Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhadrakali
Bhadrakali
Bhadrakali
Ebook123 pages50 minutes

Bhadrakali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

A couple decides to part as the wife is held responsible for their daughter's death. However, after their divorce the man remarries and his ex-wife comes to his rescue when he faces personal problems.

This story was produced and directed by Tirulokchandar and released in 1976. Sivakumar, Rani Chandra, Bhavani, Major Sundarrajan and others acted in this movie. For more info: https://en.wikipedia.org/wiki/Bhadrakali_(film) Wikipedia

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803042
Bhadrakali

Read more from Maharishi

Related to Bhadrakali

Related ebooks

Reviews for Bhadrakali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhadrakali - Maharishi

    http://www.pustaka.co.in

    பத்ரகாளி

    Bhadrakali

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இரண்டாண்டு கால மனப் போராட்டங்களுக்கு அன்றுடன் முடிவுகட்டியாகி விட்டது. ஆத்ம திருப்தி என்கிற ஒரு மேல் பூச்சான உணர்வுக்கு ஆட்பட்ட நிலையில் நீதிபதியின் விரிவான தீர்ப்பும், அதன் முத்தாய்ப்பாக, அவன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட விதமும் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் அதன் உள்ளர்த்தங்கள் அவ்வளவு எளிதில் பூஞ்சையாகிவிடக் கூடியதல்லவே.

    ... உங்களுடைய விவாகரத்து மனுவை ஏற்றுக் கொண்டு உங்களுக்கும் ருக்மிணிக்கும் இடையே நீங்கள் கோரிய விவாகரத்தை அனுமதிக்கிறேன்...

    இவ்வார்த்தைகளை அவன் தன் காதுகளில் கேட்ட போது கணேஷின் கண்கள் கலங்கிவிட்டன. உள் நெகிழ்வாகக் குமுறிக் கொண்டிருந்த சோக அழுத்தங்கள் கண்வழியே கண்ணீராகக் கொட்டியது. கூண்டில் சில கணங்கள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு நின்றான்.

    நீதிபதி ஓய்வு பெறும் வயதை எட்டிக் கொண்டிருப்பவர். பார்த்தாலே சம்சாரி என்பதும், குடும்பம், பாசம், பிணைப்பு என்பது போன்ற ஆசாபாசங்களினால் உருவாக்கப் பட்டவர் என்பதும் தெரிந்தது. அவர் தன் தீர்ப்பில் இதர அம்சங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். பராமரிப்புச் செலவுக்கான தொகை, பெண்ணின் தற்பொழுதைய நிலையை உத்தேசித்து கணேஷ் ஆற்ற வேண்டிய தலையாய கடமை, விவாக ரத்துக் கோரியதன் உள் அர்த்தம் இவைகளை மேற்கோள் காட்டி கணேஷிடம் ஒரு நண்பர் போலவும், சமுதாய ஆசிரியர் போலவும் பேசிக் கொண் டிருந்தார். தனிப்பட்ட சில அறிவுரைகளையும் கூறினார்.

    கணேஷ் எதற்கும் மறுப்பேதும் கூறவில்லை.

    எஸ் ஸார், எஸ்ஸார்... நிச்சயம் செய்வேன். அப்படியெல்லாம் போய் விடமாட்டேன்... என்று அவர் கேள்விகளுக்கு தகுந்தபடியும் அவர் சந்தேகத்துடன் எழுப்பும் வினாகளுக்கு அவர் மனத்தில் நம்பிக்கை யூட்டும் வகையிலும் பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    நீங்கள் ஒரு பட்டதாரி. ஒரு நல்ல கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறீர்கள். ருக்மிணிக்கு ஜீவனாம்சமாக நான் நிர்ணயித்திருக்கிற தொகை, சட்டப்படியானது. என்றாலும் அதற்கு மேலும் உங்களால் செய்ய முடியும், உதவ முடியும், இதை நீங்கள் செய்யலாம்."

    ஆகட்டும் ஸார்.

    வைத்திய செலவுகளை நீங்கள் ஏற்று, தொடர்ந்து வைத்தியம் செய்யலாம். ருக்மிணியின் குடும்ப நிலை ரொம்பவும் வசதிக்குறைவானது என்பதை நான் கேள்விப் பட்டேன். ஆகையால், அவர்களால் ருக்மிணியின் வைத்திய செலவுகளை ஏற்பது முடியாத காரியம்...

    எஸ் ஸார்".

    "இவ்வழக்கு பூராவிலும் நீங்கள் கடைப்பிடித்த உயர்ந்த மனோபாவங்களையும், பெருந்தன்மைகளையும் நான் பாராட்ட ஆசைப்படுகிறேன். வழக்கின் தன்மையிலும் நீங்கள் காண்பித்த மிகுந்த கண்ணியம், என்னை ரொம்பவும் கவர்ந்தது. இந்த நீதி மன்றம் இதற்கு முன் இம்மாதிரி பல வழக்குகளைப் பார்த்திருக்கிறது. போலித்தனமான பொய் வாதங்களும், ஏற்க முடியாத சாட்சியங்களும், அலட்சியம் மிகுந்த வாதங்களும், வாதப் பிரதி வாதங்களும் சமுதாய வாழ்வில் முரண்பாடுகள் எப்படியெல்லாம் திளைத்திருக்கின்றன என்பதை சாட்சி பூதமாக அமர்ந்து இங்கே பார்க்கலாம். பார்த்திருக்கிறேன்.

    ஆனால் உங்கள் வழக்கு உண்மையான வழக்கு. இதில் நீங்கள் ஒரு இடத்தில் கூட நெறிபிசகாமல் நல்ல மனிதராகவே நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

    ரொம்ப நன்றி ஸார் ". என்றவன், மீண்டும் தனது நிலைக்கான நியாயங்களை விளக்க முற்பட்டு நீதிபதியிடம் அனுமதி கேட்டான். அவர் அதற்கு ஆட்சேபிக்கவில்லை.

    இரண்டாண்டு காலம் இவளுடன் இதே நிலையில் நான் சிரமங்களை ஏராளமாக அநுபவித்துவிட்டேன். இவளது செய்கைகளைக் கொண்டு சிரமம்" என்று கூறினேனேயன்றி மனம் கசந்து கூறவில்லை. காரணம் இவள்மேல் எனக்கு கொஞ்சம் கூட வெறுப்புக் கிடையாது. கோபமும் கிடையாது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக அநுதாபமும் பரிவும் உண்டு. இவளை ஒரேயடியாகக் கைவிடும் எண்ணமும் எனக்கு இல்லை. சட்டரீதியாக இவளை நான் விவாகரத்து கோரினாலும் இவள் என்னுடன் இருப்பதில் எனது பராமரிப்பில் இருப்பதில் எனக்கு எவ்வித ஆட்சே பணையும் இல்லை.

    கணேஷின் நெஞ்சு திடீரென்று துயரம் தாங்காமல் அடைத்துக் கொண்டது. கண்கள் கலங்கிப் போயின.

    நான் ஒரு பிரபல இன்ஜினியரிங் சாமான்கள் வியாபாரம் செய்யும் கம்பெனி யொன்றில் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமுதாய அந்தஸ்திலும் நான் சற்றே பரபரப்பான சூழ் நிலையில் உள்ளவன். எனது சொந்தத் தேவைகளை என்னால் கவனித்துக் கொள்ள முடியாது. மனைவி என்பவள் தான் அதை சரிவர நிறைவேற்ற முடியும். இதற்கு எனக்கு ஒரு சரியான துணை வேண்டும். அந்தத் துணை ஒரு மனைவியாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ருக்மிணி இந்நிலையில் இருக்கும் போது நான் மேற்கொள்ள நினைக்கிற மற்றோரு விவாகத்திற்கு சட்ட சம்மதம் பெற்றுவிடுவதும் நல்லது என்ற எண்ணத்துடன் இந்த நீதிமன்றத்திற்கு வந்தேன். எனது மனுவை மேன்மை தங்கிய நீதிபதியவர்கள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமின்றி நடை முறை செளகரிய அசெளகரியங்களையும் மனதிற் கொண்டு பரிசீலனை செய்து நியாயம் வழங்கியதற்கு நன்றி கூற ஆசைப்படுகிறேன். என் முதல் மனைவி ருக்மிணிக்கு நீதிமன்றம் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ அதைவிட அதிகமாகவே நான் செய்யத் தயாராக இருக்கிறேன்."

    கணேஷ் முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். உதடுகள் காய்ந்து வரண்டு போயிருந்ததால் அதை நுனி நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டான்.

    கோர்ட் வாசலில் சுந்தரராஜன் நின்று கொண்டிருந்தார். துவைத்து அணிந்திருந்த சிமண்ட் கலர் அரைக்கை சட்டை. மேலே அழுக்கேறிய துண்டு. கணுக்கால் வரையில் வேஷ்டி. தலையில் அடர்த்தியான கேசம். பின்னால் குடுமி. கவலை படிந்த முகத்தில் ரோமத்தின் அடர்த்தி..

    சட்டப்படி ஒங்களோட செய்கை சரிங்கற எண்ணம் தான், எனக்கும், என் பாரியாளுக்கும். அதப்பத்தி பேச்சே இல்லே இப்போ. நாம் சண்டையிட்டுண்டோ, சச்சரவு பட்டுண்டோ, இந்த வியாஜியத்துக்கு வரலே. அதனால தான், இதிலே எது நேருமோ, எது வாஸ்தவமோ, அதையே நானும் கோர்ட்லே சொன்னேன். பிரத்தியார் தலையீடுகூட இதிலே உண்டு. பலபேர் பலவிதமாக எனக்கு யோசனை சொன்னா. வக்கில் வச்சு வாதாடும் ஒய், மாப்பிள்ளை விவாகரத்து வழக்கு போட்டிருக்கான்... சும்மா குத்து கல்லு மாதிரி நிக்கறீரேன்னா. நான் அதுக்கெல்லாம் சலனப்படறவன் இல்லை. சும்மா வாய மூடிண்டு போம்... அவர் நியாயத்துக்கு வழக்காடப் போறார், நான் அநியாயத்துக்கு எதிர் வழக்காடனும்னு... யோஜனையும் சொல்ல வராதேயும்... உங்க ஜோலியை பார்த்துண்டு போங் சோன்னு" சொல்லிவிட்டேன். என் மகளுக்கு திடீரென்று பைத்தியம். ரெண்டு வருஷம் அவளோட இவர் சிரமப்பட்டாச்சு. ஒரு மனித சக்திக்கு உண்டான எல்லாக் காரியங்களையும் செஞ்சு அவளைக் குணப்படுத்த பிரயத்தனம் எடுத்துண்டாச்சு. பகவான் கிருபை வேற விதமா இருக்கும் போல இருக்கு. அதை யார் யார் அனுபவிக்கணுமோ அவா, அவா அனுபவிக்க வேண்டியது தான். அப்படின்னுட்டேன்.....

    மாப்ளே, இது ஊராருக்கு மட்டுமா நான் சொன்ன சமாதானமில்லை. நாம் எல்லோருக்கும் இது

    Enjoying the preview?
    Page 1 of 1