Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Laser Sirippu
Laser Sirippu
Laser Sirippu
Ebook95 pages45 minutes

Laser Sirippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது நவீன - விளம்பர யுகம். இன்றைய பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலையில் பணம் அதிக தேவையாக இருக்கிறது. எனவே, பெண்களும் வேலைக்குப் போவது மிக அவசியமாகிறது.

பணத்தைச் சம்பாதிக்க விளம்பர உலகத்துக்குள் நுழையும் ஒரு பெண் படும் பாடு, அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவற்றை அழுத்தமாக, 'கிரைம்' கலந்து, திகிலுடன் வித்தியாசமாக சொல்லப்போகும் புதினம் இது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603298
Laser Sirippu

Read more from Devibala

Related to Laser Sirippu

Related ebooks

Related categories

Reviews for Laser Sirippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Laser Sirippu - Devibala

    http://www.pustaka.co.in

    லேசர் சிரிப்பு

    Laser Sirippu

    Author:

    தேவிபாலா

    Devibala
    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    என்னுரை

    இது நவீன - விளம்பர யுகம். இன்றைய பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலையில் பணம் அதிக தேவையாக இருக்கிறது. எனவே, பெண்களும் வேலைக்குப் போவது மிக அவசியமாகிறது.

    பணத்தைச் சம்பாதிக்க விளம்பர உலகத்துக்குள் நுழையும் ஒரு பெண் படும் பாடு, அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவற்றை அழுத்தமாக, 'கிரைம்' கலந்து, திகிலுடன் வித்தியாசமாக சொல்லப்போகும் புதினம் இது.

    படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!

    1

    "பைக்கை வாசலில் நிறுத்திய வசந்த், சற்று புருவம் உயர்த்தினான். வீடு இருண்டு கிடந்தது.

    வண்டியை 'ஸ்டாண்ட்' போட்டுவிட்டு, படிகளில் ஏறி கதவை அடைந்தான்.

    பூட்டு தொங்கியது.

    'ரிது எங்கே போனாள்?'

    'பக்கத்தில் விசாரிக்கலாமா?'

    அப்போது இரவு எட்டு மணி.

    பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினான்.

    பாதி சாப்பாட்டில் இருந்த கொண்டு மாமா எரிச்சலோடு கதவைத் திறந்தார்.

    என்னப்பா? - சப்பாத்தியைக் குதப்பிக்கொண்டே கேட்டார்.

    ரிது வெளியில போயிருக்கா! சாவி தந்தாளா ‘அங்கிள்’?

    ஏண்டீ? உள் நோக்கிக் குரல் கொடுத்தவர்,

    அந்த ரிதுப் பொண்ணு சாவி தந்தாளா? என்றார்.

    இல்லையே… நான் அவளை நேத்து பார்த்ததுதான்!

    கவலையோடு வெளிப்பட்டான் வசந்த்.

    ரிது, வேறு எங்கும் சாவி தர மாட்டாள். மாலை ஐந்தைக் கடந்துவிட்டால் வீட்டைவிட்டு நகர மாட்டாளே?

    'எங்கே போனாள்?'

    முகவாயில் கை தாங்கி, அப்படியே மடிந்து உட்கார்ந்தான்.

    வசந்த்...

    இருபத்தெட்டு வயது இளைஞன். ஏழு வயதில் தாயையும், பதினேழு வயதில் தகப்பனையும் இழுந்தவன். வசந்துக்கு ஏழு வயதாக இருந்தபோது, ரிது பிறந்தாள். பிரசவத்தில்தான் அம்மா இறந்தாள். பிறகு, அப்பா இன்னொரு கல்யாணம் செய்து, சித்தியானவள் ஆட்டமாய் ஆடி... வசந்தும், ரிதுவும் படாத பாடுபட்டு, அதெல்லாம் பழைய கதை.

    வசந்த் பத்தாவது முடித்துவிட்டு, 'கமப்யூட்டர் டைப்பிங்' போகும்போது அப்பா மரித்தார். அந்த வேலை, சித்திக்குக் கிடைத்தது. வசந்துக்கு 'ஒர்க்ஷாப்' ஒன்றில் தினக்கூலி. அடுத்து, சொற்ப சம்பளத்தில் 'டெய்லர்' வேலை கிடைக்க... ரிதுவை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

    அதே சம்பளம்தான்!

    அதில் கொஞ்சம் வாடகை போய்விடும். வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ரிது சாமர்த்தியமாகக் குடும்பம் நடத்த,

    அண்ணன் - தங்கையின் ஜீவனம் ஓடியது.

    ரிது ஆறாம் வகுப்போடு சரி. அதற்கு மேல் படிக்க இயலவில்லை.

    வசந்த் வசீகரமாக, நல்ல உயரத்தில் நம்மூர் நடிகர் போல இருப்பான். (தையல் வேலையை விட்டுட்டு நீ, சினிமாவுல நடிக்கலாம்டா!)

    ரிது அதைவிட அழகு! கொள்ளை அழகு!!

    ரிதுவிடம் உள்ள பிரமாதமான அம்சம்... பற்கள். ஆந்திராவில் இருந்து ஓர் அரிசி ரகம் வரும் நம்மூருக்கு. நல்ல வெளுப்பாக, அழகான வடிவத்தில்! அதுதான் ரிதுவின் பற்கள். சிவந்த உதடுகளைப் பிரித்து... அந்த அரிசிப் பற்களும், ரோஜா நிற ஈறுகளும் தெரியச் சிரித்தால் பார்ப்பவர்களுக்கு போதை மருந்து உட்கொண்டதைப் போல் இருக்கும்.

    அண்ணே... நான் வேலைக்குப் போகட்டுமா?

    ஆறாம் 'கிளாசு'க்கு என்ன வேலை கிடைக்கும்?

    எனக்கு ஆங்கிலம் தெரியாது. புத்தகம் படிச்சு கத்துக்கிறேனே! நானும் சம்பாதிச்சா... இந்த வீட்ல கஷ்டம் விலகாதா?

    வேணாம் ரிது! உன்னை வேலைக்கு அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை. வயது இருபத்தி ஒண்ணு.

    அதுக்காக?

    வரன் பார்க்கணும் உனக்கு?

    சரி! பணம் வேணாமா?

    வசந்த்

    Enjoying the preview?
    Page 1 of 1