Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponal Varathu!
Ponal Varathu!
Ponal Varathu!
Ebook102 pages52 minutes

Ponal Varathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603188
Ponal Varathu!

Read more from Devibala

Related to Ponal Varathu!

Related ebooks

Reviews for Ponal Varathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponal Varathu! - Devibala

    http://www.pustaka.co.in

    போனால் வராது!

    Ponal Varathu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    டாக்டர் பரிசோதனை முடிந்து வெளியே வந்தார்கள் கோலாவும், தாரிணியும்!

    ஏற்கனவே முப்பத்தி ஆறு வாரங்கள் ஆகிவிட்டது! எந்த நேரமும் பிரசவம் ஆகலாம்!

    இன்னும் ஒரு வாரம் ஆகலாம்! வலியெடுத்தா நேரா வந்து அட்மிட் ஆயிடுங்க! இல்லைன்னா, அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க!

    டாக்டர் நார்மல் டெலிவரிதானே!

    நான் அதுக்குத்தான் முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணுவேன். காசுக்காக அவசரப்பட்டு சீசேரியன் பண்ணமாட்டேன். தைரியமா இருங்க!!

    மகளுடன் வீட்டுக்குப் புறப்பட்டாள் கோகிலா! உடனே கணவனுக்கு இதை போன் செய்து தெரிவித்தாள் தாரிணி!

    சரி! சனிக்கிழமை நான் வர்றேன்!

    நாளைக்கே வாங்களேன்! நீங்க இருந்தா எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!

    அம்மாவை விட்டுட்டு எப்படி நான் வருவேன் தாரிணி? அவங்க ஹார்ட் பேஷன்ட் வேற! யாரும் துணைக்கு இல்லையே!

    இந்த நேரம் உங்க தம்பி வீட்ல அவங்களை விட்டுட்டு நீங்க என்கூட இருக்ககூடாதா? பிரசவ நேரத்துல நீங்க இருந்தா, ஒரு தைரியம்!

    சரி! பார்க்கறேன். நீ டென்ஷன் ஆகாதே!

    சந்தோஷ் சமாதானம் சொன்னான்! சந்தோஷ் தனியாரில் ஒரு அதிகாரி. அப்பா இல்லை! விதவைத் தாயார். நோயாளி பைபாஸ் சர்ஜரி முடித்தவர்! சந்தோஷூக்கு ஒரு அக்கா, தம்பி, இருவரும் உள்ளூரில்! தம்பி வேற்று மதத்து பெண்ணை காதலித்து மணந்ததால், வீட்டில் சேர்க்கவில்லை. அம்மாவின் இதய நோய்க்கு காரணமே இதுதான்!

    தாரிணிக்கு அரசாங்க உத்யோகம்!

    அம்மா கோகிலா-குடும்பத் தலைவி - அப்பா மெடிக்கல் கம்பெனி ஒன்றில் ஏரியா மேனேஜர். மாதம் இருபத்தி ரெண்டு நாட்களும் டூர்! அதனால் குடும்ப நிர்வாகம் முழுக்க அம்மா கோகிலா!

    தாரிணிக்கு ஒரு அக்கா - மும்பையில் திருமணமாகி வாழ்பவள். ஒரு தங்கை கவிதா - கல்லூரியில் கடைசி வருஷம். தாரிணி - சந்தோஷ் கல்யாணம் போன வருடம்தான் முடிந்தது. அப்பா - பிரம்மாண்டமாக கல்யாணத்தை நடத்தினார். மெடிக்கல் கம்பெனி வேலை, ஷேர்மார்க்கெட் - ஏஜென்சி என ஏகப்பட்ட தொழில்கள்! காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் மனிதர்! பணத்துக்கு பஞ்சமில்லை! பெரிதாக சொந்த வீடு, கார் என சகல வசதிகளும்... மூன்றும் பெண்கள்!

    மூத்தவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தார்!

    இரண்டாவது தாரிணி! சந்தோஷூம் தகுதியுள்ள இளைஞன்!

    மூன்றாவது கவிதா - பி.டெக் கடைசி வருஷம்!

    தாரிணி கல்யாணமும் மிகச் சிறப்பாக நடந்தது! தாரிணி செல்லமாக வளர்ந்த பெண்! வீட்டில் எந்த வேலையும் செய்து பழக்கமில்லை. அம்மா எல்லாம் கையில் கொண்டு வந்து தருவாள். அதனால் புகுந்த வீட்டில் பொருந்துவது கஷ்டமாக இருந்தது. மாமியார் நோயாளி என்பதால் தாரிணிதான் எல்லாம் செய்தாக வேண்டும்! வீட்டு வேலைகளையும் கவனித்து ஆபீசுக்கும் போக வேண்டும்! முடியவில்லை.

    சந்தோஷ் குடும்பம் மிடில்க்ளாஸ் குடும்பம் என்பதால் பணம் செலவழிப்பதில் படுசிக்கனம்!

    ஆனால் தாரிணி அரசாங்க உத்யோகத்தில் முப்பத்தி எட்டாயிரம் சம்பளம்! அப்பாவிடம் சல்லிக்காசு தந்ததில்லை எல்லாம் அவள் செலவுக்கு. விலை உயர்ந்த மொபைல்! நல்ல நல்ல உடைகள், வித விதமான செருப்பு, கைப்பை! வாரக் கடைசியில் பெரிய ஓட்டல்கள், ஒரு படம் விடாமல் பார்க்கும் ஆசை, எதுபாக்கி! தவிர சேமிப்பும் உண்டு! அப்பா பணம் தாராளமாக இருந்ததால் கேட்பாரில்லை.

    இங்கு அது நடக்கவில்லை.

    சந்தோஷ் கல்யாணம் முடிந்ததுமே பட்ஜெட் போடத் தொடங்கி விட்டான்!

    இதுவரை வாடகை வீடுதான்!

    ரெண்டு பேருக்குமே சேர்த்து டாக்ஸ் போக எண்பதாயிரம் வருது! வீட்டுச் செலவுக்கு பாதிபோக, மீதியை தவணையா கட்டி, ஒரு வீடு வாங்கலாம்!

    நாப்பதாயிரம் தவணை கட்டினா என்ன வரும்!

    கொஞ்சம் உள்ளே போனா, ஆயிரம் சதுர அடி அம்பதாயிரம் ரூபாய்ல நல்ல ப்ளாட் கிடைக்கும் தாரிணி!

    உள்ளே தள்ளின்னா?

    விருகம்பாக்கம் - சின்மயா நகர் தாண்டி உள்ளே போனா?

    பைக் இருக்கே! உன்னை ட்ராப் பண்றேன். திரும்பி வரும் போது ஷேர் ஆட்டோல வந்துரு!

    ஷேர் ஆட்டோவா! எனக்கு பழக்கமில்லை.

    பழகிக்கணும் தாரிணி!

    சந்தோஷ்! வர்ற பணம் மொத்தத்துக்கும் கமிட் பண்ணிட்டா, தாராளமா செலவழிக்க முடியாது!

    நீ என்ன சொல்ற?

    சினிமா, ஓட்டல், ப்யூட்டி பார்லர், ஷாப்பிங் இதெல்லாம் கட்டாகும்! வாழ்க்கை எந்திர மயமாகும். வேண்டாமே!

    ஏய், வர்ற பணத்தையெல்லாம் இஷ்டப்படி செலவழிச்சா, வாழ்க்கைல நமக்குனு என்ன மிஞ்சும்! வாழ்க்கையை அனுபவிக்கவும் ஒரு அளவு இருக்கு! பொறுப்பு வேண்டாம்?

    அவள் பேசவில்லை.

    "சீக்கிரம்

    Enjoying the preview?
    Page 1 of 1