு அவன் முகத்தைத் திரும்பிப்பார்த்தாள் மனோகரி. அந்தப் பார்வையில் உள்ள ஏக்கம், அந்தப் பார்வையில் உள்ள தாபம், அந்தப் பார்வையில் உள்ள வெறுமை, அந்தப் பார்வையல் உள்ள ஒரு யாசகம் எல்லாம் அவனுக்குத் தெரியும்,

    சுங்காங்கடை மலையைத் தாண்டிக் கார் சென்றது. தூரத்தில் ஐயப்பன் பெண்கள் கல்லூரி.

    கார் வில்லுக்குறி கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

    வள்ளியாறு மேலே ஓடிக் கொண்டிருக்க, கீழே கார் போகும் சாலை. இரண்டு பக்கமும் மிக உயர்ந்தகரைகள்.

    ஒரு பெரிய அறையின் உள் அறைகள் போல, பத்மநாபபுரத்து அரண்மனை தூரத்தில் தெரிந்தது. தக்களை தாண்டிய சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனையின் கோட்டைச் சுவர் வளைந்து வளைந்து சென்றது. கோட்டை வாயிலுக்குள் கார் நுழைந்தது. மேடான உட்பகுதிக்குள் பிரவேசித்து, ஆலயத்தின் வெளிப் பிராகாரம் போன்ற, அரண் மனையின் மதில் ஓரமாக உள்ள தெருக்களில் ஓடியது. கிழக்குத் தெருவில் ஒரு பாடசாலைக்கு அருகில் உள்ள சிறிய பங்களா முன்னர் கார் நின்றது.

    டாக்டர் அனந்த பத்மநாபன் இல்லம்.

    மிகச் சிறந்த உடற்கூறு மருத்துவர். சமீபத்தில் வெளி நாட்டிலிருந்து வந்து இங்கே குடியேறியவர்.

    டாக்டர்கள் பட்டியலில் மற்றுமொரு எண்ணிக்கையைச் சேர்க்க நாகராஜுக்கு இஷ்டம் இல்லை. மனோகரியின் ஆதங்கம், புதிய டாக்டரிடமும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பது.

    புறப்படும்போது எத்தனை சோர்வுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1