Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatrodu Odiyavan!
Kaatrodu Odiyavan!
Kaatrodu Odiyavan!
Ebook341 pages2 hours

Kaatrodu Odiyavan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அவசியமா? இந்த சர்ச்சை எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் குற்றமும் தண்டனையும் நீண்டு கொண்டே தானிருக்கின்றன. இந்த சங்கிலித் தொடர் எங்கேதான் முடியும்?

மேலை நாடுகளில் இது பற்றி சர்ச்சைகள் நடந்தன. ஜெர்மனி, இத்தாலி, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட மரண தண்டனையை ஐம்பது ஆண்டுகளாக விவாதித்து, அதை ரத்து செய்வதென்று முடிவு எடுத்திருக்கின்றன. எடுத்து விட்டது.

மகாத்மா காந்தி கூட கொலை செய்யக் கூடிய அளவு ஒரு மனிதன் மனதில் ஏற்படக் கூடிய கசப்பையும், வெறுப்பையும் போக்கி ஒரு நல்ல பிரஜையாக்க வேண்டுமென்கிறார்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்று அலைகிற நாம், மனிதனுக்கு அடிப்படையான ஆன்மீக அறிவை வளர்க்க நம் அரசியல் தலைவர்கள் மறந்து விட்டார்கள். மறந்து விட்டார்கள் என்பதை விட மறுத்தும் விட்டார்கள் என்பதுதான் உண்மை. அரசியலில் ஆன்மீகம் என்பது ஒரு காந்திஜி, ஒரு ராஜாஜியுடன் போய் விட்டது. இந்த இருபெரும் தேசியத் தலைவர்கள்தான் அரசியலோடு ஆன்மீகமும் அவசியம் என்று வாழ்நாள் பூராவும் கூறியும், எழுதியும் வந்ததோடு வாழ்ந்தும் காட்டினார்கள்.

நல்லவர் புடைசூழ வரவேண்டிய அரசியல்வாதிக்குப் பின்னால் இன்று ரெளடிகள், தாதாக்கள் பாதுகாப்புக்கு வருகிறார்கள். காந்திஜியைச் சுற்றி சேவாதளத் தொண்டர்கள் தான் வருவார்கள். ராஜாஜியைச் சுற்றி சுதந்திர சிந்தனையாளர்களும், அறிஞர் பெருமக்களும்தான் வருவார்கள். காந்திஜியிடம் 'ஹேராம்' என்கிற தாரகமந்திரமும், ராஜாஜியிடம் வலிமை மிக்க பேனாவும் ஆயுதம்.

ஆன்மீக உணர்வுடன் வாழ்ந்த நமக்கு, முந்தைய தலைமுறை மக்களையும், அரசியல் பித்து பிடித்து அலையும் இன்றைய தலைமுறை மக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். இன்றைய சூழ்நிலைக்கு மரணதண்டனை சரியாகவே படும். வன்முறைக்கு வன்முறைதான் என்ற கலாச்சாரத்தை விதைக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரை மரணதண்டனையும் இருந்தேயாக வேண்டுமென்றுதான் விஷயம் தெரிந்தவர்கள் வாதிக்கிறார்கள்.

ஒரு நாவலுக்கு அழுத்தமான கதை (Fiction) தேவைப்படுகிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு இந்த அடிப்படை அதிகமாகவே இருந்தது. எல்லா கதை சொல்லிகளிடமும் இது இருந்திருக்கிறது. அவர்களும் இந்த 'சுவாரஸ்யம்' என்ற உத்திகளை வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். இதை சுவாரஸ்யமான கதை என்று ஒதுக்கி விட முடியாது. ஒரு 350, 400 பக்கங்களுக்கு மேல் நாவலைச் சொல்லி செல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் கதை, கொஞ்சம் சமூக ஈடுபாடு என்று இந்த சங்கிலித்தொடரை இணைப்பதுதான் கதாசிரியரின் கற்பனை சாமர்த்தியம்.

சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக ஒருவன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவனை ஆன்மீகவாதி ஒருவன் தடுத்து நிறுத்தி மனிதனாக்குகிறான். இன்றைய யதார்த்த வாழ்க்கை என்பதே தீவிரமான சம்பவங்களுடன் கலந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாவலில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அங்கங்கே கோடிட்டுக் காட்டி விட்டேன். முழுக்கதையை முன்னுரையிலே சொல்லி விடுவது அத்தனை சிலாக்கியமான காரியமல்ல. சொல்லி விடவும் கூடாது. படியுங்கள்... சுவையுங்கள்.

அன்புடன், மகரிஷி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803195
Kaatrodu Odiyavan!

Read more from Maharishi

Related to Kaatrodu Odiyavan!

Related ebooks

Reviews for Kaatrodu Odiyavan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatrodu Odiyavan! - Maharishi

    http://www.pustaka.co.in

    காற்றோடு ஓடியவன்!

    Kaatrodu Odiyavan!

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    முன்னுரை

    குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அவசியமா?

    இந்த சர்ச்சை எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் குற்றமும் தண்டனையும் நீண்டு கொண்டே தானிருக்கின்றன. இந்த சங்கிலித் தொடர் எங்கேதான் முடியும்?

    மேலை நாடுகளில் இது பற்றி சர்ச்சைகள் நடந்தன. ஜெர்மனி, இத்தாலி, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட மரண தண்டனை பற்றி. சமீப காலம் வரை ஒரே பிடிவாதமாக இருந்த இங்கிலாந்து கூட மரண தண்டனையை ஐம்பது ஆண்டுகளாக விவாதித்து, அதை ரத்து செய்வதென்று முடிவு எடுத்திருக்கின்றன எடுத்து விட்டது.

    ஐக்கிய நாடுகளின் சபை, தீர்மானமாக மூன்றாவது மனித உரிமைப் பிரிவில், 'மனிதனுக்கு அவன் உயிர் சொந்தம். அதை அரசாங்கம் தண்டனை மூலம் பறிக்கக் கூடாது என்றும், காப்பாற்றப்பட வேண்டும்' என்கிறது. மகாத்மா காந்தி கூட கொலை செய்யக் கூடிய அளவு ஒரு மனிதன் மனதில் ஏற்படக் கூடிய கசப்பையும், வெறுப்பையும் போக்கி ஒரு நல்ல பிரஜையாக்க வேண்டுமென்கிறார்.

    இப்படி மரண தண்டனை பற்றி ஏராளமான சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தாலும், மரண தண்டனை மிகவும் அவசியம் என்கிற கருத்துக்கே பொது மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    கொலை செய்த ஒருவன் ஒரு கொலையை மட்டும் செய்வதில்லை. கொலையுண்டவனின் குடும்பம், அவனைச் சார்ந்தோர், அவனுடைய ஆதரவில் வாழ்வோர் என்று ஒரு சமூகக் கூட்டத்தையே நாசமாக்கி விடுகிறான், என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. கொலையுண்டவனின் குடும்பம் வாழ்க்கையில் மீள முடியாத அளவு கஷ்டங்களை அனுபவிப்பதையும் நாம் பல இடங்களில் பார்க்கவும் செய்கிறோம்.

    இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன?

    பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்று அலைகிற நாம், மனிதனுக்கு அடிப்படையான ஆன்மீக அறிவை வளர்க்க நம் அரசியல் தலைவர்கள் மறந்து விட்டார்கள். மறந்து விட்டார்கள் என்பதை விட மறுத்தும் விட்டார்கள் என்பதுதான் உண்மை. அரசியலில் ஆன்மீகம் என்பது ஒரு காந்திஜி, ஒரு ராஜாஜியுடன் போய் விட்டது. இந்த இருபெரும் தேசியத் தலைவர்கள்தான் அரசியலோடு ஆன்மீகமும் அவசியம் என்று வாழ்நாள் பூராவும் கூறியும், எழுதியும் வந்ததோடு வாழ்ந்தும் காட்டினார்கள்.

    நல்லவர் புடைசூழ வரவேண்டிய அரசியல்வாதிக்குப் பின்னால் இன்று ரெளடிகள், தாதாக்கள் பாதுகாப்புக்கு வருகிறார்கள்.

    காந்திஜியைச் சுற்றி சேவாதளத் தொண்டர்கள் தான் வருவார்கள். ராஜாஜியைச் சுற்றி சுதந்திர சிந்தனையாளர்களும், அறிஞர் பெருமக்களும்தான் வருவார்கள். காந்திஜியிடம் 'ஹேராம்' என்கிற தாரகமந்திரமும், ராஜாஜியிடம் வலிமை மிக்க பேனாவும் ஆயுதம்.

    அடிப்படையான ஆன்மீக உணர்வுகளை சிதைத்து விட்டு, மனிதாபிமானம், கருணை அடிப்படை என்று பேசுவதெல்லாம் வெறும் வார்த்தைப் பித்தலாட்டமே தவிர வேறில்லை.

    ஆன்மீக உணர்வுடன் வாழ்ந்த நமக்கு, முந்தைய தலைமுறை மக்களையும், அரசியல் பித்து பிடித்து அலையும் இன்றைய தலைமுறை மக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். இன்றைய சூழ்நிலைக்கு மரணதண்டனை சரியாகவே படும். வன்முறைக்கு வன்முறைதான் என்ற கலாச்சாரத்தை விதைக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரை மரணதண்டனையும் இருந்தேயாக வேண்டுமென்றுதான் விஷயம் தெரிந்தவர்கள் வாதிக்கிறார்கள்.

    ஒரு நாவலுக்கு அழுத்தமான கதை (Fiction) தேவைப்படுகிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு இந்த அடிப்படை அதிகமாகவே இருந்தது. எல்லா கதை சொல்லிகளிடமும் இது இருந்திருக்கிறது. அவர்களும் இந்த 'சுவாரஸ்யம்' என்ற உத்திகளை வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். இதை சுவாரஸ்யமான கதை என்று ஒதுக்கி விட முடியாது. ஒரு 350, 400 பக்கங்களுக்கு மேல் நாவலைச் சொல்லி செல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் கதை, கொஞ்சம் சமூக ஈடுபாடு என்று இந்த சங்கிலித்தொடரை இணைப்பதுதான் கதாசிரியரின் கற்பனை சாமர்த்தியம்.

    சாதாரண வாழ்க்கை என்பதே ஒரு அசாதாரணமான நெடும் ஓட்டம்தான். இதில் கற்பனை தவிர்க்க முடியாத ஒன்று. மனித நாடகத்தின் ஒரு அங்கமாக பல நேரங்களில் மெருகூட்ட அது பயன்பட்டிருக்கிறது.

    சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக ஒருவன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவனை ஆன்மீகவாதி ஒருவன் தடுத்து நிறுத்தி மனிதனாக்குகிறான்.

    இன்றைய யதார்த்த வாழ்க்கை என்பதே தீவிரமான சம்பவங்களுடன் கலந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த நாவலில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அங்கங்கே கோடிட்டுக் காட்டி விட்டேன். முழுக்கதையை முன்னுரையிலே சொல்லி விடுவது அத்தனை சிலாக்கியமான காரியமல்ல. சொல்லி விடவும் கூடாது.

    படியுங்கள்... சுவையுங்கள். இது எனது 67வது புத்தகம். காற்றுடன் ஓடியவனை அற்புதமான முறையில் பதிப்பித்த நண்பர் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.

    அன்புடன்

    மகரிஷி

    1

    எதிரெதிரே நாற்பதுக்கும் மேல் வரிசையாகப் படுக்கைகளைக் கொண்ட அந்த ஆஸ்பத்திரியின் சர்ஜிகல் வார்டில் அனேகமாக எல்லாப் படுக்கைகளும் ஒவ்வொரு வகை ஊனங்களைச் சுமந்து கொண்டுதான் இருந்தன. பூமாதேவியை விட இவைகளுக்கு அதிகப் பொறுமை இருக்கிறது என்பதை, அந்த ஒவ்வொரு படுக்கையிலும் உள்ள நோயாளிகளின் முனகலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

    சுவற்றோடு சுவராகப் பதிந்திருந்த பால் விளக்கிகள், ஓய்ந்து விட்ட மின்விசிறிகள், குறுக்கும் நெடுக்குமாகச் சதா ஓடியாடிக் கொண்டிருக்கும் நர்ஸ், நோயாளி ஜீவனின் தலைவிதியைக் கையில் வைத்திருக்கும் ஊசி முனையில் கணித்து விட மரணத்துடன் போரிடும் டாக்டர்.

    இன்றைய 20ம் நூற்றாண்டிலே நோயாளிகளுக்குப் பஞ்சமே கிடையாது. பொதுவாகப் பார்க்கப் போனால் எந்த ஒரு சராசரி மனிதனும் ஏதாகிலும் ஒரு நோயால் அவதிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

    இரவின் நடுப்பகுதி.

    டாக்டர் சுந்தரம் ஒரு நோயாளிக்குத் தூக்கமருந்தை ஊசி மூலம் ஏற்றிவிட்டு, ஊசிக் குழாயை அருகில் நர்ஸ் மஞ்சுளா ஏந்திக் கொண்டு நிற்கும் பேசினில் போட்டு விட்டு நிமிர்ந்தார். அவருக்கும் சர்ஜிகல் வார்டுக்கும் சம்பந்தமில்லை. அந்த இரவு நேரத்தில் அவருடைய ஸ்பெஷல் டூயூட்டி காஷ்வாலிடியில்.

    அவசரக் கேஸ்கள் என்று வருகிற நோயாளிகளை மட்டுமே கவனிக்க வேண்டியது அவருடைய வேலை.

    மற்றுமுள்ள இரண்டு மூன்று நோயாளிகளைப் பார்த்து விட்டுத் தன் அறைக்கு வந்தபோது நர்ஸ் மஞ்சுளாவும் உடன் வந்தாள். பிறகு சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே அங்கே கிடந்த நாற்காலி ஒன்றில் வந்து அமர்ந்தாள். அவள் அப்படிக் கேட்ட தோரணை ஏதோ முக்கிய விஷயம் ஒன்றைப் பேசிக் கொண்டிருந்ததும் திடீர் வேலையின் காரணமாக அது பாதியில் நின்று விட்டதும் மாதிரி இருந்தது.

    சுந்தரம் சின்னதான மேஜைப் பரப்பின் மேல் கைகளைக் கோத்து வைத்துக் கொண்டபடி மேஜைக்கு நேரே மேலே எரியும் மின் விளக்கைப் பார்த்தார். அப்படி அவர் செய்தது எதையோ நினைவுப்படுத்திக் கொள்வது போல இருந்தது.

    பிறகு என்ன சாட்சிகள், வாக்கு மூலங்கள், ரகசிய செய்திகள், ருஜுக்கள் எல்லாம் அவனைக் கோட்டை போல வளைத்துத் தப்ப முடியாத அளவுக்கு அவனைச் சுற்றிப் பெரிய சுவரை எழுப்பி விட்டன. இரண்டு மூன்று கொலைக்குக் காரணமானவன் அவன்தான் என்பதும் மேலும் பல மோசடிகளுக்கும் அவனே காரணம் என்றும் நிரூபணமாகி விட்டன. எத்தனையோ பொருள்களை முடிந்த அளவு போலீஸார் கைப்பற்றி விட்டார்கள். மீதியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸார் கணக்குப்படியும் மற்ற தஸ்தாவேஜுகளின் ருஜுப்படியும் பார்த்தால் இன்னும் பெரும்பகுதி பொருள், நகை எல்லாம் கைப்பற்றப்பட வேண்டும். கைதியைக் கேட்டால் எனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறான். என்னதான் செய்ய முடியும்? முடிவில் இனி அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது என்பதை உணர்ந்தார்கள். அதோடு அவர்களும் விட்டு விட்டு வழக்கு ஜோடனையில் கவனம் செலுத்தினார்கள்.

    மீண்டும் அவர்கள் பேச்சு நடுவில் தடைப்பட்டது. சர்ஜிகல் வார்டின் டாக்டர் வந்து விட்டார். அவர் உள்ளே வந்தவுடன் சுந்தரத்தை அவசரமாக அழைத்துக் கொண்டு அவருடைய வார்டுக்கு வந்து ஒரு படுக்கையின் முன் நின்று நோயாளியைப் பார்க்கச் சொன்னார். அந்தப் படுக்கையில் கிடந்த நோயாளியின் நாடித்துடிப்பைப் பரீட்சிக்க எண்ணிக் கையை வைத்தார். அவர் முகம் மாறியது. மீண்டும் சில பரிசோதனைகள். சுந்தரத்தின் உதடு பிதுங்கியது. விழித்திருந்த 'அதன்' கண்களின் மேல் இமைகளை இழுத்து மூடினார். மார்புவரை இருந்த துணி தலைக்கு வந்தது. அருகில் நின்ற சகோதர டாக்டரையும் உடன் வந்த நர்ஸ் மஞ்சுளாவையும் அர்த்த ஞானத்துடன் பார்த்து விட்டு நகர்ந்தார். அப்படுக்கையில் இருந்த பிரேதத்தை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

    மீண்டும் சுந்தரமும் நர்ஸ் மஞ்சுளாவும் அந்த ஓய்வு அறைக்குள் நுழைந்த போது சரியாக மணி இரவு ஒன்று.

    சுந்தரம் மெளனமாகக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தார்.

    நல்ல நிலவுக் காலம். ஆஸ்பத்திரியின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த ஏராளமான மரங்களும், செடிகளும் அந்த நிலவின் ஒளிபட்டு காற்றின் மென்மையான ஸ்பரிச உணர்வில் இலேசாக ஆடிக்கொண்டு இருந்தன.

    நர்ஸ் மஞ்சுளா டாக்டரின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எவ்வளவுக்கு எவ்வளவு தங்கித் தடைப்பட்டு மெளன வெளியிலிருந்து விடுபட்டுச் சம்பவங்கள் ஒரு ஆழத்தோடு வெளிவருகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு அதை ரசித்து, உள்ளுணர்வோடும் சொல்கிறார் என்பதையும் அவள் உணர்ந்திருந்ததனால் அவளும் அவராகச் சொல்லும்வரை காத்திருந்தாள்.

    பெருமூச்சு விட்டுக் கொண்டே மீண்டும் தொடர்ந்தார் டாக்டர்.

    வழக்கு ஜோடனையில் கவனம் செலுத்தினார்கள் என்றா சொன்னேன். அது தவறு. அந்த வழக்கைப் பொறுத்தவரையில் ஜோடனை என்பதே தேவை இல்லை. ஒரு விஷயம் அகப்பட்டதும் அங்கங்கே விஷயங்கள் எல்லாம் அம்பலமாகி விடவே போலீசாருக்கு மற்றவைகளைச் சேகரிக்கப்பதற்கான சிரமம் இல்லாமல் போய் விட்டது.

    வழக்கு நடந்தது. கைதியும் படித்தவன்தான். நாகரீகமாக, படாடோபமாக, அந்தஸ்தாக, நாலு பேருக்கு மத்தியில் பெரிய மனிதனாக வாழ்ந்தவன்தானே! பெரிய பெரிய வக்கீல்களை எல்லாம் ஒன்றுக்கு இரண்டாக வைத்தான்.

    வழக்கு நடந்தது.

    சாட்சிகளின் விசாரணை, வழக்கின் போக்கு, போலீசாரின் தீவிரம், சர்க்கார் சாட்சிகளின் திடம், காசிநாதன் அவன்தான் கைதி அவனுடைய நம்பிக்கையைத் தளர அடித்து விட்டன. இனி நாம் மீள முடியாது. நம் உயிர் இனி இந்த மண்ணுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய தினங்கள் வரையில்தான் என்று எண்ணமிடத் தொடங்கிய அதே நேரத்தில் அவனுடைய மனிதாபிமானக் கதவு திறந்து கொண்டிருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில், அதாவது வழக்குத் தொடங்கிய காலத்தில் இருந்த தெம்பு முகத்தில் நாளாக நாளாக மங்கிவிட்டது. கைதிக் கூண்டில் நிமிர்ந்து நின்றவன் பிணம் மாதிரி சோர்ந்து காணப்படத் தொடங்கினான். அவனுடைய வக்கீல்களின் வாதம் ஆரம்பத்திலிருந்தே சூடு பிடிக்காமல் நலிந்தே போய்க் கொண்டிருந்ததை அவனே உணரத் தொடங்கினான்.

    வாழ்வுக்கும் வாழ்வுக்கும் இடையே போராட்டம் மரண வாயிலில் நடந்தது. அவனுள்ளத்தில் நடந்த அந்த மரணப் போரின் முடிவு அவனுள் முடிவு காண்பதற்குள் அவனைப் பற்றி அவனால் வெளியே, வழக்கு மன்றத்தில் நடந்த வழக்குப் போர், முடிந்து விட்டது. அவனுள் அவன் தன்னை உணராத வேளையில், அவனைப் பற்றி இங்கே உணர்ந்து விட்டார்கள். அவன் அங்கே குழம்பினான். இங்கே குழப்பமின்றி, இவனைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். கொலைகாரன் என்று அவனைச் சட்டம் நிரூபித்து விட்டது. மனிதனால் இனி அவனுக்குத் தண்டனையில்லை. சட்டம் அவனைத் தண்டிக்க வந்துவிட்டது.

    காசிநாதன் கொலைகாரன். அவனுக்குத் தண்டனை...

    காசிநாதன் கைதிக் கூண்டிலே அழுதான். கொலைகாரன் போல அழவில்லை. மனிதனைப் போல அழுதான்.

    நீதிபதி கைதிக் கூண்டில் இருந்த காசிநாதனைப் பார்த்தார், நீதி வழுவாத பார்வை!

    சட்டங்கள் மனிதனைத் தண்டிக்கிறதே தவிர மனிதனைத் திருத்த அவை பயன்படுவதில்லை என்ற ஒரு ஆழ்ந்த வேதனையின் சோகம் அவர் முகத்திலே படிந்திருந்தது.

    நீ ஏதாவது சொல்ல வேண்டுமா?

    நீதிபதி காசிநாதனைக் கேட்கிறார்.

    காசிநாதன் கண்களைத் துடைத்துக் கொண்டே பிரம்மாண்டமான கோர்ட் ஹாலைப் பார்க்கிறான். பிறகு நீதிபதியைப் பார்க்கிறான்.

    நான் சொல்வதை நீங்கள் நிச்சயமாக கேட்பீர்களா?

    கோர்ட்டில் ஒரே பரபரப்பு. மரணப் பிடியில் சிக்கி விட்டவனுடைய கடைசி கோரிக்கையைக் கேட்க எல்லோரும் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொள்கின்றனர்.

    கேட்பதும், கேட்காததும் சட்டத்தின் பிடியில் இருக்கிறது. அதைப் பற்றிப் பேச்சு இல்லை. உன் நிலை உனக்கு நன்கு புரிந்திருக்கும். இந்த நேரத்தில் நீ ஏதாவது சொல்ல வேண்டுமென்று விரும்புகிறாயா?

    சொல்ல விரும்பும் ஆசை ஒன்று உண்டு

    கோர்ட்டில் சிறு சல சலப்பு. நீதிபதி மேஜைப் பரப்பை மரச்சுத்தியால் தட்டுகிறார். அங்கே மீண்டும் அமைதி. எல்லார் கண்களும் கைதியின் மேல் பதிந்து கிடக்க, விலங்கு மாட்டிய கைகளை மேலே உயர்த்திய காசிநாதன் 'எனக்கு விடுதலை வேண்டும். நான் செய்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாக மனிதனாக வாழ்ந்து அந்தப் பாவங்களைக் கழுவிக் கொள்ள அவகாசம் வேண்டும். என்னை நம்புங்கள்! என்று நான் செய்த பாவங்களுக்கெல்லாம் என் மனம் திருப்தி அடையும் வரையில் பிராயச்சித்தம் செய்து முடித்துக் கொண்டதாக எண்ணி நிம்மதி அடைகிறேனோ அன்று நானாக சிறைக்கு வந்து விடுகிறேன். உங்கள் விலங்கை நானாகப் பூட்டிக் கொள்கிறேன். சிறைக் கதவைத் திறந்து கொண்டு நானே உள்ளே வந்து பூட்டிக் கொள்கிறேன்.

    ஆரம்பத்தில் அவனுடைய துணிவான பேச்சுக்கு அஸ்வாரஸ்யமாகத்தன் பரிகாசங்களைச் சப்தத்தின் மூலம் தெரிவித்தவர்கள் அவன் உருக்கமாகப் பேசப்பேச மிக மிகச் சிரத்தையுடன் கவனிக்கத் தொடங்கினார்கள்.

    'இந்த நீதி எதனையோ வழக்குகளைக் கண்டிருக்கிறது. காசிநாதனை விடக் கொடிய விலங்குகளை எல்லாம் கண்டிருக்கிறது. எத்தனையோ வாழ்க்கைச் சம்பவங்களைக் கேட்டிருக்கிறது. அங்கிருக்கும் பிரம்மாண்டமான கல் தூண்கள் அத்தனையும் இன்று கேட்டால் ஆயிரம் வழக்காடும்? தூக்குத் தண்டனையைச் சிரித்த முகத்தோடும் இறுமாப்பு கொண்ட இரும்பு நெஞ்சோடும் ஏற்றுக்கொண்ட கதைகள் ஆயிரம் சொல்லும். ஆறு மாதம் சிறை என்று கேட்ட மாத்திரத்தில் மயக்கமுற்று விழுந்த அப்பாவித்தனமான, பலகீனம் கொண்ட நெஞ்சங்களையும் அதற்குத் தெரியும். பத்து வருஷந்தானே! ஊதி எரிந்து விட்டு வெளியே வந்து அக்குடும்பத்தையே தீர்த்துக் கட்டி விடுகிறேன் என்று எதிர்கால வன்மத்திற்கு முன்னுரை வழங்கி விட்டுப் பீடு நடை போட்டு விலங்குடன் கூண்டை விட்டு இறங்கிப் போகும் கல் நெஞ்சங்களையும் அது கண்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள், மத்திய வயதினர், கர்ப்பிணிகள், வயோதிகர் என்று எத்தனையோ வகைப்பட்ட குற்றவாளிகளைக் கண்ட நீதிஸ்தலம் அது.

    என்றாலும்...!

    காசிநாதனை அது கண்டதில்லை.

    காசிநாதன் அதற்குப் புதியவன்.

    கோர்ட்டில் அமைதி நிலவியது. கையில் பூட்டிய விலங்கை குனிந்து பார்த்துக் கொண்டான்.

    நீதிபதி வியப்புடன் கைதிக் கூண்டில் நிற்கும் காசிநாதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    உனக்கு விடுதலை வேண்டுமா? புன்னகையுடன் சர்க்கார் தரப்பு வக்கீலைப் பார்த்து விட்டுக் காசிநாதனைப் பார்த்தார்.

    ஆமாம்...! எனக்கு விடுதலை வேண்டும். எனக்கு விடுதலை வேண்டும். நான் மனிதனாக கொஞ்சநாளேனும் வாழ வேண்டும். என்னை நான் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். எனக்கு அதற்காக விடுதலை வேண்டும். விடுதலை வேண்டும் விலங்கு பூட்டிய கைகளை அவன் நின்று கொண்டு இருந்த மரக் கூண்டில் மடார் மடார் என்று வெறிகொண்டவன் போல அடித்தான். தலையை அந்த மரக்கூண்டில் மோதிக் கொண்டான்.

    அவனைத் தெளிவுபடுத்த முயன்றார்கள். அவன் தன் தலையை மரக்கட்டையில் மோதிக் கொள்ளத் தொடங்கியவுடனேயே அருகில் நின்ற இரண்டு போலீஸ் ஜவான்கள் அவன் செய்கையை தடை செய்ய முயன்றார்கள். அதற்குள் அவன் களைப்புடன் கைதிக் கூண்டிலேயே மயங்கி விழுந்து விட்டான். எவ்வளவோ முயன்றும் அவனுடைய அந்த களைப்பும், மயக்கமும் தீரவேயில்லை.

    கோர்ட் ஒத்தி வைக்கப்பட்டது. மயக்கம் போட்டு விழுந்து விட்ட காசிநாதனை போலீஸ் லாரியில் ஏற்றி படுக்க வைத்துக் கொண்டு சிறைக்குப் போய்விட்டார்கள்." பெருமூச்சுடன் நிறுத்தினார் டாக்டர் சுந்தரம்.

    இது கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியா? என்றாள் மஞ்சுளா புன்னகையுடன்.

    ஆமாம் என்றார் டாக்டர்.

    தேவலாம், ஒரு பத்திரிகை நிருபரை விட நீங்கள் கோர்ட் சம்பவங்களை ரொம்ப சீராகக் கவனித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இன்றைய மாலைப்பதிப்பு பேப்பர்களில் கூட இவ்வளவு விவரங்கள் இல்லை. கோர்ட்டில் கைதி திடீர் மயக்கம்... விடுதலை வேண்டும் என்று கதறல்... என்ற தலைப்புடன் ஏதோ எழுதியிருந்தார்கள் என்றாள் மஞ்சுளா. பிறகு டாக்டரையே கூர்ந்து நோக்கிய வண்ணம் ஏன் சார் இதைப்போல கிரிமினல் வழக்குகளை எல்லாம் இப்படி பகிரங்கமாக வெளியார் முன்னிலையில் நடத்தலாமா? கோர்ட்டில் பார்வையாளராக அனுமதிக்கப்படுகிற வெளியார்கள் சில உணர்ச்சிகரமான இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு வழக்குக்கு குந்தகம் விளைவிக்க ஏதுவாகலாம் இல்லையா?

    சுந்தரம் சிரித்தார்.

    ஒரு கிரிமினல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் இடம் பகிரங்கமான நீதிஸ்தலமாகவே கருதப்படும். தாராளமான இடவசதி இருக்கும் பட்சத்தில் பொது மக்களை, பார்வையாளர்களை அனுமதிக்கப்படலாம்.... என்று கிரிமினல் புரோஸிஸஜர் கோர்ட் செக்ஷன் 352 கூறுகிறதே!

    அடடே தேவலாமே! நீங்கள் சட்ட நுணுக்கங்கள் கூட தெரிந்து கொண்டிருக்கீர்களே! என்றாள் வியப்புடன்."

    இதென்ன பிரமாதம்! இந்த வழக்கு தொடரும் முன்பே எந்தெந்த இடங்களுக்கு எந்த வகை சட்டங்களைப் பிரயோகிக்கப் போகிறார்கள் என்று கூட தெரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு இதில் அதிக இன்டரஸ்ட் உண்டு எப்பொழுதுமே. சட்டம் ஒரு மதிப்புள்ள பொழுதுபோக்கு. என்னுடைய பி.எல். நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடமிருந்துதான் நானும் இப்படி இந்தவகையில் பைத்தியமானேன். சில வேளைகளில் கோர்ட்டில் நடக்கும் சில வழக்குகளை வைத்துக் கொண்டு நாங்கள் சண்டைப் போட்டுக் கொள்வோம். அவர்கள் அதற்கு உபயோகித்திருக்கும் சட்டப் பிரிவுகளில் காணப்படும் தவறுகளைக் காரசாரமாக விவாதிப்போம். நான் அந்த ஸெக்ஷன் தப்பு என்பேன். அவர் அதுதான் சரியான ஸெக்ஷன் என்பார். சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்போம். பொதுவாக சம்பந்தப்பட்ட கேஸுக்கு அந்த ஸெக்ஷன் சரியாக அமைந்திருந்தாலும் அதை விடத் திடமான வேறு ஒரு பிரிவில் இடமிருக்கும்... இப்படித்தான் நானும் என் சட்ட அறிவைப் பொழுதுபோக்காக வளர்த்துக் கொண்டேன். அதே மாதிரிதான் இந்த வழக்கிலும் கூட கிட்டத்தட்ட சரியான பிரிவுகளையே ஒவ்வொன்றுக்கும். நினைத்து வைத்திருந்தேன். சில இடங்களில் அவை சரியாகவே அமைந்திருந்தன. இ.பி.கோ அத்தியாயம் XVII செக்ஷன் 302 ஐ பிரயோகித்து காசிநாதனை முதன் முதல் ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்தது முதல் பப்ளிக் பிராஸிகியூடர், பிரபுராம் தனது ஆரம்ப உரையில் உள்ளடக்கிக் கொண்டிருந்த சட்டப்பிரிவுகள் - முடிவு வரையில் அவர் பிரயோகிக்கச் சிபாரிசு செய்த சட்டப்பிரிவுகள் வரை ஓரளவு எல்லாமே தெரிந்து கொண்டுதான் கோர்ட் விவரங்களில் உள்ளே போவேன்

    இரவு மணி இரண்டு!

    காற்றில் லேசாகச் சீதளம் மிதந்து வந்தது.

    நர்ஸ் மஞ்சுளா இரண்டு முறை தன் கைக்கடிகாரத்தையும், ஓய்வு அறையின் சுவற்றில் பதிந்திருக்கும் வட்டமான சுவர் கடிகாரத்தையும் பார்த்து மணியைச் சரி செய்து கொண்டாள்.

    டாக்டர் ஸார் எனக்கொரு சின்ன சந்தேகம். அதை நீங்கள் விளக்கி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கட்டுமா? என்றாள் லேசாக தலையைச் சாய்த்து.

    உம் கேளேன் என்றார் டாக்டர் சுந்தரம் கதவுக்கு அருகில் வந்து நின்று இருளில் கண்களை மேயவிட்ட வண்ணம்.

    மஞ்சுளா எழுந்து அங்கிருந்த சின்னதான மின்சார ஸ்டவ் ஒன்றைப் பொருத்தி அருகில் இருந்த பாத்திரம் ஒன்றில் இரண்டு பேருக்கு ஆகும்படியான டீயைத் தயாரிப்பதில் கொஞ்ச நேரத்தை மெளனமாக ஓட்டினாள்.

    அடுத்த கேள்விக்கான மனதிடத்தைப் பெறத்தானோ இந்தச் செய்கை!

    கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சுந்தரம் அங்கிருந்தே மஞ்சுளாவைப் பார்த்தார். அந்த முழுஉருவமும் அவருக்குத் தெரிந்தது. டாக்டர் சுந்தரம் தன்னைப் பார்க்கிறார் என்பதை உணர்ந்த அவளும் புன்னகையுடன் அவரையே பார்த்தாள்.

    நல்ல செஞ்சிவப்பான உடம்பு. உருண்டையான முகம்.

    Enjoying the preview?
    Page 1 of 1