Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalaan
Kaalaan
Kaalaan
Ebook92 pages57 minutes

Kaalaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803310
Kaalaan

Read more from Sivasankari

Related to Kaalaan

Related ebooks

Reviews for Kaalaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalaan - Sivasankari

    http://www.pustaka.co.in

    காளான்

    Kaalaan

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சங்கர் புரண்டு படுத்தான்.

    தூக்கம் போய்விட்டது.

    மணி என்ன?

    ரேடியம் டயல் கடிகாரம் ஐந்து என்றது.

    சப்தம் இல்லாமல் எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டான்.

    உடம்பை முறுக்கி, சின்னதாய் சோம்பல் முறித்தபோது, அன்று தங்களது திருமணநாள் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

    ஐந்து வருஷங்கள் முடிந்து ஆறாவது எட்டிப்பார்க்கிறதா?

    வேதனை கலந்த சிரிப்பொன்று ஒரு பக்கமாய் உதட்டிலிருந்து சீறியது.

    தலையைத் திருப்பி பக்கத்தில் உறங்கும் சித்ராவைப் பார்த்தான்.

    நிலா முகம். நல்ல வெளுப்பு. சற்றே திறந்த உதடுகள். நெற்றியில் அலட்சியமாய்ப் படர்ந்திருக்கும் முடிக்கற்றை.

    அதே சித்ராதான். ஐந்து வருஷங்களுக்கு முன் இவன் கைப் பிடித்தபோது இருந்த சித்ராதான். முகத்தளவில் மட்டும்-

    கனத்த நெஞ்சோடு சங்கர் எழுந்து டீபாய் மேல் இருந்த சிகரெட், தீப்பெட்டி எடுத்துக்கொண்டு பால்கனிக் கதவைத் திறந்து, வெளியே போனான்.

    காலை நேரத்து டெல்லி ரொம்ப சமர்த்தாக இருந்தது.

    செப்டம்பர் மாசத்துப் பூக்கள் அந்த அரைகுறை இருட்டில் வெளுப்பும், சிவப்புமாய்ப் பளிச்சிட்டன.

    சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு சுவர்மேல் சாய்ந்தான்.

    சின்னவயசு சித்ராவின் நினைப்பு ஆளை ஓடஓட விரட்டியது.

    என்ன சிரிப்பு!

    என்ன துறுதுறுப்பு!

    லொடலொடவென்று என்ன பேச்சு!

    சித்ரா அவனுக்கு சொந்தம்தான். ஒன்றுவிட்ட மாமாவின் பெண். மாமா கோயமுத்தூர் மில் சொந்தக்காரர்களில் ஒருவர்.

    உறவினர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தபோது முதன் முதலில் அந்த வாயையும் துறுதுறுப்பையும் சங்கர் அனுபவித்தான்.

    சித்ரா அவனைவிட ஒன்பது வயசு சின்னவள். அப்போது அவன் பி.ஏ. கடைசி வருஷம். அவள்? பள்ளிக்கூடத்தில் ஏதோவொரு வகுப்பு.

    அகல ஜரிகைப் பாவாடை, சட்டை, ஒட்டியாணம், குண்டு ஜிமிக்கி, படா ஸ்டைல்.

    சந்தனக் கிண்ணத்தோடு குறுக்கும் நெடுக்கும் ஓடினவளின் கால் தடுக்க, அத்தனை சந்தனமும் அருகில் உட்கார்ந்திருந்த இவன் மேல் கொட்ட, பக்கத்தில் நின்றிருந்த பெரியம்மா, அதென்னடி கால் தரையிலே படாம ஒரு ஓட்டம்...? நிதானம் வேணாம் பொம்பளைக்குட்டிக்கு? என்று திட்ட, அவரே சும்மா இருக்கார், அப்பறம் உங்களுக்கு என்ன, பெரியம்மா? வேணும்னா கொட்டினேன்? என்னமோ கால் தடுக்கிடுச்சி... சந்தனம்தானே? கமகமனு இருக்கும். ஆளை வெரட்டாதீங்க என்று பெரியம்மாவிடம் நீளமாய்ப் பேசிவிட்டு இவன் பக்கம் திரும்பி, ஸாரி என்று சொல்லிப் புன்னகைத்தபடி திரும்ப அதே வேகத்துடன் ஓடிப் போனாள்.

    இந்த நிகழ்ச்சி முதலில் சங்கருக்கு நினைப்பு இல்லை. கல்யாணம் ஆனதும் சித்ரா எடுத்துச் சொன்ன பிறகே ஞாபகத்துக்கு வந்தது.

    பத்து வயசில் நடந்த சம்பவத்தை சித்ரா மறக்காமல் இருந்தது கூடப் பெரிசில்லை, அப்புறம் இங்கு அங்கு அரை நிமிஷம், ஒரு நிமிஷம் என்று இவனைச் சந்தித்ததைக்கூட மனசில் குறித்து வைத்துக்கொண்டதும் அல்லாமல், திருமணப் பேச்சை பெற்றவர் எடுத்ததும் நாசூக்காக இவனையே தான் மணக்க விரும்புவதை அவர்களிடம் தெரிவித்தாளே, அதுதான் நிஜமாகவே வியப்பில் ஆழ்த்தும் சமாசாரம்.

    பி.ஏ. முடித்து, எம். ஏ. முடித்து, அமெரிக்காவிலிருந்த அண்ணாவின் உதவியுடன் அங்கே சென்று எம்.பி.ஏ. படித்து, நியூயார்க்கில் இரண்டு வருஷம் வேலைபார்த்து, ரெண்டு பேரும் அயல்நாட்டுலே தங்கிட்டா எப்படி? இங்க இருக்கற பணம், அந்தஸ்து, செளகரியம் நமக்குப் போதாதா? என்று சதா அம்மா புலம்பியது தாங்காமல் தன் முப்பதாவது வயசில் இந்தியாவுக்கு வந்து, டெல்லியில் அருமையான வேலை ஒன்றில் அமர்ந்த பிறகு சித்ராவின் தந்தை ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் இவனைத் தேடிக்கொண்டு வந்தார்.

    அப்பா அம்மாவிடம் பேசிவிட்டாராம். அவர்களுக்குச் சம்மதமாம். இவன் 'ம்' என்று சொல்லிவிட்டால் முகூர்த்தத்தைக் குறித்துவிடலாமாம்.

    சங்கருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    என்னைவிட ஒன்பது வயசு சின்னவள், சின்னக்குழந்தை... அவளையா?

    ஆனால் இந்த எண்ணமெல்லாம் அடுத்த வாரம் அவளைப் பார்க்கும் வரையில்தான்.

    சாட்டை சாட்டையாய் காலும் கையும், நிலா முகமும், வாய் நிறைய சிரிப்புமாய் இருபத்தியொரு வயசுப் பெண்ணாக அவளைப் பார்த்ததும் சங்கர் மயங்கித்தான் போனான்.

    மனசை சந்தோஷம் விசிறிவிட அவன் திருமணத்துக்குச் சம்மதிக்க,

    Enjoying the preview?
    Page 1 of 1