Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathinettu Rojakkal
Pathinettu Rojakkal
Pathinettu Rojakkal
Ebook326 pages2 hours

Pathinettu Rojakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603170
Pathinettu Rojakkal

Read more from Devibala

Related to Pathinettu Rojakkal

Related ebooks

Reviews for Pathinettu Rojakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathinettu Rojakkal - Devibala

    http://www.pustaka.co.in

    பதினெட்டு ரோஜாக்கள்

    Pathinettu Rojakkal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    குட்மார்னிங்!

    அம்மாவின் குரல் கேட்டுக் கண்களைத் திறந்தான் அபிஷேக்.

    குளியல் முடித்து ஈரக் கூந்தலை டர்க்கி டவல் சொந்தம் கொண்டாட, நெற்றியில் சின்னப் பொட்டோடு, முகமெல்லாம் சிரிப்பாக எதிரே அம்மா நின்றாள்.

    இது மாதிரி தினமும் அம்மா நிற்க வேண்டும்.

    அப்படி நின்றால்தான் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஒரு நாள் அம்மா தவற விட்டாலும், சூன்யமாக இருக்கும்.

    கண்ணா! கெய்ஸர் போட்டாச்சு. சீக்கிரம் எழுந்து பல்லைத் தேச்சு குளிக்கிற வழியைப் பாரு. இன்னிக்கு உனக்கு காலேஜ் தொடக்கம்!

    அபிஷேக் எழுந்து விட்டான்.

    லுங்கி அவிழ்ந்து தரை தொட்டது. எதிரே அம்மா இருக்கிறாள் என்ற லஜ்ஜை அவனுக்கு இல்லை.

    இப்போது பதினேழு வயது அவனுக்கு.

    வாலிபத்தின் விளிம்பில் நிற்கிறான்.

    அம்மாவிடம் எந்தக் கூச்சமும் கிடையாது. அம்மாவுக்கு இப்பொழுதும் அவன் குழந்தைதான்.

    குனிந்து லுங்கியை எடுத்து, அவன் இடுப்பில் வைத்துச் சுற்றி விட்டாள் அம்மா. பல்லைத் தேய்த்தான். வெளியே வந்தான்.

    அம்மா… பால்!

    நத்திங் டூயிங். முதல்ல குளிச்சிட்டு வா! அப்புறமாத்தான் பால். சீக்கிரம் அபிஷேக். உனக்கு அதிகம் நேரமில்லை. ஒரு மணி நேரத்துல் நீ காலேஜ்ல இருக்கணும்!

    சரிம்மா!

    உள்ளே நுழைந்தான். குளிக்கத் தொடங்கினான்.

    'இன்று காலேஜில் சேரும் நாள்.!!

    +2-வில் தொண்ணூறு சதவிகிதம் கடந்து மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். என்ஜினீயரிங், ஐஐடி எல்லாம் எழுதிவிட்டான். முடிவுகள் தெரியவில்லை. அது கிடைக்கும் என்று காத்திருக்க முடியாது.

    அதனால் பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி.

    நகரத்தில் உள்ள பிரதான கல்லூரி ஒன்றில் சுலபமாக இடம் கிடைத்துவிட்டது.

    இன்டர்வியூ அழைத்த அன்று கூட அம்மாவைத்தான் அழைத்துப் போனான்.

    இதோ இன்று கல்லூரி திறக்கும் நாள்.

    குளியல் முடித்துவிட்டு அவன் வர, சாம்பிராணியுடன் காத்திருந்தாள் அம்மா.

    அவன் தலையை காண்பித்தான்.

    அது முடிந்ததும் உச்சந் தலையில் விபூதியை வைத்து அமுக்கினாள் அம்மா.

    அம்மா, என் ட்ரஸ்?

    எடுத்து வச்சிருக்கேன். தலையை வாரிப் பவுடர் போட்டுட்டு வா!

    ட்ரஸ்ஸிங் டேபிள் முன்னாள் அமர்ந்து கேசத்தைப் படிய வாரிக் கொண்டான்.

    மீசை அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. முகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மைதானத்தில் முளைத்த புல்போல் தலை நீட்டத் தொடங்கியிருந்தது.

    முகத்தில் பெண் தனம் கூடுதலாக இருந்தது.

    முடித்துக் கொண்டு உள்ளே வந்தான்.

    ஆவி பறக்கும் இட்லி, வெங்காய கொத்சு.

    வழக்கம்போல் முதல் வாயை அம்மாதான் ஊட்டி விட்டாள்.

    சீக்கிரம் சாப்டுட்டு புறப்படு அபிஷேக்.

    காலேஜ் வாசல் வரைக்கும் நீ வர்றே தானே அம்மா?

    எ துக்கு ராஜா? நாளைலேருந்து நானும் வர முடியுமா உன்னோட?

    பயம்மா இருக்கம்மா!

    என்ன பயம்? சிரிக்கப் போறாங்க. நீ ஆம்பிளப் பையன். பொண்ணுங்களே அலட்சியமா எதையும் சாதிக்கிற காலம் இது.

    அபிஷேக் பதில் சொல்லாமல், பாவமாக அவளைப் பார்த்தான்.

    அருகில் நெருங்கி, அவன் கேசத்தை மிருதுவாகத் தடவிக் கொடுத்த அம்மா அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்த மிட்டாள்.

    சரி, சீக்கிரம் புறப்படு! இன்னிக்கு காலேஜ் வாசல் வரைக்கும் வறேன். நாளை முதல் நீதான் போகணும்! புரியுதா?

    சரிம்மா!

    நானும் சாப்டுட்டு புடவை மாத்திட்டு வந்திர்றேன்!

    அம்மா அரை மணி நேரத்தில் தயாராகி விட்டாள்.

    கையில் டைரி மட்டும் தான் வைத்திருந்தான் அபிஷேக்,

    பர்ஸ் எடுத்துகிட்டியா கண்ணா?

    ம்…

    கொண்டா அதை! வாங்கி உள்ளேயிருக்கும் பணத்தை சரி பார்த்தாள்.

    இன்னிக்கு திறக்கிற நாள். அதனால் முழுநாள் இருக்காது. இல்லைன்னா உடனே வீட்டுக்கு வந்துடு! அப்படி இருந்தா, எதிர்ல ஓட்டல் இருக்கு. டிபன் சாப்பிட்டுக்கோ!

    சரிம்மா!?

    போலாமா?

    இருவரும் இறங்கி, கதவை பூட்டினாள் அம்மா. திண்ணையில் இருந்த மொபெட்டை வாசலுக்கு இறக்கினாள்.

    அதை இயக்கி அவள் உட்கார, அபிஷேக் அவள் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

    அம்மா நான்கூட வண்டி ஓட்டக் கத்துக்கணும்!

    "எதுக்கு?'

    ஸ்கூல்ல என்னை மாதிரிப் பசங்கள்ளாம் பைக் ஓட்டுவாங்க!

    உனக்கு வேண்டாம். வரவர ட்ராஃபிக் அதிக மாயிட்டே போகுது. நீ குழந்தை. உனக்கு கவனம் போதாது. பஸ்கள் எதுக்கு? அதைப் புடிச்சு போனா ஆச்சு!

    சரிம்மா.

    கூடுமான வரை அம்மாவுக்கு எதிர் பதில் சொல்லவே மாட்டான்.

    இருபது நிமிட பயணத்தில் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள் அம்மா. சற்று தள்ளி வண்டியை நிறுத்தினாள்.

    இறங்கிக் கொண்டான் அபிஷேக்.

    போறியா? நீ திரும்பி வர்ற பஸ் ஸ்டாண்ட் இது தான். மறக்காம பஸ் சீசனுக்கு அப்ளிகேஷன் தந்துரு. ஸ்டூடண்ட்ஸ் சலுகை கிடைக்கும். மற்றபடி என்னல்லாம் புத்தகங்கள் வாங்கணும்னு லிஸ்ட் கேட்டு வாங்கு. மத்யானம் இட்லியா சாப்பிடு! போண்டா,பஜ்ஜினு எண்ணெய்ப் பலகாரங்கள் வேண்டாம் புரியுதா?

    சரிம்மா.

    நான் போயிட்டு வர்றன். பத்திரமா வீடு வந்து சேரு!

    அம்மாவின் மொபெட் கண்களை விட்டு மறையும் வறை அங்கேயே நின்றான். அதன் பிறகு திரும்பினான்.

    காலேஜ் கேட் விஸ்தாரமாக இருந்தது.

    ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி அது…

    புற்றிலிருந்து புறப்பட்ட எறும்பு போல கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

    அபிஷேக் கலவரமாக உணர்ந்தான்.

    குழந்தையாக இருக்கும்போது நர்ஸரியில் சேர்க்கும்போது இருந்த மன நிலை இப்போதும் இருந்தது.

    ஒரு புதிய இடத்துக்குப் போகும்போது எல்லாருக்கும் இந்தக் கலவரம் இருக்குமா?

    'இல்லை, எனக்கு மட்டும் தானா?'

    மெல்ல நடந்து கேட்டை நெருங்கினான்.

    மச்சி! புதுப்பார்ட்டி வருது. மடக்குங்க!

    இவன் உள்ளே காலை வைத்ததும் குபுக்கெனத் தாவிப் பிடித்தான் ஒரு ஜடா முடிக்காரன்.

    கண்ணு! எங்கே ஓடப் பாக்கறே? எங்களையெல்லாம் கண்டுக்காம நீ போகலாமா? இதென்ன டயரி?

    ஒருவன் பறித்துக் கொண்டான்.

    புள்ளைக்கு மீசையே சரியா முளைக்கலையே. மூஞ்சில ஆவின் வடியுது!

    தாடி கொஞ்சம் எட்டிப் பாக்குது, பாதுஷாவுல் ஒட்டவச்ச குங்குமப்பூ மாதிரி!

    சாப்பாட்டு ராமன்டா! எப்பவும் தீனி ஞாபகம் தான்!

    வியர்த்தது அபிஷேக்குக்கு.

    அவனை நடுவில் நிற்க வைத்து சுற்றிலும் அஞ்சாறு பேர்.

    'இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்?'

    'அம்மா ஏன் இது மாதிரி நடக்கும் என்று சொல்லவில்லை?'

    உன்னைக் கொண்டு வந்துவிட்டது யாரு கண்ணு? உங்கக்காவா?

    என்ன படிக்குது? வேலைக்குப் போகுதா?

    இல்லை. எங்கம்மா!

    ஆத்தா… அம்மாவா அது! அம்சமாக்கீது!

    பாண்டி! தப்பு இதெல்லாம்! பையனை மட்டும் ராகிங் செய். அதுக்கு மேல எல்லை தாண்டாதே!

    ஒருவன் எச்சரித்தான்.

    உனக்கு இங்கிலிஷ் தெரியுமா மகனே?

    ம்!

    "அப்ப ஸ்பீக்கு பார்க்கலாம்!

    அபிஷேக் வியர்வையைத் துடைத்துக் கொண் டான்.

    ஆங்கிலக் கவிதை ஒன்றை சடசடவென வேகமாக ஒப்பித்தான்.

    சாவடிச்சிட்டே மாமா! ரஜினி கணக்கா ஸ்பீடு!

    எத்திராஜுலு! உனக்குத் தமிழே, சரியா வராது. தம்பி பேசியது வெறும் இங்கிலிஷ். இல்லைடா. இங்கிலிஷ்ல கவிதை.

    நான் போகலாமா?

    இரு! இன்னும் நிறைய இருக்கு. விட்ருவமா? நீ சைட் அடிச்சிருக்கியா?

    அப்படீன்னா?

    மாமா… சைட் அடிக்கவும், ஜொள் வடிக்கவும் தெரியாதவன் காலேஜ்ல இருக்கலாமா? அம்சவேணி வர்றா பாரு, பந்தயக் குதிரை மாதிரி!

    அத்தனை பேரும் திரும்பினார்கள்.

    அம்சா, நில்லு! சைட் அடிக்கத் தெரியாத ஆண் ஜந்துவைப் பாக்கணுமா நீ? கிட்ட வா!

    அந்த அம்சவேணி அவன் அருகில் வந்து நின்றாள்.

    ச்சீ… போடா!

    அலட்சியமாக அதட்டிவிட்டு டாக் டாக் என நடந்து போக,

    சரி, நம்ம குழந்தையைக் கவனிப்பம். கண்ணு! தம் அடிப்பியா?

    புரியலை!

    தண்ணி?

    குடிப்பேன்!

    வார்ரே வா! ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சேன். பீரா, விஸ்கியா?

    பானைத் தண்ணி!

    மாமா… மரண அடிடா உனக்கு! புதுசா வந்தவன்கிட்ட இப்படியா மூக்கை உடைச்சுப்பே? தம்பி… கொன்னுட்டேடா நீ! இனிமே இந்தத் துண்டு பீடி வர தன் வாயைத் தொறக்க மாட்டான். நீ போ!

    தப்பித்தோம்… பிழைத்தோம் என்று அவர்களை விட்டு ஏறத்தாழ ஓடினான் அபிஷேக்.

    மணியடிக்கும் சப்தம்.

    அவனுக்கு எங்கே போவதென்றே தெரியவில்லை.

    ஹேய் அபிஷேக்!

    குரல் கேட்டுத் திரும்பிய அபிஷேக், சட்டென சந்தோஷப்பட்டான்.

    அவர்களது தெருவில் இருக்கும் பத்மினி!

    அதே கல்லூரியில் மூன்றாவது வருடம் பி.காம். படிக்கிறாள்.

    பத்மினி!எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை?

    அங்கே நோட்டீஸ் போர்டு இருக்கு. சரி, வா என்னோட! ஆகாய நீலத்தில் சூடிதார் அணிந்திருந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அபிஷேக் நடந்தான்.

    நீ வி.அபிஷேக் இல்லையா?

    ஆமாம்!

    பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி… பர்ஸ்ட் இயர்?

    ஆமாம்.

    அவள் நோட்டீஸ் போர்டில் தேடி,அபிஷேக், இங்க வா!

    அவன் வந்தான்.

    இங்க பாரு! 'சி' ப்ளாக் தான் கெமிஸ்ட்ரி ப்ளாக்.

    அது எங்கே இருக்கு?

    நான் சொல்றேன். அதுல ரூம் நம்பர் ஒன்பதுதான். உனக்கு பர்ஸ்ட் அவர். இன்னிக்கு காலேஜ் முடியும்போது இதைக் குறிச்சிட்டுப் போ. இதுதான் உன் டைம்டேபிளும், இடமும். முதல் மணிநேரம் உனக்கு ஆன்சிலரி!

    ஜூவால்ஜியா?

    ஆமாம்! வா என்னோட!அவளுடன் நடந்தான் அந்த மைதானத்தில்.

    பெல் அடிச்சிட்டாங்களே! லேட்டாப் போனா உள்ளே சேர்க்கமாட்டாங்களா?"

    சிரித்தாள் பத்மினி.

    'சி' ப்ளாக் மைதானத்தின் முடிவில் இருந்தது.

    எந்த பஸ்ல வந்தே அபிஷேக்?

    பஸ்ல வரலை. அம்மா கொண்டு வந்து விட்டாங்க, மொபெட்ல!

    இன்னிக்குக்கூட அம்மாவா?

    நான் தான் வரச் சொன்னேன்!

    வழியில் நிறையப் பேருடன் சிரித்தபடி, தலையாட்டி, கையசைத்து வெகு இயல்பாக நடந்தாள்.

    இதுதான் உன் வகுப்பு நடக்கற ரூம். ஸீ யூ அபிஷேக்!

    அவன் தலையை ஆட்டிவிட்டு, அந்த வகுப்புக்குள் தயங்கித் தயங்கி நுழைய, கொல்லென ஒரு சிரிப்பு.

    ஊசி போல் உடம்பிருந்தா, தேவையில்லை பார்மஸி! ஊர்வசி… ஊர்வசி!

    என்று சுருளிராஜன் குரலில் ஒருவன் கர்ணகடூரமாகப் பாட, எங்கு உட்காருவது என்று மிரண்டான் அபிஷேக்.

    நாலைந்து பேர் எழுந்து ஆடிக் கொண் டிருந்தார்கள். இரண்டு பேர் 'தம்' அடிக்க, பெண்களும் அந்த வகுப்பில் இருந்தார்கள்.

    லெக்சரர் நுழைந்தார்.

    குட்மார்னிங் டு ஆல் ஆஃப் யூ!

    குட்மார்னிங் ஸார்! கோரஸாக எழுந்து நின்று (சில பேர்தான்) பதில் சொன்னார்கள்.

    ஸ்வீட் எய்ட்டீ ன்-- பதினேழு முடிஞ்சு பதினெட்டுல அடியெடுத்து வச்சிருக்கற பட்டு ரோஜாக்கள் நீங்கள்ளாம்!

    மாமா… வந்ததும், வராததுமா ரம்பம் போடறியே!

    ஒரு குரல் தெறித்து வந்தது.

    அந்த லெக்சரர் சிரித்துக் கொண்டார்.

    வெல்! உங்க குறும்புகளையெல்லாம் ரசிக்கத்தான் நான் வந்திருக்கேன், நானும் இதையெல்லாம் கடந்துதானே வந்திருக்கேன்!

    அப்ப பாடம் நடத்த மாட்டியா தலைவா?

    நீ நடத்தினர் ஆரு படிக்கறது?

    லவ்வைப்பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்!

    ஒரு மாணவி எழுந்து கேட்டாள்.

    என்ன து அங்கிளா? வாத்யாரை 'மாமா' ஆக்கிட்டியேம்மா! அவர் மனசு என்ன பாடுபடும்? ஆங்…!

    குபீர் சிரிப்பு எழுந்தது.

    "நாங்க எப்படி இருந்தாலும் கண்டுக்க மாட்டீங்களா குருவே?'

    அவருக்கு இன்னாபா? ஒண்ணாந் தேதியானா சம்பளம். சார், உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?

    ரெண்டு.

    அட நீ இருடா! ரெண்டு பசங்களுக்கும் என்ன சார் வயசு?

    மூத்தவன் பையன் நாலு வயசு, பொண்ணுக்கு ஒரு வயசு!

    உங்களுக்கு எப்ப சார் கல்யாணம்?

    கலீர் என்ற சிரிப்பு புறப்பட்டது.

    உங்க பேரு என்னா சார்?

    அல்வா!

    என்னது அல்வாவா? கோதுமை அல்வாவா? காரட் அல்வா வா?

    இப்படியா ஒரு பேரு?ரொம்ப ஸ்வீட்டா இருக்கே!

    நிஜமான பேரு என்னா சார்?

    அல்வாங்கறதை வெச்சு என் பேரைக் கண்டுபிடிங்க. இது க்ளூ!

    பெல் அடித்தது நீளமாக.

    அவ்ளோ தான். காலேஜ் லீவ் விட்டாச்சுடா மச்சி! எழுந்து ஓடினார்கள் அவரைக் கடந்து.

    அவர் சிரித்தபடி வெளியேற,

    அபிஷேக் எல்லாவற்றையும் ஒரு பயத்தோடு ரசித்தபடி மெல்ல வெளியே வந்தான்.

    நாலடி இவன் நடக்க, வராண்டாவில் மாணவிகளின் கும்பல் ஒன்று நின்று பேசிக் கொண்டிருந்தது.

    சற்று தள்ளி நின்ற நாலு மாணவர்களில் ஒருவன்,

    தலைவா! அந்தக் கொயந்தப் பையனைப் புடிச்சு வேகமாத் தள்ளிவுடேன்! பட்டாம்பூச்சிங்க மேல போய் விழட்டும்!

    மாணவிகள் திரும்பி நின்று பேசிக் கொண்டிருக்க,இயல்பாக நடந்து அவர்களை அபிஷேக் நெருங்க, ஓடி வந்த ஒருவன் அபிஷேக்கைப் பிடித்துத் தள்ளினான் வேகமாக.

    அபிஷேக் அப்படியே நிலை தடுமாறி அவர்கள் மேல் சரிய, பிடிமானம் தேடித் தவித்து, நடுவில் நின்ற அந்த மாணவியை இறுகப்பிடித்துக் கொண் டான்.

    காரணம் புரியாத அவள் அவனது அழுத்தம் தாளாமல் தரையில் மல்லாந்து விழ, அவள் மேல் அப்படியே முழுமையாகக் கவிழ்ந்தான் அபிஷேக்.

    நடந்தவர்கள் எல்லோரும் ஓசை கேட்டு நின்றார்கள்.திரும்பிப் பார்த்தார்கள்.

    சுதாரித்து எழுந்து விட்டாள் அந்த மாணவி ஒரு நொடியில்.

    அதே நொடியின் முடிவில், பளாரென தன் கைகளை அபிஷேக்கின் கன்னத்தில் இறக்கினாள் இடி போல!

    2

    ஒரு முறையல்ல!

    நாலு முறை! மாறி மாறி அவனது இரு கன்னங்களிலும் அவள் அறைந்து தள்ளினாள்.

    என்ன நினைச்சிட்டு இருக்கே உம் மனசுல?

    அத்தனை பேரும் ஸ்தம்பித்தார்கள்.

    வாங்கடி போலாம்! அந்த மாணவிகள் கூட்டம் வெளியேற, தள்ளிவிட்ட மாணவனும் அவனது தோழர்களும் தொலைந்து போயிருந்தார்கள்.

    அபிஷேக் முகத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான்.

    அவனுக்கு அவளது அடிகளின் தீவிரம் தாங்காமல் மயக்கமே வந்து விட்டது. நிற்க முடியவில்லை.

    ஏற்கெனவே குழந்தைத்தனமானவன். பயந்த சுபாவம் வேறு!

    அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.

    சில மாணவர்கள் அருகில் நெருங்கினார்கள்.

    என்னடா செஞ்சே நீ? எதுக்கு உன்னைப் போட்டு அப்படி அடிச்சா அவ? அவன் அழவே தொடங்கி விட்டான்.

    அடச்சீ! ஆம்பிளையாடா நீ? ஒரு பொம்பளை கிட்ட அடிவாங்கிட்டு அழுதுட்டு நிக்கறான்!

    அதானே! மாணவர் சமுதாயத்துக்கே இவன் ஒரு சாபக்கேடு!

    "திருப்பி நாலு குடுத்திருக்க வேண்டாமா?'

    இவன் மேல தப்பில்லைடா! நான் நல்லாப் பார்த்தேன். நடந்து வந்துகிட்டிருந்த இவனை மகேஷ் தான் புடிச்சுத் தள்ளிவிட்டான். பேலன்ஸ் தவறி ராணி மேல இவன் விழுந்தான். அவ தான் பஜாரியாச்சே! புடிச்சுக் கிழிச்சிட்டா!

    ஏண்டா? ஒரு பொண்ணு நாலு அறை வைக்கற வரைக்கும் சும்மாவா இருந்தே? ஒரு அடியாவது அவளைத் திருப்பி அடிக்கணும்னு உனக்குத் தோணவே இல்லையா?

    மறு கன்னத்தைக் காட்டற மகான்டா இவன்!

    அபிஷேக் கைக்குட்டையால் முகத்தைப் பொத்திய படி ஆத்திரமும், அழுகையுமாக மைதானத்தில் நடந்தான்.

    ஓடறான் பாருடா!

    நாளைலேருந்து இந்தப் பொட்டைப் பையன் வரமாட்டான்னு நினைக்கறேன்!

    பேலன்ஸ் தவறி மேலே சரிஞ்சப்ப ராணியை எங்கே புடிச்சான் தெரியுமா இவன்?

    எங்கேடா? உமிழ்நீர் ஒழுக ஒருவன் கேட்டான்.

    தோளப் புடிச்ச கைகள் அப்படியே படிப்படியா சரிஞ்சு… அம்சம்டா. குணா சினிமாக்காரன் இருந்திருக்கணும்… ஷாட் பை ஷாட்டா எடுத்திருப்பான். அவளை மல்லாத்தி, சுத்தமா அவ மேல… இங்கிலீஷ் சினிமால 'பலான' சீன் பார்த்த மாதிரி இருந்துதுடா! காலேஜ் திறந்த அன்னிக்கே திவ்ய தரிசனம்!

    இரண்டு மாணவிகள் சிரித்தபடி கடக்க,

    வந்தனா, நீ வெக்கப்பட்டா சகிக்கலை. மூஞ்சி எங்க பாட்டியைவிட மோசமா இருக்கு உனக்கு!

    போடா நாயே!

    அபிஷேக் கேட்டுக்கு வந்து விட்டான்.

    அதற்குள் பல பேருக்குச் செய்தி பரவிவிட, அபிஷேக் கூர்ந்து கவனிக்கப்பட்டான்.

    அவன் தான்டா அடி வாங்கினவன்!

    பொறுக்கிப் பசங்க! காலேஜ்ல நுழைஞ்ச அன்னிக்கே பொண்ணுங்ககிட்ட வம்பு வச்சுகிட்டா இப்படித்தான் மூஞ்சி பிஞ்சுபோகும்!

    அபிஷேக் பஸ்ஸுக்கு நிற்கவில்லை.

    ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டான். இடம் சொன்னான்.

    முப்பது ரூபா குடு தம்பி!

    சரி!

    ஆட்டோ ஓடத் தொடங்கியது.

    கண்களை மூடிச் சாய்ந்து கொண்டான். அழுகை இன்னும் பீறிட்டது. 'இனிமேல் இந்த காலேஜுக்கு வரக்கூடாது!'

    கன்னங்கள் இரண்டும் வீங்கி விட்டது புரிந்தது. ஜூரம் வரும் போல இருந்தது. அவமானமும், துக்கமும்மாக ஆட்டிப் படைத்தது.

    வீட்டு வாசலில் ஆட்டோ நிற்க, பணத்தைக்

    Enjoying the preview?
    Page 1 of 1