Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Iruthi Naal
Indru Iruthi Naal
Indru Iruthi Naal
Ebook88 pages46 minutes

Indru Iruthi Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603277
Indru Iruthi Naal

Read more from Devibala

Related to Indru Iruthi Naal

Related ebooks

Reviews for Indru Iruthi Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Iruthi Naal - Devibala

    http://www.pustaka.co.in

    இன்று இறுதி நாள்

    Indru Iruthi Naal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    டெலிபோன் செய்தி காதுக்குள் நுழைந்ததும் உற்சாகத்தில் துள்ளிவிட்டான் திலிப். மெல்லிய சந்தோஷம் நரம்பு முனைகளில் பரவி, உடம்பே ஒரு மாதிரி மிதப்பது போல இருந்தது.

    ரிசிவரை வைத்தான்.

    என்ன சார் நியூஸ்? ஆயிரம் வாட் பல்பு போட்ட மாதிரி முகத்துல அப்படியொரு வெளிச்சம்?

    ரிசப்ஷனிஸ்ட் கேட்டாள்.

    எனக்குப் பையன் பிறந்திருக்கான்!

    குட்! கன்கிராட்ஸ்!

    சில நொடிகளில் செய்தி பரவி, அவன் மேஜையைச் சுற்றிக் கொண்டு விட்டார்கள் சகலரும்.

    ஸ்வீட்டுக்கு ஆர்டர் பண்ணுப்பா! இவனைக் கேட்காமல் ஒருவர் உத்தரவிட,

    போதாது! இன்னிக்கு எல்லோருக்கும் லன்ச் வேணும்!

    தர்றேன்! தர்றேன்!

    விடுங்கப்பா! லீவு போட்டுட்டு திலிப் உடனே ஊருக்குப் போகட்டும்!

    அத்தனை பேருக்கும் மதிய உணவுக்கு தன் செலவில் ஏற்பாடு செய்துவிட்டு, மானேஜரிடம் விடுப்புக்கு விண்ணப்பம் தந்தான்.

    பெங்களூருக்கா திலிப்?

    ஆமாம் சார்.

    இப்பவே நீங்க புறப்படலாம். ஆல் த பெஸ்ட்!

    உற்சாகத்துடன் வெளிப்பட்டான். வீட்டுக்குள் நுழைந்தான்.

    நில்லு திலிப்!

    உள் குரல் ஒன்று அழைத்தது.

    நின்றான்.

    உள்ளுர்ல இருக்கக் கூடிய உன் தாய், தகப்பனுக்கு இந்தச் செய்தியை சொல்ல வேண்டாமா? கேட்டா, சந்தோஷப்பட மாட்டாங்களா?

    வேண்டாம். இது காதல் கல்யாணம். அவர்கள் அனுமதி மீறி ஜாதி விட்டு நான் மணந்து கொண்ட பெண் அனிதா. அதனால சகல, உறவுகளையும் அறுத்துக் கொண்டு தனியாக வந்தான். நிச்சயம் இது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அல்ல!

    ஆனாலும்...?

    வந்து சொல்லிக் கொள்ளலாம் என்று புறப்படத் தயாரானான்.

    அனிதாவின் குடும்பமும் இவர்கள் கல்யாணத்தை ரசிக்கவில்லைதான். அனிதாவின் ஒரு அக்கா மட்டும் தான் இந்தக் காதலை ஆதரித்தாள்.

    திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழித்துத்தான் அனிதா உண்டானாள்.

    யாமில்லை என்ற ஏக்கம் தெரியாத அளவுக்கு அவளைத் தாங்கு தாங்கென்று தாங்கினான் திலிப்.

    திலிப்!

    சொல்லுடா!

    எனக்கு ஒரு ஆசை. ஆனா அது நிறைவேறாது!

    சொன்னாத் தானே தெரியும்!

    நல்ல ரோஜாப்பூ நிறத்துல உங்க முகஜாடைல ஒரு பையன் பிறக்கணும்!

    இது நிறைவேற அப்படியென்ன கஷ்டம்?

    உங்க முகஜாடை சரி. ஆனா ரோஜாப்பூ நிறம்?

    சிரித்தான் திலிப்.

    நீயும், நானும் கறுப்பு நிறம். அதனால ரோஜா மாதிரி பையன் பிறக்க மாட்டான்னு சொல்றியா?

    உங்க வீட்லேயும் யாரும் சொல்லும்படியா கலர் இல்லை. எங்க குடும்பமும் அப்படித்தான்!

    விடேன்! மனசு வெளுப்பா இருந்தா உசத்தி. நிறத்துல என்ன இருக்கு!

    கலைந்தான் திலிப்.

    ‘என் மகன் கறுப்பா? சிகப்பா?’

    இவர்களது காதலை ஆதரித்த அனிதாவின் அக்கா, அவளை பெங்களூருக்கு பிரசவத்துக்கு அழைத்துப் போனாள்.

    முதலில் திலிப் ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு பெண் துணையில்லாமல் இதிலெல்லாம் முடியாது என்று புரிந்ததும் அரை மனதுடன் ஒப்புக் கொண்டான்.

    அதுவும், நிறைமாதமான பிறகுதான் அனுப்பி வைத்தான். பாவம் அனிதா!

    சட்டென அவளது அலுவலக நினைவு வந்தது. அவர்கள் யாருக்கும் விவரம் தெரிவிக்கவில்லையே. சரி. போகும் வழியில் ஒரு போன் செய்து விட்டுப் போகலாம்! வந்து இனிப்புகள் தரலாம்.

    உடைமைகளைச் சேகரித்துக் கொண்டு நேரம் பார்த்தான். மூன்று மணி.

    ‘லால்பாக் எக்ஸ்பிரஸ் இருக்கும். டிடியைப் பிடித்து இடம்

    Enjoying the preview?
    Page 1 of 1