Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inippin Vetri
Inippin Vetri
Inippin Vetri
Ebook361 pages3 hours

Inippin Vetri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் திருப்பதிராஜா அவர்கள் நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம்... இந்த நான்கு மூலதனங்களும் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பது தான்... திருப்பதிராஜாவின் வாழ்க்கை!

தமது விடாமுயற்சியால் விதியைத் தோற்கடித்து ஜெயித்தவர் ராஜா என்றால்... அது மிகையல்ல......! நூற்றுக்கு மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாவல்களையும் நான் எழுதியிருக்கிறேன். உணர்வுப் பூர்வமான கதைகளையும், கனமான கதாபாத்திரங்களையும் படைத்தவள் தான்...! ஆனால் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது பல கட்டங்களில் என் கண்கள் குளமாகின. மனம் பாறாங்கல்லாய் கனத்துப் போனது நிஜம்! இதையெல்லாம் தாண்டி ஒரு தனி திருப்தியும், மனநிறைவும், பெருமிதமும் என்னுள் முகிழ்த்தன என்பது உண்மை...! மரிக்கொழுந்தை தொட்ட கைகளில்... மணம் கமழத் தானே செய்யும்? ஐயாவோடு நானும் அலைந்து, திரிந்து, கஷ்டப்பட்டு கண்கலங்கி நெகிழ்ந்து நெக்குருகிப் போனதைப் போன்ற... ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றிப்போய்விட்டேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603128
Inippin Vetri

Read more from Lakshmi Praba

Related to Inippin Vetri

Related ebooks

Reviews for Inippin Vetri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inippin Vetri - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    இனிப்பின் வெற்றி

    Inippin Vetri

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை:

    திகட்டாத இனிப்பு திக்கெட்டும் பூரிப்பு

    என்னுரை:

    ஓம் எனும் பிரணவ மந்திரம்

    இனிப்பின் வெற்றி ராஜபாளையத்து ராஜாக்கள்

    ராஜாவின் பெற்றோரும் பிள்ளைப்பருவமும்

    பள்ளிப் பருவத்தில் ஒரு பணியாளராய்....

    அயராது உழைப்பு

    மாமனிதர் அச்சுதன் நாயர்

    வாழ்வைத் தேடி வடக்கே ஒரு பயணம்

    மில்லில் ஒரு தொழிலாளியாக

    பலசரக்கு கடையில் கிடைத்த பணி!

    சம்பள உயர்வும், அந்தஸ்து உயர்வும்...

    வாசித்தலை சுவாசித்த ராஜா...

    இறைவன் கொடுத்த வரம்

    மொழிப் பிரச்சனை

    பிறந்த மக்கட் செல்வங்கள்

    ராஜாவைத் துரத்திய கஷ்டங்கள்

    ஸ்ரீ குரு ஸ்வீட் ஸ்டால்

    மீண்டும் ஒரு விவசாயியாக...

    புயலால் ஏற்பட்ட நஷ்டம்

    கோமதி தேவரின் மனமார்ந்த வாழ்த்து

    இளமையில் வறுமை

    பிழைப்பைத் தேடி பெங்களூருக்கு ஒரு பிரயாணம்

    ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ்

    திருப்பு முனை

    பெங்களூருக்கு குடி பெயர்ந்த குடும்பம்

    நான்கு சக்கரங்கள்

    வட சென்னையில் ஸ்ரீ ஆனந்தபவன்

    உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி

    உறவுக்குள் ஒரு திருமணம்

    நட்புக்கு உதாரணம்

    அடையார் ஆனந்தபவன் உருவான வரலாறு

    மூலவரும் உற்சவரும்

    அதிர்ஷ்டக் காற்று...

    செல்லப் பிள்ளையின் திருமணம்

    உறவுகளுக்கு கை கொடுத்த உத்தமர்

    தொழிலாளர்களிடம் ராஜா பழகிய விதம்.

    எளிமைக்கோர் எடுத்துக்காட்டு...

    ஆன்மீகப் பற்று

    பெரியவரின் பெருந்தன்மை

    அக்கரைச் சீமை அழகினிலே....

    விதியின் விளையாட்டு

    அன்றில் பறவை

    ராஜா கண்ட கனவு

    எங்கள் அருமைத் தந்தையாரைப் பற்றி...

    அடையார் ஆனந்தபவன் நிறுவனர்:

    கே. எஸ். திருப்பதிராஜா

    தன்னம்பிக்கை மிக்க மாமனிதரின்

    வாழ்க்கை வரலாறு

    ***

    முன்னுரை:

    அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் 10-வது ஸ்தாபகர் தினத்தன்று வெளியிடப்படவிருக்கும் அதன் ஸ்தாபகர் திரு... கே... எஸ்... திருப்பதிராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இனிப்பின் வெற்றி என்ற இந்த புத்தகத்தில் எனது வாழ்த்துரை இடம் பெறுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்

    "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

    ஊக்க முடையா னுழை"

    ஊக்கத்தை உறுதியாக கொண்டிருப்பவர்கள் ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்கமாட்டார்கள்.

    மேற்கூறிய திருக்குறளின் பொருள் படி அமரர் திரு. கே. எஸ். திருப்பதிராஜா அவர்கள் தனது பத்தாவது வயதிலேயே தான் கொண்ட குறிக்கோளினை அடைய பல்வேறு துன்பங்களை சந்தித்து மனதிட்பத்துடனும் பெருமுயற்சியுடன் நேர்மையாக உழைத்து தன் வாழ்வில் வெற்றி கண்டவர்.

    எந்த தருணத்திலும் உறுதியான நேர்மையான உழைப்பினை பின்பற்றியதால் தான் அவர் மேற்கண்ட எச்செயல்களிலும் வெற்றி கண்டார். 1965 ஆம் வருடம் இராஜபாளையத்தில் குரு ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தை ஆரம்பித்தார்கள். அதுவே அவரது வளர்ச்சிக்கான விதையானது. பின்னர் அன்னாரால் 1979 ஆம் ஆண்டு சென்னையில் ஸ்ரீ ஆனந்தபவன் என்ற பெயரில் துவங்கப்பட்டது இந்நிறுவனமானது தந்தையின் வழியில், அவருடைய குமாரர்கள் திரு. கே.டி. வெங்கடேசராஜா மற்றும் திரு. கே.டி. சீனிவாசராஜா ஆகியோரின் முயற்சியால் தற்போது 60 கிளைகளை கொண்ட அடையார் ஆனந்தபவன் என்ற பெரும் ஆலமரமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சியடைய அவர்களை வாழ்த்துகிறேன்.

    திரு. திருப்பதிராஜா அவர்கள் தான் பிறந்த இராஜபாளையம் நகருக்கே பெருமை சேர்த்துள்ளார்கள். அன்னாரின் குமாரர்கள் தன் தந்தையாரை போற்றி நினைவுகூறும் வகையில் வருடாவருடம் ஸ்தாபகர் தினத்தை கொண்டாடியும், அன்றைய தினம் அவர்களின் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் தொழிலாளர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள். அதற்கு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழாது உஞற்று பவர்".

    ஊழ் என்பது வெல்லமுடியாத ஒன்று. ஒரு மனிதன் தான் கொண்ட குறிக்கோளை அடைய சோர்விலா முயற்சியை மேற்கொண்டால் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வான். ஒரு மனிதனின் உண்மையான உயர்வுக்கு நேர்மையான உழைப்பும், விடாமுயற்சியுமே காரணமாக அமையும். என்ற தத்துவத்தை மெய்பிக்கும் வகையில் வாழ்ந்த திரு.கே.எஸ். திருப்பதிராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அனைவரும் படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    (P.R. ராமசுப்ரமணியராஜா)

    சேர்மன், ராம்கோ குரூப்.

    ***

    திகட்டாத இனிப்பு திக்கெட்டும் பூரிப்பு

    இனிப்பு என்பது சுவை மட்டுமல்ல;

    அது உணர்வு,

    உதை உணர்ச்சியாகக் கருதாமல்

    உணர்வாகக் கருதுபவர்களே

    எழுச்சி அடைகிறார்கள்.

    நினைப்பு இனிப்பாகவும்

    வாழ்க்கை இனிமையாகவும்

    வாய்க்க வேண்டுமென்றே

    ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.

    அருசுவையில் முதல்சுவை இனிப்புக்கே உண்டு.

    அத்தனை சுவையிலும் இனிப்பு சற்றுக் கலந்திருக்கிறது.

    புளிப்பிலும் உண்டு, கசப்பிலும் உண்டு.

    மனிதன் இனிப்பை தேனிடமிருந்தே கற்றுக்கொண்டான்;

    இனிப்பு என்பது வர்த்தகம் மட்டுமல்ல

    அது மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியைப் பரப்பும்

    இனிய சேவை என்பதை உணர்ந்து

    அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட

    இனிமையான மனிதர் திரு. கே. எஸ். திருப்பதிராஜா.

    பெயரில் திருப்பதி இருப்பதாலோ என்னமோ

    அவர் உள்ளமும் லட்டாய் இனித்தது.

    அவர்கள் புதல்வர்கள் இருவரும்

    அந்த இனிப்பு சாம்ராஜ்யத்தை

    உலகமெங்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளுகிறார்கள்.

    உழைப்பு வெற்றி பெறும் என்பதற்கு

    ஒரு சிலரேனும் இன்னும் சான்றாக இருக்கிறார்களே

    என்று மகிழ்ச்சி அடைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்

    அடுத்தவர்களுக்குத் தூய உள்ளத்துடன், தாய் மனத்துடன்

    உணவு வழங்குவது

    அறநெறியாகவும் ஆகும் உன்னத சேவை.

    அந்த சேவையை தொடர்ந்து செய்யும்

    அடையாறு ஆனந்தபவன்

    அதை அணுகும் ஒவ்வொரு முறையும் அட! யாரு? என்று

    நம்மை வியக்க வைக்கும் பணிப்பண்பாட்டை உடையது.

    இந்த நிறுவனம் அடையாறு ஆலமரத்தைப் போல

    தழைத்தோங்கி மக்களுக்கு பசியாற்றும் பணியைப்

    பல்லாண்டு காலம் எல்லோரும் போற்றும் வகையில் செய்ய

    என் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,

    ***

    என்னுரை:

    அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

    உள்ளத்துள் எல்லாம் உளன்

    என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் திருப்பதிராஜா அவர்கள் நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம்... இந்த நான்கு மூலதனங்களும் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பது தான்... திருப்பதிராஜாவின் வாழ்க்கை!

    "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு

    இன்றி தாழாது உஞற்றுபவர்"

    என்கிறது திருக்குறள். இதன் பொருள் யாதெனில்... சோர்வு இன்றி, முயற்சியில் குறைவில்லாமல் முயற்சிக்கின்றவர், செயலுக்கு இடையூறாக வரும் விதியையும் ஒரு காலத்தில் படுதோல்வி அடையச்செய்வார்.

    ஆம்...! தமது விடாமுயற்சியால் விதியைத் தோற்கடித்து ஜெயித்தவர் ராஜா என்றால்... அது மிகையல்ல......! நூற்றுக்கு மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாவல்களையும் நான் எழுதியிருக்கிறேன். உணர்வுப் பூர்வமான கதைகளையும், கனமான கதாபாத்திரங்களையும் படைத்தவள் தான்...! ஆனால் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது பல கட்டங்களில் என் கண்கள் குளமாகின. மனம் பாறாங்கல்லாய் கனத்துப் போனது நிஜம்! இதையெல்லாம் தாண்டி ஒரு தனி திருப்தியும், மனநிறைவும், பெருமிதமும் என்னுள் முகிழ்த்தன என்பது உண்மை...! மரிக்கொழுந்தை தொட்ட கைகளில்... மணம் கமழத் தானே செய்யும்? ஐயாவோடு நானும் அலைந்து, திரிந்து, கஷ்டப்பட்டு கண்கலங்கி நெகிழ்ந்து நெக்குருகிப் போனதைப் போன்ற... ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றிப்போய்விட்டேன். ஐயாவின் விடாமுயற்சியைக் காணும் போது... எனக்கு சிறு வரலாற்றுக் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்காட்லாந்து மன்னன் ராபர்ட் புரூஸ்... ஏழு முறை போரில் தோற்றுவிட்டார். தோல்வியில் நிலைகுலைந்த அவர் சோர்ந்து போய் ஒரு குகையில் பதுங்கியிருந்தார். அந்த குகையில் ஒரு சிலந்தி வலை பிண்ணிக் கொண்டிருந்தது. அந்த வலை அறுந்து, அறுந்து விழுந்தது.

    சிலந்தியும் மீண்டும் மீண்டும் மனம் தளராமல் வலை பிண்ணிக் கொண்டே இருந்தது. சிலந்தியின் முயற்சியைப் பார்த்தார் புரூஸ், கடைசியில் சிலந்தி வெற்றிகரமாக வலையை பிண்ணி முடித்தது. அதைப் பார்த்து தானும் சலிக்காமல் முயற்சித்தார். மீண்டும் வெற்றி பெற்றே தீருவேன் என்ற மன உறுதியுடன் படையெடுத்தார். வெற்றி பெற்றார். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது உணர்வுப் பூர்வமாக ஒன்றிப் போய் உங்கள் கண்கள் குளமாகி நெஞ்சம் கனத்துப் போனால்... அதை இந்தப் படைப்புக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுவேன். அரிய வாய்ப்பை எனக்கு நல்கிய அன்புச் சகோதரர்கள் திரு... கே... டி... சீனிவாசராஜா அவர்களுக்கும், திரு. கே.டி. வெங்கடேசராஜா அவர்களுக்கும், திருமதி. ஆனந்தி அவர்களுக்கும் மற்றும் அடையார் ஆனந்தபவன் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த வாழ்க்கை வரலாற்றை, எழுதுவதற்கு உதவியாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், பெருந்தகை பி.ஏ. சி. ஆர். கவியரசு கண்ணதாசன், அரங்கசாமி வாழ்க்கை வரலாறு தேசாபிமானி பி. எஸ். குமாரசாமிராஜா, சத்திய சோதனை (காந்தியடிகள்), இராஜபாளையம் க்ஷத்திரிய ராஜுக்கள் வரலாறு, எழுத்தாளர் சாவி, கதாசிரியரின் கதை (லஷ்மி), சுவை பட வாழ்தல் (அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர்), வெற்றி மீது ஆசை வைத்தேன் (சரவணபவன் அதிபர்) ஆகிய புத்தகங்களுக்கும் மற்றும் கருத்து சேகரித்து உதவிய அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. கோவிந்தன், திரு. சித்திக், திருமதி. விமலா ஆகியோருக்கும்... போன் மூலமாக அவ்வப்போது எனக்கு வேண்டிய தகவல்களைத் தந்து உதவிய அன்பர்களுக்கும்... இந்தப் புத்தகத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத்துக் கொடுத்த இதயம் மீடியா கரு. நாகராஜன் அவர்களுக்கும், கவிதா கிராபிக்ஸ் அச்சகத்தாருக்கும் ஒவியங்களை தத்ரூபமாக வரைந்து கொடுத்த சகோதரர் திரு. தமிழ் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்....

    அன்புடன்

    லட்சுமி பிரபா M.A., B.Ed.,

    எழுத்தாளர் – கதாசிரியர்

    ***

    ஓம் எனும் பிரணவ மந்திரம்

    ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவண்ணாமலைக் கோவிலின் அடிவாரம்! காரை நிறுத்திவிட்டு டிரைவரையும், சென்னையிலிருந்து தன்னுடன் வந்த நண்பரையும் அழைத்துக் கொண்டு, தெப்பக்குளத்தை நோக்கி நடந்து வந்தார் திருப்பதிராஜா. சிலுசிலுவென்று மந்தமாருதம் தவழ்ந்து வந்து உரிமையுடன் மேனியைத் தழுவிச் சென்றது. காற்று ஸ்பரிசித்ததும்... குளத்து நீரின் மேற்பரப்பில் சட்டென்று குட்டி குட்டி அலைகள் ஜனித்தன. பாதங்களை நனைப்பதற்காக... படிக்கட்டுகளில் இறங்கிச் சென்ற திருப்பதிராஜா... பள்ளமும் மேடுமாய் அலைகள் தோன்றிய அழகை ஒருகணம் ரசித்துப் பார்த்தார்.

    ஆலமரத்துக் கிளைகளில் ஆரோகணித்திருந்த பறவைகள் கீச்... கீச்... கீச் என்று கலகலத்வனி செய்து கொண்டிருந்தன... ஆலமரத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு... நிதானமாக இறங்கி, பாதங்களை அலம்பி விட்டு... குளத்தை ஒட்டி அமைந்திருந்த பிரமாண்டமான விநாயகர் சன்னதிக்கு முன்பு வந்து நின்றார்.

    அடேங்கப்பா... எவ்வளவு பெரிய பிள்ளையார் சிலை? ரொம்ப பிரமாண்டமா இருக்கே? உடன் வந்திருந்த நண்பர் ஆச்சரியம் தவழும் விழிகளுடன் திருப்பதிராஜாவை ஏறிட்டார்.

    உம்! விநாயகர் விஸ்வரூபம் எடுத்த மாதிரி இருக்கில்ல? சக்தி வாய்ந்த பிள்ளையார்... மனமுருக வேண்டிக்கிட்டா... நினைச்ச காரியம் ஈடேறும் திருப்பதிராஜா முறுவலித்தார்.

    அப்படியா? இவ்ளோ பெரிய விநாயகர் சிலையை செதுக்கி முடிக்கிறதுக்கு... ரொம்ப காலம் ஆகியிருக்குமே திருப்பதிராஜா?"

    இந்த சிலையை பக்கத்துல வயற்காட்டுலே உழும் போது தோண்டி எடுத்தாங்க.... பூமியிலேர்ந்து தோண்டி எடுக்கப்பட்ட பிரமாண்ட சிலையை... இங்க கொண்டு வந்து வச்சுட்டாங்க.... ஒவ்வொருத்தருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். ஆனா...

    ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு வடிவம் கொடுத்தார் போல் இருக்கும் விநாயகரை வணங்குவதில்... யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவே முடியாது இல்லையா? எந்த காரியத்தைத் தொடங்கினாலும்... பிள்ளையார் சுழி போட்டு முழுமுதற் கடவுளான விநாயகரை மனசார வேண்டிக்கிட்டால் தானே... அந்த காரியம் சித்தியாகும்? விநாயகரைப் பார்த்தபடி... கூப்பிய கரங்களுடன் மெல்லிய குரலில் பேசிய திருப்பதிராஜாவை ஆச்சரியத்துடன் பார்த்தார் நண்பர்.

    குருக்கள் மணியோசை எழுப்பியபடி தீபாராதனை காட்டத் தொடங்கினார். அருகம்புல் மாலை, ரோஜா மாலை சகிதம் பச்சைப்பட்டு வஸ்திரம் சுற்றப்பட்டு கரங்களில் தாமரை மலர்களுடன் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலித்துக் கொண்டிருந்த விநாயகரை கண் குளிர சேவித்தார் ராஜா.

    பாலும் தெளி தேனும் பாகும் பருப்பு மிவை

    நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்

    கோலஞ் செய் துங்கக் கரி முகத்துத்

    தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா....

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

    மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது

    பூக்கொண்டு துப்பார் திருமேனி

    தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு...

    என்று மெதுவாக உச்சரித்தபடி தலைக்குமேல் ஒரு அடி தூக்கி இரு கரங்களையும் கூப்பி வணங்கினார் ராஜா.

    ஆரத்தியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு தட்டில் தாராளமாக தட்சணையை வைத்துவிட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டு நிமிர்ந்தார்.

    க்ஷேமமா இருக்கேளா ராஜா? குடும்பத்தை அழைச்சுண்டு வரலையா? விசாரித்த குருக்களைப் பார்த்து முறுவலித்தார்.

    பகவான் அனுக்கிரகத்துல எல்லோரும் சவுக்கியமா இருக்காங்க... ஊருலே என்னோட பால்ய சிநேகிதனோட வீட்டுல ஒரு விசேஷம்... மத்தவங்களுக்கு வரத் தோதுப் படலே.... இவர் என்னோட நண்பர் சென்னையில இருக்காரு. நம் ஊரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலைக் கோவிலையும் காட்டலாமேன்னு அழைச்சுட்டு வந்தேன்.

    ரொம்ப நல்லது அப்படியே ஆண்டாள் கோவிலுக்கும். மடவார் குளம் சிவன் கோவிலுக்கும் அழைச்சுட்டுப் போங்கோ,

    அப்படியே செஞ்சுடலாம் ஸ்வாமி, தலையாட்டி விட்டு சன்னதியை வலம் வந்து விட்டு... மலைக் கோவிலை நோக்கி நடந்தார். இதுதான் எங்க குலதெய்வம்! குலதெய்வம் கோவிலுக்கு வந்தாலே... மனசுல ஒரு நிம்மதியும் திருப்தியும் கிடைச்சிடுது.

    மூலவர் ஸ்ரீனிவாசப் பெருமாள். மிகுந்த வரப் பிரசாதி, நாடி நம்பி வர்ற பக்தர்களை அவர் கை விடறதே இல்ல... பேசியபடியே விறு விறுவென்று படிக்கட்டுகளில் ஏறினார் ராஜா. உடன் வந்த நண்பருக்கு சற்று புஷ்டியான உடல்வாகு, நாற்பது படிக்கட்டுகளைக் கடப்பதற்குள்... அவருக்கு தஸ் புஸ் என்று மூச்சிரைத்தது.

    பாவம்! உங்களுக்கு மூச்சிரைக்குது கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக்கோங்க... நிதானமாவே நாம் கோவிலுக்குப் போகலாம்... இப்படி உட்காருங்க என்றார் ராஜா... நண்பரை அமர வைத்து விட்டு.... அருகில் நின்றபடி சுற்றும் முற்றும் பார்வையைப் படரவிட்டார்.

    எங்கிருந்தோ பறந்து வந்த ஐந்தாறு பஞ்சவர்ணக்கிளிகள் சடசடவென்று சிறகுகளை அடித்தபடி தலைக்கு மேலே பறந்து சென்ற அழகில்...... மனம் லயித்துப் போனார் ராஜா. பச்சை பசேலென்ற இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்ந்தது. அண்ணாந்து ராஜகோபுரத்தை ஒரு முறை ஏறிட்டார். ஒரு கணம் கண்களை மூடி கை கூப்பி வணங்கியவரை... இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் நண்பர்.

    அப்பப்பா என்ன பக்தி? கோபுரத்தைப் பார்த்ததும் கும்பிடு போட்டுக்கிறீங்களே ராஜா?

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொல்வாங்களே?

    உங்களோட ஒவ்வொரு செய்கைகளும் எனக்குள்ளே ஆச்சரியத்தை ஏற்படுத்திட்டே இருக்கு ராஜா

    கீழே... விநாயகர் சன்னதியிலே தலைக்கு மேலே கைகளை உசத்தி கும்பிட்டீங்களே? அதுக்கும் ஏதாச்சும் காரணம் இருக்கா ராஜா?

    ஓ... இருக்கே! யாரை எப்படி வணங்கணும்னு சில நியம விதிகள் இருக்கு, கும்பிடுவதில் ஐந்து விதங்கள் உண்டு;

    இறைவனைக் கும்பிடும் போது... தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி இரு கரங்களை கூப்பி வணங்கணும்.

    மகான்கள் குருவை... நெற்றிக்கு நேரே கை கூப்பி வணங்கணும்.

    தந்தை, மன்னர் ஆகியோரை வாய்க்கு நேரே கை கூப்பி வணங்கணும்.

    பெரியோர்களை, அறநெறியாளர்களை மார்புக்கு நேரே கை கூப்பி வணங்கணும்.

    நம்மைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேரே கை கூப்பி வணங்கணும்... என்று கூறிய படியே நண்பரின் அருகில் அமர்ந்தார் ராஜா.

    9.4.1998

    சென்னை பாரிமுனை கிளை

    திறப்பு விழா பூஜை

    வணங்கறதிலே... இவ்வளவு விதங்கள் இருக்கா? ஆச்சரியமா இருக்கு... நிறைய விஷயங்களை நீங்க தெரிஞ்சு வச்சிருக்கீங்க... எப்படி ராஜா?

    பெரியவங்க ஏராளமா சொல்லி வச்சிருக்காங்களே... வீட்டுல இருக்கிற பெரியவங்க சொன்னது... இதைத் தவிர மகான்கள், ஆன்மீகவாதிகளோட சொற்பொழிவை அடிக்கடி கேட்கிறோம்... அப்பப்போ புத்தகங்களை வாசிக்கிறப்போ... அதுலே இருக்கிற முக்கியமான விஷயங்களை மனசுலே அப்படியே பதிய வச்சுக்க வேண்டியது தான்.... இது ஒரு பெரிய விஷயமே இல்லையே?

    தன்னடக்கமா பேசறீங்க ராஜா! ஆனா... உண்மையிலே இது பெரிய விஷயம் தான்... நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறது பெரிய விஷயமில்ல... ஆனா அதை அப்படியே நடைமுறையில் கடைப்பிடிக்கிறது தானே கஷ்டமான காரியம்? ரொம்ப நாளா நான் உங்களை கவனிச்சிட்டிருக்கேனே

    அதான்... எனக்கு உங்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும் கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே ராஜா?

    நண்பன்கிட்டே என்ன தயக்கம்.? தாராளமா கேளுங்க.

    இல்ல... வாழ்க்கையில பல கஷ்டங்களை சந்திச்சு போராடி... மனசைத் தளர விடாம, விடா முயற்சி செஞ்சு கடைசியிலே ஜெயிச்சு... இன்னிக்கு நல்ல நிலைமைக்கு வந்துட்டீங்க... ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு... பேரன் பேத்திகளைப் பார்த்துட்டீங்க... மனசு நிறைஞ்ச வாழ்க்கை! ஆனா... சாமி கும்பிடறப்போ உள்ளம் உருகி மெய் மறந்து மனமார வேண்டிக்கிட்டிருக்கீங்க... ஓஹோன்னு வந்துட்டீங்க.... இன்னும்... முன்னே மாதிரியே மனமுருக வேண்டிறீங்களே? என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா ராஜா?

    ஒரு கணம் யோசித்தார் ராஜா.

    வாழ்க்கையில் நான் பல இன்னல்களை சந்திச்சுருக்கேன் இன்னும் சொல்லப்போனா... விரக்தியின் விளிம்புக்கே போயிருக்கேன். அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளிலே இருந்து... நான் மீண்டு வந்ததுக்கு காரணமே தெய்வபக்தி தான்... தெய்வ நம்பிக்கையாலே தான்... நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்னு சொல்லலாம்... தெய்வ நம்பிக்கை இருந்தாத்தான்... தன்னம்பிக்கை வரும் தன்னம்பிக்கை இருந்தாத்தான்... வைராக்கியம் வரும்... வைராக்கியம் வந்தாத்தான்... உத்வேகமா விடா முயற்சியோட கடினமா உழைக்க முடியும். அதுக்கு அஸ்திவாரம் தெய்வ நம்பிக்கை தான்.! மனசு பூராவும் பகவான்

    Enjoying the preview?
    Page 1 of 1