Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedinal Theriyum
Thedinal Theriyum
Thedinal Theriyum
Ebook136 pages52 minutes

Thedinal Theriyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதைத் தேடினேன்?

தான் தானாக உணரப்பெற்ற மகான்கள் முன்னுரையோ பின்னுரையோ இன்றி சிவத்தோடு மங்களமாகிவிட்ட பெருமைகளைப் பாரத புண்ணிய பூமி பெற்றிருந்தாலும் தேடுதல் மட்டும் தொடர்கிறது. உள்ளளவும் அந்தத் தேடுதல் நடைபெறும்.

மனித குலத்துக்கு ஒரு சக்தி தரப்பட்டுள்ளது. அதனால் இருட்டிலும் ஜீவிக்க முடியும். ஒளியிலும் வாழ இயலும். மனிதம் மேலானதையே நாடும். அதி உயர்வே அதன் இலக்கு. மனிதன் இருளிலிருந்து ஒளிக்குத் தாவுகிறான். ஞானத்தை அறிந்து வர விஞ்ஞானத்தை ஏவுகிறான். மனிதன் இருளில் வசிக்கும் இனமல்ல. வெளிச்சத்தை விழையும் உயிரினம். இருள் என்பது வடிவத்தில் இருட்டு, இயல்பில் அஞ்ஞானம்.

'ஞானி எனக்குப் பிரியமானவன்' என்று கீதாசாரியன் பகர்ந்தான். ஏனெனில் ஞானியானவன் தேடுகிறவன். எதைத் தேட வேண்டும் என்று அறிந்தவன். முயற்சி குன்றாதவன். தேடினால் தெரியும். அவரவரது பக்குவத்துக்கு ஏற்ப தேடியவை நிச்சயம் தெரியும்.

தேடு. தேடு. தேடு.

நீ ஒரு பத்திரிகையில் உதவி ஆசியனாக இருந்து கொண்டிருந்தால் உனக்குத் தேடுவதற்கு நேரம் இராது. அவ்வப்பொழுது கிடைத்த நேரத்தில் சிந்திப்பவனால் ஞானத்தை தேட முடியாது. முழு நேரத் தேடுபவனாக ஆகு. இன்றே இங்கே இப்பொழுதே. எங்கு போவது என்றெல்லாம் யோசிக்கிறவனால் எங்கேயும் போக முடியாது. வழி காட்டுகிறவனை ஞானி அறிவான். ஞானியை வழிகாட்டி அறிவான்.

குருவாயூர் க்ஷேத்திரத்தை அடைந்து துறவியாவதற்கு நான் செய்த முயற்சிகளை இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103323
Thedinal Theriyum

Read more from Ja. Ra. Sundaresan

Related to Thedinal Theriyum

Related ebooks

Reviews for Thedinal Theriyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedinal Theriyum - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    தேடினால் தெரியும்

    Thedinal Theriyum

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    எதைத் தேடினேன்?

    தான் தானாக உணரப்பெற்ற மகான்கள் முன்னுரையோ பின்னுரையோ இன்றி சிவத்தோடு மங்களமாகிவிட்ட பெருமைகளைப் பாரத புண்ணிய பூமி பெற்றிருந்தாலும் தேடுதல் மட்டும் தொடர்கிறது. உள்ளளவும் அந்தத் தேடுதல் நடைபெறும்.

    குகையில் உள்ள இருள் - தன்னை அழிக்க ஒளி தேடி வந்தாலொழிய நீங்காது.

    இருள் ஏன் மடியவேண்டும். ஒளி அதனை ஏன் அழிக்க வேண்டும்?

    விலக்கின பாசி மீண்டும் படர்வது போல் - ஒளி அகற்றிய இருள் மறுபடி உருக்கொள்கிறது.

    அசுரர்களின் சிரசுகளை வெட்ட வெட்ட அவை தோன்றிக் கொண்டேயிருந்த தொடர்கதை - தொடர் போராட்டம் - உலகம் தோன்றியதிலிருந்து இருந்து வருகிற நியதி.

    'எம் இறைவரே! அஸத்திலிருந்து ஸத்துக்கு எம்மை அழைத்துச் செல்லும்' என்று ரிஷி மகான்கள் கூவுவதிலிருந்து 'முதல் வியாபகம் இருள்' என்று தெரியக் கூடும்.

    இருட்டில் சில உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுக்கு ஒளி எமன் ஆகிறது.

    மனித குலத்துக்கு ஒரு சக்தி தரப்பட்டுள்ளது. அதனால் இருட்டிலும் ஜீவிக்க முடியும். ஒளியிலும் வாழ இயலும். மனிதம் மேலானதையே நாடும். அதி உயர்வே அதன் இலக்கு. மனிதன் இருளிலிருந்து ஒளிக்குத் தாவுகிறான். ஞானத்தை அறிந்து வர விஞ்ஞானத்தை ஏவுகிறான். மனிதன் இருளில் வசிக்கும் இனமல்ல. வெளிச்சத்தை விழையும் உயிரினம். இருள் என்பது வடிவத்தில் இருட்டு, இயல்பில் அஞ்ஞானம்.

    'ஞானி எனக்குப் பிரியமானவன்' என்று கீதாசாரியன் பகர்ந்தான். ஏனெனில் ஞானியானவன் தேடுகிறவன். எதைத் தேட வேண்டும் என்று அறிந்தவன். முயற்சி குன்றாதவன்.

    தேடினால் தெரியும். அவரவரது பக்குவத்துக்கு ஏற்ப தேடியவை நிச்சயம் தெரியும்.

    'வாழ்வு மாயம்இளமை அநித்யம்மரணமே நிச்சயம்'

    இதனை என்னால் நூற்று எட்டுத் தடவை எழுத இயலவில்லை. அதற்கான நிதானத்தை நான் ஆட்கொண்டிருக்கவில்லை.

    பிரபல எழுத்தாளரும் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருமான திரு. தேவன் அவர்கள் மறைந்த செய்தியை ஒரு டெலிபோன் எங்கள் சத்சங்கத்துக்குத் திடுமெனத் தெரிவித்தது. அப்போது நாங்கள் லிக் ஜெபம் எழுதிக்கொண்டிருந்தோம்.

    அவரவருக்கு பிடித்தமான இறைவனது திருநாமத்தைக் குறிப்பிட்ட நேரத்துக்கு எழுதுவதே லிக் ஜெபம்.

    நான் 'முருகா முருகா' என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

    செய்தி வந்ததும் ஆசிரியர் அவர்கள் பிரசுரகர்த்தருடன் தேவன் இல்லத்துக்கு விரைந்தார்.

    சத்சங்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

    வாய் பேசாமல் ஜெபத்தை அவரவர் எழுதிக் கொண்டிருந்தனர்.

    அழகிய விசாலமான பங்களாவில் மேல் மாடியில் அமைதியாக ஜெபம் எழுதிக் கொண்டிருந்தவர்களை தேவன் அவர்களின் மரணச் செய்தி தேடி வந்து பாதித்தது. ஆசிரியரும் பிரசுரகர்த்தரும் துக்கம் விசாரிக்க உடனே புறப்பட்டுவிட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து ஜெபம் எழுதிக் கொண்டிருந்தனர்.

    நான் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டேன். தேவனின் நகைச்சுவை எழுத்தினால் மிகவும் ஈர்க்கப்பட்டவன். அவரது எழுத்தாற்றலை வியந்தவன்.

    அந்த மகத்தான மனிதர் மரணமடைந்து விட்டாரா? எத்தனை கெட்டிக்காரராக இருந்தாலும் திறமைசாலியானாலும் முடிவு மரணம்தானா?

    என் பேனாவின் திசை மாறியது. 'முருகா முருகா முருகா' எழுதிக் கொண்டிருந்தவன்,

    'வாழ்வு மாயம்இளமை அநித்யம்மரணமே நிச்சயம்'

    என்று எழுதத் தொடங்கினேன். சிறிது நேரத்துக்கு மேல் எழுத இயலவில்லை. பேனாவையும் நோட்டுப் புத்தகத்தையும் கீழே வைத்தேன்.

    எழுந்தேன். மாடியிலிருந்து வேகமாகப் படி இறங்கினேன்.

    சத்சங்கத்திலிருந்த யாரும் எதுவும் கேட்கவில்லை. 'லிக் ஜெபத்தின்போது யாரும் பேசக் கூடாது' என்பது முக்கிய விதி.

    விடுபட்டது போன்ற சுதந்திர உணர்வு உடம்பெல்லாம் பரவியது. படிக்கட்டுகள் அற்றன. சிறகுகளை நான் காணவில்லை. ஆனால் அவை என்னை மிகப் பரிவாகப் பறக்கச் செய்தன. தேடு. தேடு. தேடு.

    நீ ஒரு பத்திரிகையில் உதவி ஆசியனாக இருந்து கொண்டிருந்தால் உனக்குத் தேடுவதற்கு நேரம் இராது. அவ்வப்பொழுது கிடைத்த நேரத்தில் சிந்திப்பவனால் ஞானத்தை தேட முடியாது.

    முழு நேரத் தேடுபவனாக ஆகு. இன்றே இங்கே இப்பொழுதே.

    எங்கு போவது என்றெல்லாம் யோசிக்கிறவனால் எங்கேயும் போக முடியாது.

    வழி காட்டுகிறவனை ஞானி அறிவான். ஞானியை வழிகாட்டி அறிவான்.

    குருவாயூர் க்ஷேத்திரத்தை அடைந்து துறவியாவதற்கு நான் செய்த முயற்சிகளை இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

    இங்ஙனம்

    ஜ.ரா. சுந்தரேசன்

    1

    தினமும் தியானத்தினால் தனது அகங்காரத்தை மனிதன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எனது ஆன்மிக ஆசிரியர் தெய்வத் திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் ஒரு சமயம் கூறினார்.

    தியானம் செய்வதற்கு பயிலுவதற்கு நிறையக் காரணங்களையும், தியானத்தின் பயன்கள் பற்றியும் நிறையப் பேர் விதம் விதமாகக் கூறியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள். அவ்வப்பொழுது நான் படித்தது உண்டு. கேட்டது உண்டு. ஆசிரிய ஆசான் கூறிய 'தியானத்தினால் அகங்காரத்தைத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்ற கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது.

    ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் ஒரு சமயம் தன்னுடன் சில பக்தர்களை உத்தரகாசிக்கு அழைத்துச் சென்றார். தனது குருநாதரான தபோவன மகராஜ் வாழ்ந்து வந்த ஆசிரமத்தை (குடில்) தன் பக்தர்களுக்கும் காட்ட வேண்டும் என்ற கருணையினால் அந்த சிரமத்தை மேற்கொண்டார்.

    குடீர் அடைந்து அங்கேயே சிஷ்யர்களுக்கு சில மணி நேரம் ஸாதனா வகுப்பு நடத்தினார். புனிய கங்காமாயியின் தாயன்பு வெள்ளமாகப் பிரவகித்துக் கொண்டிருக்க, அதனுடைய உயர்ந்த கரையிலே தபோவனரின் குடில் அமைந்திருந்தது.

    அந்தக் குடிலின் வாசலில் அமர்ந்துதான் சின்மயா தனது குருவிடம் ஆன்மவித்தை பயின்றார். அங்கே இப்போது தன் சீடர்களுடன். அந்த இடத்தின் அமைதியும் புண்ணிய கங்கைத் தாய் ஏற்படுத்திய பாசப் பசுவையும், தவசீலர்களின் தியானங்களினால், சுவாசத்தினால், புடமிடப்பட்ட மலையும், பாறையும், மண்ணும் ஓரொரு துகளும், வீசிய மந்திரத் தென்றலும், குஹ்யமான ரம்மியக் குளிரும் - சமவெளியிலிருந்து வந்த சாமான்யர்களின் உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

    ஸாதனா வகுப்புகள் என்பதை சுவாமி சின்மயாதான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும்.

    கீதை ஞான யக்ஞம் முடிந்ததும் ஸாதனா தினம் நிகழ்ச்சி நடைபெறும். ஏதாவது புண்ணிய தலத்துக்குத் தனது அடியார்களை சின்மயா அழைத்துப் போவார். போகிற இடங்களில் உள்ள வசதியான சீடர் யாராவது மொத்த அடியவர்களுக்கும் தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்திருப்பார்.

    பெரிய தோட்டம், துரவு போன்ற இடங்களில் - தற்கால ரிசார்ட்டுகள் மாதிரி இயற்கை எழிலுடன் அமைதியுடனுமுள்ள இடமாகவே குரு தேர்ந்தெடுப்பார். அருகில் ஒரு கோவில் இருக்கும். அது புராதனமானதாக இருக்கலாம். புதுக் கருக்கு அழியாததாகவும் இருக்கக்கூடும். அனைவரும் அறிந்த புண்ணித் தலமாக ஒரு சமயம் இருக்கும். கேள்விப்பட்டிராத இடமாகவும் ஒரு சமயம் இருக்கும். இடுப்பளவு உயர மரத்தில் மேனியெல்லாம் கனிகளாகக் காய்த்துத் தொங்கும் மாஞ்சோலையும் பூஞ்சோலையும் கொண்ட எவரும் புகமுடியாத எஸ்டேட்டுகள் உள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1