Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Oru Bridhavanam
Manam Oru Bridhavanam
Manam Oru Bridhavanam
Ebook341 pages2 hours

Manam Oru Bridhavanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803210
Manam Oru Bridhavanam

Read more from Maharishi

Related to Manam Oru Bridhavanam

Related ebooks

Reviews for Manam Oru Bridhavanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Oru Bridhavanam - Maharishi

    http://www.pustaka.co.in

    மனம் ஒரு பிருந்தாவனம்

    Manam Oru Bridhavanam

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    குரு சரணனுக்கு காரின் கதவைத் திறந்து விட்டு விட்டு மரியாதையுடன் நின்றான் குமாரபாஸ்கர்.

    புன்னகையுடன் காரைவிட்டு வெளியே வந்தார்.

    வயது ஐம்பதுக்கு மேல் நரை அதிகம் ஆக்கிரமிக்காத தலை கேசம் பின்புறமாக படியவாரி விட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் நீளமான முகம் நெற்றியில் நடுவே கூர்ப்பத்தில் கூத்தானூர் மகா சரஸ்வதி தேவியின் குங்குமப் பிரசாதம் மாதமொரு தடவை கூத்தானூர் சென்று அம்பிகையை தரிசிக்காமல் இருக்க மாட்டார்.

    சிவந்த உயரமான உடம்பு. கோட் பையில் கைவிட்டு கர்சீப்பை எடுத்து அடிக்கடி, மூக்கை துடைத்துக் கொள்ளும் ஒரு மானரிசம்.

    தன் முன்னால் உயரமாக நல்ல சிவப்பாக ஒருவித இளமைத் துடிப்புடன் நிற்கும் தன் உதவியாளன் குமார பாஸ்கரை அவர் அடிக்கடி பார்த்தார். அப்படிப் பார்க்கும் ஒரு தடவையும் அவன் உள்ளத்தில் அளவற்ற பெருமை.

    குமார பாஸ்கர் பட்டதாரி உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மூதல் பரிசுக்குறியவனாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவனிடம் உண்டு அத்தனை கச்சிதமான உடம்புவாகு

    பேண்ட்டும் உள்ளே விட்டு விட்டு அணிந்த மிகச் சாதாரண சட்டையுமே அவனுக்கு அழகாகவே இருந்தது.

    முப்பதை தாண்டாத வயது.

    சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் பாதையில் மேட்டுப்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் செல்லும் மண் சாலையின் உள்ளே அவர்கள் திரும்பி நடந்தார்கள்.

    அவருடைய கார் செல்லக் கூடிய அளவு சாலை அத்தனை சீராக இல்லாததால் காரை அந்த சாலையின் ஆரம்பத்தில் கொஞ்சம் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வந்தார்.

    தூரத்தில், ஒரு மலை அடிவாரத்தில் அந்த சேகோ பாக்டரி இருந்தது.

    அந்த தொழிற் கூடத்தை இவர்கள் தேவைக்கேற்ப குத்தகைக்கு எடுத்து, ஒப்பந்த அடிப்படையில் உழைப்பவர்களை நியமித்து, அவர்களுக்கு வேண்டிய உற்பத்திப் பொருள்களை சேகரித்துக் கொள்கிறார்கள்,

    ஆண்டு பூராவும் கிடைக்கும் மரவள்ளி கிழங்கை அவ்வப்பொழுது வாங்கி சேகரித்து உடனுக்குடன் தொழிற்கூடத்திற்கு கொண்டு வரவேண்டியது பெண் ஊழியர்களை வைத்து அதன் தடிமனான தோலை உரிக்க வேண்டியது. தோலுரித்த கிழங்குகளை சுத்தம் செய்து, கிரஷ்ஷரில் கொடுத்து நசுக்கி அதனின்று வரும் பாலை ரக வாரியாக மூன்று தொட்டிகளில் நிரப்பி உலர வைத்து, பின்பு அதை உரிய முறையில் பக்குவப்படுத்து வதும், கைதேர்ந்த ஊழியர்களைக் கொண்டு ஐவ்வரிசியாக உருட்டப்பட்டு சூடேற்றி பதப்படுத்தி...

    இப்படி ஒவ்வொரு கட்டமாக அதை கவனித்து, வந்து, குவியும் கிழங்குகளை மாவு மூட்டைகளாகவும் ஜவ்வரிசியாகவும் மாற்றுவது வரை அதை கவனிப்பவன் குமார பாஸ்கர்.

    குமார பாஸ்கர் வாழைப்பாடி அருகில் உள்ள பேளூரைச் சேர்ந்தவன். சேலம் கல்லூரியின் பட்டதாரி.

    அதே பகுதியில் இருப்பதால் அந்த ஊரின் பழக்க வழக்கங்கள் மக்களின் மனோபாவம் எல்லாம் அத்துப்படி.

    குருசரணனுக்கு தன் தொழிலில் எத்தனை அக்கறை உண்டோ, அத்தனை அக்கறை அவன் மேலும் உண்டு.

    மணிமாலா இண்டஸ்ட்ரீஸின் தலைமை அலுவலகம் சென்னை அதன் உற்பத்திக் கேந்திரம் சேலம்.

    பாஸ்கருடன் பேசிக் கொண்டே பாக்டெரிக்குள் நுழைந்தார் குருசரணன்.

    இரண்டு லாரிகளிலிருந்து மரவள்ளி கிழங்குகளை இறக்கி கொண்டிருந்தார்கள்.

    தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட கிழங்குகள் ஆங்காங்கு கும்பல் கும்பலாக கிடந்தன.

    ***

    அங்கே நின்ற வண்ணம் வேலையை கவனித்தார். அவருக்கு பாஸ்கரின் மேல் அளவற்ற நம்பிக்கையுண்டு.

    இதே தொழிற்சாலையில் கிழங்குகளை விலை பேசி வாங்கும் வேறு ஒரு கம்பெனிக்கு ஏஜண்டாக இருந்தவனை அவன் அப்பொழுது வாங்கிய மாத ஊதியத்தை விட அதிகமாக கொடுத்து, தன்னுடைய கம்பெனியின் பிரதான பிரதிநிதியாக அமர்த்திக் கொண்டுவிட்டார்.

    அவன் அங்கே இருந்து அங்கு கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்த பின், குருசரணனின் வியாபார அட்டவணை ஏறுமுகம்தான்.

    சேலம் ஜில்லா பூராவும் சுற்றி கிழங்குகளை, அது விளையும் இடத்திலேயே வியாபாரங்களை முடித்து, அறுவடையான பின்பு கிழங்குகளின் தரத்திற்கேற்றபடி விலையை நிர்ணயித்து, அது ஆலைக்கு வரும் வரையிலும் அதன் பின் அதை உரிய பக்குவநிலையில் மாவாக்கி, பின்பு க்ளூகோஸ் ஜவ்வரிசி ஸ்டார்ச்... போன்று உபயோகப் பொருளாக மாற்றி, பைகளில் பெரிதாகவும் சிறிதாகவும் 'பேக்' செய்து, சென்னை கம்பெனிக்கு அனுப்பும் இரண்டாவது முக்கிய பணிவரை எல்லாவற்றையும் தன் நேரிடைப் பார்வையிலேயே செய்தான்.

    உழைக்க சோம்பேறித்தனப்படாத வாலிபன் அவன்.

    ***

    இப்ப கிழங்கு விலை எப்படி இருக்கு குருசரணன் கேட்டார்.

    மூட்டை நாற்பத்தைந்திலிருந்து ஐம்பத்தைந்து வரை இருக்கு சார்.

    நமக்கு தட்டுப்பாடில்லாம சரக்கு கிடைக்குமில்லே

    தட்டுப்பாடு இல்லே சார். வாழப்பாடி, பேளூர், தும்பல் இந்தப் பக்கம் மங்களபுரம், தம்மம்பட்டி மல்லிக்கரை எல்லா இடத்திலும் போய் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். கிழங்குகளும் நல்ல விளைச்சலோட செழுமையா இருக்கு.

    ரெண்டு லாரி லோடு தேறுமா?

    மூணு லோட் வரும்

    பணம் போறுமில்லே.

    அவன் இதுவரை செய்த செலவுகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பை எடுத்துப் படித்தான்.

    பணம் போறாது போல இருக்கே நான் சென்னை போனதும் ஏற்பாடு செய்துடறேன். அதுவரையிலே இதை வச்சுக்க.

    'மணிமாலா' என்று கையெழுத்திடப்பட்ட இரண்டு வங்கி காசோலைகளை அவனிடம் நீட்டினார்.

    இப்ப இந்த ஒரு தொகை போறும் ஸார்.

    அந்த காசோலையில் தொகை பூர்த்தி செய்யப்பட்டு மணிமாலா என்று இருந்த கையெழுத்தையே சில வினாடிகள் பார்த்துவிட்டு,

    மணிமாலா எப்படி இருக்காங்க... இப்ப உடம்பு பரவாயில்லையா?

    இப்ப பரவாயில்லை.

    இங்கே சேலத்தில் நல்ல டாக்டர் இருக்கிறார்கள் ஒரு முறை அழைத்துக் கொண்டு வந்தால் இங்கேயே பார்க்கலாமே.

    அந்த அளவு ஒன்றுமில்லை. முன்பெல்லாம் அடிக்கடி உடம்புக்கு வரும். ரெகுலர் ட்ரீட்மென்டுக்கு நர்சிங் ஹோமுக்கு போகும்படியிருக்கும். இப்ப கொஞ்சம் பரவாயில்லை.

    அவரும் என்ன உடம்பு என்று கூறவில்லை; அவனும் கேட்கவில்லை.

    அவர்கள் தொழிற்சாலையின் காம்பவுண்ட் சுவர் ஓரமாக உள்ள ஒற்றையடித் தடத்தில் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

    கல்கத்தா பார்ட்டி சரக்குக்கு ரொம்ப தொந்திரவு பண்ணிக்கிட்டு இருக்கான். ஒரு வாரமா சென்னையில் தங்கியிருந்து சரக்கை 'லோட்' பண்ணிட்டித்தான் போவானாம். இருந்த சரக்கையெல்லாம் பாம்பே பார்ட்டி அள்ளிக் கொண்டு போயிட்டான்.

    ஒரே வாரத்திலே மூணு 'லோட்' அனுப்பி வைக்கறேன் ஸார். எல்லாவித பிராஸஸிங்கும் முடிஞ்சு போச்சு. ஒரு வாரமா தொழிலாளர் பிரச்சனையால் பாக்டரியிலே கொஞ்சம் சிக்கல். இப்ப சரியா போச்சு, வேலை இப்ப வேகமா நடக்கிறது.

    அவர்கள் பேசிக் கொண்டே மலையடிவாரம் வரை வந்து பின்பு கொஞ்ச தூரம் மலைச்சரிவில் ஏறி மலைப் பாறையில் உட்கார்ந்தார்கள்.

    வியாபார நிமித்தமாக ஜவ்வரிசி, க்ளூகோஸ் மற்றும் ஸ்டார்ச் போன்றவைகளை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதை துரிதப்படுத்த வந்தது போல காண்பித்துக் கொண்டாலும், இந்த தடவை அவருடைய சேலம் வருகையில் வேறு ஒரு கரரணமும் இருந்தது.

    ***

    குமார பாஸ்கருக்குத் தெரியாமலே, அவனுடைய வாழ்க்கைப் பின்னணியைப் பற்றி அறிய அவர் ஒரு தனிப்பட்ட நபரை நியமித்திருந்தார். அவனைப் பற்றிய முழு அறிக்கையை, அவரை சென்னையில் சந்தித்து கொடுத்து விட்டு, அதற்கான தொகையை வாங்கிப் போயிருந்தார்.

    குமார பாஸ்கரைப் பற்றி அந்த தனிப்பட்ட அறிக்கை:

    "சேதுராமன் குமார பாஸ்கர். வயது முப்பது. சேலம் கல்லூரி பட்டதாரி. பூர்வீகம் பேளூர். தந்தை சேதுராமன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர். ஓய்வு பெற்றது வாழைப்பாடியில். ஓய்வு பெற்றப் பின் பேளூர் ஆலய மொன்றில் சேவை செய்து தன் காலத்தைக் கழிக்கிறார். பேளூர் ஆலயத்திற்கு அருகில் சொந்த வீடு ஒன்று உண்டு இரண்டு சகோதரிகள். நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்டு பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் செளக்யமாக இருக்கிறார்கள். குமார பாஸ்கர் இயல்பாகவே நல்ல சுபாவம் உள்ளவன். கல்லூரியில் சுமாரான மாணவன். பொதுவாக, யாரிடமும் அதிகமாக பழகாதவன். தொழில், சம்பாத்தியம், முன்னேற்றம் என்று வாழ்க்கையெனும் வெள்ளைத்தாளில் ஒரு நேர்க்கோட்டை வரைந்து, அதில் அடிபிசகாமல் நடக்க முயற்சிப்பவன். பொதுவில், தொழிலில் ஓர் அர்பணிப்பு மனப்பான்மையுடன் இருப்பவன். லாகிரி வஸ்துக்கள் ஏதும் பழக்கமில்லை.

    அவனைப் பற்றிய இந்த ரகசிய விவரங்கள் அவர் சேலம் வரும்போதெல்வாம் கூடவே இருக்கும்.

    அவனுடைய எளிமையான பழக்க வழக்கங்கள் சேகோ பாக்டரியில் அவன் ஊழியர்களிடம் பழகும் தோரணை, பெரிய சிக்கல்களைக் கூட சுலபமாக எடுத்துக் கொண்டு அதை செய்து முடிக்கிற மனோதிடம் ஆகியவைகள் அவரைக் கவர்ந்தன.

    ஒரு புதிய வாலிபனைத் தேடி வேறெங்கும் அலைவானேன்.

    மணிமாலாவுக்கு இவனையே தேர்ந்தெடுத்தாலென்ன?

    ஏழ்மையென்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. மணிமாலாவையும் இவனையும், இவனுக்கு மணிமாலாவையும் பிடித்து விட்டால்...பங்களாவில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்கும்படி செய்து விடலாமே!

    சமீபத்தில் இரண்டு முறை சேலம் வந்தபோது இதே எண்ணத்தில்தான் வந்தார். அதனால் தான் அவனிடம் பழகும் போதும், பேசும் போதும் வழக்கத்தை விட அதிக கனிவுடன் இருந்தார்.

    இப்ப நான் வரும்போது கூட மணிமாலா என்னோட வரதா இருந்தது. வேற வேலையா நான் திருச்சி, கோயமுத்தூர் என்று சுற்ற வேண்டியிருந்ததால் அழைத்துக் கொண்டு வர முடியவில்லை என்றார்.

    அவங்களை இங்கே விட்டுட்டு நீங்க உங்க அலுவலைப் பார்க்கலாமே. இங்கேயும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு

    அதுவும் நல்ல யோசனை தான். அடுத்த தடவை அவளை அழைத்து வருகிறேன். அப்படி இல்லையென்றால், அவளை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.

    மீண்டும் அவர்கள் பேச்சு வியாபார விஷயமாகத் திரும்பியது.

    சமீபத்தில் சேலம் சேகோ உற்பத்தியாளர் சம்மேளனத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள், விலைகளின் வீழ்ச்சிகளை கட்டுப்படுத்தி விநியோகத்தை சீராக்கும் வேலை...

    இப்படி பேச்சு திரும்பியது.

    குரு சரணன் வந்திருப்பதையறிந்து பாக்டரி உரிமையாளர் சுப்பு கிருஷ்ணன், அவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் மலையடி வாரத்திற்கே வந்து விட்டார்.

    "நீங்க வந்திருக்கிறதா மானேஜர் சொன்னார்.

    இங்க வந்து உட்கார்ந்து கிட்டு இருக்கீங்களேபாக்டரீக்கே வரலாமே; இப்பதான் போன வாரம் ஸ்பெஷலா ஒரு அறையை ஏர் கண்டிஷன் செஞ்சேன்."

    இது மாதிரி உட்கார்ந்து பேச சென்னையிலே சந்தர்ப்பமில்லே, சுப்பு கிருஷ்ணன்; எப்பப் பார்த்தாலும் ஒரே டென்ஷன். இங்கே வந்தா தான் கொஞ்சம் தெளிவாகவும் தெம்பாகவும் ஊர் திரும்பறேன்.

    தூரத்தில் சேகோ பாக்டரியும்; மரவள்ளிக்கிழங்கு சிப்பிகளையும் பாலையும் உலர வைக்கும் தொட்டியும் வெண்மை பரப்பாகத் தெரிந்தது. அதில் கிழங்குப் பால் உலருவதற்காக விடப்பட்டிருந்தது. அதன் மேல் சூரிய ஒளிபடும்போது பாற்கடலாகத் தெரிந்தது.

    ஆலை அதிபர் சுப்பு கிருஷ்ணன் அங்கிருந்த மலைப் பாறையொன்றில் அமர்ந்தார். அங்கிருந்துப் பார்த்தால் பாக்டரியின் முழுமையான அமைப்பும், அப்படியே தெரியும்.

    சுப்பு கிருஷ்ணன்! உங்க பாக்டரி அமைந்திருக்கிற இடம் பிரமாதமாக இருக்கு. இங்கேயிருந்து இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கிட்டே உங்க பாக்டரியை கவனிக்கலாம்.

    இங்க ஒரு இடம் வாங்கிப் போடுங்க. பின்னால நம்ப தொழில் அபிவிருத்திக்கு செளகரியமா இருக்கும்னு சொல்லிக்கிட்டேதான் இருக்கேன்.

    "நீங்க சொன்னதை நான் மனசிலே வச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இப்ப உங்க கிட்டே ஒரு விஷயத்தைச் சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.

    என்னுடைய பேப்பர் பிஸினஸ் சென்னையிலே நடந்துக்கிட்டு இருக்குது. அத கவனிக்கறதுக்கே எனக்கு நேரம் சரியா போவுது. இது என்மகள் மணிபாலாவோட பிசினஸ். சென்னையிலே, சின்னதாக ஆரம்பிச்சேன். இப்ப பெரிசா வளர்ந்திடுச்சு. பெரிசா வளர்ந்து விட்டதால இதை பாதியிலே விடமனசில்லே, மகளும் அதைதான் சொல்றா. இந்தத் தொழிலோட மூலதனம், இதன் லாப நஷ்டம் எல்லாம் அவளோடது"

    பாக்டரி அதிபர் சுப்பு கிருஷ்ணனும் குரு சரணனும் ஏதோ முக்கியமான விஷயம் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதை கவனித்து, குமார பாஸ்கர் அங்கிருந்து புறப்படத் தயாரானபோது.

    ஆத்தூர் பிரதான சாலையில் நான்கு லாரி லோட் குச்சிக்கிழங்கு எஸ். கே. சேகோ பாக்டரி காம்பௌன்ட்டுக்குள் நுழைவதைப் பார்த்தான் குமார பாஸ்கர்.

    ஸார், நீங்க பேசிக்கிட்டு இருங்க. தம்மம்பட்டியிலிருந்து நாலு லோட் கிழங்கு நமக்குத்தான் வருது அதைப் பார்த்து அன்லோட் பண்ண ஏற்பாடு செய்யணும்...

    தம்மம்பட்டி லோடா... ஸார் உங்களுக்கு அமஞ்ச உதவியாளர் பாஸ்கர் உங்களுக்கு ஒரு நிதி... இந்ததபா தம்மம்பட்டியிலே பெருவாரியா மானாவாரி இரு நூத்தி இருபத்தொரு ரக, கிழங்கு தான் போட்டிருந்தாங்க. நல்ல மாவு கிழங்கு. ஏகப் போட்டி....

    பாஸ்கர் அங்கிருந்து கரிவில் ஓட்டமும் நடையுமாக இறங்கினார்.

    அவன் போவதையே பார்த்த வண்ணமிருந்தார் குருசரணன்.

    தம்மம்பட்டி கிழங்கு ஏகப்போட்டிங்க. தம்பி முந்திக் கிட்டு பெருவாரியான வியாபாரிகளை மடக்கிடுச்சு...

    சுப்புகிருஷ்ணன், பாஸ்கர் எப்படி? நல்ல பையனா?

    "நல்ல பையனா... அதான் ஒரே வரியிலே சொல்லிட்டேனே அந்தத் தம்பி உங்களோட நிதி. இத்தனை உண்மையா வேல செய்யற வாலிபர்களை இப்பல்லாம் பார்க்கறதே அபூர்வம்.

    எனக்கு இந்த மாதிரி ஒரு பையன் கிடைச்சா என் மகளோட இந்த வியாபாரத்தை முழுமையா ஓப்படைச்சுட்டு நான் நிம்மதியா இருப்பேன்."

    நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்தான் ஸார். நீங்க இதநம்பி தாராளாமா எதை வேணா ஒப்படைக்கலாம்."

    எதை வேணா ஒப்படைக்கலாமா!

    புன்னகையுடன் சுப்புகிருஷ்ணனின் தோள்பட்டையில் கை வைத்தார்.

    ஒப்படைக்கலாம்.

    மீண்டும் அழுத்தமாக கூறினார்.

    ஒப்படைக்கலாம் என்ற பதிலில் அவர் மனதில் இருந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்த மாதிரி தோன்றியது குருசரணனுக்கு.

    சுப்புகிருஷ்ணன், அடுத்த வாரம் இங்கே என் மகள் மணிமாலாவை அனுப்பி வைக்கிறேன். வியாபார விஷயங்களை பாஸ்கர் எத்தனைத் திறமையாக கவனிக்கிறான் என்பதை அவளும் பார்க்க வேண்டும்.

    தாராளமா அனுப்புங்க ஸார். நம் விருந்தினர் விடுதியில் தங்கட்டும்.

    ஓகே...

    2

    நம்பிக்கைக்கு பாத்திரமானவன். நீங்க இவரை நம்பி எதை வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.

    எதை வேண்டுமானாலும் ஒப்படைக்கலாமா?

    எதை வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.

    ***

    சேலத்தில் அவருக்கும் சுப்புகிருஷ்ணனுக்கும் நடந்த அந்த சம்பாஷணையின் உள் அர்த்தம் தந்த மகிழ்ச்சியை சுமந்து கொண்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் குருசரணன்,

    காரில் சேலம் வந்தார். ஆனால் வன்னியர் சங்கப் போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்துக்கள் சீர்கெட்டிருக்கும் செய்தி அவருக்கு சேலத்திலேயே கிடைத்து விட்டது.

    போராட்டம் என்ற பெயரில் சாலை நடுவில் மரங்களை வெட்டிப்போடும், சாலைகளை வெட்டியும் பாழாக்கி இருக்கிறார்கள். போக்குவரத்து சீர்பட சில நாட்கள் ஆகும் என்று செய்திகள் வந்தன.

    காரை சேகோ பாக்டரியிலேயே நிறுத்திவிட்டு. அவர் மட்டும் திருச்சி வரையில் ரயிலில் வந்து, பின்பு பிளேனில் சென்னை திரும்பினார்.

    டாக்ஸியில் வந்து இறங்கும் தகப்பனாரைப் பார்த்து கலவரமடைந்தவளாகக் காணப்பட்டாள் மணிமாலா!

    தந்தையின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள். அவர் வழக்கமாக வரும் டாக்ஸிதான். அவர் அதை டிஸ்போஸ் செய்யும் அவசியமில்லாமல் போய்விட்டது.

    இந்த சாலை மறிப்புப் போராட்டத்தில் சேலம்சென்னை சாலைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக, பேப்பரில் பார்த்தேன்... நீ எங்கே போய் மாட்டிக் கொண்டாயோ என்று இரண்டு நாளாக ஒரே கவலை.

    "அப்படியேதும் சிக்கியிருந்தால் நான் இருக்கிற இடத்திலிருந்து டெலிபோன்ல உன்னைக் கூப்பிட்டுச் சொல்லி விடுவேன். போராட்டத்தின் விளைவுகள் மிக மோசமாகத் தான் இருக்கிறது. நான் திருச்சி வரை ரயிலில் வந்து அங்கிருந்து பிளைட்டில் வந்தேன். போகும் போதே கூட சேலம் போய்ச் சேருவேனோ என்று சந்தேகமாகத்தான் இருந்தது. இரண்டே நாளில் நிலைமை மோசமாகி விட்டது, நான் போயிருக்கவில்லையென்றால் அங்கே பெரிய பிஸினஸ் ஒன்று கை நழுவி போயிருக்கும் மாலா. நம்ம பாஸ்கர் எல்லாவற்றையும் முடிச்சி வச்சிருந்தான். வேலை சுலப்மாகப் போய் விட்டது.

    அவர் பேசிக் கொண்டே தன் வேலைகளை கவனித்தார். கோட்டை கழற்றி ஹாங்கரில் மாட்டினார். பாண்டைக் கழற்றி வேஷ்டி கட்டிக் கொண்டார், தடிமனான டர்கிஷ் டவலை மேலே போர்த்திக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

    ***

    அவர் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தார்.

    பூஜை அறைக்குச் சென்றார். ஸ்லோகங்கள், நாமாவளிகள் இதன் நடுவில் கேசட்டில் அடக்ககாக ஓலிக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்...

    பட்டை ஜரிகையிட்ட வேஷ்டியுடன் வெள்ளை ஜிப்பா அணிந்து சாப்பாட்டு மேஜை முன் வந்து அமர்ந்த போது, சாப்பாடு தயாராக இருந்தது.

    திரைச்சீலையை விலக்கிக் கொண்டு மணிமாலா உள்ளே வந்தாள்.

    உயரமான வாளிப்பான உடல்வாகு. தலை நிறைய கேசம் அவளுக்கு எப்பொழுதுமே அதிக அலங்காரங்கள் பிடிக்காது.

    பட்டையான தலைப்புடன் கூடிய சேலம் கைத்தறிப் புடவை. கழுத்தில் மெல்லிய தங்கச் செயின்.

    மகளை குறும்புடன் பார்த்தார்.

    சாப்பிடத்தானே உட்கார்ந்திருக்கிறாய்?

    ஆமாம். ஏன்?

    இல்லை. இன்னும் சேலம் நினைவுகளிலிருந்து விடு பட்டதாகத் தெரியவில்லை. அதோடு உன்னுடைய சேலம் உதவியாளர் அந்த குமார பாஸ்கரைப் பற்றி கூடை கூடையாகக் கொட்டியளக்க இந்தத் தடவையும் நிறைய இருக்க வேண்டுமே! பேசிக் கொண்டே தகப்பனாருக்கு எதிரே உட்கார்ந்தாள்.

    ஒரு பெரிய நிறுவனத்தையே நிர்வகிக்கக் கூடிய திறமைசாலி அவன். எத்தனை ஆட்களை வைத்து அங்கே வேலை வாங்குகிறான் தெரியுமா? சேலம் சுப்பு கிருஷ்ணன் வாய் ஓயாமல் கூறுகிறார். குமார் பாஸ்கர் நமக்குக் கிடைத்த புதையலாம்.

    தட்டில் சாதம் போட்டாச்சு. சாப்பிடலாம்...

    தண்ணீரை எடுத்து உள்ளங்கையில் விட்டு சாதத்தை அன்னப் பரிசேஷனம் செய்து விட்டு, ஆறு பருக்கைகளை எடுத்து பல்லில் படாமல் வாயில் போட்டுக் கொண்டார்.

    "அவரும்தான் நம்ப சென்னை ஆபீஸுக்கு நிறையதரம் வந்திருக்கிறார். ஒரு தடவை கூட நீ அவரை இங்கே அழைத்து வந்ததில்லை. அந்த உத்தமபுத்தரரை பார்க்க வேண்டுமென்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.

    "அவருக்குத்தானாகட்டும், தான் வேலை செய்யும் கம்பெனியின் அதிபர் ஒரு பெண்ணாயிற்றே, தனக்கு வருகின்ற பேங்க் செக்குகளிலெல்லாம் மணிமாலா என்ற கையெழுத்து இருக்கிறதே, அந்தக் கையெழுத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1