Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusami 80 Part 1
Appusami 80 Part 1
Appusami 80 Part 1
Ebook646 pages6 hours

Appusami 80 Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் ஆகிறது. அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள்.

தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள்.

அது ஒரு திங்கட்கிழமை. நான் வெறுங்கையையும் மண்டை நிறைய பயத்துடனும் காரியாலயம் சென்றேன். ‘உங்க கதை?' என்றார்.

"நேற்று வீட்டிலே கொஞ்சம் கசாமுசா?” என்று பயத்துடன் முணுமுணுத்தேன். “சண்டையா?” என்றார் குறுஞ்சிரிப்புடன்.

அவர் சிரித்ததும் தைரியம் வந்து கொஞ்சம் வெலாவாரியாக ஞாயிறன்று வீட்டில் நடந்த சின்ன சம்பவத்தை விவரித்தேன்.

என் மனைவியும் நானும் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். ‘நீ போயிண்டே இரு. நான் இதோ வர்றேன்' என்று மனைவியை முன்னதாக அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெள்ளாளத் தெரு பஸ் ஸ்டாப் போய்ப் பார்த்தால் அங்கே மனைவியைக் காணோம்!

பதறிப் போய்விட்டேன். மனசில் பயங்கரமான கற்பனை. கதை எழுதறதுக்குக் கற்பனை வருதோ இல்லையோ? இது மாதிரி விஷயங்களில் கற்பனை பறக்கும். நாலு நாள் முன் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. ‘பஸ் ஸ்டாப்பில் நகைகள் அணிந்து நின்ற பெண்ணைக் குண்டர்கள் கடத்தல்!' பரபரத்துவிட்டேன். ஆளானப்பட்ட வீரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே மனைவியைக் காணோமென்று பதறினாரென்றால் நான் ஒரு சாதா மானிடன். பயப்படாமலிருக்க முடியுமா? நல்ல வேளை அப்போ என் மருமான் வந்து கொண்டிருந்தான். "டேய் மணி! மாமியைப் பார்த்தியாடா?” என்று ரோடிலேயே ஒரு கத்தல் போட்டேன். “மாமியா? பஸ் 23Cல் ஏறி இப்பத்தானே போகிறா.நான்தான் ஏற்றி விட்டுட்டு காய் வாங்கி வர்றேன்” என்றான். வயிற்றில் ஒரே சமயம் பாலும் வெந்நீரும் வார்த்தான்.

மனைவி மேல் மகா கோபம். ‘எனக்காக வெயிட் பண்ணாமல் எப்படிப் போகப் போச்சு?' நான் உடனே ஆட்டோ பிடித்து மாமனார் வீட்டுக்குப் போய், அவளுடன் ஒரு சண்டை. “கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நான் வரதுக்குள் புறப்படணுமா?” அது இது என்று சண்டை போட்டேன்.

'நீங்க சொன்னீங்களா? பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருக்கச் சொல்லி, 23C வர்றது எவ்வளவு அபூர்வம்னு உங்களுக்கே தெரியும். பஸ் வந்தது. மருமான் ஏற்றிவிட்டான். நீங்க அடுத்த பஸ்ஸிலே வருவீங்கன்னு போய்விட்டேன். அதுக்கு ஏன் கோபம்?” என்றாள்.

"ராத்திரி பெரிய வாக்குவாதம். அந்த மனத் தாங்கலினால் கதை எழுதவில்லை, ஸாரி சார்,” என்றேன்.

“அதனாலென்ன? நாளைக்கு எழுதிண்டு வந்திடுங்க” என்ற ஆசிரியர், "உங்க மாமனாருக்குக் கூடக் கோபம் வருமா? மாமியார் கூடவெல்லாம் சண்டை போடுவாரா?” என்றார். “கோபம் எனக்குத்தான் சார் வந்தது. நான்தான் மனைவிகிட்டே சண்டை போட்டுட்டேன்” என்றேன்.

ஆசிரியர் சிரித்தார். “அதெல்லாம் புரிந்தது. நீங்க நாளைக்கு எழுதப்போற கதையிலே மாமனார்தான், மாமியார்கிட்டே சண்டை போடறார். வயசான தம்பதிகளுக்குள்ளே என்னவோ சண்டை. அந்த மாதிரி எழுதுங்கள்” என்றார்.

மறுநாள் கதை தந்துவிட வேண்டுமென்று ராத்திரி கொஞ்சமும் விடியற்காலை கொஞ்சமுமாக ஒரு தாத்தா பாட்டி தம்பதிகளுக்குள்ளே சண்டை வருவதாக ஒரு கதை எழுதிவிட்டேன். என் பக்கத்து வீட்டில் அப்பு சாஸ்திரிகள் என்று ஒரு மாமா இருந்தார். தினமும் வைதீகமெல்லாம் முடித்துவிட்டு ஒரு நாளைப் போல இரவு பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டுவார் (அவர் வீட்டுக் கதவைத்தான்). அவர் மீது மனசுக்குள் மகா எரிச்சல். என் கதாநாயகத் தாத்தாவுக்கு அப்பு தாத்தா என்று பெயர் வைத்துவிட்டேன். பாட்டிக்குச் சீதாலட்சுமி என்று வைத்தேன்.

ஆசிரியர் மறுநாள் கதையைப் படித்து பாராட்டியவர், “அப்பு என்பது மொட்டையாக இருக்கு. இன்னும் ஏதாவது அத்தோடு சேருங்களேன்,” என்றார். நான் ஒரு சாமி சேர்த்து, ‘அப்புசாமி' என்றேன். 'ஓகே' செய்தார். மனைவி பெயர் அவ்வளவு நீளம் வேண்டாம். ‘சீதா' என்றாலே போதுமே” என்றார். “சீதா நாகரிகமான பாட்டியாக இருக்க வேண்டும். இரண்டு பேருமே கர்நாடகமாக இருக்கக் கூடாது” என்றார். "அப்புசாமியை மூக்குப் பொடி பிரியராக எழுதியிருக்கிறீர்கள். சீதாவுக்கு அவரது அந்தப் பழக்கமெல்லாம் வெறுப்பு ஊட்டவேண்டும். சீதாவை மாடர்னாகச் செய்து விடுங்கள். அப்போது தான் மோதலுக்கு நன்றாயிருக்கும்" என்றார்.

நான் அப்போதெல்லாம் ரீடர்ஸ் டைஜஸ்ட் விரும்பிப் படிப்பேன். “பாட்டி ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவராக இருக்கலாமா?” என்றேன். "தாராளமாக ரொம்ப ஜோராயிருக்கும்” என்று சிரித்தார்.

இப்படியாக குமுதம் ஆசிரியர் தந்த ஆதரவாலும் அவர் வழிகாட்டி வந்ததாலும் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் உருவாகி இன்னமும் என்னிடமும் வாசகர்களிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

- பாக்கியம் ராமசாமி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303328
Appusami 80 Part 1

Read more from Bakkiyam Ramasamy

Related to Appusami 80 Part 1

Related ebooks

Related categories

Reviews for Appusami 80 Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusami 80 Part 1 - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி 80 தொகுப்பு 1

    Appusamy 80 Part 1

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    அப்புசாமியும் சீதாப்பாட்டியும் நானும்

    ஸர் ஆர்தர் கானன்டைலுக்கு அவரது அற்புத சிருஷ்டியான உலகப் புகழ் துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸின் மீது ஒரு கால கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு விட்டதாம்.

    எத்தனை காலத்துக்குத்தான் இந்த ஷெர்லக் ஹோம்ஸ் மனுஷன் தன்னோடு வந்து கொண்டிருப்பான். இவனைத் தொலைத்துத் தலை முழுகி விட வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாராம். இத்தனைக்கும் ஐம்பதோ அறுபதோ சிறுகதையும் ஐந்தோ ஆறோ நாவலும்தான் ஷெர்லக் ஹோம்ஸை வைத்து அவர் சிருஷ்டித்தார். ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 150 வருஷமாகியும் ஷெர்லக் ஹோம்ஸ் காரெக்டர் உலகளாவிய புகழ்பெற்று நீடித்து நிலைத்து இருக்கிறது.

    ஹோம்ஸின் மீது கருவிக்கொண்டே இருந்த நாவலாசிரியர் தமது கதாநாயகனை ஒரு கதையில் தீர்த்தே தீர்த்து விட்டார்.

    ஒரு வில்லனுடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் வில்லன் மட்டுமல்ல ஷெர்லக் ஹோம்சும் மலையுச்சியிலிருந்து கீழே பள்ளத்தில் விழுந்து மாண்டு விட்டார் என்பதாக எழுதி ஏரைக் கட்டிவிட்டார். 'விட்டதுடாப்பா அவன் தொல்லை!' என்று சந்தோஷமாக சீட்டி அடித்துக் கொண்டிருந்தார் கானன்டைல்.

    ஆனால் உலகம் பூராவிலுமிருந்த ஷெர்லக் ஹோம்ஸ் ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். 'தன்னிகரில்லாத எங்கள் துப்பறியும் சிங்கத்தை எப்படி நீங்கள் சாகடிக்கலாம். பிழைக்க வைக்கவில்லையென்றால் உங்களைச் சாகடித்து விடுவோம்' என்று மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவும், கானன்டைய்ல் 'த ரிடர்ன் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ்' என்பதுபோல துப்பறிபவரை மறுபடி பிழைக்க வைத்து கதைகளைத் தொடர்ந்தார்.

    சமீபத்தில் சூப்பர்மேன் காமிக்ஸில் கூட சூப்பர்மேனை அதன் ஆசிரியர் ஒழித்துக் கட்டிவிட்டார் - சூப்பர்மேன் செத்துவிட்டதாக எழுதிவிட்டார். (மறுபடி அவர் எழுப்பப்படவில்லை. ரசிகர்கள் போதுமான ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போலும்.)

    ஊரார் கதையிலிருந்து உள்ளூர்க் கதைக்கு வருகிறேன்.

    அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் ஆகிறது. அதாவது நாற்பத்திரண்டு வருஷங்களாக அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள்.

    தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள்.

    அப்புசாமி மீது நான் இடறி விழுந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.

    என்னை அவர்மீது விழும்படி தள்ளிவிட்டவர் என் மதிப்புக்குரிய ஆசான் குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்கள்தான்.

    குமுதத்தில் 37 வருடங்கள் நான் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பொறுப்புகளில் வேலையிலிருந்தேன். திரு. ரா.கி.ர., திரு. புனிதன் எனக்கு ஸீனியர்கள்.

    குமுதம் ஆசிரியர் எங்கள் எழுத்துக்கும், ஆன்மீகத்துக்கும், ஒழுக்கத்துக்கும் குருவாக விளங்கினார்.

    பிரதி திங்கள் தோறும் நாங்கள் ஆபீஸ் வரும்போது ஆளுக்கு ஒரு கதை எழுதி வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை.

    'கதையால் உலகத்தை ஜெயிக்கலாம்' என்பது ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களின் அசைக்க முடியாத கொள்கை.

    குமுதத்தில் அந்தக் காலகட்டத்தில் வாராவாரம் ஐந்து கதைகள் பிரசுரமாகும். மூன்று கதைகள் எடிட்டோரியலில் இருந்த மூவரும் (ரா.கி.ர., புனிதன், நான்) எழுதுவோம். எழுதியாக வேண்டும். (ஆகா! பொற்காலம்! பொற்காலம்!) போட்டி போட்டுக்கொண்டு எழுதுவோம். டைரக்டர் ஆசிரியர்தான். டைரக்டர் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு டைரக்டர் அல்ல. ஓரொரு வாக்கியத்துக்கும் அடி, நடு, முடிவு வரை கூடவே நிழல்போல தொடரும் டைரக்டர்.

    அவரது வியர்வையை எங்கள் பேனாவில் போட்டு எழுதினோம் என்றால் மிகையாகாது.

    அது ஒரு திங்கட்கிழமை. நான் வெறுங்கையையும் மண்டை நிறைய பயத்துடனும் காரியாலயம் சென்றேன். 'உங்க கதை?' என்றார். திங்களன்று அறையில் நுழைந்ததும் உதவி ஆசிரியரின் கையைத்தான் அவர் முதலில் பார்ப்பார். அவர் கதை கேட்கக் கை நீட்டுவது குசேலரிடம் கண்ணபிரான் அவலுக்குக் கை நீட்டுவது போலிருக்கும்.

    நேற்று வீட்டிலே கொஞ்சம் கசாமுசா? என்று பயத்துடன் முணுமுணுத்தேன்.

    சண்டையா? என்றார் குறுஞ்சிரிப்புடன். அந்த அழகு சிரிப்பை எந்த ஜென்மத்தில் இனி சந்திப்பேன்.

    அவர் சிரித்ததும் தைரியம் வந்து கொஞ்சம் வெலாவாரியாக ஞாயிறன்று வீட்டில் நடந்த சின்ன சம்பவத்தை விவரித்தேன்.

    என் மனைவியும் நானும் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். 'நீ போயிண்டே இரு. நான் இதோ வர்றேன்' என்று மனைவியை முன்னதாக அனுப்பிவிட்டு, பாத்ரூம் கீத்ரூம் போய்விட்டு சில பல அலங்காரங்கள் செய்து கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெள்ளாளத் தெரு பஸ் ஸ்டாப் போய்ப் பார்த்தால் அங்கே மனைவியைக் காணோம்!

    பதறிப் போய்விட்டேன். மனசில் பயங்கரமான கற்பனை. கதை எழுதறதுக்குக் கற்பனை வருதோ இல்லையோ? இது மாதிரி விஷயங்களில் கற்பனை பறக்கும். நாலு நாள் முன்தான் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. 'பஸ் ஸ்டாப்பில் நகைகள் அணிந்து நின்ற பெண்ணைக் குண்டர்கள் கடத்தல்!'

    பரபரத்துவிட்டேன். இப்போதைய விட அப்போது நான் நூறு மடங்கு பயந்தாங் கொள்ளி. ஆளானப்பட்ட வீரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே மனைவியைக் காணோமென்று பதறினாரென்றால் நான் ஒரு சாதா மானிடன். பயப்படாமலிருக்க முடியுமா? நல்ல வேளை அப்போ என் மருமான் மார்க்கெட்டிலிருந்து புடலங்காயைத் தூக்கியவாறு வந்து கொண்டிருந்தான். டேய் மணி! மாமியைப் பார்த்தியாடா? என்று ரோடிலேயே ஒரு கத்தல் போட்டேன். மாமியா? பஸ் 23Cல் ஏறி இப்பத்தானே போகிறா.நான்தான் ஏற்றி விட்டுட்டு காய் வாங்கி வர்றேன் என்றான். வயிற்றில் ஒரே சமயம் பாலும் வெந்நீரும் வார்த்தான்.

    மனைவி மேல் மகா கோபம். 'எனக்காக வெயிட் பண்ணாமல் எப்படிப் போகப் போச்சு?' நான் உடனே ஆட்டோ பிடித்து மாமனார் வீட்டுக்குப் போய், அவளுடன் ஒரு சண்டை. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நான் வரதுக்குள் புறப்படணுமா? அது இது என்று சண்டை போட்டேன்.

    'நீங்க சொன்னீங்களா? பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருக்கச் சொல்லி, 23C வர்றது எவ்வளவு அபூர்வம்னு உங்களுக்கே தெரியும். பஸ் வந்தது. மருமான் ஏற்றிவிட்டான். நீங்க அடுத்த பஸ்ஸிலே வருவீங்கன்னு போய்விட்டேன். அதுக்கு ஏன் கோபம்?" என்றாள்.

    வெங்காயம்! பதறினவன் மடையனா?

    ராத்திரி பெரிய வாக்குவாதம். அந்த மனத் தாங்கலினால் கதை எழுதவில்லை, ஸாரி சார், என்றேன்.

    அதனாலென்ன? நாளைக்கு எழுதிண்டு வந்திடுங்க என்ற ஆசிரியர், உங்க மாமனாருக்குக் கூடக் கோபம் வருமா? மாமியார் கூடவெல்லாம் சண்டை போடுவாரா? என்றார்.

    கோபம் எனக்குத்தான் சார் வந்தது. நான்தான் மனைவிகிட்டே சண்டை போட்டுட்டேன் என்றேன்.

    ஆசிரியர் குறும்புச் சிரிப்புச் சிரித்தார். அதெல்லாம் புரிந்தது. நீங்க நாளைக்கு எழுதப்போற கதையிலே மாமனார்தான், மாமியார்கிட்டே சண்டை போடறார். வயசான தம்பதிகளுக்குள்ளே என்னவோ சண்டை. அந்த மாதிரி எழுதுங்கள் என்றார்.

    மறுநாள் கதை தந்துவிட வேண்டுமென்று ராத்திரி கொஞ்சமும் விடியற்காலை கொஞ்சமுமாக ஒரு தாத்தா பாட்டி தம்பதிகளுக் குள்ளே சண்டை வருவதாக ஒரு கதை எழுதிவிட்டேன்.

    என் பக்கத்து வீட்டில் அப்பு சாஸ்திரிகள் என்று ஒரு சாஸ்திரி மாமா இருந்தார். தினமும் வைதீகமெல்லாம் முடித்துவிட்டு ஒரு நாளைப் போல இரவு பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டுவார் (அவர் வீட்டுக் கதவைத்தான்).

    பக்கத்துப் பக்கத்து வீடாதலால் என் வீட்டுக் கதவையே தட்டுகிற மாதிரி இருக்கும் (யார் கண்டது தூக்க கலக்கத்தில் என் வீட்டுக் கதவையே கூடத் தவறுதலாக தட்டியிருக்கக் கூடும்).

    அவர் மீது மனசுக்குள் மகா எரிச்சல். 'அப்பு சாஸ்திரி, குப்பு சாஸ்திரி, தப்பு சாஸ்திரி' என்று குமுறிக் கொண்டிருந்தேன்.

    என் கதாநாயகத் தாத்தாவுக்கு அப்பு தாத்தா என்று பெயர் வைத்துவிட்டேன். பாட்டிக்குச் சீதாலட்சுமி என்று வைத்தேன்.

    ஆசிரியர் மறுநாள் கதையைப் படித்து பாராட்டியவர், அப்பு என்பது மொட்டையாக இருக்கு. இன்னும் ஏதாவது அத்தோடு சேருங்களேன், என்றார். நான் ஒரு சாமி சேர்த்து, 'அப்புசாமி' என்றேன்.

    'ஓகே' செய்தார். மனைவி பெயர் அவ்வளவு நீளம் வேண்டாம். 'சீதா' என்றாலே போதுமே என்றார். சீதா நாகரிகமான பாட்டியாக இருக்க வேண்டும். இரண்டு பேருமே கர்நாடகமாக இருக்கக் கூடாது என்றார். அப்புசாமியை மூக்குப் பொடி பிரியராக எழுதியிருக்கிறீர்கள். சீதாவுக்கு அவரது அந்தப் பழக்கமெல்லாம் வெறுப்பு ஊட்டவேண்டும். சீதாவை மாடர்னாகச் செய்து விடுங்கள். அப்போது தான் மோதலுக்கு நன்றாயிருக்கும்" என்றார்.

    நான் அப்போதெல்லாம் ரீடர்ஸ் டைஜஸ்ட் விரும்பிப் படிப்பேன். பாட்டி ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவராக இருக்கலாமா? என்றேன்.

    தாராளமாக ரொம்ப ஜோராயிருக்கும் என்று சிரித்தார்.

    இப்படியாக குமுதம் ஆசிரியர் தந்த ஆதரவாலும் அவர் வழிகாட்டி வந்ததாலும் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் உருவாகி இன்னமும் என்னிடமும் வாசகர்களிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    -பாக்கியம் ராமசாமி

    பொருளடக்கம்

    1. பாட்டிகள் முன்னேற்றக் கழகம்

    2. அப்புசாமி செய்த கிட்னி தானம்

    3. என்னிடம் வாலாட்டாதீர்கள்

    4. அப்புசாமியின் தீபாவளிப் போராட்டம்

    5. அப்புசாமிக்குள் குப்புசாமி

    6. எங்கே குழவி?

    7. கமான் அப்புசாமி கமான்

    8.எல்

    9. செலவுக்கு 144

    10. சீதே, நான் காணோம்!

    11. ஆபரேஷன் அப்புசாமி

    12. 'லோ கட் பொறுத்திருப்போம்!

    13. சிலை எடுத்தான் ஒரு சிந்தனையாளருக்கு

    14. ஸயண்டிஸ்ட் அப்புசாமி

    15. தலைவர் அவர்களே!

    16. முறுக்கிக்கொண்டார் அப்புசாமி

    17. லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்

    18. ஆகாசவாணியில் அப்புசாமி

    19. பிறந்த நாள்

    20. மிருக வசியம்

    21. துப்பில்லா துப்பட்டி சாமி

    22. என் புருஷன்

    23. இவள் என்ன சொல்வது?

    24. நானும் வருகிறேன் மீனம்பாக்கம்

    25. மனிதனுக்கு 60 மைல்

    26. லஞ்ச் ரெடி மாஸ்டர்

    27. பட்டம் பதவி பெற

    28. ஓர் ஆக்ரோஷமான மோதல்

    29.கெட் அவுட்!

    30. சுண்டல் செய்த கிண்டல்

    31. சீதே ஜே.பி.

    32. ஹி-மேன் அப்புசாமி

    33. சீதேய்ங் அப்புங் சாம்ங்

    34. வாய்வா? தாய்வா?

    35. அப்பளம் சதுரமானது

    36. அப்புசாமியும் மூணு கை முனிரத்தினமும்

    37. தயவுசெய்து கிணற்றில் குதியுங்கள்

    38. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

    39. நான் பார்த்த காபரே

    40. சதி! பதி! நிதி!

    41.அப்புசாமி கலந்துகொண்ட க்விஸ்!

    1. பாட்டிகள் முன்னேற்றக் கழகம்

    அப்புசாமிக்கு, அவசரமாக நெற்றிக் கண் வேண்டியிருந்தது.

    மூன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலமுள்ள ஒரு பலகையை அவர் எரித்துச் சாம்பலாக்கிக் காப்பியிலோ, தண்ணீரிலோ கரைத்துக் குடித்துவிடக் கூடிய கோபத்துடன் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

    ஒவ்வொரு தரமும் அவர் கண்களை உறுத்தியது வாசல் சுவரிலிருந்த அந்தப் பலகை.

    'பாட்டிகள் முன்னேற்றக் கழகம்' என்று அந்தப் பலகையில் அழகாக வர்ண எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.

    ஒழிக! என்று கத்தினார் அப்புசாமி, அந்தப் பலகையின் எதிரில் நின்று முறைத்து.

    கூப்பிட்டீங்களா என்ன? என்று உள்ளிருந்து அடுத்த நிமிடம் சீதாப்பாட்டி வெளியே வந்தாள். அடாமிக் எக்ஸ்ப்ளோஷன் மாதிரி ஏன் இப்படி அலற வேண்டும்? 'சீதே' என்று ஜென்ட்டிலாகக் கூப்பிட்டால் வரமாட்டேனா? இல்லை, காதில்தான் விழாதா? கழக மீட்டிங்குக்கு அர்ஜண்டா 'ப்ரிபேர்' செய்து கொண்டிருந்தேன். என்ன விஷயம்?

    அப்புசாமி மனைவியை முறைக்காத குறையாகப் பார்த்தார். நீயும் உன் பாட்டிகள் முன்னேற்றக் கழகமும்! எனக்குச் சகிக்கவில்லை. கழகம் என்ற பெயரால் நம் வீட்டில் வந்து இனிக் கிழவிப் பட்டாளங்கள் கூடட்டும் சொல்கிறேன்!

    சீதாப்பாட்டி ஓரிரு நிமிடங்கள் மெளனமாக நின்று கொண்டிருந்தாள். பிறகு மை டியர் சார்! என்று தொடங்கினாள் சூடாக. இன் வாட் வே எங்கள் கழகம் உங்களைப் பாதிக்கிறது? உங்களை ஏதாவது டொனேஷன் கேட்கிறோமா? உங்களுக்குத் தொந்தரவு செய்கிறோமா?

    தொந்தரவா? என்னைக் கீழே இருக்கவொட்டாமல் மாடிக்குத் துரத்தி விட்டீர்களே, இதைவிட வேறு என்ன வேண்டும்?

    உங்களுக்கு 'அப்ஸ்டேர்ஸ்' கசக்கிறதா? கீழே இருந்தால் மெம்பர்ஸ்களின் 'நாய்ஸ்' உங்களுக்குத் தொந்தரவாயிருக்கு மென்று, தனி ரூமே மாடியில் 'ப்ரொவைட் ' செய்து தந்திருக்கிறேன். கசக்கிறதா? யூ கான் ஸ்டடி, சாண்ட் ராம் நாம்ஸ்... எது வேண்டுமானாலும் அங்கே செய்யலாமே?

    மாடி அறையின் அஸ்பெஸ்டாஸ் கூரை கொதிக்கிற கொதிப்பில் என் மூளையே கரைந்துவிடும் போலிருக்கிறது. நீயும் உன் சக பாட்டிகளும் கீழே குளுகுளு ஹாலில் காரம்போர்டு ஆடுவதற்காக, நான் கும்பி எரியக் குடல் கருக மாடி அறையில் அனலடிக்கும் அஸ்பெஸ்டாஸ் கூரைக்கடியில் சாக வேண்டுமா? அப்புசாமி இன்னும் சுடச்சுடக் கேட்டிருப்பார். அதற்குள் 'டொக் டொக்' என்று கைத்தடியைச் சத்தப்படுத்திக் கொண்டு, 'பாட்டிகள் முன்னேற்றக் கழகப் பொருளாளி வந்து சேர்ந்தாள்.

    ப்ளீஸ்! மாடிக்குப் போங்கள். மெம்பர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தி ரெஸ்ட் வி வில் டிஸ்கஸ் லேட்டர்! சீதாப்பாட்டி கணவனைப் பிரியத்தோடு, ஆனால் உறுதியாக மாடிப்படிகளை நோக்கி அனுப்பி வைத்தாள்.

    அப்புசாமி தன் பொய்ப் பற்களை நிஜக் கோபத்துடன் கடித்தவாறு ஒவ்வொரு படியாக மேலே ஏறினார்.

    சீதாப்பாட்டி அவருக்கென்று மாடியில் ஏற்படுத்திக் கொடுத்திருந்த பிரத்தியேக அறைக்குள் சென்று சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

    அரை மணிக்குள் கீழே ஹாலில் பாட்டிகள் நடந்தும், ரிக்ஷாவிலும், சைக்கிள் ரிக்ஷாவிலும், டாக்ஸியிலும், சொந்தக் கார்களிலும் வந்து குழுமிவிட்டனர்.

    அப்புசாமியால் வெப்பத்தையாவது சகித்துக் கொள்ள முடிந்தது. கீழிருந்து வரும் பாட்டிகளின் ஆனந்தக் கூக்குரலைத்தான் சகிக்க முடியவில்லை.

    தொடங்கி இரு மாதங்கள் ஆவதற்குள் அக்கம் பக்கத்துத் தெருவிலிருந்த அத்தனை பாட்டிகளையும் எப்படியோ வசீகரித்துக் கழக அங்கத்தினர்களாக்கி விட்டாளே தன் மனைவி என்பதில் அப்புசாமிக்குப் பெருமைக்குப் பதில் ஆத்திரமே ஏற்பட்டது.

    'விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைப் போலல்லவா கிழம் கட்டைகள் தன் மனைவி ஆரம்பித்த கழகத்தில் வந்து விழுகின்றனர்' என்று பொருமினார்.

    'ஊம்' என்று பெருமூச்செறிந்தார். அவ்வளவு கவர்ச்சிகரமாக, முதுமை நெஞ்சங்களுக்குக் கிளுகிளுப்பூட்டக் கூடிய நடவடிக்கைகளாக இந்தப் பொல்லாத சீதா என்ன சேர்த்திருக்கிறாள்.

    அங்கத்தினர்களின் ருசிக்குத் தகுந்தபடி பொழுது போக்குகளைத் தலைவி சீதாப்பாட்டி கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தாள். அரட்டைப் பிரியைகளான பாட்டிகளுக்கு, வம்புகள் சப்ளை செய்வதற்காக 'வம்பு புலட்டின்' என்று இரண்டு பக்கத்தில் ஊர் வம்புகள் அடங்கிய ஒரு பத்திரிகை கூடச் சீதாப்பாட்டி பிரத்தியேகமாக வெளியிட்டாள்.

    அநேகமாக சங்கத்தினர்களில் பெரும்பாலோரைக் கவர்ந்தது 'பாட்டி மெண்ட்டன்' விளையாட்டு அரங்குதான். வீட்டுப் பின்புறத் தோட்டத்தில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

    'பாட்மிண்ட்டன்' மாதிரியேதான், பாட்டி மிண்ட்டனும்'. ஆனால் இதில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு தரம் விளையாடுபவர்கள் இளைப்பாறுவதற்கு 'இன்டர்வெல்' விடப்படும்.

    அப்புசாமிக்கே 'பாட்டி மிண்ட்டன்' ஆட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று உள்ளூர ஓர் ஆசை. ஆனால் அவர் பாட்டன் ஆயிற்றே? அப்படியும் ஒருதரம் வெட்கத்தை விட்டு, சீதாலஷ்மியை நெருங்கிப் பார்த்தார். நீ தானே கழகத் தலைவி!? நீ பார்த்து என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? என்றார்.

    நோ! நோ! வெரி சாரி! ரூல் ஈஸ் எ ரூல்! பாட்டி மெண்ட்டனில் பாட்டிகள் ஒன்லி சேர்க்கப்படுவார்கள்! என்று அடியோடு மறுத்து விட்டாள்.

    அப்புசாமி பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் மேல் காட்டம் கொள்ள அதுவும் ஒரு காரணம்.

    ஷாட்! ஷாட்! என்ற கூக்குரலைத் தொடர்ந்து ஒரே கைதட்டல்.

    அப்புசாமி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து மாடிக் கைப்பிடிச் சுவர் அருகே சென்றார். எட்டிப் பார்த்தார்.

    பாட்டிமெண்ட்டன் ஆட்டம்கூட நடைபெறவில்லை. பின்னே 'ஷாட்! ஷாட்!' என்று கத்தலும் கதறலும் எதற்கு வருகிறது?

    ஓ! ஹாலின் நடுவிலிருந்தல்லவா வருகிறது...

    நோ! நோ! ரெட் ஷூட் பி ஃபாலோட்! சீதாப்பாட்டியின் குரல் ஓங்கி ஒலித்தது.

    சரிதான். 'காரம் போர்டு' ஆட்டம் நடைபெறுகிறதோ?

    அப்புசாமிக்குக் காரம் என்றால் உயிர். 'காரம் போர்டும் அவ்வாறே. ஒரு காலத்தில் பிரபல காரம் போர்டு சாம்பியனாக விளங்கியவர். மழமழவென்று ஒரு காரம் போர்டு பலகை - நூறு இருநூறு செலவில் பிரத்தியேகமாக ஆர்டர் கொடுத்துச் செய்தது - வீட்டில் வைத்திருந்தார்.

    அதன்மீது காற்றடித்தால்கூட அவர் வேதனைப்படுவார். அவ்வளவு செல்லமாக அந்தக் காரம் போர்டைப் பாதுகாத்து வந்தார். அதற்குரிய காய்களும் ஸ்டிரைக்கரும் மலிவானவையா என்ன? அவைகளும் ஸ்பெஷல் தயாரிப்பு. அசல் தந்தத்தால் ஆன ஸ்டிரைக்கர்.

    அப்புசாமி குறுக்கும் நெடுக்கும் நடந்தார். அவருக்கு ஒரு விஷயம் உடனடியாகத் தெரிந்தாக வேண்டியிருந்தது. இப்போது கழகப் பாட்டிகள் ஆடுவது கழகக் காரம் போர்டிலா, அல்லது தன்னுடைய உயிரான காரம் போர்டிலா?

    கழக உபயோகத்துக்குக் காரம் போர்டு வாங்கியிருந்தால் அது இத்தனை நாளில் ஒருதரமாவது அவர் கண்ணில் பட்டிருக்காதா?

    'சீதா! ஏ சீதா!' என்று கூவ வேண்டும் போலவும், குடுகுடு வென்று மாடியிலிருந்து கீழே இறங்கி, பாட்டிகள் கூட்டத்தில் சண்டமாருதமாகப் புகுந்து காரம் போர்டைக் காக்க வேண்டும் போலவும் அவர் உயிர் துடித்தது.

    ஆனால் முப்பது பாட்டிகள் முன்னிலையில் தான் மட்டுமல்ல, தன்னுடைய பாட்டனே வந்தால் கூட அவமானப்பட்டுத்தான் தீர வேண்டும் என்று அவர் உள்ளுணர்வு கூறியது.

    ஆ! சபாஷ்! அபிராமி! வொண்டர்புல்! வொண்டர்புல் என்று அடுத்த தெரு அபிராமிக் கிழவியை யாரோ புகழ்ந்தது மாடிக்கு வந்து கேட்டது.

    'டொக், டொக்!' என்று 'பேஸில்' விழுந்த காய்களை எடுக்க ஸ்டிரைக்கர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் தன் இதயத்தில் விழுந்த இடியாக அப்புசாமி அனுபவித்துத் துடித்தார்.

    ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு 'ஒரு பொழுது விரதப் பாட்டிகள்' கழகச் சார்பாகச் சமைக்கப்பட்ட இட்டிலி, உப்புமா இவைகளைத் தீர்த்துக் கட்டிவிட்டு விடைபெற்றார்கள்.

    சீதாப்பாட்டி அனைவருக்கும் காம்பவுண்ட் கேட் வரை சென்று 'டாடாசீரியோ!' காட்டிவிட்டு, வெரி நைஸ் டே!" என்று முணு முணுத்தவாறு நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு முன்பாகத் தயாராக அப்புசாமி உட்கார்ந்திருந்தார் ஹாலில்.

    இஃப் யூ டோன்ட் மைன்ட். ஒரு டம்ளர் தண்ணீர் தருகிறீர்களா? ஒரே டயர்டாக இருக்கிறது! என்றாள் சீதாப்பாட்டி.

    அவ்வளவுதான். அப்புசாமி எரிமலையாக வெடித்தார். தண்ணீரா? விஷம் கேட்டால் கூட இனி இந்தக் கையால் உனக்குத் தருவேனா?

    சீதாப்பாட்டி தன் தலையைப் பிடித்து விட்டுக் கொண்டாள். பிறகு, ஹாவ் சிம்ப்பதி ஆன் மி! ஏன் இப்படி எரிந்து விழுகிறீர்கள்? என்றாள்.

    சிம்ப்பதியுமில்லை, சீதாபதியுமில்லை. என் காரம் போர்டை என் அனுமதி இல்லாமல் உன் கழகமோ கத்தரிக்காயோ எப்படித் தொடலாம்?

    பி காம்! ஐ ஷல் எக்ஸ்ப்ளைன் இட்

    பி. காம்! பி. ஏ! பி. எஸ்.ஸி! எதுவும் எனக்கு நீ சொல்லத் தேவையில்லை. உன் பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் அட்டூழியங்களை இனியும் என்னால் பொறுக்க இயலாது. அதை ஒழித்தே தீருவேன். வீட்டின் செலவையும் நீ கவனிக்காமல், வருகிற விரதப் பாட்டிகளுக்கு உப்புமா, இட்டிலி வேறு சப்ளை செய்கிறாய்! நம்ம வீட்டுப் புழக்கடையில் 'பாட்டி மிண்ட்டன் கோர்ட்' போட்டு ஒரு செடி கொடி போட லாயக்கில்லாததாகச் செய்து விட்டாய். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை, மாடியில் அஸ்பஸ்டாஸ்' அறையில் தள்ளி உயிருடன் வேகவைக்கிறாய்? பனங்கிழங்கு மாதிரி நான் கருகி வேகிறேன்! தெரியுமா சங்கதி!

    ஓவர்? முடிந்ததா? என்றாள் சீதாப்பாட்டி. பிறகு, ஐ அக்ஸப்ட் தி சாலஞ்ச்! பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தை உங்களால் ஒழிக்க முடிந்தால் ஒழியுங்கள்! சீதாப்பாட்டி எழுந்து போய்விட்டாள்.

    அப்புசாமி அந்தக் கணமே கைத்தடியை எடுத்துக் கொண்டு 'விறுவிறு' என்று வெளியேறினார்.

    பார்க்கில் நெடுநேரம் பசும் புற்களைப் பறித்துப் போட்டுக்கொண்டே இருந்தவருக்குப் பளிச்சென்று ஓர் எண்ணம் தோன்றியது.

    அப்புசாமி குதூகலித்தார். மகிழ்ச்சி மிகுதியால் கைத்தடியை ஆகாயத்தில் எறிந்து மீண்டும் பிடித்தார். லாலாலு... லலாலூ.... என்று ஒரு பாட்டை முணுமுணுத்தபடி 'விறுவிறு' என்று வீட்டுக்குத் திரும்பினார்.

    மறுநாள் காலை பத்து மணிக்கு ஜோராக உடை அணிந்துகொண்டு வாக்கிங் ஸ்டிக்குடன் பக்கத்துத் தெருவுக்குப் போனார். ஜிப்பா பையில் நீண்ட பட்டியல் ஒன்று எழுதி வைத்திருந்தார். முதல் பெயரை எடுத்துப் பார்த்தார். பிறகு அந்தப் பெயருள்ள நபரின் வீட்டுக்குப் புறப்பட்டார். அது கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா சாரங்கபாணியின் வீடு. சாரங்கபாணி ஆபீஸ் போய்விட்டான். அவனுடைய வயோதிக அம்மாதான், பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளி. மற்றக் கழக அங்கத்தினர்கள் தினமும் பத்து மணி நேரம்தான் வந்து தங்கி அரட்டை அடிப்பார்கள் என்றால், பொருளாளிக் கிழவி மட்டும் ஏறக்குறைய இருபத்து நான்கு மணியும் கழகமே கதி என்று அங்கு வந்து விடுவாள். ஆகவே அப்புசாமிக்கு இந்தக் கிழவி மீது மகா கோபம். கதவை மடமடவென்று தட்டினார்.

    யாரது? என்று சாரங்கபாணியின் மனைவி வந்து திறந்தாள். ஓ! கழக வீட்டுத் தாத்தாவா? வாருங்கள் தாத்தா, என்ன விசேஷம்? என்று வரவேற்றாள் அவள்.

    அப்புசாமி மெது வே உள்ளே போய்ப் பெஞ்சில் உட்கார்ந்தார். தற்செயலாகச் சுவரைப் பார்த்தார். திடுக்கிட்டுப் போனார்.

    சுவரில் சீதாப்பாட்டியின் புகைப்படம் ஒன்று மாலையுடன் காட்சி அளித்தது.

    அப்புசாமி முகத்தைச் சுளித்தபடி, எங்கள் வீட்டுக் கிழவியின் படத்தை எதற்கு இங்கே மாட்டி வைத்திருக்கிறீர்கள்? என்றார்.

    சாரங்கபாணியின் மனைவி பக்தி சிரத்தையுடன் சீதாப்பாட்டியின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அபசாரம்! அபசாரம்! கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்! சீதாப்பாட்டி எங்களுக்குத் தெய்வம் மாதிரி! என்றாள்.

    அப்புசாமி அலட்சியமாகச் சப்புக் கொட்டினார்.

    என் வீட்டுக் கிழவியையா தெய்வம் கிய்வம் என்கிறாய்? சரிதான். அவள் பெரிய ஆள்தான் போலிருக்கிறது. உன் மாமியாரைத்தான் வீட்டு வேலை செய்ய வொட்டாமல் 'பாட்டிகள் முன்னேற்றக் கழகம்' அது இது என்று கெடுத்து வைத்திருக்கிறாள் என்றால், உன்னையும் ஏதோ செய்திருக்கிறாள் போலிருக்கிறதே? என்றார்.

    தாத்தா! பாட்டியின் பெருமை உங்களுக்குத் தெரியாது. என்னைப் போன்ற மருமகள்களை ரட்சிக்க வந்த மனித தெய்வம் சீதாப்பாட்டி. மாமியார்கள் சதாசர்வ காலமும் மருமகள்களை 'நச்சு நச்சு' என்று ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பதைத் தடுக்கவும், கிழ மாமியார்களைக் கண்டு, இளம் மருமகள்கள் சதா நடுங்குவதும் ஒழிந்து வீட்டில் ஹாயாக இருக்கவும் தீர்க்கதரிசி சீதாப்பாட்டி செய்த ஏற்பாடே, 'பாட்டிகள் முன்னேற்றக் கழகம்! இந்தப் பெருமை தெரியாமல் எங்கள் பாட்டியை இழித்துரைக்கிறீர்களே? இதையே வேறொருவர் சொல்லியிருந்தால் அக்கம்பக்கத்து என் தோழிகளையும் கூப்பிட்டு வைத்துக்கொண்டு என்ன பாடுபடுத்தியிருப்பேனோ, எனக்கே தெரியாது. நீங்க அந்தப் பாட்டியின் கணவர் என்பதால் நான் சும்மா இருக்கிறேன்.

    அப்புசாமிக்கு உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது.

    சாரங்கபாணியின் மனைவி விடாமல் மேலும் சொன்னாள். தாத்தா!' இதைத் தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தில் தான் மருமகள்களாகிய எங்கள் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கிறது. அந்தக் கழகத்தை ஒடுக்க முயலும் எந்தச் சக்தியையும் நாங்கள் சகி யோம், அனுமதியோம். ஒவ்வொரு மாதமும் நானும் அக்கம்பக்கத்துத் தெரு மருமகள்களும் சீதாப்பாட்டியின் கழகம் நன்கு நடப்பதற்காகவும், எங்கள் மாமியார்களை உபசரித்து அங்கேயே இருத்தி வைத்துக் கொள்ளவும் பணம் கூடக் கட்டுகிறோம் என்றோம். ஆனால் சீதாப்பாட்டி, சீதாப்பிராட்டி மாதிரி பரந்த மனம் படைத்தவர். எங்களிடம் பணம் வாங்க மறுத்து, எங்கள் துன்பம் துடைக்கத்தான் துன்பப்படுகிறார், எல்லாப் பாட்டிகளையும் கட்டிக்கொண்டு. அவருடைய படத்தை, என் வீட்டில் மட்டுமல்ல, அக்கம் பக்கத்துத் தெருவில் உள்ள ஒவ்வொரு மருமகள் இல்லத்திலும் நீங்கள் பார்க்கலாம்.

    அப்புசாமி மெளனமாக எழுந்து வெளியே நடந்தார். நம்ம பருப்பு வேக வில்லையே! என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன.

    2. அப்புசாமி செய்த கிட்னி தானம்

    சீதே! அப்புசாமி பல்லை நறநறத்தார். நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தறே! ஒவ்வொருத்தன் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம் கட்ட ஆசைப்படறேன்... அதுக்கு வக்கில்லையா எனக்கு?

    நத்திங் டூயிங்! என்ற இரண்டு வார்த்தைகளோடு சீதாப்பாட்டியின் பதில் அமைந்திருந்தால் பரவாயில்லையே, அப்புசாமிக்கு இனிமேல் அவுட் ஹவுஸிலுள்ள பாத்ரூம்தான் என்று உத்தரவு போட்டு விட்டாள்.

    சீதே! என்னை அழுக்குப் பக்கெட்டைத் தூக்கிட்டு மலேரியாக் கொசுவுக்கு எண்ணெய் அடிக்கிறவன் மாதிரி அவுட் ஹவுஸ் பக்கம் காலையிலே போகச் சொல்றியா? முடியாது; பாத்ரூம் என் பிறப்புரிமை! என்று வாதாடிப் பார்த்தார்.

    சீதாப்பாட்டி வீட்டு பாத்ரூமுக்கு ஒரு பேட்லாக் அடித்து, பூட்டு சாவி போட்டுச் சாவியைத் தன்னிடம் வைத்துக்கொண்டு விட்டாள்.

    அப்புசாமி தன் விதியை நொந்துகொண்டார்.

    ஒரு வாரத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம். அப்புசாமிக்கு எவ்வப்போதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அவ்வப்பொழுது தெல்லாம் அவர் பார்வை சீதாப்பாட்டியின் அலமாரியிலுள்ள பழைய நியூஸ் பேப்பர் பக்கம் பாயும். பேப்பர் கடைக்குப் போடுவதற்காக அவர் சில பத்திரிகைளைத் திரட்டிய (திருடிய?) போது ஒரு சின்ன மருத்துவ வெளியீடு அவர் கண்ணில் பட்டது. தமிழில் இருந்ததால் தண்ணிப்பட்ட பாடாக அதைப் படித்துவிட்டார். அதிலிருந்து ஒரு ஆரோக்கிய ரகசியக் குறிப்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அதிலிருந்த குறிப்பு : இருதயத்துக்கு எவ்வளவுக் கெவ்வளவு சிரமம் கொடுக்காமல் இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நீடித்து வேலை செய்யும்.... சில பேர் பாத்ரூம் போகும்போது சிரமப்படுத்திக் கொள்வார்கள். அது கூட இதயத்தைப் பாதிக்கும். அப்படிப்பட்டவர்கள் பாத்ரூமில் பத்திரிகை படித்தால் அவ்வளவு சிரமம் இருக்காது.

    மறுநாளிலிருந்து அப்புசாமி பாத்ரூமிலேயே பேப்பரும் கையுமாகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழிக்க ஆரம்பித்தார். சீதாப்பாட்டிக்கு அது பெருத்த பிரச்சினையை உண்டாக்கியது. லாக் அவுட் செய்துவிட்டாள்.

    அவுட் ஹவுஸ் பாத்ரூம்தான் அவருக்கு என்று சொல்லி விட்டாள். ஹம்பி மொகஞ்சதாரோக்காரர்கள் ஆராயவேண்டிய ஓர் இடம் அவுட் ஹவுஸ் பாத்ரூம்.

    வசதியான தனி பாத்ரூம் கட்டப் போராட்டம் நடத்தினார். சீதாப்பாட்டி மசியவில்லை.

    படித்துக் கொண்டிருந்த செய்திப் பத்திரிகையை வெறுப்புடன் விட்டெறிந்தார் அப்புசாமி. விஸ்வாமித்திரர் முன் மேனகா சாகசத்தோடு விழுந்த மாதிரி பேப்பர் ஒரு தினுசாக ஒய்யாரமாக மடங்கி விழுந்தது. அதிலிருந்த ஒரு விளம்பரம் அப்புசாமியின் கண்ணில் பட்டது.

    ரூபாய் 2,000 உங்களுக்குத் தேவையா?

    ஆமாம், ஆமாம்... தேவை தேவை என்று அப்புசாமியின் நரம்புகள் அத்தனையும் சேர்ந்து ஒட்டு மொத்த ஓட்டுப் போட்டன.

    அப்புசாமி மேற்கொண்டு படித்தார். அவர் முகம் அவல் பாயசத்தில் அவிசல் பிஸ்தாப் பருப்பைக் கடித்த மாதிரி என்னவோ மாதிரியாகிவிட்டது.

    தேவை சிறுநீரகம்.

    சீரகம் என்று முதலில் படித்துவிட்டு அப்புறம் உற்றுப் பார்த்த பின்தான் சிறுநீரகம் என்று அவருக்குத் தெரிந்தது. விளம்பரத்தின் சாராம்சம் இதுதான் :

    புண்ணியகோடி என்ற 45 வயது மில் அதிபர் ஒருத்தர் சிறுநீரகக் கோளாறால் படுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு யாரேனும் மனமுவந்து ஒரு சிறுநீரகம் (கிட்னி) தானம் செய்ய முன்வருவார்களேயானால் நன்றியுடன் ரூ.2,000 தருவதற்கு அவர் தயாராயிருக்கிறார்.

    அப்புசாமி யோசித்தார்.

    சிறுநீரகத் தானம். ரூபாய் இரண்டாயிரம்...

    அப்புசாமிக்கு பாத்ரூம் கட்டும் விஷயமாக உடனடியாக இரண்டாயிரம் வேண்டியிருந்தது. ஆகவே தன் நண்பர்களுடன் அவசரமாக ஒரு கிட்னி மாநாடு கூட்டித் தன் சந்தேகங்களையெல்லாம் அலசினார். ரசகுண்டு தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம் கேட்டு வந்து தாத்தாவுக்கு சில 'இன்ஸைட் இன்பர்மேஷன்' தந்தான்... அதன் விவரமாவது!

    ஒரு சட்னிக்கு இரண்டு இட்லி எப்படி உண்டோ அது மாதிரி ஒரு மனிதனுக்கு இரண்டு கிட்னி - அதாவது சிறுநீரகம் இரண்டு - உண்டு.

    எப்படி சட்னிக்கு ஒரு இட்லி இருந்தாலும் போதுமோ அதுபோல் மனிதனுக்கு ஒரு கிட்னி இருந்தாலும் போதும்.

    புண்ணியகோடி (வயது 45) கடகடவென்று அவரது மில்லைப்போலச் சிரித்தார். 'படுத்த படுக்கையிலிருந்தாலும் சிரிப்புக்கொண்ணும் குறைச்சலில்லை' என்று அப்புசாமி எண்ணிக்கொண்டார்.

    விளம்பரத்தைப் பார்த்துட்டு வந்தியா? ஓய்! பெரியவரே! நீங்களா எனக்கு கிட்னி தானம் பண்ண வந்தீங்க?

    அப்புசாமிக்கு ரோஷமாக வந்தது.

    சில பேரிடம் பேசிப் புரியவைப்பதைக் காட்டிலும் காரியத்தை செய்துகாட்டுவது மேல் என்று அப்புசாமிக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம், ஐஸலகும்மா! என்று வாயில் விரலை வைத்து ஒரு விசில் அடித்தவாறு சக்கர பல்டி ஒன்று போட்டார். அடுத்த நிமிடம் இன்னொரு அந்தர் அடித்துத் தொபுகடீலென்று புண்ணியகோடியின் அருகே படுக்கையில் போய் அமர்ந்தார்.

    அசந்து போய்விட்டார் புண்ணியகோடி. மூக்கின் மேல் விரலை வைத்தவர், சார்! உங்களை நான் தப்பா எடைபோட்டு விட்டேன். நீங்க அசல் கிழவன்தானா... இல்லே. கிழவர் வேஷம் போட்டுவிட்டு வந்த ஜெய்சங்கரா? என்றார்.

    அப்புசாமிக்கு மூச்சு இரைத்தது. இருந்தாலும் சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டு, சும்மா ஒரு ஸேம்ப்பிள் காமிச்சேன். அந்த ஜன்னலுக்குத் தாவிக் காட்டணுமா? என்றார்.

    வேண்டாங்க. நான் அதிருஷ்டக்காரன். நான் அதிருஷ்டக்காரன். நீங்க நிச்சயம் ஏதோ பழைய கால சித்தர் மாதிரி இருக்கீங்க... உங்க கிட்னி கிடைக்கறதுக்கு நான் என்ன பாக்கியம் பண்ணியிருக்கணுமோ? கொஞ்சம் ரேட்டை முன்னே பின்னே போட்டுக் கிட்டீங்கன்னா ரெண்டு கிட்னியுமா வேணும்னாலும் எடுத்துக்கறேன்! என்றார் அந்த பிஸினஸ்காரர்.

    அப்புசாமி, ஒண்ணுதான் தர முடியும். சீக்கிரம் எடுத்துக்கிட்டு ரூபாயைக் கொடுங்க! என்று ஆர்வத்துடன் அவசரப்படுத்தினார்.

    அப்புறம்தான் கிட்னி என்கிற சமாசாரம் கிரிணிப் பழ வியாபாரம் மாதிரியல்ல, ஆபரேஷன் பண்ணி வயிற்றுக்குள்ளிருந்து எடுக்கவேண்டியது என்பதும் அதற்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் இருக்கிறது என்பதும் அவருக்கு ஞாபகம் வந்தது.

    நாளைக்கே நர்ஸிங் ஹோமுக்கு வந்திடறேன்... நம்ப சரக்கு கியாரண்டியான சரக்கு நைனா, என்று ஜம்பமாகச் சொல்லிக்கொண்டு மாடியிறங்கி முன் ஹாலுக்கு வந்தார்.

    அவர் பிடரியில் யாரோ பளார் என்று ஓர் அறை விட்டமாதிரி இருந்தது. 'பட்டப்பகலில் கூட இப்படி ஒரு எக்ஸார்ஸிஸ்ட் பேயா?' என்று திரும்பிப் பார்த்தார்.

    இரண்டு முரட்டுப் பேர்வழிகள்.

    யோவ், பாம்புக்கு நீ பால் வார்க்கறே. தெரியுமா சேதி? நீ கிட்னி தானமா பண்ண வந்தே? உன்னைக் சட்னி பண்ணிடுவோம்... கபர்தார்!

    அந்த ஆள் அப்புசாமியின் வாயை அடைத்துக் கொண்டு அவர் கையை சேவை மிஷின் மாதிரி முறுக்கியதும் அப்புசாமிக்கு உயிரே போவது போலிருந்தது.

    அப்புறம்தான் அவருக்கு மெதுவே விஷயம் தெரிந்தது.

    தங்கள் எஜமானைப்பற்றி அந்த வீட்டு வேலைக் காரர்களுக்காகட்டும், மில் தொழிலாளிகளுக்காகட்டும் நல்ல அபிப்பிராயம் இல்லையாம். ரொம்பக் கொடுமைக்காரராம் அந்த ஆள். ஆகவே அவருக்கு கிட்னி யாரும் தானம் கொடுத்து விடாதபடி அவர்கள் சாமர்த்தியமாகத் தடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். அவர்களையும் மீறி எஜமானர் பத்திரிகை விளம்பரம் தந்துவிட்டாராம்.

    அப்புசாமியின் எதிரிலிருந்த ஆள், சுண்ணாம்பு சுரண்ட ஒரு பெரிய பிச்சுவாவை எடுத்தான். அப்புசாமிக்கு நடுங்கியது.

    உனக்கு உசிர் வேணும்னா அவனுக்குத் தராதே. இல்லியானா. ஒரே சதக்!

    பாத்ரூம் கட்டும் ஆசையை அந்தக் கணமே விட்டுவிட்டு புண்ணியகோடியிடம் ஓடினார் அப்புசாமி.

    உன் கிட்னி எனக்கு கட்டாயம் தேவை. பத்தாயிரம் ஆனாலும் தர்ரேன். அந்தக் கழுதைங்க பேச்சைக் கேட்டுட்டு நீ தர மறுத்தியானால் இதோ பார்த்தியா? தலையணைக்கு அடியிலிருந்து ரிவால்வரை எடுத்தார் புண்ணியகோடி.

    ஐயோ! ஐயோ! இருதலைக் கொள்ளி எறும்புதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இரு கிட்னி எறும்பா இருக்கிறேனே! என்று அலறினார் அப்புசாமி. நண்பர்களை சரண் புகுந்தார்.

    அம்மாடி! அடேய் ரசம்! நீ வெறும் ரசம் இல்லைடா.. கொத்துமல்லி போட்ட பெங்களூர் தக்காளி ரசம்! என்று அவனைக் கட்டிக் கொண்டார். அப்புசாமி. அவனுடைய உச்சந்தலையில் சில பல முத்தங்களைக்கூட வழங்கினார். எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் நான் மூளையில்லாமலே பிறக்கவேண்டும். நீயே என் மூளையாக இருக்கணும்டா...

    மலைபோல் அவருக்கு வந்த பிரச்சினையை ரசகுண்டு ஒரு யோசனை சொல்லி நொடியில் தீர்த்து விட்டான்.

    ரசகுண்டுவுக்கு ஒரு டாக்டரைத் தெரியும். வால்போல பல பட்டங்கள் கொண்டவர்.

    ரசகுண்டு அங்கேயும் இங்கேயும் பீராய்ந்து ஒரு நூறு ரூபாய் திரட்டிக் கொண்டு அப்புசாமியை அவரிடம் கூட்டிச்சென்று அவருக்கு ஒரு சர்டிபிகேட் வாங்கித் தந்துவிட்டான்.

    சர்டிபிகேட் என்றால் வெறும் ஒப்புசப்பு சர்டிபிகேட் இல்லை. அப்புசாமியின் புகைப்படம் ஒட்டிய ஆணித்தரமான சர்டிபிகேட். அந்தச் சர்டிபிகேட்டிலிருந்த வாசகமாவது :

    அப்புசாமி என்ற இந்த மனிதருக்கு கிட்னி என்பதே கிடையாது. இவர் ஓர் அதிசயப்பிறவி. கிட்னி இல்லாமலே இவர் இயங்கி வருகிறார்.

    அப்புசாமி மில் சொந்தக்காரரிடம் அந்தச் சர்டிபிக்கேட்டை கொண்டு போய்க் காட்டினார். அவருக்கு 'சே!' என்று ஆகிவிட்டது. அவருடைய எதிரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

    தந்திரம் பலித்தது. விடுதலை! விடுதலை! விடுதலை!

    அந்த மகிழ்ச்சி இரண்டு நாளைக்குள் எதிர்பாராத ஒரு திருப்புமுனையைத் தரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

    இரண்டு நாட்கள் கழித்து அவருக்குப் பிடித்தமான தமிழ்ப் பத்திரிகையைத் தூக்கிக்கொண்டு ரசகுண்டு மூச்சிரைக்க ஓடி வந்தான். தாத்தா! தாத்தா! உங்க போட்டோ பத்திரிகையில் வந்திருக்குது! என்றான்.

    அப்புசாமி டேய்! நான் இன்னும் செத்துப் போகலையேடா... அதுக்குள்ளேயா வந்துட்டுது? என்றவாறு பத்திரிகையை வாங்கி பார்த்தார்.

    அதிசய மனிதர்! மருத்துவர்கள் தேடுகிறார்கள்! இந்த அதிசய மனிதரை எங்கேயாவது பார்த்தால் உடனே பிடித்துக் கொண்டுவந்து ஜி. ஹெச்சில் ஒப்படையுங்கள். அல்லது தகவல் கொடுங்கள். தகுந்த சன்மானம் உண்டு - மருத்துவப் பிரிவு.

    என்னடா ரசம்! கிணறு வெட்டப் பூதம் கிளம்பின மாதிரி ஆயிட்டுது! என்றார். நான் என்ன திருவான்மியூர் பாங்க் கொள்ளைக்காரனா? இல்லாட்டி லைசென்ஸ் இல்லாத நாயா? என்னை எதுக்குப் பிடிச்சுத் தரணும்?

    தாத்தா! உங்களை டாக்டர்களெல்லாம் பரிசோதனை பண்ண விரும்பறாங்க போலிருக்கு. உங்களுக்குக் கஷ்டமே இல்லை. ஜாலியா வேளா வேளைக்கு ராஜோபசாரம் பண்ணுவாங்க. கும்பல் கும்பலா கியூ வரிசையிலே வந்து ஜனங்க பார்ப்பாங்க. அமெரிக்காகூட நீங்க போகலாம் தாத்தா... சான்ஸ் இருக்குது. புறப்படுங்க ஜி. ஹெச்சுக்கு.

    அப்புசாமியின் வயிற்றைச் சப்பாத்தி மாவு பிசைவது போலக் கும்பலான டாக்டர்கள் உட்கார்ந்து மாறி மாறிப் பிசைந்தார்கள். அப்புசாமி, என்னங்க டாக்டர்! என் வயிறென்ன பஸ் ஹார்னா? பம் பம்னு சின்னப்பசங்க மாதிரி ஆளாளுக்கு அழுத்திப் பார்க்கறீங்க, என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

    உஸ்! என்றார் தலைமை டாக்டர். அவர் முகத்தில் லேசான ஒரு சந்தேகக்குறி. சில நோயாளிகள் ஆஸ்பத்திரியில் சுகமாக இருக்கலாம் என்பதற்கோ அல்லது தனக்கு ஒரு பப்ளிஸிடி வேண்டும் என்பதற்கோ இப்படி அதிசய புருடாக்களை அவ்வப்போது அவிழ்த்து விடுவது உண்டு என்பது அவர் அனுபவம்.

    'ஏய்யா! என்றார் அப்புசாமியைப் பார்த்து, நிஜமாகவே உமக்கு கிட்னி இல்லையா?"

    அப்புசாமி சிரித்தார். அதே சமயம் 'ஆசாமி சந்தேகப்படறதைப் பார்த்தால் அமெரிக்கப் பயணம் ஹோகயா போலிருக்கிறதே' என்று தோன்றிவிட்டது.

    நான் சொன்னால் பொய்யாயிருக்கும்! எங்க ரசம் நூறு ரூபாய் தண்டம் அழுது டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்திருக்கானே...அதுக்கு என்ன அர்த்தம்! என்றார்.

    தலைமை டாக்டரின் மூளையில் ஒரு சிறு பொறி. நூறு ரூபாய் தண்டம் அழுது சர்டிபிகேட்!

    தலைமை டாக்டர் அந்தச் சர்ட்டிபிகேட்டை இப்போதுதான் நன்றாகப் பார்த்தார்.

    டாக்டர் பூர்ணநாத்...

    தனது உதவியாளர்களிடம் ஏதோ கூறினார். அவர்கள் உடனே பழைய மருத்துவ கெஜட்டுகளையும் பதிவுப் புத்தகங்களையும் அரை மணி நேரம் புரட்டினர்.

    டாக்டர் பூர்ணநாத் என்ற பெயரில் எந்த டாக்டரும் பதிந்து கொண்டதற்கான சான்றே பதிவேட்டில் இல்லை.

    உங்க டாக்டர், டாக்டரே இல்லை போலிருக்கே? என்றார் தலைமை டாக்டர்.

    அப்புசாமிக்கு அவரை எதிர்த்துப் பேசினால் ஏதாவது இன்னும் விபரீதம் வந்து தொலையப் போகிறது என்று தோன்றிவிட்டது. ஆகவே தடாலென்று கட்சி மாறிவிட்டார்.

    ஹஹ! என்று சிரித்தார். டாக்டர் சார்! நீங்க சொன்னது கரெக்ட். எனக்கு அவன் மேலே எப்பவும் சந்தேகம்தான். இவனெல்லாம் ஒரு டாக்டரா இருக்க முடியுமான்னு? நான் இதுக்குன்னே அவனுக்கு ஒரு டெஸ்ட் வைக்கத்தான் போனேன். நான் வரேன் டாக்டர்! என் வேலை முடிஞ்சுது? தப்பினால் போதும் என்று நழுவி விட்டார்.

    ஒரு வாரம் கழித்து...

    சீதாப்பாட்டி ஆச்சரியத்துடனும், அதே சமயம் எரிச்சலுடனும், ரிஜிஸ்டர் போஸ்ட் ஃபார் யூ! யார்கிட்டே கடன் வாங்கித் தொலைத்தீர்கள்? ரிஜிஸ்டர் நோட்டிஸ் வந்திருக்கு! ஐ ஆம் நாட் கோயிங் டு ஹெல்ப் யூ! தட் இஸ் டெஃபனிட்! என்றாள்.

    அப்புசாமி ஒருகால் தோழன் ரசகுண்டுவே நூறு ரூபாய்க்காக நோட்டீஸ் விட்டிருப்பானோ என்று பயந்து நடுங்கி ஒரு வழியாகக் கையெழுத்துப்போட்டு வாங்கிப் படித்தார்.

    இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு செக், அவர் பெயருக்கு! அத்துடன் சுருக்கமான நன்றி அறிவிப்புக் கடிதம்...

    மருத்துவத் துறையினர் பரிந்துரைத்த சிபாரிசுப்படி போலீஸ் இலாகாவிலிருந்து அவருக்கு அந்தத் தொகை வந்திருந்தது.

    வாசகம் வருமாறு :

    மருத்துவ இலாகாவுக்குக் களங்கம் ஏற்படுத்துவது போல நீண்ட நாளாக போலி டாக்டராக இருந்த ஒரு குற்றவாளியைப் பிடித்துக்கொடுக்கத் தாங்கள் உதவியதற்கு எங்கள் நன்றியையும், தாங்கள் மேற்கொண்ட சிரமங்களுக்குச் சிறு அன்பளிப்பாக ரூ. 2000மும் இத்துடன் அனுப்பியுள்ளோம்.

    சீய்தே! என்றார் அப்புசாமி அலட்சியமாக செக்கை மனைவியின் கண் முன்னே இப்படியும் அப்படியும் ஆட்டியவாறு. இதை என்ன பண்ணப் போறேன் தெரியுமா? தனியாக ஐயாவுக்கென்று பாத் ரூம்! ஏர் கண்டிஷன்கூடப் பண்ணிக்கப்போறேன்! என் வீடு! என் பாத்ரூம்! என் பேப்பர்! ஹ ஹ! எத்தனை மணி வேண்டுமானலும் சமாதி மாதிரி உள்ளேயே கிடப்பேன். புரியுதாடி?

    சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டாள்.

    3. என்னிடம் வாலாட்டாதீர்கள்

    தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள், என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள்..

    ஜிப்பா, பனியன் இவைகளைக் கழற்றிவிட்டு, தனது தேக காந்தியைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்புசாமி, ஏய், என்ன இது, ஆட்டு வியாபாரி பிடித்துப் பார்க்கிற மாதிரி கையைப்போட்டு என்னவோ திருகுகிறாயே? என்றார்.

    என்ன ஆச்சரியம்! என்றாள் சீதாப்பாட்டி.

    பிரைமரி வாக்ஸினேஷன் தழும்புகூடக் காணோமே. உங்களுக்குக் குழந்தையில் அம்மையே குத்தவில்லையா?

    அப்புசாமி சும்மா இருந்திருக்கக்கூடாதா? பெருமிதத்துடன், குழந்தையில் மட்டுமல்ல, அதற்கப்புறம் இதோ இன்றைய தேதி வரையில் ஒரு அம்மை குத்தற இன்ஸ்பெக்டர் பயலிடமும் நான் மாட்டிக்கொண்டது இல்லை! என்று சொல்லித் தொலைத்து விட்டார்.

    அவ்வளவுதான்.

    "ஸ்மால் பாக்ஸ் இராடிகேஷனுக்காக ஸ்கீம் மேலே ஸ்கீம்

    Enjoying the preview?
    Page 1 of 1