Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilayada Vanthaval
Vilayada Vanthaval
Vilayada Vanthaval
Ebook116 pages43 minutes

Vilayada Vanthaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803206
Vilayada Vanthaval

Read more from Maharishi

Related to Vilayada Vanthaval

Related ebooks

Reviews for Vilayada Vanthaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilayada Vanthaval - Maharishi

    http://www.pustaka.co.in

    விளையாட வந்தவள்

    Vilayada Vanthaval

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    டெலிபோன் ஒலித்தது

    'விஷ்ணுசர்மா' - ஹியர்…

    அவன் காதில் தேன் பாய்ந்து மறுமுனை வழியே வழிந்தது.

    சில கணங்கள் அக்குரலால் கிறக்கம் பின்பு சுதாரிப்பு.

    துர்கா பேசுறேன்

    நீங்க சொல்லித்தான் தெரியணுமா அந்தக்குரல் இனிமை இருக்கே அது அடுத்த ஒலிம்பிக் விளையாட்டின் போது அகில உலக குரல் இனிமைப் போட்டி ஒன்று வைக்கச் சொல்லி அதற்கு ஒரு பரிசு கொடுக்க ஏற்பாடு செய்தால் அதில் முதல் பரிசு... நிச்சயமாக உங்களுக்குத்தான்....

    'நன்றி' நாம் ஏதாவது உருப்படியான விஷயம் பற்றி பேசலாமா

    அடாடா இதவே இரு உருப்படியான விஷயம்தான் துர்கா...

    காலையிலேயே அறுவையா! இப்போ எப்படி இருக்கீங்க... வெறும் பனியனைக் கட்டிண்டு வேஷ்டியை ச்சீ... உங்க குரலை கேட்டவுடன் அப்படியொரு குழப்பம்....

    எப்போ தெளியும், நான் உங்க கூட முக்கியமான சமாசாரம் ஒன்று பேசணுமே!

    உனக்கு ச்சீ. உங்களுக்கு இல்லாம நேரமா.... நீங்க எப்ப வந்தாலும் அடிமைபோல...

    'போறுமே அபத்தம்.... நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்திலே அங்கே வரேன், ரொம்ப ஓய்வா இருக்கீங்க போல இருக்கு. ஏன்? இன்னிக்கு கேஸ் எதுவும் இல்லையா!’

    உனது அன்பான கவனத்திற்கு ஒரு செய்தி -

    கேஸ் நம்பர்களை சொல்றேன் குறித்துக்கொள்ளுங்கள்ஆட்டையாம்பட்டி, இரட்டை கொலை வழக்ரு, இரண்டாவது 'ஈரங்கி செவ்வாய்பேட்டை - கள்ளநோட்டு மோசடி வழக்கு' இன் சீப்கோர்ட், 'கிட்நாப்பிங் கேஸ்' சங்கரி கோர்ட்.... இப்போ இங்கே திடீர்னு என் ரூமக்கு வந்தா என்னைப்பார்க்க முடியாம ஏமாந்து போயிடுவீங்க, ஏன் தெரியுமா, என்னைச் சுற்றி அத்தனை சட்ட புத்தகங்களையும் பிரித்துப்போட்டு 'கைட்டேஷன்ஸ் ஸ்விப்ட’ வைத்துக் கொண்டிருக்கிறேன். நேத்து என்னைப்பற்றி"மாலை மலர்லே ஓன்னேகால் பத்திக்கு செய்தி போட்டிருத்தார்களே பார்க்கலையா, பிரபல வக்கீல் குறுக்கு விசாணை, எதிரிகள் திணறல். கோர்ட்லே இன்னக்கு ஒரு பெரிய நாடகமே இருக்கு எதிரி வக்கிலை அப்படியொரு அமுக்கு அமிக்கி ஆளு வெளியே வர முடியாம திணற அடித்து நீதிபதி தலையைப் பிச்சுக்கணும்.... பை த…பை நேற்று பேப்பரிலே ஒண்ணேகால் பத்தி என்னைப்பற்றி எழுதியிருந்தாங்களே கவனிச்சீங்களா...

    பிரபல கொலை வழக்கில் இளம் வக்கீல் - இனம் வக்கீல் 'விஷ்ணுசர்மா’ குறுக்கு விசாரணை, எதிரிகள் கோர்ட்டில் திணறல்.... நீதி மன்றத்தில் பரபரப்பு....

    மன்னிக்கனும் நேற்றய பேப்பரில் வலிபரின் நிர்வாண ஓட்டம் போலிசார் - 'லபக்’ என்று பிடித்தார்கள். அதுதான் படித்தேன்.... படித்தவுடன் அந்த வாலிபரின் பெயரைத்தான் பார்த்தேன். நல்லவேளை அது நீங்கள் இல்லை.... போனை வைக்கட்டுமா....

    விஷ்ணுசர்மா போனை கீழே வைத்தான்.

    துர்காவைப்பற்றி நினைவுகள் ஒரு நிழற்படம் ஓடியது

    அவனுடைய கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் எல்லாக் கல்லூரிகளுக்காகவும், ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் அழைப்பின் சார்பிலும் அவன் நடுவராகப்போவான். அவனுக்கு எல்லா ஆட்டங்களைப்பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் தெரியும், அதற்காகவே படித்து பட்டங்களும் வாங்கியிருக்கிறான். கூடவே சமூக சேவையாக சொந்த முறையிலும்,குளோம் இண்டர்நேஷனல்டிடெக்டிவ்களுக்காகவும் பல கேஸ்களில் துணிவுடன் ஈடுபட்டு சிக்கல்களை விடுவித்திருக்கிறான்.

    அவனுடைய இந்த அடிப்படை திறமைகளை மேலும் பயனுள்ளதாங்கிக் கொள்ள அவனுக்கு ஆலோசனைகள் கூறி அவனை உற்சாகப்படுத்தியவள் அவள்.

    அவள் தனிப்பட்ட முறையில் பி. எல். படித்து பரீட்சை எழுதினாள். அவளுடைய அனுபவ அறிவும், படித்த சட்ட அறிவும் பெரிதும் உதவியது. அவனுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அவள் செய்தாள்.

    அவன் மேல் அளவு கடந்த மரியாதையும், மதிப்பும் உள்ளவன்.

    ***

    சீதாவை அழைத்துக்கொண்டு அவள் தன் மடாடாரில் விஷ்ணுசர்மாவின் வீட்டில் போய் இறங்கியபோது அவன் கல்கத்தா, 1978ல் முழ்கியிருந்தான்.

    'குட்மார்னிங்’

    'வெரிகுட்மார்னிங்'

    உட்காருங்க, என்ன சாப்பிடறீங்க, காபி, ஹார்லிக்ஸ், போர்ன் விடா

    துர்கா சிரித்தாள், கூடவே அழைத்துக்கொண்டு வந்தி ருந்த சீதா என்கிற அந்த பெண்ணைப்பார்த்து,

    நான் காரில் வரும்போது சொன்னேனே அது இவர் தான்.... என்னுடைய துர் அதிர்ஷ்டம் இவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.... நோ நெருக்கிய நண்பர்

    'டர்ட்டி....’

    'ஆபாசத்தை இப்ப ரொம்பப் பேர்ரசிக்கிறாங்க....

    சீதா சிரித்தாள்......

    நாங்க எப்போதும் இப்படித்தான் பேசிப்போம், வித்தியாசமாக நினைக்காதீங்க!

    ...பொதுவா ரெண்டு பைத்தியங்கள் சந்தித்தா எப்படி பேசிப்பாங்க.... ஓ பைத்தியம் தாஜ்மகாலை காட்ட இதை நான் விலைக்கு வாங்கப்போறேன்னு சொல்லிச்சாம்

    அதற்கு இன்னொரு பைத்தியம் யாருக்கு கொடுத்தாலும் கொடுப்பேன் ஆனா உனக்கு மட்டும் விலைக்கு தரமாட்டேன்னு சொல்லிச்சாம்....

    என்ன சிரிக்கவே மாட்டேங்கறீங்க....

    நான் உங்களைப்பத்தி நிறைய எச்சரிக்கையெல்லாம் சொல்லித்தான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்...

    இவங்க எனக்கு அண்மையில் அறிமுகம்மானவங்க, பெயர் சீதா, நம்ப பிருந்தா, சமஸ்கிருதம் கத்துக்கனும்னு ஆசைப்பட்டபோது ஒரு சமஸ்கிருத ஆசிரியரை தேடினேன் இவங்க கிடைச்சாங்க, நம்ப பிருந்தாவுக்கு வீட்டிலே தினம் சமஸ்கிருத 'டியூஷன் எடுக்கறாங்க....

    நேரம் பன்னா நீங்க விஷயத்துக்கு வாங்க பா... எனக்கு சீதா முக்கியமல்லே, அவங்க பிரச்சனை தான் முக்கியம், இந்த சேலம் மினி கார்பரேஷன்ல நான் ஒரு வீடிங் அட்வகேட்.... 'வெங்கடகிருஷ்ண விஷ்ணுசர்மா',

    தற்பெருமை, தலைக்கொழுப்பு....

    பிருந்தாவுக்கு சமஸ்கிருத டியூஷன் எடுக்கற சீதாவுக்கு என்ன பிரச்சனை....

    இவங்க ரொம்ப ஏழை

    சொல்லாமலே புரியுது. சமஸ்கிருதம் கத்துக்கொடுக்கறவங்க என்ன பெரிய பணக்காரங்களாவா இருப்பாங்க, வேறு எந்தத் தொழில் கத்துக்கொடுத்தாலும் அரை வயிறு சோத்துக்காவது கிடைக்கும்… மேலே சொல்லுங்க....

    நான் சொல்றேன் இவங்க

    Enjoying the preview?
    Page 1 of 1