Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Enbathu...
Kaadhal Enbathu...
Kaadhal Enbathu...
Ebook78 pages37 minutes

Kaadhal Enbathu...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703279
Kaadhal Enbathu...

Read more from Vidya Subramaniam

Related to Kaadhal Enbathu...

Related ebooks

Reviews for Kaadhal Enbathu...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Enbathu... - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    காதல் என்பது....

    Kaadhal Enbathu….

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    புறப்படும் போது மழை சடசடவென்று பெய்ய ஆரம்பித்தது. சுபத்ரா சலிப்போடு உள்ளே வந்தாள். வீட்டில் இருந்தது ஒரு குடை. அதையும் அப்பா எடுத்துச் சென்று விட்டார். இன்னும் இரண்டு குடை இருக்கிறது கம்பிகள் பழுதுபட்டுப்போய் பழுது பார்க்க குடை ரிப்பேர்க்காரன் கேட்ட காசுக்கு புதுக் குடையே வாங்கிவிடலாம் என்று காரணம் சொல்லி அப்பா அந்த குடைகளை ரிப்பேர் செய்யவில்லை.

    என்னக்கா. மழையா... அதான் நின்னுட்டாயா? இன்னிக்கு காலேஜுக்கு மட்டமா? தம்பி கிண்டலாகக் கேட்டான். ப்ளஸ்டூ படிப்பிற்கு அவளை விட உயரமாகவும், மீசை முளைத்த முகமுமாக அவளுக்கு அண்ணன் மாதிரி இருந்தான். நிறைய பெண்களை அவன் கேலி செய்கிறான் என்று கேள்வி. அப்பாவுக்கு அவனை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று கனவு. இவனோ, அன்புள்ள சிம்ரன் என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா என்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான். சிம்ரனுக்கு மட்டுமில்லை. எல்லா நடிகைக்கும் ஏதாவது ஒன்று சிக்காதா என்று நினைப்புடன். அப்பா அம்மா இருவரும் அரசாங்க ஊழியர்கள். ஓரளவுக்கு கௌரவமான வாழ்க்கை. இருவரும் காலையில் போனால் இரவு ஏழாகி விடும் வீடு திரும்ப. எனவே குழந்தைகளை ரொம்பவும் கவனிக்கவோ கண் காணிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை.

    தன் குழந்தைகள் மிகவும் பொறுப்பானவர்கள் என்ற நம்பிக்கையில் வீட்டிலும் வெளியிலும் உழைத்துக் கொண்டிருந்தார்கள். தம்பி கேட்கும் போதெல்லாம் அப்பா பணம் கொடுப்பார். பெரும்பாலும் நோட்டுப் புத்தகம், அது இது என்று படிப்பு சமாச்சாரங்களுக்காகத்தான் பணம் கேட்பான் அவன். நோட்டு வாங்கினாயா என்று ஒரு நாளும் அப்பா கேட்டதில்லை, சிவராமுக்கு நேர் எதிர் சுபத்ரா... இருக்கும் இடம் தெரியாது தொடை நடுங்கி, படிப்பு உண்டு அவளுண்டு. செலவுக்கு வைத்துக் கொள் என்று அம்மா ஆறுமாதத்திற்கு முன்பு கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு இன்றுவரை எந்த செலவும் வராமல் பத்திரமாக பர்ஸுக்குள் இருக்கிறது. அந்த ஐம்பது ரூபாய் பற்றி தெரிந்தால் சிவராம் பிடுங்கி எடுத்து விடுவான்.

    நா வேணா யார்ட்டயாவது குடை வாங்கி தரட்டுமா? சிவா ரொம்ப அக்கறையாகக் கேட்டான்.

    வேணாம்

    அப்புறம் எப்டி போவ?

    எப்டியோ போறேன் உனக்கென்ன?

    ஒண்ணு பண்ணலாமா? ரெண்டு பேரும் ஆட்டோல போகலாமா? என் ஸ்கூல் தாண்டிதானே உன் காலேஜ்?... என்ன சொல்ற...?

    உங்கிட்ட பணமிருக்கா ஆட்டோக்கு?

    எங்கிட்ட ஏது...? உங்கிட்ட இருக்கும்னு நினைச்சேன்

    எங்கிட்ட இல்ல. நீ கிளம்பு. எனக்கு வீட்டை பூட்டணும்.

    என்னை நனைஞ்சுக்கிட்டே போகச் சொல்றயா? சுபத்ரா யோசித்தாள். ஐம்பது ரூபாயை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்றைக்கு முக்கியமான வகுப்பு இருக்கிறது. போய்த்தான் ஆக வேண்டும். சரி வா. ஆட்டோலயே போவோம்."

    அப்டி சொல்லு.. பணமில்லன்னு பொய்தானே சொன்ன..?

    சுபத்ரா சிரித்தாள்.

    தெருமுனையில் ஆட்டோ பிடிப்பதற்குள் லேசாய் நனைந்து விட்டார்கள். மீட்டருக்கு மேல் மூன்று ரூபாய் கேட்டான் ஆட்டோ டிரைவர், சுபத்ரா தயங்க, ஏறுக்கா மழைல வண்டி கிடைக்கறதே கஷ்டம் என்றான். சுபத்ரா ஏறி உட்கார்ந்தாள்.

    சிவராமை அவன் ஸ்கூலுக்கு முன்னால் இறக்கி விட்டு விட்டு, ஆட்டோ அவள் கல்லூரி நோக்கி சென்றது.

    பி. எஸ். ஸி. முடிக்க இன்னும் ஒரு வருடத்து படிப்பு பாக்கியிருக்கிறது. இது இரண்டாமாண்டு. இதன்

    Enjoying the preview?
    Page 1 of 1