Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athuvaraiyil Kanchana
Athuvaraiyil Kanchana
Athuvaraiyil Kanchana
Ebook161 pages1 hour

Athuvaraiyil Kanchana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803290
Athuvaraiyil Kanchana

Read more from Maharishi

Related to Athuvaraiyil Kanchana

Related ebooks

Reviews for Athuvaraiyil Kanchana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athuvaraiyil Kanchana - Maharishi

    http://www.pustaka.co.in

    அதுவரையில் காஞ்சனா

    Athuvaraiyil Kanchana

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சூரியன் பத்திரிகையின் ஸ்பெஷல் ரிப்போர்ட்டரான சாரங்கன், அப்பொழுது வெளிநாட்டுத் தூதுக் குழு ஒன்றுடன் செய்திகள் சேகரிக்கப் போய்க்கொண் டிருந்தான்.

    ஸ்டாஃப் போட்டோகிராஃபர் காஞ்சனாவுடன் அவன் வேறு ஒரு முக்கிய 'அலுவலை' முடிக்க அன்று மிக ரகசியமாகத் திட்டமிட்டு வைத்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் காஞ்சனாவுடன் அவனால் போகமுடியாமல் போய்விட்டது.

    காஞ்சனாவுடன் தான் திட்டமிட்டு வைத்திருந்த அந்த வேளையில் உள்ள ஆபத்துக்கள் அவனுக்குத் தெரியும். அதில் அவள் மட்டுமே ஈடுபடுவது ரொம்ப 'ரிஸ்க்'தான்.

    அந்த இடத்தில் அவளுக்கு ஏதும் ஆபத்து நேரக் கூடாது. நேர்ந்துவிட்டால்?

    சாரங்கன் அமைதியின்றி, அந்தத்தூதுக் குழுவுடன் போய்க்கொண்டிருந்தான்.

    காஞ்சனாவின் மேல் அவனுக்கு அதிக நம்பிக்கையுண்டு. அதே நேரத்தில் தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது. எவ்வித ஆபத்தான சூழ்நிலைக்கும் பயப்படும் சுபாவமற்றவள் அவள் என்பதும் அவனுக்குத் தெரியும். தன்னைப் போலவே இம்மாதிரி சுபாவமுள்ள காஞ்சனாவை அவன் இந்த ஒரு குணத்திற்காகவே அதிகம்நேசித்தான்.

    ஓர் அரசியல் கைதியை ஒரு போலீஸ் அதிகாரி போலீஸ் நிலைய முன் வராண்டாவில் அடிப்பதைப் படமெடுத்தவள் அவள்!

    விலைமாதொருத்தியுடன் இருக்கையில் போலீஸ் ரைட் வரவே, உள்ளே இருந்த பணக்கார ஆடவன் தன் உடைகளை வெளியே வீசி எறிந்துவிட்டு ஜன்னல் வழியேகுதித்துத் தப்பியதைப் படமெடுத்திருக்கிறாள்.

    ஒரு பெரிய தொழிற்சாலைக்கு ஒரு வன்முறையாளன் தீ வைப்பதைப் படமெடுத்து அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறாள்.

    அப்படிப்பட்டவளைத்தான் அவன் அந்த வேலைக்காக நியமித்தான். இடம், நேரம் எல்லாவற்றையும் சொன்னான். அவள் எப்படிப்பட்ட ஆபத்தான இடத் திற்குப் போகிறாள் என்பதைக் கூறி, அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறியிருந்தான். அதற்காக அவள் எடுத்துச் செல்ல வேண்டிய சின்ன காமெராவைப் பற்றியும் விவரமாகச் சொல்லி-அந்தக் காட்சியைப் படமாக்கிவிட்டு, எடுத்த பிலிம் சுருளை எப்படி, எங்கே, எத்தனை நாள் பாதுகாக்க வேண்டுமென்பதையும், அப்படிப் படம் எடுத்த பிலிம் சுருளைப் பத்திரமாகக் கொண்டு வருவதில் ஆபத்துக்கள் வரும் அறிகுறிகள் தென்பட்டால் அதை எங்கே எந்தப் பாதுகாப்பு அறையில் வைக்கவேண்டும், அதன் பின் தனக்கு எப்படித் தகவல் தர வேண்டும் என்பதனையும் மிகத் தெளிவாகச் சொல்லி, திட்டமிட்டுத் தந்திருந்தான்.

    சாரங்கன் போட்டுக் கொடுத்த திட்டப்படி காஞ்சனா சர்வ ஜாக்கிரதையுடன் செயல்பட்டாள்.

    தோளில் தொங்கும் காமெராவுடன்- வழக்கத்தை விடச் சற்றே பெரியது- அவள் அந்தப் பத்து மாடி ஒட்டலுக்குள் நுழைந்தபோது, அவளை வரவேற்பாளர் இடத்திலிருந்த பெண் குறும்புடன் பார்த்தாள். அவள் தன் டியூடி முடிந்து வானிடி பேக்குடன் வெளியே வந்து நின்று வழி மறித்தாள்.என்ன பிசாசே, இன்னிக்கு ஏதாவது க்ளோஸப்பா? எக்ஸ்க்ளூஸிவா...யாரது. ஸ்டாரா?

    உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சொன்னாள் காஞ்சனா: சீக்கிரமா போ, உன்னோட பாய் பிரண்ட் வெளியிலே ஒரு பாக்கெட் சிகரெட்டையும் ஊதித் தள்ளிவிட்டு நின்று கொண்டிருக்கிறான். கிவ் ஹிம் சம் ஸ்ட்ராங் பெப்பர்மிட் அண்ட் தென் கிவ் ஹிம் கிஸ், இல்லேன்னா வாய் பூரா சிகரெட் ஸ்மெல் அடிக்கும்!

    அவள் காஞ்சனாவை அடிக்கக் கையை ஓங்கினாள். காஞ்சனா 'லிஃப்ட்' அறைக்குள் புகுந்து கொண்டு மேலே போய்விட்டாள்.

    அந்தப் பத்து மாடிக் கட்டிடம் அனேகமாக, அவளுக்குப் பழக்கமான இடம் தான். மாதத்தில் நான்கைந்து முறை ஏதேனும் சந்திப்புக்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.,

    வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என்று.

    பெருவாரியான சந்தர்ப்பங்களில் அவள் சாரங்கனுடனேயே வருவாள். யாருக்கும் கிடைக்காத-யாரும் அதிகம் கவனிக்காத சில நூதனமான கோணங்களை அவள் காமெரா படமெடுக்கும்.

    சாரங்கனின் குத்தலான கேள்விகளைப் போல, அவளுடைய அசாதாரணமான கோணங்கள் செய்தியின் தன்மையைப் பரபரப்பாக்கிவிடும்.

    ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட சந்திப்புக்கள் ஏதும் இல்லை. அவள் திடுதிப்பென்று அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தது பலருக்குத் தெரியக்கூடத் தெரியாது. ரிஸப்ஷனிஸ்ட்டிடம் வேடிக்கை பேசிவிட்டு மேலே போய்விட்டாள்.

    லிஃப்ட் ஒன்பதாவது ஃப்ளோரில் நின்று திறந்து கொண்டது.

    கூடுமானவரை தன்னைப் பளிச்சென வெளிக்காட்டிக் கொள்வதை முதலில் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டுக் கையுடன் கொண்டுவந்த ஆலிவ் கிர்ன் மடாடார்--ப்ளேசரை அணிந்து கொண்டாள். கழுத்தை சுற்றி ஒரு ஸ்கார்ஃப். இரண்டு காதுகளுக்கு அருகில் இழை பிரிந்து கிடந்த கேசக் குழல்களைத் தற்செயலாக விழுந்த மாதிரி முன்பக்கம் இழுத்து விட்டுக்கொண்டாள்.மேலேபிளேசர் கோட் அணிந்துகொண்டு விட்டதால் காமெராவும் அதன் நீண்ட பட்டையும் ஓரளவு அந்த நிறத்துடன் ஒன்றி, தோளில் ஒரு வானிடி பாக் தொங்குவதைப் போன்ற எண்ணத்தையே தோற்றுவித்தது.

    பெரிய வராண்டா, விளக்குகள் அதிகம் எரியவில்லை. ரொம்பவும் தனிமையை விரும்பி இவ்வளவு உயரத்தில் அறைகளைக் கேட்பவர்கள், யாரோ சிலர் இருந்தனர். அதுவும் அருகருகில் இல்லாமல் மிகுந்த இடைவெளிவிட்டு இரண்டு மூன்று அறைகளில் விளக்கெரிந்தது கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்தது.

    நீண்ட நடைபாதை வராண்டாவில் காதலியை மிகவும் நெருக்கமாக அணைத்துக்கொண்டு காதுடன் பேசுகிற பாவனையில், அவள் கன்னத்துடன்' உரசிக்கொண்டுபோன ஒரு ஜோடி. ஏதோ ஓர் அறைக்குள் புகுந்து கொண்டு கதவைச் சாத்திக்கொண்டு விட்டது.

    இத்தனையையும் அவள், மறுகோடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் போகவேண்டிய அறை இரண்டு வளைவுக்கு அப்பால் இருக்கிறது. இப்பொழுது அவள் முகத்தில் மின்சார விளக்கின் ஒளி ஏதும் படவில்லை. ஆடைகூட இருட்டுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. அவள் நின்ற வண்ணம் கீழே பார்த்தாள். ஒரு நூதனமான வண்ணக் கலவையில் நகரமும் இருட்கடலில் விளக்குகள் மிதப்பது போன்று நகரும் நகரின் மற்ற இடங்களும் தெரித்தன.

    அவள்போகவேண்டிய அறைக்கு மூன்று புறம் வழிகள் உண்டு. நேரிடையாகப் போகலாம். வெளிப்புற அழகை ரசித்துக்கொண்டே வெளிப்புற நடை பாதை வழியாகப் போகலாம்; இதை விட்டால், மற்றொரு வழி அறையின் பின்புறம். உண்மையில் அது அறையின் பின்புறமல்ல, வெளியே உட்காரவும், வெளிப் பிரபஞ்சத்தைப் பார்த்துக் கொண்டு ரிலாக்ஸா அமரும் சௌகரியத்திற்காக அவை இருந்தன. இரண்டு அறைகளுக்கு நடுவே தடுப்பச்சுவர்.

    காஞ்சனா மூன்றாவது வழியைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அது சாரங்கனின் யோசனை.

    அவள் தன் இடத்தைவிட்டுப் புறப்பட்டு மெதுவாக நடந்தாள். அதே நேரத்தில் எதிர்படும் இரண்டொரு நபர்களின் சந்தேகங்களுக்கு ஆளாகி விடாமல் நடந்தாள்.

    சாரங்கன் சொன்ன குறிப்பிட்ட அறைக்குப் பக்கத்து அறைச் சாவியை அவளிடம் அவன் கொடுத்திருந்தான். அந்த அறைக்குள் புகுந்து. கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டு அந்த அறையின் பின்புறக் கதவு வழியே பின் புறம் வந்து அடுத்த அறையில் நிகழப் போவதைப் படமெடுக்க வேண்டும்.

    அவள் அறையை நெருங்கினாள். அவள் கண்காணிக்க, வேண்டிய அறைக்கு அடுத்த அறைக் கதவைத் திறந்தாள். அடுத்த அறை இருளில் மூழ்கி இருந்தது. அதில் இன்னும் ஒருவரும் வரவில்லை.

    ஒரு திருப்தி.

    தான் நுழைய வேண்டிய அடுத்த அறையில் நுழைந்து கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டாள்,

    விளக்கைப் போடாமலே - மெதுவாக நடந்து பின்புறக் கதவைத் திறந்தாள். வெளியிலிருந்து வந்த வெளிச்சம் உள்ளே லேசாகப் பட்டது. அடுத்த அறையின், பின்புறத்தைப் பார்த்தாள், நடைபாதை இடம் தேவையான அளவுக்கு மேல் அதிக இடைவெளியுடன் இருந்தது.

    நடுவே கதவு, இரண்டு பக்கம் ஜன்னல், கதவுக்கு மேல் ஒரு கண்ணாடி.. எலிவேட்டர் -மேலும் கீழும் அசைத்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்ளக்கூடியது....

    கையை உயர்த்தி அந்த எலிவேட்டரைத் தொட்டாள். உயரம் போதாது...

    தன் அறைக்கு வந்தாள். டீபாயொன்றை எடுத்துத் தயாராக அருகில் போட்டுக்கொண்டு அதில் ஏறி உள்ளே பார்த்தாள். இப்பொழுது அறையை அவளால் நன்கு பார்க்க முடிந்தது.

    இந்தச் செளகரியம் போதும். தாராளமாக இப்படியே படமெடுத்து விடலாம்...

    மீண்டும் தன் அறைக்கு வந்தாள். அடுத்த அறையில் ஏற்படப் போகும் சலனங்களுக்காகக் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு இருளில் உடகார்ந்திருக்கும் போதே காமெராவையும் சரிசெய்து கொண்டு விட்டாள்.

    இப்பொழுது திடீரென்று அடுத்த அறைக்

    Enjoying the preview?
    Page 1 of 1