Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thullal
Thullal
Thullal
Ebook243 pages1 hour

Thullal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'துள்ளல்' ஜ.ரா. சுந்தரேசன் எழுதிய நாவல் பத்திரிகை வெளிவந்தபோது வாசகர்கள் வெகுவாக படித்ததுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் ரசனையான நாவல் என்பதற்கு அடையாளமாகும்.

இவர் பாக்கியம் ராமசாமியாக எழுதும்போது துள்ளிவரும் நகைச்சுவையை ரசிக்க வாசகர் கூட்டம் காத்திருந்தது.

இந்த நாவலில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனால் நேர்ந்த கேடுகளை சித்தரிக்கிறார். 'சமூக கொடியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற செய்தியை இந்நாவல் வழங்குகிறது.

சமதாயத்தில் தவறு செய்யும் ஒருவன், எப்படி தண்டனையை அநுபவிக்கிறான் என்ற எச்சரிக்கையும் இந்நாவல் தரத் தவறவில்லை.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103325
Thullal

Read more from Ja. Ra. Sundaresan

Related to Thullal

Related ebooks

Reviews for Thullal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thullal - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    துள்ளல்

    Thullal

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    பதிப்புரை

    'துள்ளல்' ஜ.ரா. சுந்தரேசன் எழுதிய நாவல் பத்திரிகை வெளிவந்தபோது வாசகர்கள் வெகுவாக படித்ததுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் ரசனையான நாவல் என்பதற்கு அடையாளமாகும்.

    இவர் பாக்கியம் ராமசாமியாக எழுதும்போது துள்ளிவரும் நகைச்சுவையை ரசிக்க வாசகர் கூட்டம் காத்திருந்தது.

    இந்த நாவலில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனால் நேர்ந்த கேடுகளை சித்தரிக்கிறார். 'சமூக கொடியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற செய்தியை இந்நாவல் வழங்குகிறது.

    சமதாயத்தில் தவறு செய்யும் ஒருவன், எப்படி தண்டனையை அநுபவிக்கிறான் என்ற எச்சரிக்கையும் இந்நாவல் தரத் தவறவில்லை.

    மா.நந்தன்.

    1

    இருட்டில் பயமில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. தண்ணீரால் இருட்டைக் கரைத்துவிட முடியுமா என்ன? அப்படி ஒரு தன்மை இருந்தால் மழை பெய்த மறுநாள் ஊர் பூராக் கன்னங்கரேலென்றிருக்கும்.

    சாயந்தரம் இருட்டுக் கட்டியதும் மழை. நீண்ட நாள் கழித்து என்ன குதூகலம்.. அவளுக்குத் திருமணம் என்று ஆகும் போது இப்படித்தான் திடீர்க் குதூகலம் ஏற்படுமோ! உயரமான பால்கனியிலிருந்து கீழே பார்த்தாள். நிர்வாண மங்கைகள் போல் சோடியம் வேப்பர் கம்பங்கள் ஜொலித்தவாறிருந்தன. எதிரேயிருந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பொன் குடத்தைத் துடைப்பது போல மழை நறுவிசாகத் துடைத்திருந்தது.

    மழைக்கு ஒதுங்கி இருந்தவர்களில் இரண்டு பேர், பேயட்டும் பேயட்டும் என மழையை வாழ்த்தினர். ஏன் இந்த மடையர்கள் இவ்வளவு நாள் வாழ்த்தவில்லை.

    சாலையில் ஒரு நடமாட்டமில்லை. இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள், பெரும்பாலும் தூங்குமூச்சி மரங்கள். தண்ணீர்ப் பிரவாகம். ஒற்றை ஆள்கூட, ஒரு மாடு, நாய்கூட, இல்லாத சூனியமான ரோடு. உலகம் பிறந்தபோது இப்படித்தான் கபடில்லாமல், கலவரமில்லாமல் இருந்திருக்குமோ!

    கட்டிடங்கள் சாதுவானவை. நகர்வதில்லை. மனிதன்தான் குறுக்கும், நெடுக்கும் நடந்து சந்தடி செய்து உலகத்தை மாசுபடுத்துகிறான். உலகின் அசல் ஓம்கார நாதம் இவனது விகார சத்தத்தால் கேட்க முடியாமல் போகிறது. விளக்குகளெல்லாம் பட்டென்று அணைந்தன. மாநகர சபைக்கு அவள் ரசித்தது பொறுக்கவில்லை.

    இருட்டையும், மகிழ்ச்சியாக ரசித்தாள் அவள். அவளுடைய அப்பா ஒரு கவிதையில் கேட்டது போல, கருப்பையில் இருந்த பத்து மாசமும் அங்கே நைட்லாம்ப்பா எரிந்தது. அப்படி எரிந்திருந்தால் அந்த உஷ்ணத்தில் ஒரு கால் மேலும் கரியாகப் பிறந்திருப்பாளோ!

    கறுப்பு ஏன் உலகத்தை ஜெயிக்கவில்லை? பல தெய்வங்களைக் கறுப்பாகத்தானே கற்பித்திருக்கின்றனர். என்னை ஒரு கறுப்பன் மணக்கக் கூடாதா என்ன? மேகக் கறுப்பு கரையும் ஒரு நாள்; ஆனால், அவளுடையது?

    அம்மா கடன்காரியின் செக்கச்செவேல் நிறம் நினைவுக்கு வந்தது. சிவப்பு விதவை. சிவப்பு என்றால் பயப்படுத்துகிற குங்குமச் சிவப்பா? பரங்கிக் காயைப் பிளந்த மாதிரி ஒரு கடலை மாவு வெண்மை. சிக்கென்ற உடம்பு. ரத்னச் சிவப்பில் அழகிய குறும் உதடு. 52 வயதில் அப்படி ஒரு கட்டுக் குலையாத உடல்வாகு. கூந்தலைத் தொங்கவிட்டால் கரும் குற்றாலம்.

    'ஏம்மா என்னை மட்டும் இப்படி கறுப்பாக உயரமாக ஒல்லியாகப் பெற்றாய். உன் அழகு பூராவையும் சின்னவளுக்குத் தந்துவிட்டே. முதலில் பெரியவளுக்குத்தானே கொடுத்திருக்க வேண்டும்!'

    அனுஷாவுக்கு அப்பாவைத் திட்ட வேண்டும் போலிருந்தது. கரும் தடியன். நெப்பை அணைத்த நிறம். தார்க் கறுப்பு.

    கவிஞர்!

    மொகரைக் கட்டை, மீசை, புருவம், வெளுப்பு ஜிப்பா. மீசையை முறுக்கத் தெரியும். முன் தலை வழுக்கை. புகையிலை வெற்றிலை, கொழகொழ, சுற்றிலும் கொஞ்சம் கூட்டம். இலக்கிய மன்றங்கள், பொன்னாடைகள், கை தட்டல், போக வரக் கட்டணம்.

    'கறுப்பரைக் கறுப்பரே காமுறுவர்' என்று அவளைச் செல்லமாகக் கிள்ளி, கறுப்புதான் உலகை ஜெயிக்கப் போகிறது என்று பேத்துவார்.

    'பத்து மாசம் தாயின் கருப்பையில் இருந்தபோது, அங்கே நைட் லாம்ப்பா எரிந்தது?' என்று கறுப்புக்குக் கட்சி ஆடுவார். அவரும் கரியாகி விட்டார். அவர் கவிதைகளைச் சில பதிப்பகத்தார் இலவசமாக எடுத்துக் கொண்டனர்.

    ........கவிஞர் கந்தய்யாவின் முதலாமாண்டு மறைவு தினத்தை விமரிசையாகக் கொண்டாட விரும்பிய கவிஞர் கந்தையா ரசிகர் மன்றத்தினர், கவிஞர் குடும்பத்துக்குப் பொற்கிழி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாவாலும், தங்கையாலும் வர முடியாத நிலை. அம்மாவுக்குக் காலில் சின்ன பிராக்சர். புத்தூர் பயணம் சின்ன மகளுடன். அப்பாவின் கவிதை வாரிசாக கவிதாயினி அனுஷ் நிதியைப் பெற்றுக் கொள்ள வந்தாள்.

    கவிதாயினி அனுஷாவின் உள்ளம், மழையை ரசித்தது. உள்ளம் கவிதை சமைக்க முயன்றது.

    மழை!

    மேகம் கைவிட்டதால்

    கண்ணீருடன்

    பிறந்த மண்ணுக்கு!

    எழும்பூரில் வந்து இறங்கியபோது ராஜ வரவேற்பு அவளுக்கு. 'கனல் கவிஞர் கந்தய்யா மன்றம்' என்ற கொட்டை எழுத்து அட்டையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு சிப்பந்தி பிளாட்பாரத்தில் காத்திருந்தான்.

    கந்தய்யா நினைவு மன்றத்தின் தலைவர் மயில்சாமி ஒரு தனியார் வங்கியில் மானேஜர். சொந்தத்தில் ஒரு பதிப்பகம் வைத்திருந்தார். வசதியான துட்டு படைத்தவர். ஆனாலும், கச்சிதம் - கனகச்சிதம். பண கச்சிதம், குணகச்சிதம். அவரது பதிப்பகத்துக்குப் புத்தகங்கள் தடித்த அட்டையினாலும், பளிச்சென்ற அச்சினாலும் புகழ்பெற்றவை. விலை? சிலரால்தான் வாங்க முடியும். லைப்ரரி ஆர்டரை எப்படியாவது பிடித்து விடும் திறமை அவருக்கு உண்டு.

    'கவி அகழ்வு' என்று அவரது பதிப்பகத்துக்குப் பெயர். வருடத்துக்கு நாலு புத்தகம் வெளியிட்டாலும், வெளியீட்டார்கள் மத்தியில் ஒரு மதிப்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். 'பார்வை' என்றொரு இலக்கியக் கூட்டத்தைச் சொந்த செலவில் இரு மாதத்துக்கு ஒரு தடவை நடத்திக் கொண்டிருந்தார். அவரது பங்களாவின் மேல் மாடியில் சுகமான கீற்றுக் கொட்டகையில் இரண்டாவது மாதக் கடைசி வெள்ளியன்று மாலை ஐந்து மணிக்கு நடக்கும். அதாவது ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் என்ற மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். ஏதேனும் பிரளயம் ஏற்பட்டு அன்று நடக்க முடியாவிட்டால் அடுத்த வார வெள்ளியில் நடக்கும்.

    'பார்வை'யின் பார்வை ஒருவிதத்தில் ஓரப் பார்வை.

    வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுபவர்களை அங்கே காண முடியாது. அப்படிப்பட்டவர்கள்மீது 'பார்வை' செல்லாது. பெரும்பாலும் கவிஞர்கள். அபூர்வமாகச் சில கதாசிரியர்கள். உயர்ந்த பார்வையாளரான மயில்சாமிக்கு 'கவிக்காவலன்' என்ற விருதை, கவிஞர் கந்தய்யாதான் இரண்டு வருடத்துக்கு முன் தந்தார். மயில்சாமி அழகாகத் திடமாகப் புத்தகத்தை வெளியிடுவதில் கவிஞர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், சன்மானம் என்பதுதான் மனதை மிகவும் வருத்தக் கூடியது.

    இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்துவிட்டது. சாதாரண ஹோட்டல்களில் இரண்டு மெலிதான வெள்ளை வட்டங்கள் ஐந்து ரூபாய்க்கு விற்கிறது. காபி ஆறு ரூபாய். தோசை மீதுள்ள ஆசை போயிற்று. கந்தய்யா வேடிக்கையாகச் சொல்வார்.... கவிஞராதலால் பல இடங்களில் தான் கண்டுபிடித்த நயத்தைக் கூறி மகிழ்ந்திருக்கிறார் :

    'சாதா தோசையை சாதா தோசை என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவு. பதினாறு ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் வரை விற்கப்படும் அதுவா சாதா தோசை? 'பெருமதிப்புக்குரிய தோசை' என்றுதான் குறிப்பிட வேண்டும். சாதா மனிதரை 'மதிப்புக்குரிய' என்று குறிப்பிடுகிறோம். சாதா தோசையையும் அவ்வாறே குறிப்பிடுவோமாக' என்று பேசிக் கைதட்டல் பெற்றிருக்கிறார்.

    என்னதான் நயமாக, பயமாக எழுதினாலும் 'கவிதைக் காவலன்' மயில்சாமி பத்து ரூபாய்க்கு மேல் தரமாட்டார். ஆனால், அந்தப் பத்து ரூபாயை முறைப்படி அழகாக அனுப்பி வைப்பார். பத்து ரூபாய் அன்பளிப்புத் தரப்பட்டிருப்பதாக ஓர் தகவல் முதலில் அனுப்பப்படும். அத்தகவலுடன் முன்கூட்டிக் கையெழுத்துப் போடச் சொல்லி ஒரு ரசீது இருக்கும். அதைப் பூர்த்தி செய்து அனுப்பியவுடன், ஒரு ஒப்பந்தத்தாள் இருபத்தேழு நிபந்தனைகளுடன் பொடி எழுத்தில் அச்சிட்டு வந்து சேரும்.

    கவிதையின் வெளியீட்டு உரிமை பற்றி நிபந்தனைகளைப் பட்டியலாக வெளியிட்டிருப்பார்...

    அடுத்த நூற்றாண்டு வரை, எந்தவிதச் சிக்கலும் வராது என்பதைக் கவிஞர் உறுதிப்படுத்திக் கையொப்பமிட்டுப் படிவங்களை அனுப்பியவுடன் பத்து ரூபாய் அனுப்பித்தே விடுவார் மணியார்டரில் - மணியார்டர் கமிஷன் கழித்துக் கொண்டுதான்.

    கவிதை வெளியானதும், நூலாசிரியருக்கு இரண்டு பிரதிகள் தவறாமல் அனுப்பி வைப்பார். அவ்வப்பொழுது சில கவிஞர்களைக் கண்டெடுத்துப் பொன்னாடை போர்த்துவார். பொன்னாடை என்பது படாடோபமாக இருக்கலாகாது என்ற கருத்தை உடையவர் மயில்சாமி.

    ஆகவே கைத்தறிப் பொருட்காட்சி சமயம் லாட்டாக ஒரு நூறு துண்டுகள் (நாப்கின் சைஸில்) வாங்கி வைத்திருப்பார். டகார் டகாரென்று போர்த்திவிடுவார்.

    கவிதைக் கூட்டத்தில் மைக் கிடையாது. 'வீட்டு நிகழ்ச்சி போல இருக்க வேண்டுமே தவிர, இரைச்சலும், சண்டையும், ஆரவாரங்களும் கவிதைக் கூட்டங்களில் இருக்கலாகாது' என்ற கொள்கை உடையவர்.

    அவர் வேலை பார்த்து வந்த வங்கிக்குச் சொந்தமான 'கெஸ்ட் ஹவுஸ்' எப்போது காலியாக இருக்குமோ, அந்தப் பருவமே வருடாந்தரக் கவி அரங்கமோ, பட்டிமன்றமோ நடத்தத் தகுந்த பருவம். அது சமயம், அவரவர் செலவில் வெளியூரிலிருந்து வரும் கவிஞர்களை 'கெஸ்ட் ஹவுஸில்' கொண்டு வந்து அடைத்து விடுவார்.

    சாப்பாட்டு வசதிதான் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 'கெஸ்ட் ஹவுஸ்' சிப்பந்தி தலையைக் காட்டி விட்டு அந்தர் தியானம் ஆகி விடுவான்.

    பசித்தால் மெதுவாக மூன்று மாடி கீழே இறங்கிச் சென்று மெயின் ரோடில் எங்காவது நல்ல ஹோட்டல் இருக்கிறதா என்று விசாரித்துச் சாப்பிட்டு வர வேண்டும்.

    வங்கி அதிகாரிகள் வந்து தங்கும்போது அவர்களுக்குக் கார் வசதி இருக்கும். எங்கு வேணுமானாலும் சென்று, எந்த ஹோட்டலில் வேணுமானாலும் வங்கிக் கணக்கில் சாப்பிட்டுக் கொள்வார்கள்.

    ஆனால், கவிஞர்கள் அந்தச் சலுகையை எதிர்பார்க்க முடியுமா? புகழ் போதாதா காதையும், வயிற்றையும் நிரப்ப! மசால் தோசையும், இட்லி சாம்பாரும் யாருக்கு வேணும். சீ! சீ! அதெல்லாம் கவிதை படிப்பவர்கள் சாப்பிடுவதா?

    கவிதை எழுதுபவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள். ஆயிரம் இட்லிகளையும், பத்தாயிரம் தோசைகளையும் அவர்களால் ஒரு நொடியில் கற்பனையில் படைக்க முடியும்.

    .......அனுஷா மழையை ரசித்துக் கொண்டிருந்தாள். மன்றத்தினர் தரும் பொற்கிழியில் எவ்வளவு தொகை இருக்கும் என்றெல்லாம் அவளுக்குக் கவலை இல்லை. பொற்கிழியைப் பற்றித் தெரியாவிட்டாலும் மயில் சாமியைத் தெரியும். அப்பா உயிருடனிருந்த போது நாடாத லட்சுமி, அப்பா சவமாகி ஓராண்டு கழிந்த பின்பா வந்து கதவைத் தட்டப் போகிறாள்.

    கதவை யாரோ தட்டினார்கள்.

    லட்சுமியோ?

    மனசுக்குள் சிரித்தவாறு எழுந்து சென்று கதவைத் திறந்தாள். மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியும், மேற்படி ரகபனியனும் அணிந்த சிப்பந்தி, மேடம், உங்களுக்கு போன் வந்திருக்கு.... கீழே வாரீகளா? கவுன்டர்லே போய்ப் பேசுங்க. ஒங்க தங்காச்சியாம். சீக்கிரம் வாங்க.

    'தங்கை சுனந்தா கெட்டிக்காரி. மகா அழகு மட்டுமில்லை. ரொம்ப இன்ட்டலிஜென்ட். எப்படியோ விடுதியின் டெலிபோன் எண்ணைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டு விட்டாளே...

    2

    புத்தூரில் இந்த அளவுக்காகவது ஒரு லாட்ஜ் இருக்கிறதே என்று தபனனுக்கு மகிழ்ச்சி. தபனனுக்கு மட்டுமல்ல; அவனது தோழர்கள் ஜர்தா, அம்பி, வசிஷ்ட், கருப்பையா,

    Enjoying the preview?
    Page 1 of 1