Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollaiadichavan Yengurukkan - Part- 1
Kollaiadichavan Yengurukkan - Part- 1
Kollaiadichavan Yengurukkan - Part- 1
Ebook104 pages30 minutes

Kollaiadichavan Yengurukkan - Part- 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603229
Kollaiadichavan Yengurukkan - Part- 1

Read more from Devibala

Related to Kollaiadichavan Yengurukkan - Part- 1

Related ebooks

Reviews for Kollaiadichavan Yengurukkan - Part- 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollaiadichavan Yengurukkan - Part- 1 - Devibala

    http://www.pustaka.co.in

    கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்

    பாகம் - 1

    Kollaiadichavan Yengurukkan

    Part- 1

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    முன் குறிப்பு: மார்ச் - 8, உலக மகளிர் தினம்! 2018-ம் ஆண்டு கோதை: இந்தக் கதையின் முக்கியமான அம்மா பாத்திரம். 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் கோதை செய்த ஒரு மிகப் பெரிய தப்புதான் இந்தக் கதை.

    தீபிகா, பி.டெக் கடைசி வருஷம். பயோ டெக்னாலஜிக்கு ஏறத்தாழ கடைசி செமஸ்டர்! ப்ராஜக்ட் வேலைக்காக தீபிகா தயாராகிக் கொண்டிருக்க, அம்மா கெளரி உள்ளே சமையல்கட்டில். அப்பா ரகுநாதன்ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்!

    ரகுநாதன் அரசாங்க உத்யோகம். மத்திய அரசு கட்டடம் தொடர்பான நிறுவனம். ஓரளவு கணிசமான சம்பளம். சொந்த வீடு போன்ற வசதிகள்! கெளரி படித்தவுடன் வேலைக்குப் போகவில்லை. மூத்தவள் தீபிகா - அடுத்தது ஒரு பையன், 12-வது படிப்பு! சொந்த வீட்டுக் கடன், கார் லோன், பிள்ளைகள் படிப்பு என ஒரு சம்பளத்தில் மூச்சுத் திணறும் மத்திய குடும்பம்! கெளரிக்கு அனைத்து தொந்தரவும் உண்டு! ஆனாலும்மூச்சுமுட்ட சாப்பிடுவாள். எல்லா போக ஆசைகளும் உண்டு!

    அவருக்கு சாப்பாடு கட்டி எடுத்து வந்து வைத்தாள்.

    நேத்திக்கு உங்க தங்கச்சி வந்தா!

    சந்திராவுக்கு என்ன வேணுமாம்?

    நம்ம தீபிகா பி.டெக் முடிக்கிறாளே! அவளுக்கு கல்யாணம் எப்பனு கேட்டா சந்திரா!

    அந்தக் கவலையை இவ எதுக்குப் படறா!

    என்ன பேசறீங்க! சந்திரா உங்க தங்கச்சி! தீபிகாவுக்கு அத்தை! அக்கறை இருக்காதா?

    நம்மை விடவா?

    அவ பையன் மிதுன் பெரிய வேலைல இருக்கான்! வயது இருபத்தி ஏழு! வரன் எடுத்துட்டா! குழந்தை காலம் தொட்டே தீபிகா மேல அவனுக்கு ஈடுபாடு உண்டு!

    கேட்டாளா?

    அதுக்குத்தான் வந்தா! 'அத்தை, மாமா சொந்தம்னா ஜாதகம்கூட பாக்க வேண்டாம் அண்ணி'னு சொன்னா!

    நீ என்ன சொன்னே?

    படிப்பு முடியலியே சந்திரானேன்!

    கெளரி! காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வ்யூ நடக்குது! தீபிகா அதை அட்டெண்ட் பண்ணலை!

    நான் சொல்லாமலா இருக்கேன். வேலை கிடைச்சிட்டா நல்லதுதானே? * இவளைவிட படிக்கற நாலு பேருக்கு கேம்பஸ்ல செலக்ட் ஆகி, ஆஃபர் லெட்டர் தந்தாச்சு! டிகிரி கைக்கு வந்த மறுநாள் வேலைல சேர்ந்துடலாம். எடுத்த எடுப்புல இதுபத்தி நாலு ரூபா சம்பளமாம். இவ அடங்கமாட்டா!

    இதப்பாரு! தீபிகா மேல படிக்கணும்னு சொல்லு, எல்லா பல்கலைக்கழகத்துக்கும் அப்ளை பண்ணியாச்சு!

    இந்தியால் இல்லை! வெளிநாட்ல!

    எனக்குத் தெரியாதா! செலக்ட் ஆனா, நம்ம கையைவிட்டு இருபது லட்சம் செலவாகும்!

    எங்கே இருக்கு பணம்?

    கடன்தான் வாங்கணும்!

    படிப்பை முடிச்சிட்டு வந்தா, கல்யாணம்! அதுக்கும் கடன் வாங்கணும். எங்கே போறது பணத்துக்கு? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்க பொண்ணுக்கு? அவளுக்கு நீங்க குடுக்கற செல்லம்தான் அவளை குட்டிச் சுவராக்குது! புரியுதா!

    நான் மெரிட்ல ஸ்காலர்ஷிப் வாங்கிப்பேன்னு சொல்றாளே!

    உடனே நம்பிட்டீங்களா?

    அதில்லைடி!

    இப்பவே காலேஜ்ல டாப்பர் கிடையாது! எந்த நேரமும் செல்போன் - தோழிகள் சுவாசம் - சினிமா - பீட்ஸா - என்ன பாக்கி? இதப் பாருங்க! வெளிநாட்டுக்கு அனுப்ப எங்கிட்ட பணமில்லைனு கறாரா சொல்லிடுங்க! கல்யாணம் செஞ்சு வைக்கறது நம்ம கடமை! அதைச் செய்யலாம்!

    தீபிகா வெளியே வந்தாள்.

    என்னடீ?

    நீ அப்பாகிட்ட பேசின எல்லாமே காதுல விழுந்தது! எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க, எத்தனை செலவழிப்பீங்க?

    நகை எங்கிட்ட கொஞ்சமிருக்கு! எப்படியும் கடன்தான் வாங்கணும்! உங்கப்பாவுக்கு எட்டு வருஷ சர்வீஸ் பாக்கி இருக்கு! முப்பது லட்சம் இல்லாம மரியாதையா பண்ண முடியாது! அதுவே கம்மி!

    அந்த முப்பதை குடுத்துடு!

    ஏண்டீ கைலயா வச்சிருக்கோம்?

    எப்படியும் புரட்டிக் கொண்டு வருவீங்க இல்ல? அதை இப்ப செய்ங்க! நான் வெளிநாட்டுக்குப் போய் படிக்கறேன்!

    அப்ப கல்யாணம்?

    அந்த ஐடியா அடுத்த சில வருஷங்களுக்கு எனக்கு இல்லை!

    சரிதான்! கிழவியான பிறகு கல்யாணமா?

    28 வயது கிழவி வயசா?

    "முத்திப் போனா, வரன் வராது!

    "அம்மா! டாக்டருக்குப் படிக்கறவங்க எம்.எஸ். பண்ணி முடிக்கும்போது

    முப்பதாகுது! கல்யாணம் நடக்கலையா?"

    சரிடீ! அப்ப ஏது பணம்?

    நீங்க தர வேண்டாம். அதை நான் பாத்துக்கறேன். அந்தப் பணத்தை இப்பக் குடுங்க!

    இல்லை, எனக்கதுல உடன்பாடு இல்லை!

    இதென்னம்மா அர்த்தம். இது என் வாழ்க்கை! எப்படியும் கல்யாணம் நடக்கும். அதுக்கொரு ஸ்பெஷல் படிப்பு அவசியமில்லை! ஆனா மேல் படிப்பு எதிர்காலத்தை தூக்கி நிறுத்தும். என் விருப்பத்தை தடை செய்ய அம்மாவுக்கு உரிமையில்லை!

    வாயை மூடுடி!

    எதுக்கு?

    "நாங்க உன்னைப் பெத்தவங்க! இத்தனை நாள் உன்னை வளர்த்து படிக்க வச்சது நாங்க! அம்மாவுக்கு உரிமையில்லையா? தானே முளைச்சு

    வந்துட்டியா நீ"

    "அப்பா! இது தப்பு! வளர்த்து ஆளாக்கிட்டா, நான் உங்களுக்கு அடிமையா? எனக்குன்னு சொந்த

    Enjoying the preview?
    Page 1 of 1