Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthuputhu Anubavangal Part-2
Puthuputhu Anubavangal Part-2
Puthuputhu Anubavangal Part-2
Ebook557 pages4 hours

Puthuputhu Anubavangal Part-2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803125
Puthuputhu Anubavangal Part-2

Read more from Sivasankari

Related to Puthuputhu Anubavangal Part-2

Related ebooks

Related categories

Reviews for Puthuputhu Anubavangal Part-2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthuputhu Anubavangal Part-2 - Sivasankari

    http://www.pustaka.co.in

    புதுப்புது அனுபவங்கள்

    தொகுதி-2

    (மலேசியா, ஹாங்காங், சீனா, பாங்காக், அரபு நாடுகள் பயணக் கதைகள்)

    Puthuputhu Anubavangal Part-2

    (Malayasia, Hong Kong, China, Bangkok, Arab naadukal payana kaadhaikal)

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.மனம் கவர்ந்த மலேசியா

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    2.ஹாங்காங்-சீனா-பாங்காக்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    3.ஆஹா, அரபு நாடுகள்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    1978ம் ஆண்டு என் எழுத்துலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வருடமாக அமைந்துபோனது நிஜம்தான்.

    என் நேரமும், நல்ல காலமும் நன்றாய்க் கனிந்து கூடி இருக்கவேண்டும். இல்லாவிட்டால், எத்தனையோ பிரபல எழுத்தாளர்கள் இருக்கும்போது என்னைத் தேடிவந்து தொடர்கதை எழுதித்தர மலேசியாவின் முன்னணிப் பத்திரிகையான 'வானம்பாடி' கேட்பானேன்? அந்தக் கதை நாலு வாரங்கள் பிரசுரமாகுமுன் 'நம்முடைய முதலாவது ஆண்டு விழாவை புதுமையாய், அமர்க்களமாய் நடத்த வேண்டும். இதற்கு சிவசங்கரியையே நமது சிறப்பு விருந்தினராய் அழைக்கலாம்' என்று 'வானம்பாடி’யின் பிரசுரகர்த்தா திரு. அப்துல் காதர் தீர்மானிப்பானேன்? தீர்மானித்ததை உடனே சாதிப்பானேன்? ஆசைப்பட்டதெல்லாம் சங்கிலித் தொடர்போல் திட்டமிட்ட விதத்தில் நடந்தேறுவானேன்?

    எல்லாம் நல்லவேளைதான்; தெய்வத்தின் கருணைதான்; எனக்குச் சந்தேகமே இல்லை.

    வாழ்நாள் பூராவும் நினைத்து நினைத்து சந்தோஷிக்கும் தினுசில் இந்த மலேசியா பயணம் அமைந்துபோனதற்காக, முதலில் நான் வணங்கும் கடவுளுக்கு கணக்கில்லாத நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.

    என்னை மட்டுமல்லாது, என் கணவர் திரு. சந்திர சேகரனையும் மிகுந்த அன்புடன் தங்கள் விருந்தினராய் அழைத்து, மலேசியாவில் இருந்த பதினைந்து நாள்களிலும் அவருக்கு சிரத்தையுடன் கவனிப்புகளை 'வானம்பாடி' குழுவினர் அளித்ததை எப்போது நினைத்தாலும் என் மனசு நெகிழ்ந்து போகிறது.

    திரு. அப்துல் காதருக்கும், திரு. குமணனுக்கும், திரு. துரைராஜுக்கும், 'வானம்பாடி'யைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நாங்கள் எதற்கென்று நன்றி சொல்வது!

    எங்களை அழைத்ததற்கா? பாங்குற கவனித்ததற்கா? பண்போடு கெளரவித்ததற்கா? மிகுந்த கரிசனத்துடன் பழகியதற்கா?

    எதைச் சொல்ல! எதை விட!

    எங்களது மலேசிய அநுபவங்கள் புத்தகமாய் வெளியாகும் இந்த சந்தர்ப்பத்தில் என் கணவர் சார்பிலும், என் சார்பிலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அடுத்து, பயணத்தைத் தொடங்கும் முன்னரே 'திரும்பி வந்ததும் 'கல்கி'யில் உங்கள் பயணக்கதையை எதிர்பார்க்கலாமா?' என்று அலாதி உற்சாகத்துடன் பேசி, பின்னர் சிறந்த முறையில் 'கல்கி'யில் பதினைந்து வாரங்களுக்கு 'மனம் கவர்ந்த மலேசியா'வை வெளியிட்ட 'கல்கி' ஆசிரியர் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

    வணக்கம்.

    அன்புடன்,

    சிவசங்கரி

    30.07.1979

    1.மனம் கவர்ந்த மலேசியா

    1978

    1

    சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் மலேசியாவில் பிரபல வார ஏடாகத் திகழும் 'வானம்பாடி'யின் விசேஷ நிருபர் சுந்தர் என்னைச் சந்தித்து அவர்களுக்கு ஒரு தொடர்கதை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டபோதோ, வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களின் ஆர்வத்துக்குச் சான்றாகத் திகழும் இப்பத்திரிகைக்குக் கண்டிப்பாய் என்னால் ஆன உதவியைச் செய்யவேண்டும் என்ற உற்சாகத்தோடு நான் தொடர்கதை தர ஒப்புக் கொண்டபோதோ, பிற்பாடு அந்தக் கதை 'வானம்பாடி'யில் தொடராக வரத் தொடங்கியபோதோ, இந்தக் கதை வெகு சீக்கிரத்திலேயே என்னையும், என் கணவர் சந்திரசேகரனையும் மலேசியாவுக்கு இழுக்கும் காந்தமாக இருக்கப்போகிறது என்று நிஜமாக நான் எண்ணவில்லை.

    செப்டம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி எங்களுக்கு ரொம்ப ராசியான நாளாகப் பிறந்தது.

    காலைத் தபால்களைப் பிரித்துப் படித்தவள், அந்தக் கடிதத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அசந்துபோய் உட்கார்ந்து விட்டேன்.

    வானம்பாடியின் முதலாவது ஆண்டு விழா வருகிறது; இதற்கு எங்கள் சிறப்பு விருந்தினராக உங்களையும் உங்கள் கணவரையும் அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்; அவசியம் எங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும்... என்ற வாசகங்களோடு கூடிய கடிதம் என் கையில் கொட்டுக் கொட்டென்று விழித்தது.

    மலேசியாவுக்கா? நானா? சிறப்பு விருந்தினராகவா? அதற்கு எனக்குத் தகுதி உண்டா?

    முதலில் தோன்றிய சந்தேகங்கள் ஒரே நிமிடத்தில் மறைந்து மனதை சந்தோஷம் நிறைத்தது.

    வெளிநாட்டுப் பயணம் என்றாலே குஷிதான். அதுவும் ஒரு பத்திரிகையின் சிறப்பு விருந்தினராக என்றால், கொண்டாட்டத்துக்கு கேட்க வேணுமா?

    கடிதத்தை என் கணவரிடம் நீட்டினேன்.

    ஸோ, மலேசியா போகப்போகிறாயா? ஜமாய்! என்றவரிடம் பதில் கேள்வி போட்டேன். போகப்போகிறாயா என்றால் என்ன அர்த்தம்? போகப்போகிறோமா என்று அல்லவா கேட்க வேண்டும்?

    என்னால் வர முடியுமா என்பது சந்தேகம். தீபாவளி சமயம்; கம்பெனியில் போனஸ் அது இது என்று வேலை இருக்கும்... நீ போய்விட்டு வா… தான் வராவிட்டாலும் என் பயணத்துக்கு அவர் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

    1970-ல் தனியாக அமெரிக்கா போய்வந்த நான், 1976-ல் மீண்டும் என் கணவருடன் அங்கே போக நேர்ந்த போது, முதல் பயணத்தைவிட இரண்டாம் பயணம் இனிப்பாய் இனித்ததை உணர்ந்து ருசி கண்ட பூனையாகி விட்டிருந்ததால், இப்போதும் அவர் கூட வந்தால் தேவலை என்று நினைத்ததில் என்ன ஆச்சரியம்?

    என் தவிப்பு மலேசியாவில் பறக்கும் 'வானம்பாடி’க்கு எப்படித்தான் புரிந்ததோ... பத்தே நாள்களில் மீண்டும் ஒரு கடிதம். என்னை மட்டுமல்லாமல், என் கணவரையும் சேர்த்தே அழைக்கும் அழைப்பைத் தாங்கிய கடிதம்.

    தீபாவளி ஆனதும், ஆகாததுமாய் எங்களால் கிளம்ப இயலாது; ஒரு வாரம் தள்ளிப் புறப்படலாமா?

    எங்கள் நிலையை 'வானம்பாடி' நிர்வாகத்தினர் புரிந்து கொண்டு, விழாவைப் பத்து நாள்கள் கழித்து வைத்துக் கொண்டுவிட்டதாகவும், நவம்பர் ஒன்பதாம் தேதி எங்கள் பயண டிக்கெட்டுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் புக் செய்துவிட்டதாகவும் தந்தி அடித்தார்கள்.

    மலேசியாவில் ஒரு வாரம்; பிறகு சிங்கப்பூருக்குச் சென்று அங்கு என் அத்தை மகன் பாலுவின் வீட்டில் ஒரு வாரம் இருக்கலாம் என்று தீர்மானம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு எழுதினோம். நாலே நாளில் பதில் வந்து விட்டது. ஒரு வாரம் என்ன... அவசரப்படாமல் இருந்து விட்டுப் போகலாம், வாருங்கள்! என்று.

    எண்ணி இருபது நாள்கள். இதன் நடுவில் தீபாவளி அமர்க்களம் வேறு.

    வெளிநாடுகளுக்கு ஏற்கனவே நாங்கள் போய்ப் பழக்கப்பட்டவர்கள்தாம் என்றாலும், இந்த மலேசியப் பயணம் ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும் என்பது எனக்குப் புரிந்தது.

    ஒரு நாட்டுக்கு உல்லாசப் பயணமாகப் போவது எப்படி? ஒரு பத்திரிகையின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புமிக்க எழுத்தாளராகச் செல்வது எப்படி? முன்னதில் பொறுப்பே கிடையாது. நினைத்தபோது ஊர் சுற்றலாம். சாப்பிடலாம், தூங்கலாம்-உருப்படியாய் எதுவும் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் இரண்டாவது அப்படியா?

    ஏதோ நாம் பெரிதாகச் சாதித்துவிட்டதாக நம்பிக் கொண்டு ஒரு பத்திரிகை அழைத்திருப்பதனால், அவர்கள் எதிர்பார்ப்புகளுக்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கூட்டங்களில் பேச வேண்டும். கருத்து பரிமாறல்களைச் செய்யும்போது அந்தப் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும். இப்படி எத்தனை இல்லை?

    தனியாய் உட்கார்ந்து யோசனை பண்ணியதில், நான் கொஞ்சம் பயந்துபோனேன்.

    மலேசியாவில் வாழும் தமிழர்களின் தமிழ் ஆர்வம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களில் எனக்குப் பேசத் தெரியுமா? இலக்கியப்பசி கொண்ட அந்நாட்டுத் தமிழ்மக்களின் ரசனைக்கு ஏற்ப ஈடுகொடுக்கத் தெரியுமா? திருக்குறளின் சிறப்பை எடுத்துரைக்கத் தெரியுமா? தேவாரத்தைப்பற்றி அரைமணி சொற்பொழிவாற்றத் தெரியுமா? கம்பன் காவ்ய சாரத்திலிருந்து சில செய்யுள்களைக் கூறி அவற்றை விளக்கத் தெரியுமா? ஆமாம், எனக்கு என்ன தெரியும் என்ற தைரியத்தில் சிறப்பு விருந்தினராக அங்கு செல்ல ஒப்புக்கொண்டேன்?

    புறப்படுவதற்குப்பத்து நாள்கள் கூட இல்லாத நேரத்தில் ஞானோதயம் உண்டாக, அலமாரியில் இருந்த புத்தகங்களூடே புகுந்து புறப்பட்டேன்.

    முதல்நாள் பாரதியின் கவிதைகள்; இரண்டாம் நாள் திருப்பாவை, திருவெம்பாவை. மூன்றாம் நாள் தடிமனான திருக்குறள் புத்தகத்தோடு உட்கார்ந்தபோது, '1330 பாடல்களையும் ஒரு நாளில் கரைத்துக் குடித்துவிட முடியுமா? பத்து நாள்களில் தமிழ் அறிவை ஏகமாய் வளர்த்துக்கொள்ள முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?' என்ற கேள்வி என்னுள் பிறந்தது.

    சிந்தித்தேன்.

    வருடக்கணக்காய்ப் படித்து, அனுபவித்து, நம்மையே அதில் கரைத்துக்கொள்ள வேண்டியவற்றை, விளையாட்டாக எண்ணுவது தவறு என்றே தோன்றியது.

    போய் இறங்கினதும் 'வானம்பாடி' ஆசிரியரிடம் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டால் என்ன? நான் பள்ளியிலும், கல்லூரியிலும் சம்ஸ்கிருதத்தைப் பாடமாகப் பயின்றவள். அதனால் இலக்கணத் தமிழை முறையாய்ப் படிக்காதவள். என் உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்கிறேன்; வாசகர்கள் அதை வரவேற்கிறார்கள். என் எழுத்துக்களைப் பற்றியோ, அல்லது இன்றைய எழுத்துலகத்தைப் பற்றியோ கேளுங்கள், எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன். மற்றபடி என்னிடம் ஏதும் எதிர்பார்க்காதீர்கள்-என்று வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டால்?

    இந்த முடிவுக்கு வந்ததும் எனக்கு அப்பாடி என்று இருந்தது. நான் நானாக இருக்கலாம் என்று நிம்மதி.

    நவம்பர் ஒன்பது அன்று பிற்பகல் சரியாய் இரண்டு மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினோம்.

    குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சவாரி ஒரு தற்காலிக சொர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஷாம்பெயின் முதல் பியர் வரை எல்லாவற்றிலும் கால் காசு செலவு பண்ணாமல் முங்கி எழலாம். முகம் சுளிக்காமல் கேட்கும் பானத்தை ஓடிஓடித் தருகிறார்கள். இதனால் காணாததைக் கண்ட மாதிரி சிலர் நடந்து கொண்டு தவிப்பதும் இருக்கத்தான் செய்கிறது. ஓர் ஆண், வயது ஐம்பது இருக்கும்... சாப்பாடு வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஏகமாய்க் குடித்து விட்டதில், நிதானம் போய்விட்டது. பக்கத்து சீட்டுப் பயணிகளிடம் உரக்கப் பேசியும் விமானப் பணிப் பெண்களிடம் 'இன்னொரு ட்ரிங்க் கொண்டுவா' என்று கத்தியும், அவள் கொண்டுவராவிட்டால் சண்டை போடவும் முனைந்ததைப் பார்ப்பது எங்களுக்கு அந்த நிமிடத்தில் தமாஷாக இருந்தாலும், அவர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேதனையையும் தரத் தவறவில்லை. அந்த ஆளை அடக்கக் காப்டனின் வரவு தேவைப்பட்டதென்றால் புரிந்துகொள்ளுங்களேன்.

    சிங்கப்பூரில் இறங்கி முப்பது நிமிடங்களுக்குள் கோலாலம்பூர் செல்லும் விமானத்தை நாங்கள் பிடிக்க வேண்டி இருந்ததால். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பராக்குப் பார்க்காமல் காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு தொடர்பு விமானத்தைப் பிடிக்க ஓடினோம். இந்த ஓட்டத்திலும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் காணப்பட்ட பஸ்கள் என் வாயைப் பிளக்கவைத்தது என்னவோ உண்மைதான். விமானத்திலிருந்து கட்டடத்துக்கு அழைத்துச் செல்லும் நியோபிளான் ராட்சஸ பஸ்களைத்தான் சொல்கிறேன். பதினைந்தடியோ அதற்கு மேலோ அகலம். ஒரு ஹால் மாதிரி உள்ளே பல வரிசைகளில் பயணிகள் நின்றுகொண்டபோது, ஒரு நகரும் கூடத்தில் பயணம் செய்கின்ற அனுபவமே எனக்குத் தோன்றியது.

    என் பக்கத்தில் ஒரு சீனாக்காரி நின்றிருந்தாள். இருபது வயதிருந்தால் அதிகம். அவள் தலை அலங்காரம் ரொம்ப வினோதமாக இருந்தது. முன் மண்டையில் கிராப்பு; நடு மண்டையில் உச்சிக்குடுமி போல சில கற்றை முடிகள்; பின்மண்டையில் மறுபடியும் கிராப்பு. உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? அவளையும் அவளுக்குப் பொருந்தாத அலங்காரத்தையும் பார்த்த உடனே, எங்களுக்குச் சிரிப்பு அடக்கமாட்டாமல் எழுந்துவிட்டது. முகத்தை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டோம். எங்களைப் போலவே அவளின் தோற்றம் வேறு சிலருக்கும் சிரிப்பை உண்டாக்கியதை உணர்ந்த போது, என்னால் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

    சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணமாகும் நேரம் உத்தேசமாய் அரை மணி. ஏறி உட்கார்ந்து ஒரு பானம் குடித்து, ஸாண்ட்விச் தின்று வாயைத் துடைப்பதற்குள், கோலாலம்பூர் வந்துவிட்டது.

    விமானத்தைவிட்டு இறங்கும்போது எனக்குள் லேசாகப் படபடப்பு.

    விமானக் கூடத்துக்கு யார் வந்திருப்பார்? 'வானம் பாடி' எங்களுக்கு எந்த மாதிரி வரவேற்பு, ஏற்பாடுகளைக் கொடுக்கப்போகிறது? யாரும் வராவிட்டால், டாக்ஸியில் ஹோட்டலுக்குப் போவதா? இல்லை, 'வானம்பாடி' அலுவலகத்துக்குச் செல்வதா? மணியோ இரவு ஒன்பதே முக்கால்-இந்த நேரத்தில் எங்கு தேடி அலைவது?

    இமிக்ரேஷன் கஸ்டம்ஸ் முடிந்தது.

    சுந்தர் 'வானம்பாடி' ஆசிரியக் குழுவினரின் புகைப் படங்களை எங்களுக்குக் காட்டியிருந்ததால், வெளியில் நின்ற மனிதர்களில் தெரிந்த முகங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தபடி நடந்தோம்.

    அடுத்த பதினைந்து நிமிடங்களில் நடந்தவற்றைத் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன்... ஆனால், வார்த்தைகள் என்னை ஏமாற்றி வேடிக்கை பார்க்கின்றன!

    ஓடிவந்து பெட்டிகளைச் சிலர் வாங்கிக்கெண்டனர். 'வணக்கம், வாருங்கள்... வாருங்கள்' என்று சுற்றிலும். குரல்கள். ஜில்லென்று கழுத்தில் விழுந்த ரோஜா மாலைகள்... ஒன்று, இரண்டு என்று நிமிடத்தில் கழுத்திலிருந்து நெற்றி விளிம்பு வரை மறைத்த மாலைகள்.

    நான்தான் ஆதி குமணன்-ஆசிரியர் 'வானம்பாடி'; இவர், அப்துல் காதர்-'வானம்பாடி' பிரசுரகர்த்தர். இவர் 'வானம்பாடி' உதவி ஆசிரியர்-ராஜகுமாரன்; அக்னி, பாலு, ஃப்ரான்ஸிஸ்... இவர்கள் எல்லாரும் 'வானம்பாடி'யைச் சேர்ந்தவர்கள். இவர் துரைராஜ், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்; 'உதயம்' பத்திரிகை ஆசிரியரும்கூட... இவர்...

    புகைப்படக்காரர்கள் ஒருகணம் சோம்பி நிற்க மறுத்தார்கள். 'பளிச்பளிச்"சென்ற பிளாஷ் வெளிச்சங்கள்.

    இரவு பத்து மணிக்குப் பெருங்கூட்டமாய் ஆண்கள் மட்டுமல்லாது, பெண்களும், குழந்தைகளும் சேர்ந்து அளித்த வரவேற்பு நெஞ்சைப் பூரிக்கச் செய்வதாக இருந்தது.

    வரவேற்பு முடிந்து ஹோட்டலுக்குப் புறப்பட்டோம்.

    'அபாட் சென்சுரி' என்ற நவீன ஹோட்டலில் எங்களை இறக்கியிருந்தார்கள். நம் ஊர் 'சோழா' தினுசில் இருந்த ஹோட்டல், ரொம்பச் சௌகரியமாய் இருந்தது.

    அறைக்கு வந்த பிறகு யார்யார் எவர் என்று இன்னொரு முறை அறிமுகம் நடந்தது. இப்போது நன்றாகப் பார்க்கும் போது 'வானம்பாடி' குழுவினர் அனைவருமே இளைஞர்களாக இருப்பது புரிந்தது. குமணனுக்கு இருபத்தியெட்டு வயது; பப்ளிஷர் அப்துல் காதருக்கு முப்பத்திரெண்டு வயது; மற்றவர்களும் அதற்குள்தான்.

    களைப்பாக இருப்பீர்கள், ஆனாலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலுமா? நாளை 'வானம்பாடி'யில் வெளியிடத் தேவைப்படுகிறது…

    குமணன், தான் ஒரு பொறுப்பான ஆசிரியர் என்பதை நிரூபித்துவிட்டார்.

    பேட்டி முடிந்தது. ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலை ஒன்பது மணிக்குச் சந்திக்கிறோம்... என்று அனைவரும் நடு ஜாமத்தைத் தாண்டின பிறகு புறப்பட்டுப் போனார்கள்.

    பயணம் தந்த களைப்புக்கு ஏ.சி. அறையும் மெத்தென்ற படுக்கையும் இதமாக இருக்க, நிம்மதியாய் உறங்கி எழுந்தோம்.

    மறுநாள் காலை துரைராஜும், குமணனும் சொன்ன படி வந்துசேர்ந்தார்கள்.

    இரவு முழுவதும் விடியவிடிய அச்சகத்தில் அமர்ந்து, அன்றைய 'வானம்பாடி'யைத் தயாராக்கி உடன் எடுத்து வந்திருந்தார் குமணன்.

    முதல் பக்கத்தில் எங்கள் புகைப்படம். கழுத்து நிறைய மாலைகளும், வாய் நிறைய சிரிப்புமாய்.

    எங்கள் கல்யாண நாள் அன்று எடுத்த படம் மாதிரி இருக்கிறது! அப்போது சின்னவர்கள், இப்போது வயசானவர்கள். அதுதான் வித்தியாசம்! என்றேன் சிரித்துக் கொண்டே.

    உள்ளே முதல்நாள் எடுத்த பேட்டியோடு, 'சிவசங்கரி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள்' என்று கட்டம் கட்டிப் பத்து நாள் நிகழ்ச்சிகளை வெளியிட்டிருந்தார்கள்.

    ஒரு மந்திரிக்கு இருப்பது போல் ஒவ்வொரு நாளும் பல கூட்டங்கள், நிகழ்ச்சிகள்.

    கீழே ரெஸ்டாரென்டுக்குப் போய்ச் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.

    இன்றைக்கு உங்களுக்கு அதிக நிகழ்ச்சிகளோ, அலைச்சலோ இல்லை. பகல் இரண்டு மணிக்கு டி.வி., ரேடியோ, ஒலிப்பதிவுகள் உள்ளன. அவற்றை முடித்துவிட்டு நாலு மணிக்குத் திரும்பிவிடலாம்... குமணன் சொன்னார்.

    தும்புவான் மிங்கு என்பது மலேசியாவின் பிரபலமான தமிழ் டி.வி நிகழ்ச்சிகளில் ஒன்று. சனி மாலை ஒளி பரப்பாகும் அதில் முக்கிய நபர்களின் பேட்டிகள் வெளியாகுமாம். அன்று வெள்ளிக்கிழமை ஒளிப்பதிவு செய்வதை மறுநாளே ஒளிபரப்ப இத்தனை அவசரம்.

    ஒன்றரை மணி சுமாருக்கு 'வானம்பாடி' அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கே டிபன் காரியரில் சாப்பாடும், வாழை இலைகளும் எங்களுக்காகக் காத்திருந்தன.

    கோவில் குருக்கள் ஒருவர் வீட்டிலிருந்து எங்களுக்குச் சாப்பாடு கொண்டுவர ஏற்பாடு பண்ணியிருக்கிறார்களாம்.

    காரியரைப் பிரித்தேன். சாதம், சாம்பார், வாழைக்காய் கறி, ரசம், தயிர்.

    எனக்கு என்றைக்குமே எடுப்புச் சாப்பாடு பிடிக்காது; அதுவும் ஆறியிருந்தால் கட்டோடு பிடிக்காது. என் கணவருக்கு சாதம், ரசம் தினம் அவசியம் என்பதில்லை. அதனால், ஏன் குமணன், இப்படியொரு ஏற்பாடு? என்றேன்.

    அவர் தயங்கினார். பிற்பாடு புரிந்து கொண்டேன்; நாங்கள் பிராமணர்கள் என்பதால் மடி, ஆசாரம் பார்க்கலாமோ என்று பயந்து இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று.

    When you are in Rome live Like Romans (ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு) என்னும் பழமொழி தெரியும், இல்லையா? அதன்படி நாங்களும் மலேசியாவை, அதன் இயல்பான சூழ்நிலையில் பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம். ஆங்காங்கு கிடைக்கும் உணவை, அது சாதமோ, தோசையோ, ரொட்டி வெண்ணையோ கவலையில்லை, சாப்பிடுவதில்தான் எங்களுக்கு விருப்பம்!" என்றேன்.

    அப்படியானால் அப்துல் காதர் வீட்டுக்கு சாப்பிட வருவீர்களா?

    வந்தால் என்ன! ஊரில் எங்கள் வீட்டுக்கு எல்லாரும் வந்து உணவருந்துவார்கள். நாங்களும் எங்கும் போவோம்-இதில் என்ன தவறு?

    நாங்கள் இப்படி இருப்போம் என்று எதிர்பார்க்காத குமணனுக்கு, என் பேச்சு பெரும் அவஸ்தை ஒன்றை விலக்கியது என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

    2

    இன்றைக்கு மலேசிய வானில் அமர்க்களமாய்ப் பறந்து, கீதம் இசைக்கும் 'வானம்பாடி'யின் ஆண்டுவிழா, கோலாலம்பூர் நகர மண்டபத்தில் எழுத்தாளர்களும், நண்பர்களும் புடைசூழ வந்து வாழ்த்துக் கூறச் சிறப்பாய் நடந்தேறியது.

    அன்று காலை குமணனையும் மற்றவர்களையும் பார்த்தபோது, என்னைப் பற்றியும், நான் இலக்கணத்தமிழை நன்கு அறியாததைப் பற்றியும் சொன்னேன்.

    இரண்டு நாள்களாக உங்களோடு பேசிப் பழகியவன் என்ற முறையில், நேற்று டி.விக்கும் ரேடியோவுக்கும் நீங்கள் பேட்டி கொடுத்தபோது உடன் இருந்து கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் இயல்பான பேச்சு, கருத்துக்கள் எங்களுக்குப் பிடிக்கிறது. மற்றவர்களிலிருந்து நீங்கள் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்! என்றார் குமணன்.

    நகர மண்டபத்தில், ஏராளமாகப் படித்தவர்கள், எழுத்தாளர்கள் நடுவில் நடக்க இருக்கிற விழாவில் நான் ஒருமணிநேரம் பேசவேண்டும் என்கிறீர்கள்... ஆங்கிலம் கலந்து இயல்பாகப் பேசினால் பரவாயில்லையா? இங்குள்ளவர்கள் அதை ஆட்சேபிக்க மாட்டார்களா?

    பிறரை விடுங்கள். உங்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்த எங்களுக்கு நீங்கள் இயல்பாக இருப்பதுதான் பிடிக்கிறது. பிறகு எதற்காகக் கவலைப்பட வேண்டும்?

    குமணன் இப்படிச் சொன்னதில் எனக்கு ரொம்ப நிம்மதியாகிவிட்டது. முக்கிய விருந்தினராய் விழாவில் பங்கேற்று என் எழுத்துலக அனுபவங்களை விவரித்தபோது, எனக்கு எந்தவிதத் தயக்கமும் இருக்கவில்லை.

    விழாவில் மந்திரி திரு. பத்மநாபன் கலந்துகொண்டு உரையாற்றினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

    சிங்கக்குட்டிபோல் மேடையில் முழங்கிய குமணன் 'வானம்பாடி'யின் பின்னணிக் கதையைச் சொன்னபோது அவரே உணர்ச்சிவசப்பட்டுப்போனார்.

    பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வேலை பார்த்த நாற்பத்தைந்து ஊழியர்கள், மனக்கசப்பினால் வெளியேற்றப்பட்டபோது அவர்களுக்கு முழுப் பொறுப்பாகத்தான் முன்நின்றதையும், தன்னோடு கொண்ட நட்பின் காரணமாய்த் தன் பிளாஸ்டிக் தொழிற்சாலையை அடகு வைத்து 'வானம்பாடி' வார ஏட்டைத் துவக்க அப்துல் காதர் முன்வந்ததையும் குமணன் கூறி, நாங்கள் ஒவ்வொருவரும் ஆபீஸ் பையனாக, அச்சுக்கோப்பவராக, எழுதுபவராக, தயாரான 'வானம்பாடி'யைக் கடைக்குக் கொண்டு செல்லும் விற்பனையாளராக இருந்திருக்கிறோம். பல சமயங்கள் நான் கடைகளுக்குப் பத்திரிகை போடப் போகும்போது கடை உரிமையாளர்கள் நான்தான் ஆசிரியர் என்பதை அறியாமல், தம்பி! இந்த வார இதழில் கதைகள் அருமை, ஆனால் கட்டுரைகள் நன்றாக இல்லை. ஆசிரியரிடம் சொல் என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஆகட்டும் சொல்கிறேன்' என்று கூறி விட்டு நான் அவர்கள் சொன்ன கருத்துக்களை சக ஆசிரியக் குழுவினருடன் விவாதித்ததுண்டு. துவக்கத்தில் ஐயாயிரம் பிரதிகள் விற்பனை ஆன 'வானம்பாடி' ஒரே ஆண்டில் இன்று முப்பத்தெட்டாயிரத்தைத் தொட்டு, மலேசியாவின் முன்னணி இதழாக இருக்கிறதென்றால், அதற்கு எங்கள் குழுவின் கூட்டு முயற்சி உழைப்புத்தான் காரணம்! எனக் குமணன் ஆவேசத்தோடு கூறியபோது கைத்தட்டல்களினால் நகரசபை குலுங்கியது.

    மறுநாள் ஊர்சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். விழா இனிது முடிந்த திருப்தியில் இருந்த குமணன், தன் புதுக் கவிதைகளால் அந்நாட்டுத் தமிழர்களை ஒரு கலக்குக் கலக்கும் அக்னி, ராஜகுமாரன், அவர் மனைவி அனைவரும் உடன்வர, கோலாலம்பூரின் இதயத் துடிப்பைக் காணப் புறப்பட்டோம்.

    முதலில் பத்து குகைகளுக்குப் போனோம். 'வருவான் வடிவேலன்' சினிமாவைப் பலர் பார்த்திருப்பீர்களே? அந்தப் படத்தில் வரும் Batu Cave என்னும் இடம் இதுதான்.

    சுண்ணாம்புக் கற்களால் ஆன பிரும்மாண்டமான மலைகளில் பல குகைகள் இயற்கையாய் அமைந்திருப்பதில், முருகன் குடிகொண்டிருக்கும் குகையும் ஒன்று.

    சுமார் நூறு வருடங்களுக்கு முன் கந்தசுவாமிப் பிள்ளை என்பவர் அந்தக் குகைகளைக் கண்டுபிடித்து, அங்கிருந்த முருகனைத் தினமும் வந்து வழிபடுவதைத் தம் பழக்கமாகக் கொண்டாராம். வெகு சீக்கிரத்திலேயே இந்த முருகனின் சக்தி பலருக்குத் தெரியவந்து, கோவில் பிரசித்தம் அடைந்ததாம்.

    தற்சமயம் பழனியில் உள்ளது போன்ற 'வின்ச்' அமைத்து பாதி உயரத்தை அதன் மூலம் ஏற வழி செய்திருக்கிறார்கள். மலைக்குப் போகும் பாதைக்குக் கந்தசுவாமிப் பிள்ளை சாலை என்று கோவிலைக் கண்டு பிடித்தவரின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

    குகைகளின் அமைப்பு மனதைக் கவருவதாக இருக்கிறது. மேதாவிச் சிற்பி ஒருவர் பிரயத்தனப்பட்டுச் செதுக்கினமாதிரி அழகாய் வளைந்த குகை முகப்புகள்.

    உள்ளே கர்ப்பக்கிருகம் ரொம்ப சின்னது. சுவாமி விக்ரகமும் ஒரு முழம் இருந்தால் அதிகம்.

    அர்ச்சனை செய்த குருக்களிடம் பேச்சுக்கொடுத்தேன். கோவிலின் தல புராணத்தைச் சொன்ன அவர், தைப்பூசம் இங்கு விசேஷமாக நடக்கும். இந்தியர்கள் மட்டுமல்லாது, சீனர்களும் மலாய்க்காரர்களும், ஆங்கிலேயர்களும்கூட இங்கு அலகு குத்திப் பிரார்த்தனை செலுத்துவது ரொம்ப சகஜம்... என்றார்.

    பல வருடங்களாய் இங்கு அர்ச்சகராய் இருக்கும் நீங்கள் கண்கூடாகப் பார்த்த அதிசயம் ஏதாவது உண்டென்றால் சொல்லுங்களேன்...

    இப்படித் திடீரென்று கேட்டால் எனக்கு சொல்லும் படி ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால் இந்தத் தெய்வம் பிரத்யட்சமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. பிரார்த்தித்துக்கொள்ளும் பக்தருக்கு அவர் எந்த ஜாதிக்காரர் ஆனாலும் சரி, கை மேல் பலன் உண்டு. இல்லாவிட்டால் எதனால் இப்படிக் கூட்டம் கூடுகிறது? இங்கு ஐந்து கால்களோடு பிறந்து பல வருடங்கள் வாழ்ந்த காளை ஒன்று ரொம்பப் பிரபலமானது! மேற்கொண்டு அவரை ஏதும் பேசவிடாமல் அடுத்த அர்ச்சனைக்கு ஆள் வந்துவிடவே, அவர் உள்ளே போய்விட்டார்.

    மலைக்குக் கீழே இன்னொரு குகையில் புராணங்களைச் சித்திரங்களாகத் தீட்டிக் கண்காட்சியாய் வைத்திருக்கிறார்கள்.

    அவற்றைப் பார்த்துவிட்டு வரும்போது பலர் 'ஓ! நீங்கள்தானே நேற்று தும்புவான் மிங்குவில் (டிவி) வந்தவர்? உங்கள் எழுத்துக்களைப் பார்த்திருக்கிறோம். இன்று உங்களை நேரிலேயே காண்பது எங்கள் அதிர்ஷ்டம்' என்றவண்ணம் ஆங்காங்கு நின்று, மறித்துப் பேசினர்.

    முதல்நாள் டி.வி.யில் என் பேட்டி வெளியானதைத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். 'வானம்பாடி' ஆண்டுவிழா அதே நேரத்தில் நடந்தமையால் டி.வி. நிகழ்ச்சியை பார்க்கத் தவறிவிட்ட எனக்கு, பார்த்த மக்கள் பாராட்டினது சந்தோஷத்தைத் தந்தது.

    மலை அடிவாரத்தில் பெரிய கடை அமைத்து டூரிஸ்ட்டுகளைக் கவர மலேசிய பதிக் துணிகள், மற்றும் குளிர்பானங்கள் விற்கும் ராஜாவைச் சந்தித்தோம். நாங்கள் ரெஸ்டாரென்டில் நுழைந்து இளநீரும் கோகோ கோலாவும் ஆர்டர் செய்த பிறகே, நாங்கள் வந்திருப்பது கேள்விப்பட்டு ராஜா எங்களைச் சந்தித்தார்.

    முதல்நாள் டி.வி. பேட்டியை வெகுவாக சிலாகித்துப் பேசியவர், நாங்கள் அருந்தின பானங்களுக்கும், உணவுப் பொருட்களுக்கும் பணம் வாங்கிக்கொள்ள மறுத்ததோடு 'எங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். 'முடிந்தால் வருகிறோம்' என்று சொல்லி, எங்கள் நன்றியையும் தெரிவித்தபடி நாங்கள் புறப்பட்டு டவுன் பக்கம் சென்றோம்.

    அதன்பிறகு அன்று மட்டுமல்லாது பல சமயங்களிலும் எங்களுக்கு சற்றும் முன்பின் அறிமுகமாகாதவர்கள்கூட எங்களைப் புரிந்துகொண்டு, அன்புடன் பேசி, அவரவர் வீட்டுக்கு விருந்துண்ணவோ, தேநீர் அருந்தவோ வர வேண்டும் என உளமார அழைத்தார்கள்.

    போக விருப்பம் இருந்தபோதும், மறுநாள் முதற்கொண்டு எங்களின் அன்றாட நிகழ்ச்சிகள் ஏகமாய் அதிகரித்ததால், அன்பு அழைப்புக்களை எங்களால் ஏற்க இயலாமல்போனது.

    கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்கக் கிடைத்த நேரத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது, தெருவுக்குத்தெரு நின்றிருந்த பல கைவண்டி வியாபாரிகள்தாம். அவர்களில் முக்கியமாய், பழ வியாபாரிகள், பழச்சாறு வியாபாரிகள்.

    மலேசியா இயற்கை அன்னைக்குப் பிடித்தமான நாடுகளில் ஒன்றாக இருப்பதால், காடும், வயலும், பழ மரங்களும் பச்சைப்பசேலென்று அங்கு நிறைந்து கிடக்கின்றன. கடுமையான குளிர், அடைமழை, எரிக்கும் வெயில் என்ற சீதோஷ்ண மாற்றங்கள் இல்லாமல், வருடம் பூராவும் கிட்டத்தட்ட சீரான வெயில், மிதமான மழை என்று இருப்பதால், எந்த மாதத்திலும் அங்கு எந்தப் பழவகையும் கிடைப்பது சாத்தியமாகிறது.

    நினைத்துப்பாருங்களேன்-வருடம் பூராவும் மாம்பழம், பலாப்பழம், அன்னாசி, திராட்சை... ஆ! நாக்கில் நீர் சுரக்கிறதல்லவா?

    தெருக்களில் கைவண்டிகளில் பழங்களை அழகாய் வெட்டி, சுத்தமாய் ஐஸ் நடுவில் வைத்து வியாபாரிகள் விற்கிறார்கள்.

    ஒரு கை வண்டி; அதற்கு நிழல் கொடுக்கும் கலர் குடை, வண்டியில் கண்ணாடித் தடுப்புக்கள் கொண்ட நீளமான பெட்டி. இதில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகைப் பழம். ஒன்றில் அன்னாசி, மற்றதில் பலாப்பழம், இன்னொன்றில் சப்போட்டா-இப்படி பழங்களைக் கைபடாமல் தோல் உரித்து, தினுசுதினுசாக வெட்டி, ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிகளில் அடுக்கி வைத்து, நமக்கு எது வேண்டும் என்று சொல்கிறோமோ அதை லாவகமாய்க் குச்சியில் செருகிக் கொடுக்கிறார்கள். ஆறு பலாப்பழச் சுளைகளை, ஒரு குச்சியில் வரிசையாய்ச் செருகினவற்றை கைபடாமல் பல்லால் கடித்துச் சாப்பிடுவது ஓர் அனுபவம்; பப்பாளி, அன்னாசிப் பழங்களை நீளத்துண்டங்களாய் வெட்டிப் பிளாஸ்டிக் உறையில் போட்டு இன்னொரு தினுசாய் விற்கிறார்கள். பையைக் கீழே தள்ளி, பழம் கையில் பிசுக்பிசுக்கென ஒட்டாமல் சாப்பிடலாம்.

    அப்புறம் அந்த வண்ணவண்ண பானங்கள்.

    முதல்நாள் போய் இறங்கியதும் குமணன் முதல் கேள்வியாய் 'தண்ணி சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்ட போது, வெறும் தண்ணீரை இந்த ராத்திரி நேரத்தில் எப்படிக் குடிப்பது என்று வேண்டாமென்று சொல்லி விட்டோம். 'பரவாயில்லை, டீத்தண்ணியாவது குடியுங்கள்' என்று வற்புறுத்தியதும்தான் 'ஓஹோ, இது நம்மூர் தண்ணி இல்லை, வேறு தண்ணி' என்று புரிந்துகொண்டோம்.

    டீத்தண்ணி, காப்பித்தண்ணி மட்டுமல்லாது அங்கு இருக்கும் தமிழர்களின் அகராதியில் கோக்கோ கோலா, பழரசங்கள், இன்னும் பியர் மற்ற மது பானங்களும்கூட 'தண்ணி' தான்.

    அன்று கோலாலம்பூரில் (இப்படி நீட்டி முழக்கிக் கொண்டு யாரும் சொல்வதில்லை. கே.எல். என்கிறார்கள். அவ்வளவுதான்.) தெருத்தெருவாய் அலைந்தபோது, ராஜ குமாரன் தினுசுதினுசாய் எங்களுக்குத் தண்ணி வாங்கித் தந்தார். ஒரு கறுப்புத் தண்ணி, ஒரு வெள்ளைத் தண்ணி, ஒரு மஞ்சள் தண்ணி.

    ஒருவகைப் பாசியிலிருந்து எடுக்கப்படும் ரசம்தான் அந்தக் கறுப்புத் தண்ணி (இதற்கு என்ன பேர் என்று ராஜகுமாரனுக்கே தெரியவில்லை).

    ஸோயா பீன்ஸிலிருந்து எடுத்த ஸோயா பீன்ஸ் ஜூஸ் வெள்ளைத் தண்ணி; மற்றது ஆரஞ்சு ஜூஸ்.

    அங்கெல்லாம் இந்தத் தண்ணிகளை டம்ளரிலும், புட்டிகளிலும் நிரப்பிக்கொண்டு குடிப்பதில்லை. எல்லாம் பிளாஸ்டிக் பைகளில்தான். பையினுள் ஒரு ஸ்டிராவைச் செருகி, வாயைக் கட்டிக் கொடுக்கிறார்கள். ஹாண்ட் பாக் மாதிரி அந்தப் பையைக் கையில் மாட்டி, உறிஞ்சிக் கொண்டே நடக்கலாம்.

    போதாதகுறைக்குக் கருப்பஞ்சாறு, இளநீர் வேறு. எனக்குத் 'தண்ணி' குடித்துக்குடித்தே அன்று வயிறு உப்பிப்போனது.

    அந்த ஊர் இளநீர்களைப்பற்றி இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும். ஒரு குடம் சைஸில் ஒவ்வொரு இளநீரும் இருக்கிறது. தாராளமாய் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீர். மலேசியாவில் தேங்காய் வாங்கினால் அதை உடைத்துத் துருவித் தந்துவிடுகிறார்கள். அங்கு தேங்காயும், இளநீரும் தண்ணீர் (நம்மூர்)

    Enjoying the preview?
    Page 1 of 1