Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamy Divorce Ketkirar
Appusamy Divorce Ketkirar
Appusamy Divorce Ketkirar
Ebook84 pages32 minutes

Appusamy Divorce Ketkirar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303189
Appusamy Divorce Ketkirar

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamy Divorce Ketkirar

Related ebooks

Related categories

Reviews for Appusamy Divorce Ketkirar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamy Divorce Ketkirar - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்

    Appusamy Divorce Ketkirar

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அப்புசாமி, முதியோர் கல்வி நிலையத்துக்கெல்லாம் போகப்பட்ட ஆசாமி அல்ல. ஆனால் அக்கறையுடன் அட்டை போட்ட ஒரு தடித்த புத்தகத்தைத் தினமும் மாங்கு மாங்கென்று இரவு படித்துக் கொண்டிருந்தார். அணில், ஆடு, இலை, ஈயையெல்லாம் தாண்டிய அறிஞராயிற்றே!

    முன்னொரு காலத்தில் எழுத முயன்று தோற்ற பி. ஏ. கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸுக்காகப் புது முயற்சி ஏதாவது செய்கிறாரா? படிப்புக்கு வயசில்லைதான். ஆனால் கரெண்ட்டுக்கு சார்ஜ் உண்டாச்சே?

    ராத்திரி பதினொரு மணி வரை சீதாப்பாட்டிதான் ரீடர்ஸ் டைஜஸ்ட்டையும் பெண்கள் சம்பந்தப்பட்ட சில பத்திரிகைகளையும் புரட்டிக் கொண்டிருப்பது வழக்கம். வழக்கம் மட்டுமல்ல பெருமையும் கூட.

    சீதாப்பாட்டியின் அறையில் பதினொரு மணி வரை விளக்கு எரிந்தால் அப்புசாமி அறையில் பதினொன்று ஐந்து வரை எரியத் தொடங்கியது.

    என்னவோ படிக்கிறார் என்பது மட்டும் பாட்டியால் அறிய முடிந்தது.

    என்ன, ராத்திரி பூரா ரூமில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது? கரண்ட் பில்லுக்கு இப்போ ரிவைஸ்ட் டாரிஃப் என்ன தெரியுமோ? நீங்க இப்போ படிக்கலைனு யார் அழுகிறார்கள்? என்றாள் சீதாப்பாட்டி.?

    அப்புசாமி, கவிழ்க்கப்பட்ட நிலையிலிருந்தபோதும் நிதானம் தவறாத கோர்பசேவ் மாதிரி, கோபப்படாமல் முகத்தைப் பரம சாந்தமாக வைத்துக் கொண்டு, நீ மட்டும் படிக்கலைனு இப்போ யார் சிரிக்கிறார்கள்? என்று சிரித்த முகத்துடன் சொன்னாரே தவிர இன்னது படிக்கிறோம் என்று சொல்லவில்லை.

    சீதாப்பாட்டியின் மனசில் பல விபரீத ஊகங்கள். போர்னா கிராஃபி? ஏதாவது பார்க்கக் கூடாத படங்களை ரசித்துக் கொண்டிருக்கிறாரா? ஒருகால் பில்லி சூனியம் என்று பிளாக் மாஜிக் சமாச்சாரங்களா? அவர் இல்லாதபோது அவரது அறையை ஒரு சி.பி.ஐ. செய்து பார்த்துவிடவேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

    ஆனால், குறிப்பிட்ட புத்தகத்தை மட்டும், அப்புசாமி எப்போதும் கங்காரு குட்டியைச் சுமக்கிற மாதிரி தன்னுடனேயே ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு போய் விடுவார்.

    தூங்கும்போது அந்தப் பை அவர் தலைமாட்டில் இருக்கும். பையின் இரு காதுகளுக்கும் அவரது இரு காதுகளுக்கும் கயிறால் ஒரு கனெக்ஷன் கொடுத்து முடிந்து கொண்டிருப்பார்.

    காதலி ஏதாவது செட்அப் பண்ணியிருப்பாரா? புத்தகம் என்ற போர்வையில் லவ் லெட்டர்ஸ் ஏதும் பைஹார்ட் பண்ணுகிறாரா? இவரைக் காதலிக்கக் கூடிய கிழவிகளும் இருக்கக் கூடும். ஹூ நோஸ்?

    அரசியல் கட்சிகளில் சில கிழங்களுக்கு சில சமயம் திடீர் மவுசு ஏற்பட்டு விடும். அதுபோல இவருக்கும் மதிப்பு ஏறத் தொடங்கி விட்டதா?

    குளிக்கப் போகும்போதுகூட அந்தப் புத்தகப் பையைக் கூடவே பாத்ரூமுக்கு எடுத்துப் போகிற அளவுக்கு என்னதான் ரகசியப் புத்தகம்?

    பாட்டிக்குத் திடீரென்று வியர்த்தது.

    பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஆன்ட்டி நேஷனல் எலிமெண்ட்ஸ் ஏதாவதுடன் தொடர்பா?

    தற்கொலைப் படை எதற்காவது தளபதியாகி விட்டாரா?

    ஸம்திங் ஸீரியசாக இல்லாவிட்டால் இவ்வளவு ரகசியமாக ஒரு புத்தகத்தைப் பைக்குள் மூடிமூடி எடுத்துப் போவாரா?

    ***

    2

    அப்புசாமி டைனிங் மேஜை மீது டம்ளரால் லொட லொட்டு, லொட லொட லொட்டு என்று தாளம் போட்டார் - ஹாஸ்டல்களில் மாணவர்கள் சப்ளையரைக் கூப்பிடுவது போல.

    பாட்டி மெல்லிசாக டிரான்ஸிஸ்டரை வைத்து எட்டு மணி நியூஸ் புல்லடினைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    "ப்ளீஸ்! கொஞ்சம் உங்கள் தாளத்தை நிறுத்துறீங்களா? நான் நியூஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது தெரியலை? சோவியத் யூனியனிலிருந்து பல ஸ்டேட்ஸ் தனியாப் பிரிஞ்சிருக்கு. சிறு சிறு ஸ்டேட்டுகள் பிரிந்தால் அடாமிக் டிவைஸஸை அவரவர்கள் உபயோகிக்கிற உரிமை கிடைத்து உலகத்துக்கே அபாயமாயிற்றே என்று சில வோர்ல்ட்லீடர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில பேர் அமெரிக்காவுடன் ஒரு நல்ல அன்டர்ஸ்டாண்டிங் ஏற்படும், எகனாமிக் கிரைஸிஸைச் சமாளிக்க முடியும் என்கிறார்கள். நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் டம்ளராலே

    Enjoying the preview?
    Page 1 of 1