Melathaalam...
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Nenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5
Related to Melathaalam...
Related ebooks
Kanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsVaramaga Vandhavan Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nayagi Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsPerapillai Rating: 5 out of 5 stars5/5Nee Vanthu Aathari Rating: 0 out of 5 stars0 ratingsVaram Rating: 5 out of 5 stars5/5Karpoora Kanavukal Rating: 4 out of 5 stars4/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Kowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsPoruppai Sumakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsOru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsKolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Neethana? Rating: 3 out of 5 stars3/5Idhayathil Pootha Nila Rating: 0 out of 5 stars0 ratingsVithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsSandhitha Neram! Rating: 3 out of 5 stars3/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Melathaalam...
0 ratings0 reviews
Book preview
Melathaalam... - Devibala
http://www.pustaka.co.in
மேளதாளம்...
Melathaalam…
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
‘பைரவி' சர்ச்சைக்குரிய பெண்மணி இந்தக் கதையின் நாயகி. வயது ஐம்பத்தி நாலு! பிரபலமான அயல்நாட்டு வங்கி ஒன்றில் சீஃப் மானேஜர். சென்னையின் மத்தியில் அலுவலகம் கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் அடி உயரம், எடுப்பான தோற்றம், நல்ல நிறம். இப்போதும் இளமையான உடற்கட்டு, பெரிய கண்கள்! பளிச்சென்ற உடைகள் ஐம்பது கடந்தும் ஆண்களை தன்பக்கம் சுண்டி இழுக்கும் வசீகரமான தோற்றம்!
அபாரமான ஆங்கிலம். எம்.காம்., எம்.பில்., சி.ஏ. என ஏராளமான பட்டங்களை தன் பின்னால் ஒட்ட வைத்த சாதூர்யம்!
லட்சங்களில் சம்பளம்
அழகாக காரை ஓட்டும் லாவகம்!
மேடம் உள்ளே நுழைந்தாலே, அந்த வங்கியே கிடுகிடுத்துப் போகும்! வேலை நேரத்தில் யாரும் வெட்டிப் பொழுதைப் போக்கி தப்பிக்கவே முடியாது! அசாத்திய தைரியம்!
'அது பார்க்கத்தான் பொம்பிளை! ஆனா பத்து ஆம்பிளை!'
இது பொதுவான விமர்சனம்!
ஜொள்ளுவிடும் கூட்டம் - எதிரிகள் கூட்டம் - நல்ல நண்பர்கள் - மரியாதை காட்டும் ஊழியர்கள் என சகல ஏரியாக்களிலும் வலம் வரும் பெண்மணி!
அஷ்டாவதானி!
இசை, நாட்டியம், டெக்னாலஜி, விளையாட்டு என சகலத்திலும் புகுந்து புறப்பட்டு வந்தவள்!
பத்திரிகைகளுக்கு எழுதும் பெண்மணி. ஒரு நல்ல கதாசிரியை!
நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் புலமை!
கச்சேரிகளில் பங்கெடுக்கும் ஆற்றல்!
என்ன பாக்கி?
'சரி... குடும்பம்?'
இனி கதைக்கு வருவோம்!
வங்கிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அழைப்பு வந்தது ஜோனல் ஆபிசிலிருந்து!
''உடனே புறப்பட்டு வாங்க பைரவி!"
காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்! வந்து சேர்ந்தாள்.
ஜோனல் மானேஜர் தாமஸை வணங்கி, எதிரே உட்கார,
ஸாரி உங்களுக்கு மும்பைக்கு மாற்றல் ஆகியிருக்கு!
ஸார்! நான் ஹைதராபாத்திலிருந்து வந்து ரெண்டு வருஷம் கூட ஆகலை. மறுபடியும் தொந்தரவா?
என்ன செய்ய! கொஞ்சம் ஹெட் ஆபீஸ்ல வேலைகள் நிறைய இருக்கு. பிரச்சனைகளும் உண்டு. புத்திசாலி போக வேண்டிய நேரம் வந்தாச்சு!
மறுத்தா?
''இல்ல பைரவி! போயே ஆகணும்! பேங்க் உத்யோகம் பற்றி உங்களுக்குத் தெரியாதது இல்லை! நானும் உங்க வயசுக்காரன் தான்! பந்தாடறாங்க! என்ன செய்ய! அடுத்த வாரம் நீங்க ஜாயின் பண்ணணும்! அந்தேரில, குவார்ட்டர்ஸ்! மும்பைல ஏற்கனவே நீங்க வேலை பார்த்திருக்கீங்க தெரிஞ்சபெண். இந்தி, மராட்டி விரல் நுனில! என்ன கஷ்டம்!"
தூக்கி வச்சே, கவுத்துடுங்க!
இல்லை மேடம்!
சார்! ஆறு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு எனக்கு!
அப்படி சொன்னா டோன் இறங்குது! ஆறு வருஷம் இருக்கேன்னு நீட்டிச் சொல்லுங்க! பெரிசா இருக்கும்! இதை மறுக்கணும்னா நீங்க வி.ஆர்.எஸ். வாங்கணும்!
எதுக்கு! அறுபது வயசு வரைக்கும் வேலைக்குப் போவேன் நான்! முன்னாலேயே ஏன் வெளிய வரணும்?
''உங்க சுபாவம் தெரியுமே எனக்கு! வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சுருங்க! மும்பைல கல்யாணராமன் உங்க நெருங்கிய நண்பர் இருக்காரே!"
பைரவி முகம் படக்கென மாறியது!
''உதவி செய்வாரேன்னு சொன்னேன் மேடம்!"
எழுந்து கொண்டாள்.
ஆர்டரை பேக்ஸ் பண்ணுங்க! நான் வர்றேன்!
வெளியே வந்தாள்! காருக்குள் நுழைந்து இயக்க, செல்போன் அழைத்தது! எடுத்தாள்.
''யாரு?"
பைரவி தானே?
யா...! யார் பேசறது?
கல்யாணம் பைரவி! என் குரல் மறந்து போச்சா?
பைரவி எதுவும் பேசவில்லை
பைரவி! கேன் யூ ஹியர்மீ? கல்யாணம் பேசறேன் பைரவி!
ம்! சொல்லுங்க!
எதுக்கு இந்த வாங்க போங்க? நான் உன்னோட கல்யாணம் பைரவி!
என்ன வேணும் இப்ப!
நீமும்பைக்கு மாற்றலாகி வரப்போறதா தகவல் இப்பத்தான் வந்தது பைரவி!
''அதுக்குள்ள யார் சொன்னது?"
இப்ப அதுவா முக்கியம்! தகவல் வந்த முதல் பரபரப்பா இருக்கு எம்மனசு! எந்திர கதியான வாழ்க்கைல ஒரு ஜீவன் வந்த மாதிரி இருக்கும்மா! அடுத்த வாரம் ஜாயின் பண்றியா?
அவள் பேசவில்லை!
கம்மான் பைரவி! பேசேன்!
ப்ளீஸ்! நான் இப்ப யார்கிட்டேயும் பேசற மூட்ல இல்லை! போனை வைங்க!
கட் செய்து விட்டு காரை ஓட்டத் தொடங்கினாள்.
திரும்பவும் அதே போன்.
எரிச்சலுடன் ஆஃப் செய்தாள். வண்டி வேகம் பிடித்தது!
கிளைக்கு வந்ததும், சக அதிகாரிகள் வந்து விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆளுக்கொரு அபிப்ராயம்.
பதவி, சம்பள உயர்வுடன் கூடிய மாற்றல்தான். கணிசமாக உயரும், வசதிகள் கூடும்! எல்லாம் உண்டு!
விடாதீங்க மேம்! இப்பக்கூட இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கு வரும். உங்க திறமைக்குக் கிடைத்த சன்மானம். பயன்படுத்திக்குங்க!
எதுக்கு மேடம்? ஆறு வருஷ சர்வீஸ்! குடும்பம் இங்கே! நீங்க தனியாப் போய் என்ன செய்யப் போறீங்க! முன்ன இருந்த தெம்பு, உடம்புல், மனசுல இருக்காது! போகாதீங்க! வி.ஆர்.எஸ். குடுத்துட்டு வீட்ல போய் உட்காருங்க!
மறைவில் - அதுவும் காதில் விழும்படியாக,
அப்பாடி! அல்லிராணி போய்த் தொலைஞ்சா, நிம்மதி! ஆட்டி வைக்கறா! தப்பிச்சோம். இவளை சென்னை பக்கமே வரவிடக்கூடாது! மராட்டில் போட்டு நசுக்கட்டும்!
இவளுக்கு எல்லா பாஷையும் தெரியும். தாவூத் இப்ராஹிம் கூட இவளைக் கண்டா, நடுங்குவான்!
மாப்ளை. மும்பைல இப்ப யாரு சீஃப் தெரியுமா பேங்க்ல? கல்யாண ராமன்!
அது யாரு!
பழைய மேட்டர்டா மச்சி! அந்த ஆள்தான் கொக்கி போட்டு அம்மாவை இழுத்திருக்கான். பால்யம் திரும்புது! கூட்டிட்டுப் போய் கூத்தடிப்பான். இது இப்பக்கூட ஜீரால் ஊறின ரசகுல்லா மாதிரித்தானே இருக்கு?
அவனுக்கு வயசு அம்பத்தி எட்டு?
இதெல்லாம் ஒரு வயசா? காயகல்பம் சாப்பிட்டு தேத்தியிருப்பான். அய்யோ! என்னல்லாம் நடக்குமோ?
''நீ ஏண்டா டான்ஸ் ஆடற?"
மும்பைல போய்ப் பாக்கணும்டா!
த்தூ! வாயை மூடு!
இப்படி பல வித விமர்சனங்களைக் கடந்து தன் அறைக்குள் போய் உட்கார்ந்தாள். கண்ட நாய்கள் பேசுவதை பைரவி எப்போதும் பொருட்படுத்த மாட்டாள்.
ஒரு பக்கம் குடும்பம்!
மறுபக்கம் பிரதானமான பதவியில் இருக்கும் வங்கிப் பணி!
மூன்றாவது பக்கம் கல்யாண ராமனின் குரல்
'அவன் கொக்கி போட்டு இழுத்திருப்பான் - பால்யம் திரும்புது!'
படக்கென உச்சந்தலைக்கு ரத்தம் ஏறியது! மேஜையில் இருந்த லேண்ட்லைன் அடிக்க, எடுத்தாள்.
இன்னொரு உயர் அதிகாரி!
பைரவி! உங்க செல்போன் ஏன் ஸ்வீட்ச் ஆஃப்ல இருக்கு!
ஸாரி ஸார்! சார்ஜ் போயிடுச்சு!
"முக்கியமான நேரத்துல இதென்ன விளக்கம்!