Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!)
சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!)
சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!)
Ebook117 pages40 minutes

சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!)

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருவது இயல்பு, ஆனால் ஹார்ட் அட்டாக்கை செயற்கையாக ஏற்படுத்தினால் எப்படி இருக்கும் கதையை படியுங்கள் புரியும்.

Languageதமிழ்
Release dateAug 21, 2018
சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!)

Read more from ராஜேஷ்குமார்

Related to சிவப்பு வானம்!

Related ebooks

Reviews for சிவப்பு வானம்!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிவப்பு வானம்! - ராஜேஷ்குமார்

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்த அலுமினியப் பறவை அரபிக் கடல் மட்டத்துக்கு வெகு மேலே காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தது.

    சூட் அணிந்த வழுக்கைத் தலையர்கள் ஆங்கிலப் பத்திரிகைகளின் பிசினஸ் ரிவியூ பக்கங்களில் முகங்களைப் புதைத்திருந்தார்கள்.

    சில இளைஞர்கள் காதுகளுக்கு ஹெட்போனைக் கொடுத்து இசையை ஜீரணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    அழகான இரண்டு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் புன்னகை முகங்களோடு அங்குமிங்கும் நகர்ந்தபடி பிரயாணிகளின் தேவைகளை பவ்யமாய் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

    நிதி அமைச்சர் தேவநந்தன் தன் குடும்பத்தோடு ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்தார்.

    பட்டுப் புடவையில் அமர்க்களமாய் இருந்தாள் அவர் மனைவி. அருகில் சல்வார் கமீஸ் அணிந்த மகள்கள்.

    குட்டையாய் கேசத்தைக் கத்தரித்திருந்தவள் அவர் தோளைத் தட்ட -

    தேவநந்தன் அவளிடம் திரும்பினார்.

    என்னம்மா...?

    நான் காலைல சொன்னதை யோசிச்சிங்களா டாடி...?

    என்ன சொன்னே...?

    ரொம்ப நாளைக்கப்புறம் நீங்க குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கி இருக்கீங்க. இங்கே இருந்தா கட்சி ஆட்களின் தொந்தரவை எப்படியும் தவிர்க்க முடியாதுன்னு ஃபாரின் கிளம்பி வர சம்மதிச்சிட்டீங்க... ஆனா பத்தே நாள்தானா...?

    பத்து நாளா...ன்னு எங்க தலைவர் கேட்டார். நீ பத்தே நாள்தானான்னு கேக்கறே..."

    அடுத்தவளும் அவரோடு சேர்ந்து கொண்டாள்.

    டாடி... குறைஞ்சது ஒரு மாசமாச்சும் அங்கே... இருந்தாத்தான்... எல்லா இடங்களையும் பார்க்க முடியும். என்ஜாய் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கும். சும்மா போனோம் வந்தோம்ன்னா அதில் என்ன இருக்கு...

    தேவநந்தன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு தலையை ஆட்டி மறுத்தார்.

    சாரிம்மா... இந்த மூணு மாசமா பட்ஜெட் போடற டென்ஷன்ல இருந்தேன். எனக்கே கொஞ்சம் ரிலாக்ஸேஷன் வேணும் போல இருந்துச்சு.. அதனாலதான் தலைவர்கிட்டே அனுமதி வாங்கிட்டு கிளம்பினேன். பொது வாழ்க்கைல இருந்துகிட்டு ஒரு மாசமெல்லாம் வீணாக்கறது தப்பு...

    உங்க தலைவர் அனுப்பி வெச்சா கூட நீங்க போக மாட்டீங்க போலிருக்கு.

    அப்பா ப்ளீஸ்... என்றாள் சின்னவள்.

    சான்சே இல்லை. இன்னும் பத்துநாள்ல சட்டசபை கூடுது. பட்ஜெட்டை விவாதத்துக்கு எடுத்துக்கப் போறாங்க. அப்போ நான் அங்கே இருந்தே ஆகணும்.

    அமைச்சரின் மனைவி குறுக்கிட்டுச் சொன்னாள்.

    உங்கப்பாகூட முப்பது வருஷத்தைக் கழிச்சிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர் கட்சி வேலையை எல்லாம் விட்டுட்டு பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் கிளம்பி வந்ததே அபூர்வமான விஷயம். கட்சி, மீட்டிங், தொண்டர்கள்... இதிலேயே இவரோட சேர்ந்து என்னோட வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு... ஏதோ உங்க புண்ணியத்தில் இப்போ நாலு பக்கம் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்...

    அம்மாவை ஹனிமூனாவது கூட்டிட்டுப் போயிருக்கீங்களா டாடி...?

    Enjoying the preview?
    Page 1 of 1