Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa Vaa Vasandhame
Vaa Vaa Vasandhame
Vaa Vaa Vasandhame
Ebook167 pages1 hour

Vaa Vaa Vasandhame

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603041
Vaa Vaa Vasandhame

Read more from Lakshmi Praba

Related to Vaa Vaa Vasandhame

Related ebooks

Reviews for Vaa Vaa Vasandhame

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa Vaa Vasandhame - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    வா... வா... வசந்தமே...!

    Vaa… Vaa… Vasandhame…!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    ஆதவன் கண் திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. வழக்கமாய் சம்யுக்தா ஐந்து மணிக்கே கண் விழிப்பவள் என்பதால்... தன்னிச்சையாய் இன்றும் விழித்துக் கொண்டாள். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து, உள்ளங்கையில் முகம் பார்த்துக் கொண்டாள்.

    திறந்திருந்த ஜன்னல் கதவின் வழியாக முன் அனுமதியின்றி, உட்புகுந்த காற்று தோட்டத்தில் மலர்ந்திருந்த பவழ மல்லிப் பூக்களின் நறுமணத்தை சுமந்து கொண்டு வந்தது. ஆழ மூச்செடுத்து சுகந்த மணத்தை ரசித்த சம்யுக்தா, கலைந்த முடியைக் கோதி கொண்டையிட்டுக் கொண்டு கூடத்திற்கு விரைந்தாள்.

    வெயில் காலமாகட்டும், மழைக் காலமாகட்டும்... போர்வையைத் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டால் தான் அண்ணன் சந்துருவுக்கு உறக்கமே வரும். உறக்கத்தில் போர்வை அவனது காலடியில் கிடந்தது. போர்வையை உதறி மடித்து வைத்து விட்டு சந்துருவின் புஜத்தில் மிருதுவாகத் தட்டினாள் சம்யுக்தா.

    அண்ணா...! எக்ஸாமுக்கு படிக்கணும்னு சொன்னியே! எக்ஸாம் என்றதும் படக்கென்று எழுந்து உட்கார்ந்து, கண்களை கசக்கி விட்டு அண்ணாந்து தங்கையைப் பார்த்து முறுவலித்தான் சந்துரு. பி.ஈ. என்ஜினியரிங் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவன்.

    குட்மார்னிங், அண்ணா! முணுமுணுத்தபடி சற்றுத் தள்ளிப் படுத்திருந்த அம்மா தேவகியைப் பரிவுடன் ஏறிட்டாள். சீரான குறட்டையொலியுடன் அம்மாவின் நெஞ்சுக்கூடு ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது. 'பாவம் அம்மா! ஆஸ்துமா நோயாளி. நேற்றிரவு தொண்டை வெடித்து விடுமளவு 'லொக்' 'லொக்' என்று விடாமல் இருமிக் கொண்டிருந்தாள். அம்மா இரவில் போட்டுக் கொள்ளும் மாத்திரையும், டானிக்கும்... இரு தினங்களுக்கு முன்பே தீர்ந்து விட்டிருந்தன.

    இரவில் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்ட அம்மாவின் இருமல் சப்தத்தில் கருணாகரனும், சம்யுக்தாவும் கவலையுடன் விழித்துக் கொண்டு அனலிடைப்பட்ட புழுவாய் துடித்தனர். சந்துரு குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து அக்கறையாய்ப் படித்து முன்னேற முயலும் பொறுப்பான இளைஞன்தான்! ஆனால் படுக்கையில் படுத்து விட்டால் பக்கத்தில் இடி விழுந்தால் கூட எழுந்து கொள்ள மாட்டான். அப்படியொரு கும்ப கர்ணன்.

    அப்பா கருணாகரன் பள்ளிக்கூட வாத்தியார். அவரது சம்பளத்தை வைத்து கட்டும் செட்டுமாக குடும்பத்தை அருமையாக நடத்திக் கொண்டு வந்தாள் தேவகி. நிழலுக்கு ஒதுங்க அந்தக் கால பழைய ஓட்டு வீடு இருந்ததால்... மாதா மாதம் வாடகைச் செலவு இல்லை. அதிக வசதியில்லை. எனினும் அதிகத் தேவைகளை ஏற்படுத்திக் கொள்ளாததால் அதிக சிரமம் தெரியாமல் இருந்தது.

    நாலைந்து வருடங்களாக அம்மா நோய் வாய்ப்பட்டதிலிருந்து குடும்பத்தில் இருந்த நிம்மதி தலைமறைவாகிப் போனது. மாதா மாதம் மருத்துவச் செலவுக்கு கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியிருந்தது. தமது அருமை மனைவியைப் பற்றி கவலைப்பட்டே கருணாகரனும் தன் பங்குக்கு பி.பி. ஷுகரை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்.

    முன்பெல்லாம் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் பணக்கார வியாதிகள் பட்ஜெட் போட்டு வாழ்வைத் தள்ளும் பரிதாபத்துக்குரியவர்களையும் ஆக்கிரமித்து நிம்மதியான வாழ்வைத் தடம் புரள வைத்து விடுகின்றன. குருவி சேர்ப்பது போல் கருணாகரன் பேங்கில் போட்டு வைத்த கையிருப்பு மாயமாய் கரைந்தது.

    அதே சமயம் சந்துரு கண்ணும் கருத்துமாகப் படித்து மெரிட்டில் தேறி விட்டதால் பிரச்சனை ஏதுமின்றி சுலபமாக என்ஜீனியரிங் காலேஜில் சேர்ந்து விட்டான். ஒவ்வொரு செமஸ்டருக்கும் லம்ப் அமவுண்டை கட்டும் போது உண்மையில் கருணாகரனுக்கு விழி பிதுங்கி நாக்குத் தள்ளியது.

    குடும்ப பாரத்தை இழுக்க முடியாமல் கருணாகரன் திணறும் போதெல்லாம் தேவகிக்கு சொர்ணத்தின் ஞாபகம் வந்து விடும். கருணாகரனின் ஒன்றுவிட்ட தங்கை சொர்ணம்! அண்ணாநகரில் அமோகமாக வாழ்பவள். கார், பங்களா என்று ஏகபோகமாய் கொடி கட்டிப் பறப்பவள்.

    என்னங்க! உங்க சித்தி மக சொர்ணத்துகிட்ட உதவி கேட்கலாமே! தகப்பனில்லாத குடும்பத்துல பிறந்து கல்யாணம் காட்சி ஆகாம ஏழ்மையில் தத்தளிச்ச சொர்ணத்தை உங்க கூடப் பிறந்தவளா பாவிச்சு உங்க செலவுல கட்டிக் கொடுத்தீங்க. சொர்ணத்தோட கணவர் மட்டும் என்ன அசலா? அந்த விசுவநாதன் உங்களுக்கு சிநேகிதர் தானே? தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பாள் தேவகி.

    வலது கை குடுக்கறது இடது கைக்கே தெரியப்படாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. சொர்ணத்தை கரையேத்தி விட்டது என்னோட கடமை. அதைப்பற்றி பேசறதே தப்பும்மா.

    கண்டிப்பும் கறாருமாக கருணாகரன் பேசும் போது தேவகிக்கு வாயடைத்து விடும்.

    கருணாகரனது உறவுக்காரி என்று தெரிந்தால் சொஸைட்டியில் தனது கெளரவத்திற்கு பங்கம் வந்து விடும் என்று பயந்து அவரை உதாசீனம் செய்து பாராமுகமாய் இருந்து வந்தாள் சொர்ணம். பல வருடங்களாய் ஒன்று விட்ட அண்ணனின் குடும்பத்தை ஏறெடுத்தும் பார்க்காதவள்... திடீரென்று அண்ணன் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டாள்.

    திடுதிப்பென்று அத்தை சொர்ணம் மனம் மாறி உதவ முன் வந்ததும், சம்யுக்தாவின் அடி மனதில் சந்தேகம் முளை விட்டது. அவள் பி.எஸ்ஸி. இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். மெரிட்டில் தேறியிருந்தும் கூட அரை மனதோடு பி.எஸ்ஸியில் சேர்ந்து விட்டாள். அண்ணனைப் போல் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்க ஆசைதான்!

    சொர்ணத்தின் குணத்தை முழுவதுமாக எடை போட்டு அறிய முடியாத சூழ்நிலையில் திடீரென்று அத்தை குணம் மாறி இவர்களுக்கு உதவுவதை நிறுத்தி விட்டால்... பெரிய படிப்பு நட்டாற்றில் விட்டது போலாகி விடுமே என்ற அச்சத்தில், சம்யுக்தா தனது ஆசையை மூட்டை கட்டிப் புதைத்து விட்டாள்.

    'லொக்' 'லொக்' அம்மா இருமி விட்டு மறுபுறம் புரண்டு படுத்தாள். நேற்றிரவு விடாமல் இருமியபோது சம்யுக்தா சுக்கையும், மிளகையும் உரலில் லேசாக இடித்து தண்ணீரைக் கொதிக்க வைத்து கருப்பட்டி தட்டிப் போட்டு கஷாயம் தயாரித்து, தேவகிக்குக் குடிக்கக் கொடுத்த பின்பே இருமல் சற்றே மட்டுப்பட்டது.

    கஷாயம் குடித்து விட்டு வெற்று டம்ளரை தலைமாட்டில் அம்மா வைத்து விட்டிருந்தாள். டம்ளரை அடுக்களையில் வைத்து விட்டு நிலைக் கதவைத் திறந்தாள் சம்யுக்தா. சில்லென்ற காற்று சுதந்திரமாய் உள்ளே புகுந்தது. இருண்டிருந்த பூமி சாம்பல் நிறமாய் மாறிக் கொண்டிருந்தது. வாசல் தெளித்து சிறிய கம்பிக்கோலத்தைப் போட்டு விட்டு, கோலப் பொடிக் கிண்ணத்தை நிலைப்படியருகே வைத்தாள்.

    வரக்காப்பியை தயாரித்து சந்துருவுக்கு கொடுத்து விட்டு, குளியலறைக்குள் புகுந்து சடுதியில் வெளிப்பட்டாள். அரிசியைக் களைந்து குக்கரில் ஏற்றி விட்டு சுண்டக்காய் வத்தக் குழம்பும், தேங்காய்த் துவையலும் அரைத்து விட்டு நிமிர்கையில் மணி ஆறரையைத் தொட்டிருந்தது.

    தலையை வாரிப் பின்னலிட்டு முடித்து, சற்றே நிறம் மங்கிப் போன அரக்கு நிற காட்டன் சேலையை மடிப்பு வைத்துக் கட்டி... ஜாக்கெட்டுடன் இணைத்துப் பின் பண்ணினாள். சுவரிலிருந்த கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். சற்றே நீள் வட்ட முகம். மருண்ட விழிகள். குவிந்த சதை. திரட்சியான உதடுகள். அவள் உயரத்திற்கு ஏற்ற நடுத்தர உடல்வாகு. துடைத்து வைத்த தங்க குத்து விளக்கு மாதிரி 'பளிச்' சென்ற தோற்றம்!

    சம்யுக்தா! தயக்கமான குரலில் கருணாகரன் அழைத்தார்.

    என்னப்பா?

    சந்துருவுக்கு பணம் கட்ட வேண்டியிருக்கு. இன்னிக்கு சாயந்திரம்... தடுமாறினார்.

    புரியுதுப்பா! காலேஜ் முடிஞ்சதும் நேரே சொர்ணம் அத்தை வீட்டுக்குப் போய் வாங்கிட்டு வரேன். அத்தை இன்னக்கி வரச் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்குப்பா! ஹேண்ட் பேக்கில் டிபன் பாக்ஸை திணித்துக் கொண்டே முறுவலித்தாள் சம்யுக்தா.

    நான் கிளம்பறேன்பா. ஜனனி, ரஞ்சனி வீட்டுலே மார்னிங் டியூஷனை முடிச்சுட்டு நான் காலேஜுக்குப் போகணும்! சம்யுக்தா அவசரமாக நகர முற்பட்டபோது சந்துரு வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி வந்தான்.

    சம்யுக்தா... மார்னிங் டியூஷன் எடுக்க நீ அந்த வீட்டுக்குப் போக வேணாம். அந்த வீட்டு மனுஷன் நல்ல டைப் இல்லையாம்! அப்பா! நீங்களாவது சொல்லுங்க என்றவனின் குரலில் பதற்றம் தொற்றி நின்றது.

    அவனது கரிசனத்தையும், பதற்றத்தையும் கண்ட சம்யுக்தாவின் அகன்ற விழிகளில் நீர் திரையிட்டது.

    அண்ணா! பதட்டப்படாதே. அந்த வீட்டுலே ஒரு அத்தைப்பாட்டி, தாத்தா, மாமின்னு ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க. நான் எப்பவும் கேர்புல்லா இருப்பேன். வரட்டுமா? ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் சம்யுக்தா.

    ***

    2

    பிரபலமான கலைக்கல்லூரி.

    பெரிய கட்டிடங்களும், கண்கள் திரும்பும் இடமெல்லாம் பசுமையான மரம், செடி, கொடிகளும், அழகிற்கு அழகு சேர்த்த டீன் ஏஜ் தளிர்களுமாய்... ஏக அமர்க்களமாய் இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1